பகுதி 34

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 34

பிள்ளைகளுக்கு உணவினை ஊட்டியபடி இருந்த பூஜாவிடம் "பூஜா மாதுரி சாப்பிட்டாளா?". என்றார் விஜயபாஸ்கர்

"இல்ல பா அவங்க எத கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாமுன்னு சொல்றாங்க ஒரு கப் ஜூஸ் கூட நேத்திலிருந்து குடிக்கல நானும் அவரும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம் எதுக்கும் வேலைக்கு ஆகல"பூஜா

"அப்போ அந்த கிர்ஷ் பயலுக்கு போன் பண்ணி இவ இதுபோல செய்ற அப்படின்னு சொல்ல வேண்டியதுதானே அவன் செய்ற அலும்பல்ல இவ ஆட்டோமெடிக்கா சாப்பிடுவா" விஜயபாஸ்கர்.

" அப்பா நைட்டு கிர்ஷ்ஷூம் பேசி பார்த்திடுச்சி.....  ம்கூம்  எந்த வித ரியக்ஷனும் இல்லை. நீங்க வேன பேசி பாருங்க அப்பா...  அப்பவாவது சாப்பிடுறாங்களான்னு  பாக்கலாம்.

"அவ...  புள்ளைக்கு அடுத்ததா அதிகபடியா கோபமா இருக்கறது என் மேலதான்... நானே போனா என்ன நடக்குமோ.... இது யோசிக்க வேண்டிய விஷயமாச்சேமா!!!"...

"பயந்தா போல ரொம்பதான் நடிக்கிரிங்க.... போதும் பா காமெடி போய் பாருங்க  அம்மாவ"

"ம்... சரி போறேன் என்றவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பேரப்பிள்ளைகளிடம் குட்டி பசங்களா உங்களோட விளையாட இன்னோரு பாப்பாவும் வரப்போறாளே!!! என்று கூற

யார் தாத்தா வரங்க....  பாய்யா ?? கேள்ளா?? எப்போ வராங்க??" என்று ஆர்வமாக கேட்டான் கரனின் பெரிய புதல்வன் ஜெஸ்வின்.

"இன்னும் கொஞ்ச நாள்ள அப்புறம் அந்த பாப்பா நம்ம கூடவே இருக்கும். அதோ சித்தப்பா மாட்டிவெச்சிருக்காறே அந்த படத்துல இருக்கே அந்த குட்டிமா"  என்றார் வானதியின் ஓவியத்தை பார்த்து.

"தாத்தா கௌஷிக் சித்தப்பா அப்புறம் சித்தி இருக்க போட்டோ சித்தப்பா ரூம்ல இருந்து இருக்கு பார்த்திருக்கேன். ஆனா அந்த சின்ன பொண்ணு...  அது யாரு தாத்தா நான் சித்தப்பா ரூம்ல பார்த்ததே இல்லையே  என்றான் ஜெஸ்வின்.

"அவ உன்னோட தங்கச்சி பா நம்ம மீரா குட்டிக்கு அக்கா"  என்றார் கரனின் இளையமகள் மீராவின் தலையை கலைத்தபடி.

தாத்தாவின் சட்டையை இழுத்து சீக்கிரம் "அக்கவ வர சொல்லுங்க....  நான் அக்கா அண்ணா எல்லாம் விளையாடுவோம் ல" என்றது  மழலை சொல் மாறத அந்த 4 வயது குழந்தை.

"ஹ... ஹா... என்று சிரித்தவர் சீக்கிரமே கௌஷிக் சித்தப்பா கூட்டிட்டு வருவான் டா சீக்கிரமே அவ உங்க கூட ஒரு நாள்  இந்த வீட்டுல விளையாடப் போறா  என்று மீராவிற்க்கு  முத்தம் வைத்து மனைவியை காண சென்றார்.

மாதுரி கட்டிலின் மேல் அமர்ந்தபடி கண்கள் மூடி சாய்ந்த நிலையில் இருக்க மாதுரி சாப்பிட்டியா என்றபடி வந்தார் விஜயபாஸ்கர்.

கண்களை திறந்து முறுபடியும் முடிக்கொண்டர் மாதுரி

உங்கிட்டதான் கேட்டேன் சாப்பிட்டியான்னு. என்றார் இன்னும் கொஞ்சம் சத்தமாக

எனக்கு கேட்டுச்சி  என்னன்னு பதில் சொல்லனுமுன்னு எதிர்பாக்குறிங்க....??? எனக்கு பிடிக்கல வேண்டாம்....  என்னை எதுக்கு தொந்தரவு செய்றிங்க???  இங்க இருந்து போங்க...  என்று எரிந்து விழுந்தார்.

இப்போ எதுக்கு இப்படி ரியக்ட் பண்ற உன் பிரச்சனைதான் என்ன?? ... என்றார் எரிச்சல் தோனியில்.

"வெடுக்கென்று எழுந்து அமர்ந்தவர் ஏன் உங்களுக்கு தெரியாதா???...   என்ன நடந்ததுன்னு

மனைவியின் பக்கத்தில் அமர்ந்தவர் நம்ம மகன் வைஷ்ணவியவிட்டு பிரிஞ்சதுல இருந்து  நீயும் வேற கல்யாணத்துக்கு எவ்வளவோ சொல்லிட்ட அவன் கேட்டானா 6 வருஷம் ஆகிடுச்சி இதுவரைக்கும் பிடிகொடுத்து பேசியிருக்கானா  இப்போ வரையும் அவளையேதான் நினைச்சிகிட்டு இருக்கான்.

அதுக்காக???

என்னடி அதுக்காகன்னு கேக்குற  இது உனக்கே பைத்தியகாரத்தனமா தெரியலையா?  அவனுக்கு என்ன வேனுமுன்னு அவனுக்கு தெரியாத??  உன் வரட்டு கௌரவத்தாலும், வெட்டி பிடிவாதத்துக்கும், வீம்புக்கும் அவனோட வாழ்க்கைய இத்தனை வருஷமா பலி கொடுத்தது பத்தாத இப்போதான் ஏதோ அவனுக்கு தன் பொண்டாட்டி பிள்ளைகூட வாழ ஆசை வந்திருக்கு  இதை  அக்சப்ட் பண்ணலனாலும் இப்படி தடுக்காத"... என்றார் பிள்ளையின் வாழ்வில் அக்கரைக்கொண்டு.

"நான் அவன் வாழ்க்கைமேல அக்கரை இருக்கரத்தோடுதான் பேசுறேன்... அவ"  என்றுஆரம்பிக்கும்போதே

மாதுரி அது உண்மையில்லன்னு உனக்கு இன்னுமா புரியல எங்களுக்கேல்லாம் அவ மேல நம்பிக்கை இருக்ககு அதுல   1 பர்சன்ட் கூடவா அந்த பொண்ணு மேல உனக்கு நம்பிக்கை  இல்லை உன் நெஞ்ச தொட்டு சொல்லு அவள தப்பா நினைக்க தோனுதுன்னு அந்த விளங்காதவ ஏதோ சொன்னான்னு அதை புடிச்சிக்கிட்டே இப்படி தொங்கனா நம்ம புள்ள நமக்கு இல்லாமலே போய்டுவான் இது தான் உன் ஆசையா சொல்லு"....என்று அவர் கேள்வி எழுப்ப அமைதியாக அமர்ந்திருந்தார் மாதுரி

"இத்தனை வருஷம் கழிச்சும்  மனசுல இருந்த அந்த பொண்ண அவனாள மறக்கமுடியல!!!.. வாழ்ந்தது 2 மாசம் நாளும் அவங்களுக்குள்ள அப்படியோரு அன்னியூன்யம் ...  அந்த பொண்ணை நம்ம பையன் எந்த அளவுக்கு விரும்பரான்னு யோசிச்சி பாரு??...  அவன் வைஷ்ணவிக்காக இந்த வீட்டை விட்டே போகரத்துக்கு ரெடியா இருக்கான்... எனக்கு என்  மருமகளும் பேத்தியும் வீட்டுக்கு வரனும்  என் புள்ள இத்தனை நாள அனுபவிச்சிட்டு இருந்த வேதனை போதும் இனியாவது சந்தோஷத்தை பாக்கனும் என் புள்ளைய வாழ விடு மாதுரி... அப்படியும் நீ இதுக்கு மறுப்பு சொன்னா நம்ப உறவே வேண்டமுன்னு தலை முழுகவும் தயங்க மாட்டான் இவ்வளவு நாள் உன் மனசு மாறுமுன்னு காத்திட்டு இருந்தான் இப்பவாவது உன்னை மாத்திக்க"  என்றார் விஜயபாஸ்கர்.

"ஏன் உங்க பிரண்டோட பொண்ணுண்ணு இவ்வளவு சப்போர்ட் பண்றிங்களா அவனுக்கு புரியவச்சி ஒரு நல்ல பொண்ணா பாத்து நானே கல்யாணம் பண்ணிவைக்கிறேனா இல்லேயான்னு பாருங்க"என்று சவாலாக கூற.

ஏய்..... பூனை கண்ணமூடிக்கிட்டா  பூலோகமே இருண்டுபோய்டுச்சின்னு நினைச்சிக்குமா அதுபோல ...... நான் இவ்வளவு நேரம் கிளிபிள்ளைக்கு சொல்றாப்போல சொல்றேன் உன் மண்டைக்கு ஏறவே இல்லையா நீ அன்னைக்கு ஆடுன ஆடத்துக்கு இன்னைக்கு வரையும் அவனை பார்க்கவே  என்னால முடியல எந்த முகத்த வைச்சிக்கிட்டு அவன  பார்ப்பேன் ஏதோ தெய்வமா பார்த்து நம்ம மருமகள இங்க கூட்டிட்டு வந்து இருக்கு இனியாவது அவங்க வாழ்க்கைய அவங்க வாழனும்.... என்றுகூறினார்.

சுனோஜி....

வாயமூடு மாதுரி இனி உன்னையாரும் வர்புறுத்த மாட்டோம் நீ சாப்பிடரதும் சாப்பிடாததும் உன் இஷ்டம் என் மருமக  இந்த வீட்டுலதான் வாழ்வா புரியுதா என்று சத்தம் போட்டு எழுந்து சென்றார்.

கணவர் சத்தம் போட்டு பேசவும்  முதலில் அதிர்ந்தவர்  என்னசெய்வது என்று தெரியாமல் மௌனமாக அமர்ந்திருந்தார்.
______________________________________________

காரின் பின் இருக்கையில் சாய்ந்திருந்த நிலையில் தன் உள்ளங்கையில் இருக்கும் மொபைலில் இன்று மலர்ந்த நீல வண்ண மலரைப்போல இருந்தவளின் வதனத்தை ரசித்தபடி அவனை இம்சிக்கும் சிவந்த  கன்னங்களின் மேல் மையல் கொண்டு விரல்களால் வருடினான்.

அந்த சமயம்  மொபைல் ரிங்காக அதில் ஒளிர்ந்த கிர்ஷ் என்ற பெயரில் கண்களில் சிரிப்புடன் பட்டனை அழுத்தி காதில் பொருத்தினான்.

ஹாய் பையா என்ன எப்படியோ பாபிய கூட்டிக்கிட்டு வந்துட்ட போல

ஏய் என்னடா எடுத்தவுடனே ஓட்டுற  இந்த நலம்லா விசாரிப்பாங்களே அதெல்லாம் பண்ணமாடடியா என்று கௌஷிக் கேட்க.

எப்படியும் நீ நல்லாதான் இருப்பா அதான் பாபிய பாத்துட்டியே உன்னை கையிலபிடிக்கமுடியாதே

ம் சரி சரி போதும் நான் சொன்னேனே என்னா ஆச்சி

பேசினேன் வழிக்கு வராப்போல தெரியல விடு பையா  இன்னும் போனா 2 டேஸ் இருப்பாங்களா ஆட்டோமேட்டாக்கா தன்னால வழிக்கு வந்துடுவாங்க டோன்ட் வொரி அப்பா பேசி இருக்காரு இப்பவே பாதி ஓகேன்னுதான் நினைக்கிறேன் நீ தனியா போறேன்னு சொன்னியாமே அப்படியே செய்ய வேண்டியதுதானே.....

அதுலதான்டா பெரிய பிரச்சனையே இப்போ....  வா என் கூட வந்து இரு... தனியா போலான்னு சொன்னா...  உடனே என் பின்னாலேயே வந்துடுவாளா??... அப்பவே உங்க கூட வாழ விரும்பலன்னு சொன்னவ  (கோவக்காரி சரியான சண்டிராணி நான் தனியா போய் அங்க மட்டிக்கிட்டு படாதபடுபடவா அட போடா நான் வைச்சிருக்க ஐடியாவுக்கு நம்ம வீடுதான்டா சரி வரும் ) ஏதாவது செய்யனும் அப்பதான் வருவா

எப்படியோ பாபி வந்தா  ஓகே தான் சரி இப்போ எனக்கு கிளாசுக்கு டைம் ஆச்சி அப்புறம் பேசுறேன் பையா...

ஓகே கிர்ஷ் பை என்று காலை கட் செய்தவன்.
இன்று அவளை பார்த்த  நேரத்திலிருந்து அவளின் ஒவ்வோரு முகமாறுதல்களையும் அதில் நிறைந்த பாவங்களையும் நினைத்து நினைத்து ரசித்து  தன் மங்கை அவளின் மேல் மறுமுறை காதலில் விழுந்தான்.

அவளை காண வேண்டும் தினம்தினம் அவளின் மலர்ந்த முகத்தில் இருக்கும் கருவிழிகளில் விழுந்து காதலில் திளைக்க வேண்டும். மீண்டும் அவளின் இதயம் கவர்ந்த காதல் கணவனாக மாற வேண்டும் என்று ஆவள் கொண்டவன் ஏதோ ஒரு காரணத்தை வைத்து இன்று அவளின் அலுவலகத்திற்க்கு வந்து தன்நாளை துவக்கினான்.

அவள் பிளானை எடுத்து விரித்து அதில் செய்ய சொன்ன மாறுதல்களை கட்ட பக்கத்தில் நின்று குனிந்து அதை கவனமாக பார்த்திருந்தவளின் கூந்தல் சரிய அது திரைக்கொண்ட மேகம் போல் இருந்தது.  அதில் தெரிந்த இரு  கருவிழிகளின் நாட்டியத்தை கண்டவன் தன்நிலை மறந்து அவளையே ரசித்து கொண்டிருந்தான். அவனின் காதல் தேவதையை எவ்வாறு காண வேண்டும் என்று நினைத்து தன் மனைவியிடம் கூறினானோ இன்று அதை காணவும் அவளை ரசித்த வண்ணம் அமர்ந்திருந்தான் அவளின் கடைசி அழைப்பில் தன்னை உணர்ந்தவன் வாய்தவறி அவளின் செல்ல பெயர் வைத்து அழைக்க அவள் சிலைபோல் உறைந்திருந்தாள்.  பக்கத்தில் சென்றவன் காதுமடல்களில் மூச்சிக்காற்று உராய்வதுபோன்று பின் இருந்து நிற்க காற்றில் பறந்த கூந்தளை ஒரு முறை வருடியவன்  அவளை அணைக்க உள்ளம் ஆசைக் கொண்டாலும் இருக்கும் நிலை அறிந்து   அவளின் சுகந்தத்தை தனக்குள் நிறைத்துக்கொண்டு வைஷ்ணவி உணருமுன் இடத்தில் அமர்ந்து கொண்டான் அவளின் ஆராய்ச்சி பார்வையில் சிரிப்பு வந்து எங்கே மாட்டிக்கொள்வானோ என அங்கிருந்து அவசரமாக அவள் சுதாரிப்பதற்க்கு முன்சென்றுவிட்டான்.
.....................................................................................

அண்ணி இந்த டெடி பாருங்க எவ்வளவு கீயூட்டா அழகா இருக்கு.

அத்தை அம்மா போலவே அந்த டெடியும் குண்டா கீயூட்டா அழகா இருக்குல்ல என்று அத்தைக்கு ஹைபை கொடுக்க

பாத்தியாண்ணா அண்ணியையும் அவளையும்  இந்த வாண்டுக்கு என்னை எப்போஸபாத்தாலும் கிண்டல் பண்றா என்று புகார் செய்ய.

அம்மா உங்களை போல அழகா இருக்குதானே சொன்னேன் என்று கண் அடித்து வைஷூவிடம் கேட்க

நீ அப்படியா சொன்ன நான் நம்பிட்டேன்.... இவளைப்போல ஒல்லியாகுச்சி மாதிரி இருக்கனுமா சரிதான் போடி மாமாவையும் அத்தையும் பார்த்தவுடனே வாய் ரொம்பாதான் பேசர

ஒவ்வோரு முறையும் வைஷூவும் வானதியும் பஞ்சாயத்துக்கு வர சிவாவிற்குதான் விழி பிதுங்கும் ஒருவருக்கு சப்போட்பண்ண ஒருவர் கோபித்துக்கொள்ள என்று இருக்க எதுவும் பேசமல் இருவரையும் மாறி மாறி பார்த்தவண்ணம் இருந்தான்

அம்மா அப்படித்தான் சொன்னேன் இல்லடா சத்யம்  என்று சத்தியத்தை துணைக்கு அழைக்க என்னவென்றே தெரியாது ஆம் என்று தலையாட்டினான் சத்தியன்.

ஹே வாண்டு அத்தைய நீயும் குண்டுன்னு சொல்றியான்னு அவனை தூக்கி கன்னத்தில் முத்தம் வைக்க சிவா வானதியை தூக்கி கொண்டான். அப்படா ஒரு வழியா அவங்களே சமாதானம் ஆகிட்டாங்க என்று மனதில் நினைத்து அடுத்தது செக்ஷ்னிற்க்கு  போக அதில் உருண்டு திரண்ட பானையில் இருந்து வழியும் வெண்ணைய்யெயை உண்ணும் கண்ணனின் அழகிய  கிரிஸ்டல் சிலையை காண அதில்  மேல் வைஷூ ஆசைக்கொண்டு  ஆவளாய் அதை எடுக்க போக அதற்குள் சத்தியனை காணவில்லை என்று நீலாவும் சிவாவும் தேடுவதாக வானதி வைஷூவை அழைக்க பதற்றத்தில் சிலையை எடுக்காமல் அடுத்த பாக்கத்திற்கு சென்று அவளும் தேட அங்க நின்ற குழந்தையின் கையை பிடித்து விளையாடியபடி இருந்தான் சத்தியன்.

சத்தியனை காணதா பதற்றத்தை குறைக்க அருகில் இருந்த சேரில் அமர்ந்திருந்தனர் சிவாவும் நீலாவும் சத்தியனின் கையை பிடித்தபடி வானதி இருந்தாள் வைஷூவிற்க்கு கிருஷ்ணர் சிலை நியாபகத்திற்கு வர அதை எடுக்கப்போனாள்.

இங்க இருந்த சிலை எங்க போச்சி ஷாப் ஊழியரை அழைத்து வினவினாள்.  இது ஆடர்ரின் பேரில் வரவழைத்தது என்று பதிலளித்து  அது போல் இல்லை என்றும் வேறு வடிவத்தில் சிலை இருப்பதாக கூற அதையெல்லாம் பார்த்தவள் முதலில் பார்த்த சிலையின் மேலேயே மனம் ஆசைக்கொண்டது.

சே...... அதுக்குள்ள  போயிடுச்சே  அய்யோ ரொம்ப அழகா இருந்தாரே கிருஷ்ணர் என்று மனதில் நினைத்தாள். சரி இப்போ ஆர்டர் பண்ண எப்போ கிடைக்கும் மேடம் அது கிரிஸ்டல்ல செஞ்சது மிஷின் கட்டிங் இல்லாம கையாலயே செய்தது எப்படியும் ஒரு  1மந்த் ஆகும் என்றார். சரி ஓகே நான் ஒன்னு அர்டர் பண்றேன் என்றாள். ஓகே மேம் என்று ஆர்டரை பெற்றுக்கொண்டார் கடை உழியர்.

ஷாபிங்கை முடித்துக்கொண்டு அப்படியே அதே மாலில் இருக்கும் தியேட்டரில்  இந்தி சினிமாவிற்கு செல்ல என்ன அண்ணி  இந்தி தினிப்புக்கு எதிர்ப்பா போராட்டம்ல பண்ண இப்போ பேசாம அண்ணன் சொன்னவுடனே இந்த படத்துக்கு வந்துட்ட

அட நீவேற வரமாட்டண்ணு சொன்ன அதுக்கு தனியா எனக்கு லெச்சர் எடுப்பாரு  இத்தனை  வருஷமா உன் அத்தைக்கிட்ட  மாட்டிக்கிட்டு இருந்தேன் இப்போ உன் அண்ணகிட்ட மாட்டிக்கிட்டேன் இதில  என்ன காமெடினா  ஒரு காலேஜ் பவுண்டருக்கே லெச்சர் எடுக்குர பெருமை உங்க அண்ணனையே சாரும் என்று கிண்டலில் இறங்கினாள்.

ம்..... எங்க அண்ண என்னுன்னு நெனச்சிங்க உன்னையே வழிக்கு கொண்டு வந்துட்டாரு பாருங்க என்று பிளேட்டை திருப்பி போட தான் காலரை தூக்கிவிட்டு நீலாவை பார்த்து கண்ணடித்தான் சிவா.. வெவ்வவேவ்வ என்று நாக்கை துறுத்தி அழகுகாமித்தவள் இருக்குழந்தைகளையும் அருகில் உட்கராவைத்துக்கொண்டு நீலா  அமர சிவா நீலா பக்கத்தில் அமர்ந்தான்.

சிவாவின்  பக்கத்தில் வைஷூ அமர்ந்தாள் படத்தில் டூயட் பாடல் வந்துகொண்டிருந்தது. அவளை ஏதோ ஒன்று மனதை உறுத்துவதுபோல் தோன்ற பக்கத்தில் திரும்பி பார்த்தால் கௌஷிக்  அவளையே பார்த்திருந்தான். தன் பிரம்மைதான் இதற்கு காரணமோ என்று நினைத்தவள்   இப்போ எதுக்கு இந்த பார்வை  அப்படியே ஆளை முழுங்கராப்பல  அந்த கண்ணை பாரு  நான்தான் வேண்டாமுன்னு ஆகிடுச்சி ல எதுக்கு இப்படி வம்புபண்ணிக்கிட்டு பின்னாடியே சுத்துரிங்களோ சே உன்னை போய் திட்டுறேன் பாரு உண்மையா உருவமா இருக்கும்போது திட்டாம அவரோட பிரமையா இருக்க உன்னை போய் திட்டினா என்ன பதில் வரும் இப்போ கண்மூடுவேன் கண்திறக்கும் போது இருக்கமாட்டல்ல என்று பேசி கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் திறக்கும்போது அவளின் பக்கத்தில் இருந்த கௌஷிக் இப்போது இல்லை சுற்றும் முற்றும் பார்த்தவளை என்ன பாக்குர யாரை தேடுற என்று கேட்டான் சிவா ஆஹ் ஒன்னும் இல்லை அண்ணா என்று படத்தில் கவனமானாள்.  வீட்டிற்கு வந்தவள் படுக்கையில் சரிந்தாள் . அவளின் மனத்திலோ  அன்றைய நாளின்  நிகழ்ச்சிகள்  ஒவ்வொன்றாக  நினைத்தவள் உண்மையாலே பக்கத்துல வாந்தரா இல்ல என்னோட பிரமையா இன்னைக்கு தியேட்டர்ல உக்கர்ந்திருந்தாரே  அது உண்மையா என்னோட பிரமையா எனக்கு மட்டும் ஏன் இப்படி தோனுது அய்யோ ஒன்னும் புரியலயே என்று நினைத்தவளுக்கு  மண்டை வின்னென்று தெரிக்க  இந்த தலைவலி வேற ஏன்தான் இப்படி உயிர வாங்குதோ என்று  அலுத்தவள் கண்களை மூடி பொறுத்துக்கொண்டாள்

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro