பகுதி 47

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

பகுதி 47

மும்பை

          மாலை அலுவலகம் முடிந்து வந்த கௌஷிக்  வானதியை  குல்லுமா  பேபிடால் என அழைத்துக்கொண்டே  வீட்டிற்குள்  வந்தான். கண்களோ  வானதியை  தேட அவனின் மனதோ அவளின் தாயை தேடியது.

          மாலை. சிற்றுண்டியை  தயார்  செய்ய மம்தாவிற்க்கு  சொல்லிக்கொண்டிருந்த பூஜா கௌஷிக்கின் குரலைக்கேட்டு சமையலறையிலிருந்து வெளிவந்தாள்.

          "தேவர்ஜி...குல்லு  எங்க ரூம்லதான் பசங்க கூட விளையாடிட்டு இருக்கா " என்றதும் " ஓகே  பாபி நான் போய் பார்த்துக்குறேன் எனக்கூறினான் . சட்டென்று  நினைவு வந்தவனாய் பாபி ... இன்னும்  வைஷூ  வரலையா?  எனக்  கேட்டான் .

             இல்லை  தேவர்ஜி ... எப்பவும்  நீங்கதானே கூட்டிட்டு வருவிங்க... எனக்கூறினாள் பூஜா.

              ஹ்ம்ம்.... ஆமா  பாபி...ஆனா... இன்னைக்கு ஒரு கிளையன்ட்  மீட்டிங்  இருக்குன்னு  ஒரு மணிநேரத்துக்கு  முன்னாடியே  கிளம்பிட்டளாம் . அவ ஆஃபீஸ்ல சொன்னாங்க என்றான் .

           அப்படியா... சரி சரி... நீங்க குல்லுகிட்ட போங்க  நான் உங்களுக்கும் பசங்களுக்கும் ஸ்நாக்ஸ் அன்ட் டீ  கொண்டு வரேன் என்றாள் பூஜா.

       பாபி ... இன்னொரு  விஷயம் கேக்கனும்....அம்மாகிட்ட ஏதாவது சேஞ்சஸ் தெரியுதா?  இல்ல இன்னும் அதே பிடிவாதத்துடன் தான் இருக்காங்களா?

இன்னைக்கு ஒன்னு நடந்துச்சி கௌஷிக். அதை வச்சி பாக்கும் போது அம்மா மனசு கொஞ்சம் அசஞ்சிடுச்சின்னு தோனுது... ஆனா இது பெரிய மலை  ... உன் குட்டி இளவரசியாலதான் இந்த மலைய கொஞ்சம் கொஞ்சமா சாய்க்க முடியும்ன்னு நினைக்கிறேன் கௌஷிக். என்றாள் பூஜா.

பூஜா கூறியதும் முகத்தில் புதுவித சந்தோஷம் பரவ பாபி இன்னைக்கு என்ன நடந்தது சொல்லுங்க..  என்றான் ஆர்வமாக

வானதி நடத்திய ஆர்பட்டத்தையும் அதற்கு மாதுரியின் ரியாக்ஷ்னையும் கூறிக்கொண்டிருந்தவள் ஆனா... கௌஷிக் குல்லு கேட்ட கேள்வியில அம்மா ஷாக் அடிச்சாப்போல ஆகிட்டாங்களாம்..  அப்பா சொன்னார் என்றாள் பூஜா

அம்மா ஷாக் ஆகிர அளவுக்கு அப்படி என்ன பாபி கேட்டா  என் குல்லுமா?!?... என்றான் அதை தெரிந்து கொள்ளும் ஆவலுடன்

என்ன கேட்டாளா ....???  என்னை உங்களுக்கு பிடிக்காதான்னு கேட்டு இருக்கா பாரு கௌஷிக்???  அம்மா கிளின் போல்ட்  அவங்க என்ன சொல்றதுன்னு தெரியாம  முகம் சொர்ந்து  எழுந்து போய்ட்டாங்களாம் என்று கூறினாள் பூஜா

அதை கேட்டதும் தன் மகளின் மனதில் தன் தாயின் நிராகரிப்பு எவ்வளவு ஆழமாக  பதிந்துள்ளது என்பதை நினைத்து வேதனைக் கொண்டவன்  அன்னையின் செய்கைகளில் இருந்து சிறிது சிறிதாக தன் தாயின் மனதை  மகளால் மாற்ற முடியும் என்று நம்பிக்கையும்  கொண்டான்.

ம்.... என்று பெறுமூச்செறிந்தவன் சரி பாபி குழந்தைகளை போய் பார்த்துட்டு வறேன். என்றவன் பேபிடால் குல்லுமா எங்க இருக்கிங்க??  அப்பாகிட்ட வாங்க....  என்று அவளை கொஞ்சிக்கொண்டே பூஜாவின் அறைக்குள் சென்று  மூன்று குழந்தைகளையும் கண்டான்.

அவன் குரல் கேட்டதும் சித்தப்பா என்று என்று மீராவும்  ஜெஷ்வினும், அப்பா என்று வானதியும் ஒடி வந்து கட்டிக்கொண்டனர்.
ஒருசேர மூவரையும் அனைத்து அவர்களுக்கு  முத்தம் கொடுத்தவன் என்ன இன்னைக்கு எல்லாரும் ஒரே ரூம்ல உட்கார்ந்து சமத்தா விளையாடுரிங்க?!??.. ஆச்சர்யமாய் இருக்கு?!?.. என்று  அவர்களை பார்த்து கேட்க

கௌஷிக்கின் கேள்வியில் அவனின் செல்ல மகள் தந்தை தன்னை கவனிக்க வேண்டும் என்று உடனே முகத்தில் சோககீதம் வாசிக்க துவங்கியிருந்தாள். அவளின் முகமாற்றத்தை கவனித்தவன் என்ன பேபிடால் ரொம்ப சோகமா இருக்காங்க???  என்ன ஆச்சி?? என் செல்லத்துக்கு  என்று எதுவும் தெரியததை போல் கேட்க

அவளின் அண்ணன் ஜெஷ்வின் சித்தப்பா வனிமா கையில அடிபட்டடுச்சி  நிறைய ரத்தம் வனிமா செம அழை அப்புறம் பாட்டிதான் கையில கட்டு போட்டாங்க என்று  ஏற்ற இறக்கத்துடன் அங்கு நடந்தை சுருக்கமாக கூறினான்.

அவன் கூறியதும் கையை எடுத்து தந்தையின் முன் காட்ட கட்டை பார்த்ததும் அச்சச்சோ என்று   குல்லுவின் பிஞ்சு கைகளை கன்னத்தில் வைத்துக்கொண்டு ரொம்ப வலிக்குதாடா  என்ற அவன் கேள்விக்கு இல்லை என்று தலை அசைத்தவளை கவனமா பாத்து ஹேன்டில் பண்ணனும் டா செல்லம் .... என்றவன் சரி அப்பா தூக்கிக்கிறேன் பாப்பாவுக்கு காயம் சீக்கிரம் குணமாகிடும் என்று கூறி வானதியை தூக்கிக்கொண்டு சமாதனம் செய்தான்.

கௌஷிக்கின் சட்டையை பிடித்து இழுத்து தித்தப்பா அக்கா டொம்ப அலுதா கைலாம் ஒதே தத்தம் மாதுமா கையல மந்து போத்தங்க என்று சொச்சமாய் மீராவும் பேச அப்படிங்களா செல்லகுட்டி என்று அவளையும் ஒன்றாக  தூக்கி கொண்டு  கொஞ்சியவன் அவர்கள் மூவருக்கும் வாங்கி வந்த சாக்லேட்டுகளை கொடுத்து  அவர்களை சிரிக்கவைத்து அவளின் சிந்தனையை வேறுபக்கம் திசைதிருப்பி குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தான் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியாமல் இருக்க பூஜா கௌஷிக்கிறக்கு டீயும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸையும் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை எடுத்து பருகிக்கொண்டே பாபி வைஷு வந்தாச்சா??

குழந்தைகளுக்கு வேண்டியதை எடுத்து கொடுத்துக்கொண்டே இல்லையே கௌஷிக் நான் இவ்வளவு நேரம் ஹால்ல இருந்துட்டுதான் வரேன்.  வைஷு வந்திருந்தா எனக்கு தெரிஞ்சி இருக்கும் கௌஷிக்... வைஷு இன்னும் வரலை...

எங்க போனா ஒரு போன் பண்ணி வர லேட் ஆகும்ன்னு சொல்ல மாட்டால?? என்ன தான் நினைக்கிரான்னே தெரியல!! என்று உள்ளுக்குள் அவளை திட்ட அந்தநேரம் பார்த்து கௌஷிக்கின் போன் சினுங்கியது

ஹலோ

......

யெஸ்  கௌஷிக் இயர்

........

நீங்க யாரு

........

எங்க....

.......

எப்படி....

........

ஒகே ஒகே இனும் 10 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்...

......

பாபி நான் கொஞ்சம் முக்கியமா வெளிய போறேன் குல்லுமா கொஞ்சம் பாத்துக்கோங்க

அவள நான் பாத்துக்குறேன் அவள பத்தி கவலை படாதிங்க ஆனா என்ன கௌஷிக்?? ரொம்ப பதட்டமா இருக்கிங்க !?... ஏதாவது பிராப்ளமா

ஒன்னும் இல்ல பாபி  நான் வந்து சொல்றேன்

ரொம்ப நர்வஸா இருக்கிங்க உங்க அண்ணன வர சொல்லவா

இல்ல பாபி  வேணா அவனை டிஸ்டப் பண்ணாதிங்க ஏதாவது அர்ஜன்ட்னா நானே அவனை கூப்பிட்டுக்கிறேன்

பாத்து கௌஷிக் ...... பாத்து போய்ட்டுவாங்க..
என்று பூஜா கூற

அவளிடம் சொல்லிக்கொண்டவன் கிளம்புகிறேன் என்று கூறியதும் குல்லு வாடிய முகமாய் இருக்க வானதியின் உயரத்திற்கு  தரையில்  அமர்ந்து. செல்லம்மா சமத்தா இருப்பிங்களாம்.... அப்பா இப்போ வந்திடுவேனாம்...... என் குட்டி கண்ணம்மா அப்பாவ சிரிச்சிட்டே அனுப்புவாளாம்  என்று கூறி அவளின் தலையை வருடிவிட

அவனின் ஷர்ட் காலரை பிடித்து இழுத்து அப்பா அம்மா கூட இன்னும் வரல என்று கூறி சீக்கிரம் வந்துடுங்க என்று எம்பி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள் அவனின் கண்மனி.

குல்லுவின் கன்னத்தில் தட்டியவன் சீக்கிரம் வந்திடுவேன் மை லிட்டில் பிரின்சஸ் என்று  கூறி மின்னலாய்  காரில் ஏறி தார்சாலையில்  புயல்  வேகத்தில் ஒரு புள்ளி போல் மறைந்தான்.

அந்த பிரம்மாண்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலின் நுழைந்ததும் தன்னுடைய போனை எடுத்து வந்த எண்ணிற்க்கு தொடர்பு கொண்டான்.

எங்க இருக்கிங்க

......

பாத்துட்டேன்
வரேன் என்று கையை  அசைத்தபடியே அந்த டேபிளின் அருகில் சென்றான்.

அவனை கண்டதும் அன்னையை பிரிந்த குழந்தை போல்  இருந்த இடம் பொருள் என்று அனைத்தும் மறந்து கௌஷிக்கை இறுக்க  கட்டிக்கொண்டது ஒரு ஜோடி கைகள். அந்த கைகளை விலக்கிவிடமால் இன்னும் தன் வலிய கரங்களை கொண்டு அந்த கைகளுக்கு சொந்தகாரரை தாய் பறவை தன் இறகுகளை மூடி சேயை காப்பது போல்  தன்னுடைய மார்பில் ஆழ புதைத்துக்கொண்டான்.

அனைத்தவாரே தலையை வருடிக்கொண்டே நான் வந்துட்டேன்..... நான் வந்துட்டேன் டா .... என்று அமைதிபடுத்தியவன் அதன் பிறகே எதிரே இருந்தவர்களை  கவனித்தான். அவர்களை பார்த்ததும்  வியப்பை வெளிபடுத்தியவன்  இருவரையும்  பார்த்து எப்ப வந்திங்க?!?.. என்று கேட்க.

டேபிளின் எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்த இருவரும் அவனை பார்த்ததும் எழுந்து நின்றனர். அங்கு இருந்தவர்கள்களில் ஒருவர் அவனிடம் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு கோவமாக நின்றிருக்க மற்றோருவர் அவனிடம்   இன்னைக்கு தான் வந்தோம் என்று கூறினார்.

(அங்கே வந்த அந்த இரண்டுபேரும்   யார்ன்னுதானே கேக்குரிங்க அவங்க ரெண்டு பேராலதான் இன்னைக்கு அவன் லைப்ல சந்தோஷம் அண்ட் சோகம்  இரண்டும் இருக்கு. யார்ன்னு guess பண்ணுங்க பாக்கலாம்.

Guess பண்ணிட்டிங்களா சரி நானே சொல்றேன் வைஷ்ணவி பிரண்ட்ஸ் வைஷாலி அண்ட் ஸ்வேதா....... தான் அவங்க

ஸ்வேதா பத்தி நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் பட் எல்லோருக்கும் கன்பியூஷன் இல்லாம இருக்க அவளை பற்றி கொஞ்சம் சொல்லிடுறேன்..... ஒரு நிமிஷம் மக்களே..... நீங்க திட்டுறது நல்லா கேக்குது  நீ கதை போடுறதே ரொம்ப பாஸ்ட் இந்த அழகுல  எப்பயோ போட்ட  எப்பிய பத்தி இப்போ கேக்குறியான்னு சொல்றது என் காதுல விழுது.... நான் ஜஸ்ட் அவளை பத்தி சுருக்கமா சொல்லிடுறேன்......  ஸ்வேதா சென்னை அண்ட் நம்ம காதல் மன்னன் கௌஷிக்கோட உடன் பிறவா சகோதரி மாதிரி இவங்க கல்யாணத்துக்கு சென்னை வந்துதான் வைஷ்ணவிய பாத்தான் கௌஷிக்... அவ கர்பமாக இருப்பது தெரிந்ததும் தாயையும் தந்தையையும் பார்த்துவிட்டு  ஸ்வேதாவையும்  பாத்துட்டு வரேன்னுதான் வைஷ்ணவி ஊர்ல இருந்து வந்தா ஓகே இப்போ நியாபகம் வந்திருக்கும்ன்னு  நினைக்கிறேன் இப்போ கதைக்கு போகலாமா😊😊😊😊😊😊)

வைஷாலி  கூறிய பதிலுக்கு விடை
கொடுக்கும் முன்னே அவனை அணைத்த உடல் நடுங்க எப்ப இங்க வந்தா?  ஏன் இப்படி உடம்பெல்லாம் ஷிவர் ஆகுது ? என்று  எதிரே  இருந்தவர்களிட கேட்டுக்கொண்டிருந்தான்.

எங்க கூட  நல்லா பேசிட்டு இருந்தா என்னாச்சின்னு தெரியல திடிர்ன்னு சுவட் ஆக ஆரம்பிச்சிது கை நடுக்கம் அதிகமாச்சி தலைய பிடிச்சிட்டு உட்காந்துட்டா அதான் உங்களுக்கு உடனே கால் பண்னேன்  என்றாள் வைஷாலி.

அதைகேட்டவன் அனைத்தும் புரிந்தவனாய்  ஒன்னுமில்ல ஒன்னுமில்லை என்று ஒரு கையால் அனைத்துக்கொண்டே நீங்க இரண்டுபேரும் எப்போ மும்பை வந்திங்க ....  நேர வீட்டுக்கு வராம ஏன் இங்க வந்திங்க என்று  உரிமையாய் கடிந்துகொண்டான் கௌஷிக்.

அதற்க்கும் ஸ்வேதா எதுவும் பேசாமல் நின்றிருக்க  வைஷாலியே பேசினாள் இன்னைக்கு மதியம் தான் வந்தோம் வைஷுவ மீட் பண்ணிட்டு நாளைக்கே ஊருக்கு போறதா இருக்கோம் என்றவள் ஏற்கனவே உங்களுக்கு நிறைய பிராப்ளம்ஸ் இதுல நானும் இவளும் அங்க வந்தா ஆண்டி என்ன சொல்லுவாங்களோ!!?  அதான் என்னும் போதே திட்ட ஆரம்பித்துவிட்டான் கௌஷிக்

அவங்க இருந்தா என்ன!?!...  நான் இருக்கும் போது உங்களை    யார் திட்டுவா!!  என்று அலுத்துக்கொண்டவன் இருவரையும் பார்த்து ஸ்வேதாவிற்க்கும் கூறுவது போல் உனக்கு எத்தன முறை சொல்றது!!   சரி கிளம்புங்க  வாங்க வீட்டுக்கு போகலாம்...  என்று அழைக்க

இல்ல..  நான் வரல... நீங்க போய்ட்டுவாங்க நான் ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி இருக்கேன். என்று ஸ்வேதா  அவன் முகம் பார்க்காமலே கூற

என்ன ஸ்வே இன்னும் கூட உன் கோபம் போகலையா??  கொஞ்சம் புரிஞ்சிக்கோ டா.. பீளிஸ்  வாடா வீட்டுக்கு போலாம் என்று இறங்கி வர

ஏய் ஷாலு யாரும் என் கிட்ட பேச வேண்டாம். நானும் யார் வீட்டுக்கும் வர மாட்டேன். என்று அவனை பார்த்து முறைத்துக்கொண்டே வைஷாலியிடம் கூற

ஸ்வே மா இங்க பாரு.....   சரி தப்பு செஞ்சது நானவே இருக்கேன் அதுக்கு தண்டனைய தான் ஆறு வருசம் அனுபவிச்சேனே... இன்னும் ஏன் என்னை புரிஞ்சிக்காம கஷ்டபடுத்துரிங்க... என்று வருத்தத்துடன் கூற

மெல்ல விழிகள் கலங்க மௌனமாய் நின்றிருந்தாள்

இதுவரையும் பார்வையாளராய் இருந்த வைஷாலி அண்ணா நான் வரல ணா..... என்றாள்.

என்ன ரெண்டுபேரும் பேசி வைச்சிக்கிட்டு வேலை பாக்குறிங்களா???  மதியம் வந்து இருக்கிங்க  எனக்கு தெரியாம மூனு பேரும் ஹோட்டல்ல  மீட் பண்றிங்க... வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டா ரூம் புக் பண்ணிருக்கோம் நீ வரல நான் வரலன்னு சின்ன குழந்தைங்க போல விளையாடிட்டு  இருக்கிங்க... என்ன நினைச்சிட்டு இருங்கிங்க.. என்று அவனும் சத்தம் போட

அண்ணா அது இல்ல ணா நான் யார்ன்னு கேட்டா என்ன சொல்லுவிங்க?? என்னலதானே பிரச்சனையே வந்தது என்று வைஷாலி கேட்க

உன்னால வந்ததுன்னு நீயே ஏன் நினைச்சிக்குற நடந்தது பத்தி இன்னும் எதுக்கு பேசிகிட்டு இனிமே என்ன நடக்க போகுதோ அதை பத்தி மட்டும் பேசு என்ன புரிஞ்சிதா  பழசை எல்லாம்   மறந்திட்டு என் கூட வ.... நீ யாருன்னு சொல்றது என் வேலை அத பத்தி கவலைபடம  இரு .....என்றவன் மேலும்

நீங்க ரெண்டுபேரும்  இப்போ வரல கைய கால கட்டி வண்டியில தூக்கி போட்டு போயிடுவேன் என்று மிரட்டினான்.

அண்ணா என்று வைஷாலி அழைக்க மூச்......  என்று வாயில் கை வைத்தவன் இரண்டுபேரும் வாய திறக்கக்கூடாது. என்று கூறி.

கிளம்புங்க பஸ்ட் டாக்டர்கிட்ட போயிட்டு  வீட்டுக்கு போகனும் என்றவன் உடன் இருவரையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுவிட்டு நான்கு பேரும் வீட்டிற்க்கு பயணம் ஆனார்கள்.

.....................................................................................

நீயூயார்க்

கடல் நீரில் விளையாடிபடி இருந்த காயூவை பார்த்துக்கொண்டே இருந்த கிர்ஷின் நினைவை கலைக்க தண்ணீரை அவன் மேல் அடித்தாள் காயூ

தண்ணீர் அடித்ததில் ஹே......  என்றவனை

என்னாடா பட்டிகாட்டான் மிட்டாய்கடைய பார்த்தா போல பாத்துட்டு இருக்க என்று அவனை கேலி பேச

அடி செல்லகுட்டி...  நீ மிட்டாய்தான்டி நான் எரும்பு உன்னை எப்போ என்று அவன் கூறவும்

டேய் டேய் நிறுத்து இது நம்ம ஜோனர் இல்லடா இப்போ இதை பத்தி பேசினா சென்சார்ல கட் பண்ணிடுவாங்கடா

அவங்க கெடக்குராங்க செல்லம் நம்மலபத்தி இந்த ஆத்தருக்கு எங்காயச்சும் கவலை இருக்கா நம்மல மீட்பண்ண வைக்கவே கஷ்ட்டபடுராங்க  இதுல எங்க இருந்து செல்லம் நாம லவ் பண்ணி டூயட் பாடுறது அப்படி இப்படி உன்னை சைட் அடிச்சாதான் ஆச்சி

விடுடா கடைசிநேரத்துல ஆத்தர பாத்துக்காலம் என்று காயூ சமாதானம் கூற

(அடி செல்ல கண்மணிகளா உங்களை தான்ப்பா நிறைய பேர் கேக்குராங்க  எனக்கு தான் உங்க அண்ணனையும் அக்காவையும் சேர்த்துவைக்கவே நேரம் போதலையே இது என் சொந்த கஷ்டத்தையும் சோகத்தையும் வேற யாரு பாக்குரா நீங்க கூட பாக்கவோ கேக்கவோ மாட்டன்றிங்க😢😢😢😢😢)

அது இருக்கட்டும் டா என்று அருகினில் ஏதோ ரகசியம் சொல்வது போல்  வந்தவள் அவனை அலையில் தள்ளிவிட்டு தண்ணிரை அடித்து விளையாட

அதில் இருந்து எழுந்தவன் உன்னை என்று நனைந்த உடையை சரிசெய்துகொண்டே அவளை துரத்திக்கொண்டு  ஓடியவனின் கையில் சிக்காமல் புள்ளிமானாய் ஒடியவள் வேகமாக எதன் மீதோ மோதி விழுந்தாள். (உனக்கு வேற வேலையே இல்லையா எது மேலயாவது இடிச்சிகிட்டே இருப்பயா இதுல என்னையே திட்டுறிங்க)

ஹே வாட் ஆர் யூ டூயிங் ஷிட் என்று அங்கிருந்த நால்வரில் ஒருவன் மீது மோத அவன் கத்தினான். (அச்சச்சோ அவள் எதன் மீதோ இல்லை யார் மீதோ மோதி இருக்கிறா.....  பார்க்கவே பயங்கரமா இருக்கானே காயூ வாய வைச்சிக்கிட்டு சும்மா இரு  உன் திருவாயை திறக்காதம்மா 😓😓)

ஹே காய்ஸ் சாரி சாரி யா என்று அவள் அங்கிருந்து திரும்பவும்  நால்வரில் ஒருவன் டேய் பாப்பாவ பாத்தா வெள்ளகாரி மாதிரி தெரியல நம்ம ஊரு பெங்களுர் தக்காளி மாதிரி இருக்கா டா  என்ன பிகரு ஆனா கத்திரிக்கா போல குள்ளமா இருக்காடா என்று நண்பர்களிடம் அவளுக்கு தமிழ் தெரியாது என்று அவளை பற்றி கலாய்க்க

குள்ளமா இருந்தா என்னடா ஆளு செம என்று இரண்டாமவன் கமெண்ட் அடிக்க

ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்து விட்டாள். அதற்க்குள் அங்கு கிர்ஷ்ம் வந்துவிட

ஆமாண்டா... நான் பெங்களுர்காரிதான்டா....  நீ ஊட்டி முட்டைகோஸ் மாதிரி மூஞ்சி வைச்சிருக்க அதோ பாரு அவனுக்கு மூக்கு பேரிக்கமாதிரியே இருக்கு... என்று அவளும் அவர்களை திட்டியபடி இருக்க

அவள் அடித்தவன் கன்னத்தில் கைவைத்துக்கொண்டு அவளை முறைத்திருக்க  ஏய்  என்னடி ஆச்சி ஏன் டி அடிச்சிகிட்டு இருக்க இவனுங்ககிட்ட எதுக்கு வம்பு டா என்று அவளை இழுக்க

சாரி பாஸ் சாரி பாஸ் என்று மன்னிப்பு கேட்டவன் அவளை கூட்டி செல்ல முயற்ச்சிக்க அவனை விட்டு திமிரிக் கொண்டு வந்தவள் இவன் ராஜபாளையம் நாய் மாதிரி இருக்கான் அவனை பாத்தியா??  அவன் முகத்தை பாக்கவே சகிக்கல உன்னை எந்த ஊர்லடா சேக்கரது!?!?... என்று கலாய்த்தவள் பீச்சிக்கு வந்தோமா  அலைய ரசிச்சோமா... போனோமான்னு... இருக்கனும் வந்த இடத்துல வம்பு வளர்த்தா வால ஒட்ட நரிக்கிடுவாங்க ஒரு பொண்ண பார்த்தா டீஸ் பண்ணனுமா ????  என்று சண்டை போட

ஏய் இந்த பொண்ணுக்கு வாய பாருடா பாத்தாத தான் டீசன்டா இருக்கா ஆளு தர லோக்கல் போல டா என்றான் ஒருவன்

ஆமாண்டா நான் லோக்கல் தான் இப்போ என்னடா என்ன என்று மீண்டும் சண்டை போட

ஏய் வாடி போலாம் எவ்வளவு சொல்றேன் அடங்கமாட்டியா??  என்று கிர்ஷ் அவளை இழுத்து  கொண்டுவர முயற்ச்சிக்க.

அவனை ஒரு லுக் விட்டவள்  என்னை கலாய்க்கிரான் பாத்துட்டு சும்மாவே இருக்கான் என்று நினைத்து டேய் காட்டெருமை பாத்தியா??? என் ஆள எப்படி இருக்கான்...  சும்மா பாலிவுட்  ஹீரோ போல அவனை வெச்சிக்கிட்டே என்னை டீஸ் பண்றிங்களா?? என்று ஏத்தி விட

காயூ என்னடி அதுதான் அவனுங்கள திட்டிட்டல வா  கூப்பிடவந்த என்னை ஏன் அவனுங்க கூட கோத்து விடுற?!?... என்று அவளிடம் ரகசியமாக பேச

அதில் காயூவை கலாய்த்தவன் அதற்க்குள்  டேய் நீ என்ன ஹீரோவா??? இவ யாருடா  ஹீரோயினா...???? எங்க சண்டை போடுவியாம் போடுடா...  இங்க போடுடா என்று அவனின் இருதோல்களையும் கை வைத்து தள்ளிக்கொண்டே போக

பாஸ்.. பாஸ்... விடுங்க பாஸ்...  அவ ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா அதலாம் ஒன்னும் இல்ல பாஸ் உங்க மனசுல என்னை பத்தி இவ சொன்னதெல்லாம் இருந்தா அதையெல்லாம் அழிச்சிடுங்க பாஸ்  என்று அவர்களிடம் சமாதானம் பேச

டேய் என்னடா...  நீ அடிச்சா இவனுங்க தாங்க மாட்டனுங்கன்னு பாக்குறியா!!! அவன் மூக்குல ஒரு குத்து விடுடா எப்படி ரத்தம் கொட்டுதுன்னு பாக்கனும்  என்று மறுபடியும் உரக்க கத்த

அவனை நால்வரும் சுற்றி வட்டமடித்தனர்.

ஏய் என் மசுல்ஸ் மேன் வந்துட்டான் டா.... அவனை சீண்டுனவன் செத்தான் டா... என்று இவளும் வித்தை காட்டுவதுபோல் கத்தி கொண்டு இருந்தாள்.

இன்னைக்கு என் உடம்புல ரத்தகாயம் பாக்கமா விடமாட்டா போல இருக்கு!!!! என்னை விட்டு  இவனுங்கள அடிக்க வைக்க டிரை பன்றாளா??!??  இல்ல இவனுங்க கிட்ட  என்னை மாட்டிவிட டிரை பண்றாளா?!???  இருடி இன்னைக்கு இருக்கு உனக்கு..... என்று மனதிற்க்குள் அவளை வசைபாடியவன்

என்ன பாஸ் அவ சொன்னதெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு  கடல் தாண்டி வந்து இருக்கோம் ஒன்னுக்குள்ள ஒன்னா ஹெல்புல்ல இருக்கலனாலும் அடிச்சிக்கிட்டோம்ன்னு பேராவது வாங்கமா இருக்கலாமே......  என்று இவனும் அவர்களிடம் தன்மையாய் கூற

அவன் அமைதியாய் கூறிய எதுவும் அவனை விட்டு சற்று தூரத்தில் நின்றிருந்த  காயூவின்  செவிகளில் விழாமல் இருந்ததால் பாருங்கடா என் ஆளு அடிக்கபோரான் ஒவ்வொருத்தனும் எப்படி அடிவாங்கிட்டு ஒட போறிங்கன்னு.... என்று இவளும் விடாமல் இங்கிருந்து அவர்களை உசுபேற்ற.

கிருஷின் முகத்தில் குத்து விட விரல்  முழுவதும்  மடக்கி ஓங்கி கையை கொண்டு சென்றான் ஒருவன் அவன் கையை மடக்கி பிடித்து என்ன என்பது போல் சைகை செய்து இப்போ என்ன சண்டை போடனும் அவ்வளவுதானே ஓகே ஒரு நிமிஷம் என்றவன் அணிந்திருந்த வாட்சை கழட்டி கேட்ச் பேபி என்று காயூவிடம் எறிந்து விட்டு கமான் ஸ்டார்ட் என்றான் அவன்  பாக்ஸிங்  சேம்பியன் என்றும் மாநில அளவில் பல பரிசுகளை பெற்றவன் என்றும் தெரியாத காயூ அவன் சண்டையிடும் அழகில் மயங்கி நின்றாள். 15 நிமிடத்தில் அவனவன் நின்ற இடத்திலேயே சுருண்டு படுத்திருந்தனர். கமான் பேபி என்று அவளின்  தோலின் மேல் கை போட்டு ஒரு ஹீரோவை போல் அழைத்துக்கொண்டு சென்றான் கிருஷ்.

ஏய் என்னடி அப்படி பாக்கர  எனக்கே வெக்கமா இருக்குடி என்று குழைவாக பேசி கிருஷ் கால்  கட்டை விரலால் மணலில் கோலம் போட்டான்.

சீ..... வாய மூடு..... என்றவள் டேய் என்னடா ஒவ்வொருத்தனையும் இந்த பின்னு பின்ற நான் எதிர்பாக்கவே இல்லை என்று ஆச்சர்யமாய் கூறினாள் காயூ.

அப்போ நீ என்ன நினைத்து என்னை அவனுங்க கிட்ட அனுப்பி விட்ட பேபி என்று காயூவிடம் கிருஷ் கேட்க.

அது அது நீ எப்படியும்  இரண்டுபேரயாவது அடிப்பன்னு தெரியும் என்றவளை இடமறித்து அடுத்த ரெண்டுபேரும் என்னை வைச்சி கஞ்சி காசி இருப்பானுங்களே அப்ப என்னடி பண்ணி இருப்ப???

இல்ல டா  அது நான்

சொல்லு டி

அவனுங்க என்னை டீஸ் பண்ணி இருக்கானுங்க அவனுங்க கிட்ட சண்டை போடாம அவனுங்ககிட்ட சமாதனம் பேசிட்டு என்னை தள்ளிட்டு வர டிரை பண்ண அதான் இரண்டு காட்டு காட்டுவானுங்கன்னு  மாட்டி விட..ல.. மு.. ன்.. னு என்று காயூ ஒவ்வோரு வார்த்தையாய் கூறினாள்.

உன்னை இப்ப இல்லடி முதல் முதலா நீ என்னை  கலாய்ச்ச பாரு அப்பவே மண்டைல ஒன்னு வைச்சிருந்தேன்னா என்மேல கொஞ்சமாச்சும் பயம் இருந்திருக்கும் என்று காயூவின்  தலையில் கொட்ட

மாமா மாமா அடிக்கதடா என்று அவளும் தலையை தேய்த்துக்கொண்டே  வலியால் மாமா என்று விட

ஹேய்....... அடிச்சா மாமான்னு வருது முதல்லியே இது செய்திருக்கலாமோ என்று யோசிப்பது போல் பேச

போடா எருமை என்று அவனை தள்ளிவிட்டாள் விளையாட்டெல்லாம் போதும் இப்போ கொஞ்சம் நம்ம லைப் பத்தி பேசலாமா என்று காயூ கூறினாள்.

நாம அதைபத்தி தானே செல்லம் பேசுறோம் என்று அவளின் இரு தோல்களிலும் கைவைத்தான் கிருஷ்

முதல்ல கைய எடுடா பன்னி  பீ சீரியஸ் கிருஷ் நாம ரொம்ப அவசரப்பட்டுட்டோம்ன்னு நினைக்கிறேன் டா.

என்னடி சொல்ற  நாமா என்னடி அவசரப் பட்டுட்டோம் என்று அவன் அதிர்வது போல் கேட்க

டேய் அறிவு கெட்வனே நான் சொல்றது  நம்ம லவ்வ பத்தி டா நாம கொஞ்சம் யோசிச்சி இருந்திருக்கலாம்

இதுவே  லேட்டு டா  நீ இங்க வந்து காலேஜ் ஜாய்ன் பண்ண பஸ்ட் இயரே இது நடக்கும்னு எதிர்பாத்தேன் பட் நாம இந்தியா கிளம்ப 1 மந்த் இருக்கும்போது சொல்லி இருக்க விடு செல்லம் இந்தியா போய் அங்க லவ்வ டெவலப் பண்ணிக்கலாம்.

உன்னை  உன்னை என்ன பண்றது என்று அருகில் இருந்த ஜெர்கினை எடுத்து அவன் மீது விலாச ஏய் என்னடி எடுத்ததுக்கெல்லாம் அடிக்கிற நான் வீட்டுக்கு செல்ல பையன்டி யாரும் என்னை அடிக்கவே மாட்டாங்க நீ அடிவாங்க வைக்கிறதும் இல்லாம எல்லாத்துக்கும் அடிக்கிற செல்லம் என்று வலியில் இருந்த முதுகை தடவியபடியே பேச

டேய் போதும் நிறுத்து வாயில இருந்து ஏதாச்சும் வந்திடும் என்றவள் நானே உங்க வீட்டுலயும் எங்க வீட்டுலயும் நம்ம வவ்வ அக்ஸப்ட் பண்ணிக்கு வாங்களான்னு நாளுக்கு நாள் டென்ஷன் ஏறுது உனக்கு கிண்டலாடா என்றாள்.

விடு செல்லம் பாத்துக்கலாம் டோன்ட் வொரி பீ ஹெப்பி டியர் என்று அவள் கன்னத்தை கிள்ளி விட போடா என்று திரும்பியவள்

என்னடா பாக்கபோற உங்க அம்மா எங்கள பாத்தாலே ஏதோ தீண்டதகாதவங்கள பாக்குறா மாதிரி பாக்குறாங்க  என் அக்காவ உங்க வீட்டுல கொடுத்ததுக்கே இந்த பாடுபடுற என்னை கொடுப்பாங்களான்னு தான் யோசிக்கிறேன் எங்க அண்ணன் ருத்திரமூர்த்தியா மாதிரி என்னை கொன்னுபோட்டாலும் போடுவானே தவிர உங்க வீட்டுக்கு ஒருநாளும் அனுப்பவே மாட்டான் என்று அவள் பேசிக்கொண்டே போக

ஏதோ அவள் பாட்டிற்க்கு பேச இவன் பாட்டிற்க்கு அலைகடலில் விளையாடும் இரண்டு கடல்கன்னிகளை பார்த்தான் இவ விட்டா பேசிட்டே இருப்பா இருசெல்லம் என்று திட்டமிட்டவன் அவர்களையே பார்த்துக்கொண்டு இருப்பது போல் நின்றிருந்தான்.

காயூ பேசிகொண்டிருக்க  கிருஷ்ஷிடம் இருந்து  சத்தம் வராமல் இருந்தது  என்னடா எதுவும் சொல்லல என்று திரும்பி அவனை பார்த்தாள். அவன் பார்த்திருக்கும் திசையை பார்த்தவள் மவனே உன்னை என்னடா பண்றது என்று  அலுத்தவள் அவன் முன்னே சென்று நின்றாள்.

அவளை பார்த்ததும் திகைப்பதுபோல் முகபாவத்தை மாற்றியவன் ம் நீ என்னமோ சொல்லிட்டு இருந்தியே என்னது நாம அவசரப்பட்டோம்ன்னு ஆமா பேபி நாம அவசரந்தான் பட்டுட்டோம் என்று அவர்களை பார்த்தபடியே கூற.

என்னடா சொன்ன அவசரப்பட்டுட்டியா நான் ஆயிரம் சொல்வேன் என்னை சமாதானப்படுத்தி சரிபண்ண பார்ப்பியா நான் சொன்னதையே திருப்பி சொல்லி என்னை கழட்டி விட டிரை பண்றியாடா பண்ணாட உம்மூஞ்சிக்கு நானே அதிகம் உனக்கு வெள்ளகாரி கேக்குதாடா மரியாதையா வீட்டுல கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ற வழிய பாரு இல்ல மவனே  சங்கு கன்பார்ம்டா என்று மிரட்டிவிட

என் லாலிபப்புக்கு கோவத்த பாரு மாமா சும்மா ஒரு பொண்ண பாத்ததுக்கே செல்லகுட்டிக்கு எவ்வளவு கோவம் இதுல நாம பண்ணது சரியான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க இப்போ புரியுதா உன்னைவிட்டு என்னாலையும் என்னைவிட்டு உன்னாலையும் இருக்கமுடியாது செல்லம் என்று அவள் மூக்கை பிடித்து ஆட்டினான் அவன் செய்கையில் அவளின் முகம் இன்று மலர்ந்த ரோஜாவாய் சிவந்திருக்க  அவளை அனைத்துக்கொண்டான் அவள் மார்பில் அழகாய் சாய்ந்தவள் அவனுடனே சேர்ந்து நடக்க துவங்கினாள். அவனுடானான தன் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையில்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro