காதல் 13

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

❤️❤️❤️❤️

இயக்குநர் ரித்விக் வர வேண்டிய நேரம் நெருக்க,மாதவிக்கு இதுவரை அனுபவித்திராத பதற்றமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது....

அவன் கார் கல்லூரியின் வாயிலை நெருங்க,கல்லூரியின் முதல்வர்,துணை முதல்வர் என  கல்லூரியில் முக்கிய பொறுப்பில் இருந்த அனைவரும் அங்கே குவிந்தனர்....

அவனை முதல் முறை பார்த்தவள் விழா நடைபெற இருக்கும் ஆடிடோரியத்தின் வாயிலிலே சிலை போல் நின்றாள்...

அவளை கடந்து சென்றவன்...அங்கு பெண் ரசிகைகள் கூட்டம் அவனை சூழ,பெறும்பாடு பட்டு மேடையை அடைந்தான்...

பேராசிரியர் ஒருவர் அவளை தொடர்ந்து அழைக்க கனவு உலகத்தில் இருந்து வெளியே வந்து,அவனுக்கான வரவேற்பு உரையை படிக்க மேடையை நெருங்கினாள்...

அந்த காகிதத்தை கையில் எடுத்தவள்,அவனை ஒரு முறை பார்த்துவிட்டு பேச்சை துவங்கினால்....ஒரு கோர்வையாக அவனின் திரைப்படங்களின் சிறப்பை கூறியவள்,சில வரிகளில் அவனின் கவனத்தை ஈர்த்தால்..அவை அனைத்தும் அவள் அவனுக்காக பார்த்து பார்த்து எழுதிய வரிகள் ஆயிற்றே!!!

கல்லூரி முதல்வர் அவனிற்கு பூக்கொத்தும்,பரிசு பொருளும் அன்பளிப்பாக கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டவனை உபசரிக்கும் வண்ணம் அவனை விருந்தினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்கு அழைத்து சென்றனர்...

அதன் பின் மீதம் இருப்போருக்கான அறிமுகத்தை கொடுத்த மாதவி,அதன் பின்னரே தன் தோழிகள் அங்கு இல்லாததை கண்டால்...

சிறிது நேரத்தில் ரித்விக் மீண்டும் அங்கு வந்து சேர கலை நிகழ்ச்சிகள் துவங்கியது....சாதனாவும்,அனுவும் மகிழ்ச்சியாக அங்கு நுழைய,அந்த சத்தத்தில் ஏதும் கேட்க முடியாது என்பதால்,பிறகு கேட்டுக் கொள்ளலாம் என அவர்களை அழைத்து சென்று அமர்ந்தாள்

வெஸ்டன் டான்ஸ் முடிந்து நாட்டுபுற நடனம் துவங்க,மாணவ,மாணவிகள் அவர்களின் நண்பர்கள் கூட்டத்தோடு சேர்ந்து ஆட ஆரம்பித்தனர்...

சிறிது நேரம் பொறுத்த சாதனா அதன் பின் முடியாமல் மாதவியை சீன்டினால்...

என்னடி??

நல்ல நேரம் எதாவது பாக்குறியடி??

ஹா?எதுக்கு?

டான்ஸ் ஆடதா..சீ எழுந்துடுங்க ஆடலாம்...என்றபடி இருவரையும் எழுப்பினால் சாதனா

பாடல்களும் அவர்களின் விருப்பப்படி அமைய...மூவரும் ஆட ஆரம்பித்தனர்...அது எப்பொழுதும் போல் பல ஆடவர்களின் கவனத்தை ஈர்த்தது..சில பெண்களின் கவனத்தையும் பல பெண்களின் பொறாமை பார்வையையும் பெற்றது...

மூவரின் நடனமும் அந்த அளவுக்கு ஈர்ப்பு உடையாதாகவும் நேர்த்தியாகவும் இருந்தது...ஆனால் மாதவி செனன்ட்டாக இருக்க அவளுக்கு இந்த போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை,அவள் இல்லாமல் மற்ற இருவரும் அவற்றில் கலந்து கொள்ள விரும்பவில்லை,எனவே இவ்வாறு மேடையின் கீழ் ஆடி மகிழ்வர்

நடன போட்டிகள் நிறைவு பெற,ரித்விக் புறம்பட வேண்டிய நேரமும் வந்தது...

முன்பை போன்றே இப்பொழுதும்,அவனிடம் புகைப்படம் மற்றும் கையெழுத்து பெற அவனை சூழ்ந்துக் கொண்டனர்...

அந்த கூட்டத்தில் இவர்கள் மூவரும் இருந்தனர்...

ரித்விக் அவன் காரின் அருகே செல்லும் போதே அவனின் அருகில் சென்றனர்...அவன் காரில் ஏறுவதற்குள் அவனிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் முண்டி அடித்துக் கொண்டு அவனை நெருங்க,மாதவியை தள்ளி விட அவள் அவனின் தோள்களில் சென்று விழுந்தாள்...

அவன் நிமிர்ந்து அவளை பார்க்க,அவள் அவனிடம் விலகி திக்கி திணரி சாரி சார் எனச் சொல்வதற்கும் அனுவும் சாதனாவும் அவர்களின் புறம் வருவதற்கும் சரியாக இருந்தது...

சார்!!என இருவரும் ஒன்றாக அழைக்க,அவர்களிடம் திரும்பி ஹே!என்றான்...இவர்களின் புன்னகை பரிமாற்றத்தை பார்த்த மாதவி கண்கள் விரிய குழப்பினால்...

அப்பொழுது அனு...இவதான் சார் மாதவி என்று அழுத்தமாக கூறினாள்...

அதை கேட்ட ரித்விக் மாதவியிடம் திரும்பி,அரை நிமிடம் அவளை மேலிருந்து கீழ் வரை அவளை கண்களால் அளவு எடுப்பது போல் பார்த்தான்...

அவனுடன் வந்த உதவியாளன்...சார் கிளம்பளாமா என்று கேட்க...

தன் வாலட்டை எடுத்தவன்,அதிலிருந்து அவனுடைய விசிடிங் கார்ட்டை எடுத்து அவளிடம் நீட்டினான்...

ஏதும் புரியாமல் மாதவி அதைப் பெற்று கொண்டால்..

சீ யூ சூன்!என அவளிடம் கூறியவன் காரில் ஏறி சென்றான்...

இது அனைத்திற்கு பதில் வேண்டி தன் தோழிகளை பார்த்தால்........

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro