1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலையில் குயில்களின் சத்தத்திற்கு முன்பே எழுந்துவிடும் நான், இன்று சூரியன் தன் கதிர்களை சுல்லென்று கொட்டும் வரை படுக்கையில் இருந்து எழாமல் இருந்தேன். வீட்டில் இருக்கும் யாரையும் பார்க்கும் தைரியம் எனக்கில்லை.

நான் பாலகுமார். எல்லோருக்கும் குமார். ஒருத்திக்கு மட்டும் பாலா. இந்த நாள் வரும் என்று திருமணம் முடித்த முப்பத்து இரண்டாவது நாளே எனக்குத் தெரியும். ஆனால் இந்த நாள் வருவதற்கு இருபத்து ஒரு வருடங்கள் ஆகும் என்று நான் நினைக்கவில்லை. இன்றோ நாளையோ இந்த நாள் வந்துவிடும் என்று எண்ணி எண்ணியே என் வாழ்வில் இத்தனை வருடங்கள் ஓடிவிட்டது. அருவியில் இருந்து விழும் நீர் ஓடையில் கலந்து அதுபாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும். எத்தனை பேர் வந்து தங்கள் கால்களை அதில் நனைத்தாலும் அதையெல்லாம் அருவி சட்டை செய்வதே இல்லை. அது போலவே என் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருந்தது. நேற்றைய அந்தி நேரத்தில் இருந்து எல்லாமே மாறிவிட்டது. என் மகள்களுக்கு எது தெரிய கூடாது என்று நினைத்தேனோ அது தெரிந்துவிட்டது. அடுத்து என்ன என்பது எனக்கு தெரியவில்லை. கண்ணை கட்டி பாலைவனத்தில் விட்டது போல உள்ளது.

நான் நிலா. வனிதா பாலகுமாரின் மகள்களில் ஒருத்தி . என்னுடன் கூடவே பிறந்தவள் கயல். நேற்று நடந்த எதுவுமே கயலுக்கு தெரியாது. தெரிந்திருந்தால் வீட்டில் ஒரு கொலை விழுந்திருக்கும். எங்களுக்குள் யார் அப்பா மீது அதிக பாசம் வைப்பது என்று என்றுமே ஒரு போட்டி இருக்கும். எத்தனை தடவை கேட்டாலும் எங்கள் இருவர் மீதும் அப்பா ஒரே அளவு அன்பு இருப்பதாக கூறுவார். இரண்டு கண்களில் எந்த கண் முக்கியம் என்று கேட்டால் என்ன பதில் கூற என்று எங்களின் வாயை அடைத்துவிடுவார். அப்பொழுதெல்லாம் நாங்கள் கேட்கும் கேள்வி " அப்போ அம்மாவுக்கு கொடுக்க இன்னொரு கண்ணு இல்லையேப்பா" என்று அவரை கலாய்ப்போம். அவரிடம் இருந்து எங்களுக்கு ஒரு புன்னகையே பதிலாக வரும். ஆனால் எனக்கு தெரியும் கயல் எப்போதும் முன்கோபக்காரி. அதுவும் அப்பாவுக்கு எதுவும் என்றால் அவள் யார் என்றெல்லாம் பார்க்கமாட்டாள். அடி பின்னி விடுவாள். அதனாலேயே எனக்கு மிகவும் பயமாக உள்ளது. கயலுக்கு நேற்று நடந்தது தெரிய வரும் போது அவள் எப்படி எதிர்வினை ஆற்றுவாள் என்று.

பாலகுமார் பார்வையில்.

படுக்கையில் இருந்த எழுந்த நான் முதலில் தேடியது வனிதாவை. வனிதா வீட்டில் இருக்கும் அரவமே இல்லை. இன்று சனிக்கிழமை அவளுக்கு காலேஜ் கூட இல்லை. நேற்று நடந்த சம்பவத்தின் பின்னனியே வனிதா வீட்டில் இல்லாததற்கு காரணம் என்பது எனக்கு புரிந்தது. குளியலறை சென்று பல்துலக்கி விட்டு குளிக்க செல்வதற்காக ஆடை எடுக்க, கப்போர்ட்டை திறந்த போது அடுத்த அதிர்ச்சி. உடனே நான் ஹாலுக்கு வந்து பார்க்க அங்கு சோபாவில் நிலா முகத்தில் சுரத்தே இல்லாமல் உட்கார்ந்து இருந்தாள்.

" நிலா, அம்மா எங்க" என்று நான் கேட்க அவள் என்னை ஒரு பார்வை பார்த்தால். அந்த பார்வையின் வீரியத்தை என்னால் தாங்க முடியவில்லை.

" யாரு யாருக்கு அம்மா? அவளை எல்லாம் அம்மான்னு சொல்ல என் வாய் கூசுது. உங்களுக்கு வெட்கமா இல்ல, அவள போய் எனக்கு அம்மான்னு சொல்றீங்க" என்று காட்டமாக பேசினால்.

நேற்றைய சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவள் மீளவில்லை என்று தெரிந்தது. இருந்தாலும் வனிதா என் மனைவி. என் மகள்களின் தாய். சரியோ தவறோ அவள் எங்கே சென்றால் என்று எனக்கு தெரிய வேண்டும்.

" நிலா கப்போர்ட்ல அம்மாவோட டிறஸ் ஏதுமில்ல" என்று நான் கூறினேன்.

" ஹாஹா நல்லதா போச்சு. பீடை ஒழிஞ்சது"

" நிலா மைன்ட் யுவர் வேர்ட்ஸ். என்ன இருந்தாலும் அவ உனக்கு அம்மா" என்று கூற அவள் என்னை தீர்க்கமாக பார்த்தால்.

" அப்போ நீங்க எனக்கு யாருப்பா" என்று ஏக்கமாக கேட்டவளின் கண்களில் கண்ணீர் முட்டியது.

" ப்ளீஸ் நிலா, முதல்ல அம்மா எங்கன்னு பார்க்கனும் எந்திரி" என்று கூறி டூவீலரின் சாவியை  எடுக்க செல்ல அந்த சாவியின் கீழ் ஒரு கடிதம் இருந்தது.

நான் கயல். நேற்று தோழி ஒருத்தியின் பிறந்த நாள் பார்ட்டிக்கு நானும் நிலாவும் சென்றிருந்தோம். போகும் வழியில் நிலா தனக்கு தலை வலிப்பதாகவும், அவள் வீட்டிற்கே மீண்டும் போகப் போவதாக கூறி ஸ்கூட்டியை அவள் எடுத்துக்கொண்டு என்னை ஒரு ஆட்டோவில் ஏற்றி, நன்பியின் வீட்டுக்கு அனுப்பிவைத்தால். இரவு வீடு வர சற்று தாமதமாகிவிட்டது. மற்றைய நாட்கள் என்றால் எங்கள் அம்மாவின் அர்ச்சனை என்னில் ஆரம்பித்து என் தந்தையில் முடிந்திருக்கும். ஆனால் நேற்று வீடோ மயான அமைதியாக இருந்தது. நானும் யாரும் எதுவும் சொல்லவில்லை என்ற காரணத்தால் சத்தமே இல்லாமல் எனதறைக்குள் சென்று கொண்டேன். சற்று நேரத்திற்கெல்லாம் நான் உடல் அசதியில் தூங்கியும் விட்டேன். காலையிலும் நேரத்துக்கு எழும்பாமல் தாமதாக எழுந்த நான் நேரத்தை பார்த்து ' இன்னைக்கு அம்மா வாயால அர்ச்சனை விழ போகுது' என்று நினைத்து ஹாலுக்கு வந்தால், அங்கு அப்பா கையில் ஏதோ ஒரு கடிதத்தை வைத்து நின்று கொண்டிருந்தார். அவர் கண்களில் அதிர்ச்சி தெரிந்தது. எனக்கு எதுவுமே புரியவில்லை. வீட்டில் அம்மா இருக்கும் அறிகுறியை காணவில்லை.

" அம்மா காபி" என்று நான் கூப்பிடவும் நிலாவும் அப்பாவும் என்னை பார்த்தார்கள்.

பாலகுமார் பார்வையில்.

இப்பொழுதுதான் நிலாவுடனான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தேன். அடுத்து கயலுடனும் வாதத்தில் ஈடுபட வேண்டும் என நினைக்கும் போது எனக்கு அயர்ச்சியாக இருந்தது. இருவரிலும் நிலாவை இலகுவாக சமாளித்துவிடலாம். ஆனால் கயலை சமாளிப்பது மிகவும் கடினம். அவள் சரியான் முன்கோபி. கோபம் வந்தால் என்ன செய்கின்றோம் என்பதே தெரியாதவள். இருந்தாலும் நேற்று நடந்தவற்றை அவளிடம் மறைக்கவும் முடியாது. என்னால் கயலிடம் பொறுமையாக கூறவும் முடியாது. அவளிடம் பொறுமையாக விடயத்தை கூறக்கூடிய ஒரே ஜீவன் நிலாதான். இருவரும் இரட்டையர்கள் என்றாலும் நிலா தங்கை. அவள் தங்கையாக இருந்தாலும் கயல் அவளிடம் மட்டுமே அடங்கிப் போவாள்.

நான் கண்களால் கயலிடம் விடயத்தை கூறுமாறு நிலாவிடம் கெஞ்ச, அவளும் மறுத்து பேசாமல் கயலை அவர்களின் அறைக்குள் அழைத்து சென்றால். நிலா நான் கேட்டதை மறுத்து பேசாமல் கயலை அறைக்குள் அழைத்து சென்றதே எனக்கு மிகப்பெரிய நிம்மதியாக இருந்தது

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro