29.சாரா மித்ரா

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

29. Saramithra95

மகேந்திரவர்மனை பார்த்து சட்டென தன் அறைக்கு சென்றவர், பின்  குருவிற்கு அழைத்து மிருணாளினியினை பயன்படுத்தி, தன் மகனை தங்கள் வழியிலிருந்து விலக்குவதற்கான திட்டங்களை பற்றி மாலை கூறுவதாக தெரிவித்துவிட்டு அவர் மகன் எந்நேரத்திலும் அங்கு வரலாம் என போனை அனைத்துவிட்டு தன்னை ஆசுவாசபடுத்தி கொண்டார்.

அவர் எதிர்ப்பார்பை வீணாக்காமல் அடுத்த ஐந்து நிமிடத்தில் உள் நுழைந்தவன், மாலை ரோந்து வரும்போது அப்படியே தந்தையையும் பார்த்துவிட்டு அவரது பாதுகாப்பினை உறுதி செய்ய வந்திருந்தான்.

"அப்பா அது அது நா... அது அம்மா இப்போ தான் போன் பண்ணாங்க. இதுல உங்களுக்கு?" என இழுக்க, எதை வேண்டுமானாலும்  கம்பீரமாக உரைக்கும் தன் மகன் இவ்வாறு தயங்குவதை கண்டு புன்முறுவலுடன்.
"எனக்கு முழு சம்மதம்ப்பா... எங்க எங்களுக்கப்புறம் உனக்கு துணைய தேடிக்காம காக்கி சட்டையோடயே இருந்திருவியோன்னு நெனச்சு பயந்தேன். அந்த நினப்ப மாத்திட்டப்பா.  இப்ப தான் நிம்மதியாவும் ரொம்ப சந்தோசமாவும் இருக்குப்பா." என்றார்.

பெற்றோரின் சம்மதம் கிட்டியதையடுத்து ஆனந்தமாக அவ்விடம் விட்டு வெளியேறியவன் அடுத்து சென்று நின்ற இடம் தன் மன கதவினை திறந்து ஆட்சி செய்பவளின் அறை கதவின் முன்தான்.

அங்கு குட்டி குழந்தைகளின்  சின்னஞ்சிறு கைகளை பிடித்து அற்புதமாக பேசி அதிசயத்தில் அவர்களை ஆழ்த்தி கசப்பான மருந்துகளையும் அமைதியாக அவர்களை சாப்பிட வைத்த அவளின் அன்பான அறிவாற்றலை எண்ணி நெகிழ்ந்துதான் போனான்.

அவள் குழந்தைகள் மீது கவனம் வைத்திருக்க, அவளின் மீது கவனம் வைத்திருந்தவனை ஒரு குழந்தை பார்த்து அவளின் கைகளை தன் பிஞ்சுவிரலால் உரசி, "அக்கா எங்கள மாதிரியே ஒரு பெரிய அங்கிள் உங்ககிட்ட தேன்மருந்து வாங்க வந்துருக்காங்க. அங்க பாருங்க!" என கதவிருந்த பக்கம் காட்ட அங்கு தன்னையே வைத்த கண் வாங்கமல் பார்த்து கொண்டிருந்த மகியினை பார்த்த மிரு சற்று ஆடித்தான் போனாள்.

பின் செவிலியரை அழைத்து குழந்தைகளை அவரவர் அறைக்கு அழைத்து செல்ல சொல்லிவிட்டு
அவனிடம் வந்தவள், ஆயிரம் கேள்விகள் எழ, தன்னை அமைதிபடுத்தி கொண்டு, எதுவும் நட்க்காதது போல, "என்ன எம்.வி. சார்? இன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல தான் ரோந்து போல! இங்க வந்துருகிங்க?" என்றாள்.

"மிரு!  நீ  ஃபிரியா? உள்ள போய் பேசலாமா?" என்றவனை அழைத்து சென்றவள், "சொல்லுங்க சார்!" என்றாள்.

"ஐ லவ் யூ மிரு!!!" என்ற கட்டிளங்காளையவனின் வார்த்தை அவள் மனதில் கட்டுக்கடங்காத உணர்வுகளாக பெருக்கெடுக்க, அவள் மனதில் ஆயிக்கணக்கான பட்டம்பூச்சிகள் படக்படக்கென பறப்பதாய் தோன்றினாலும் தன்னை கட்டுபடுத்தி கொண்டு, "சார். இத பத்தி நேத்தே பேசி முடிச்சாச்சு. பிளீஸ் அப்டியே விட்டுங்க. அதுதான் நல்லது."  என கூறி மற்றொருபுறம் திரும்பி கொள்ள, அதே நேரத்தில் அவனுக்கு எமர்ஜென்சி கால் வர, "நா கிளம்புறேன் மிரு! நல்ல விசயமா உன்ன பார்க்க வந்தேன் அப்புறம் சொல்றேன்." என்றுவிட்டு விரைந்தான்.

சூரியன் தன் சுட்டெரிக்கும் கதிரினை சுருங்க செய்து வெப்பம் குறைந்த இரம்மிய மாலை வேளையில்,
இராஜேந்திர வர்மன் தன்னை யாரும் தொந்தரவு செய்ய கூடாது என ரிசப்சனிஸ்டிடம் கூறிவிட்டு, தனது ரூமினுள் சென்று கதவை மூடியபின்,
உடனே குருவிற்கு அழைப்பை விடுத்தார்.

அதற்காகவே காத்திருந்தவன் போல,
ரிங்கிலேயே அட்டன் செய்தவனிடம் தங்களது அடுத்தடுத்த பிளான்களை பற்றி கூறினார்.

பெரிய மனிதர் என்ற போர்வையில் மறைந்து அற்ப தனமான வேலைகளை செய்து கொண்டிருக்கும்  மனித தன்மையற்றவர்.

ஆம், எம்.வி. டிரஸ்ட் என்ற போர்வையில் நல்லது செய்கின்றேன் என்ற பெயரில் உலகத்தார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தனக்கான நரபலியினை இரத்தவகை அடிப்படையில் இரக்கமில்லாமல் கடத்தி தன் மருத்துவமனையில் மருத்துவர் என்ற சொல்லிற்கே தகுதியில்லாத சில மிருகங்களை தன்னருகே இரகசியமாக வைத்து கொண்டு மனித உறுப்புகளை சூறையாடும் கொடிய மிருகம்.

wattpad id : saramithra95
Pratilipi id.:saramitra95

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro