9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

9-வனிதாவின் பார்வையில் (தொடர்ச்சி).

வீட்டிற்கு வந்துவிட்டேன். முதல் இரவை முடித்தபின் பெண்களுக்கு உண்டாகும் வெட்கத்தின் அழகிற்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. என் முகம் எல்லாம் ஒரே பூரிப்பாக இருந்தது. என் முகத்தை யாரும் நேருக்கு நேர் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு சந்தேகம் வரும். முடிந்தவரை அன்றைய நாள் தந்தையை பார்ப்பதை தவிர்த்தேன். அன்றிரவெல்லாம் உறக்கம் வரவே இல்லை. இதயம் லப்டப்க்கு பதிலாக ராஜா ராஜா என்று அடித்தது. எங்கே என் இதய ஓசை வீட்டில் இருப்பவர்களுக்கு கேட்டு விடுமோ என்ற பயத்தில், ஒரு போர்வைக்கு பதில் இரண்டு போர்வைகளைப் போர்த்திக்கொண்டேன்.

முதல் நாள் மழையில் நனைந்ததன் காரணத்தால் எனக்கு சரியான ஜுரம். அந்த வாரம் முழுக்க நான் காலேஜுக்கு செல்லவில்லை. கண்டிப்பாக ராஜா என்னை காணாமல் தவித்திருப்பான். தவிக்கட்டும். அன்றைய நாள் என்னை பறித்துக்கொண்டு என்னையும்தான் தவிக்க விட்டான். ஆனால் நான் பட்டது சுகமான தவிப்பு. என் எண்ணங்களை நினைத்து எனக்கே சிரிப்பாக இருந்தது. இப்படி சம்பந்தமே இல்லாமல் சிந்திப்பதுதான் காதலா? கூடலின் பின் தான் காதல் என்றால் என்ன என்று எனக்கு தோன்றுகிறது போலும்.

சனிக்கிழமை பஸ் ஸ்டான்ட் சென்றேன். எனக்கு முன்னமே ராஜா அங்கு நின்றான். என்னை கண்டதும் அவன் முகத்தில் ஒரு தவிப்பு ஆற்றாமை தோன்றியது. அவனைக் கண்டு நான் புன்னகைத்ததும் அவன் முகத்தில் இருந்த குழப்பம் தீர்ந்தது. ஒரு வேலை அன்று நடந்த சம்பவத்தால்தான் நான் காலேஜுக்கு வரவில்லை என்று நினைத்திருப்பான்.

பண்ணை வீட்டில் ராஜா என் அருகில் இருந்தான். "சாரி வனிதா, வீட்டுல ஏதும் ப்ராப்ளமா? ஏன் காலேஜுக்கு வரல? எனக்கு கையும் ஓடல்ல காலும் ஓடல்ல. உங்க வீட்டுக்கு வரலாம்னு நினைச்சேன். ஆனா அதனால உனக்கு ஏதும் ப்ராப்ளம் ஆகிட கூடாதுன்னுதான் வரல. காலேஜ்ல யார்கிட்டயும் கேட்கலாம்னு பார்த்தா, அதுவும் வேண்டாத சந்தேகங்களை தோற்றுவிக்கும். நான் தவிச்ச தவிப்பு எனக்குத்தான் தெரியும்" என்றான்.

அவன் பேச்சில் நிஜமான பயம் இருந்ததைக் கண்டேன். என்மீது அவன் அளவு கடந்த காதல் வைத்திருக்கின்றான் என்பதற்கு அந்த பயமே சாட்சி. அவனை புன்னகையுடன் நோக்கினேன்.

"காலேஜ்ல பெரிய பெரிய ப்ராப்ளம்லாம் வந்தா முன்னுக்கு வந்து சால்வ் பண்ற ஆளு. இதுக்கு பயப்படலாமா?" என்றேன். அதற்கு அவனின் பதில் என்னை திகைக்க வைத்தது.

"அந்த பிரச்சினைகளுக்காக முன்னாடி நிற்கும் போது பயம் இருக்காது. எனக்கு ஏதும் நடந்தா கூட அது என்னோட மட்டுமே போயிடும். ஆனா அதுவே உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது வனிதா. இப்போலாம் நீதான் என் உலகம். எனக்கு சொந்தம்னு யாருமே இல்லை. எனக்கு இப்போ இருக்குற ஒரே சொந்தம் நீ மட்டும்தான். உன் மூலமாதான் அம்மாவோட பாசம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சிக்கனும். நீதான் என்னோட மொத்த வாழ்க்கையுமே வனிதா. உனக்கு ஏதும் கஷ்டம் வரனும்னா அது என்ன தாண்டித்தான் வரனும்" என்றான்.

அவன் பேசி முடித்ததும் அவனை அணைத்துக் கொண்டேன். ஆம் நானாகவே அவனை அணைத்துக் கொண்டேன். இப்படி ஒருத்தன் உருகி உருகி பேசும் போது எந்த பெண்ணால்தான் அவளின் உணர்வுகளை கட்டுப்படுத்தி ஜடமாக இருக்க முடியும்.

அதன் பின்னும் பல சனிக்கிழமைகள் வந்தது. பண்ணை வீட்டில் எங்களின் காதல் நாடகமும் காமத்துடன் அரங்கேறியது. முன்பு எல்லாம் சனிக்கிழமைகளில் ஒரு படம் என தவறாமல் பார்த்த எங்களுக்கு, இப்பொழுதெல்லாம் படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடத்தில் படுக்கை அறைக்குள் நுழைந்து விடுவது வாடிக்கை ஆகின்றது. என்னை ராஜாவிடம் ஒப்படைப்பதில் நான் சற்றும் கவலைப்படவில்லை. என் கணவனிடம் என்னை ஒப்படைக்கின்றேன். இதில் ஏன் நான் அசூசை கொள்ள வேண்டும்.

ஒரு நாள் எங்களின் கலவியின் பின் ராஜா பேச ஆரம்பித்தான்.

"வனிதா எனக்கு தெரியும், இந்த வீட்ட உனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு. நம்ம என்னதான் வாரா வாரம் இங்க வந்தாலும் இது நம்ம சொந்த வீடு கிடையாது. இது மாதிரி ஒரு வீட்டுல உன்ன ராணி மாதிரி வெச்சி பார்த்துக்கனும். அதுதான் என் ஆசை. மினிஸ்டர் ஐயாவோட பொருள் ஒன்ன பீகார்ல இருக்குற ஒருத்தருக்கு கொண்டு போய் கொடுத்தா நல்ல கமிஷன் கிடைக்கும்னு மினிஸ்டரோட செக்ரட்டரி சொன்னாரு. இதை செஞ்சிட்டா நல்ல அமவுன்ட் கிடைக்கும். என்கிட்டயும் கொஞ்சம் பணம் இருக்கு. அந்த பணத்த வெச்சி இதே மாதிரி வீடு கட்ட முடியலன்னாலும் ஓரளவுக்கு கொஞ்சம் நல்ல வீடு கட்டலாம். ஒரு வாரத்துக்கு நான் இங்க இருக்க முடியாம போகும். நீ என்ன சொல்ற" என்று கேட்டான்.

ராஜா மீது எனக்கு பரிபூரண நம்பிக்கை இருந்தது. அவன் வேலையை செய்ய என்னிடம் அனுமதி கேட்பது மிகவும் சந்தோசமாக இருந்தது. எந்த பெண்ணுக்குத்தான் ஒரு ஆண்மகன் அவன் செய்ய போகும் வேலைக்கு அவளிடம் அனுமதி கேட்பது பிடிக்காமல் போகும். நானும் சரி என்றேன். அடுத்த நாளே ராஜா பீகார் கிளம்பினான்.

அந்த காலத்தில் செல் போன் எல்லாம் கிடையாது. லேன்ட்லைன் மாத்திரம்தான். அதுவும் எங்கள் வீட்டிலும் லேன்ட்லைன் இல்லை. ராமசாமி வீட்டில்தான் லேன்ட்லைன் இருக்கும். ராமசாமியின் வீட்டு இலக்கம் 13/1. எங்கள் வீட்டு இலக்கம் 31/1. இதில் இன்னுமொரு பெரிய நகைச்சுவை என்னவென்றால் ராமசாமி மகள் அனிதாவுக்கு வரும் கடிதங்கள் தவறுதலாக எங்கள் வீட்டுக்கு வந்துவிடும். அப்படி எதுவும் வந்தால் நாங்கள் அதை அவளின் வீட்டுக்கே கொடுத்துவிடுவோம். ஏன் என்றால் எனக்கு கடிதம் போட யார்தான் இருக்கின்றார்கள். இது எல்லாம் அனிதா ஓடிச்செல்ல முன்பு. ஆனால் இப்போது எனக்கும் சில கடிதங்கள் காலேஜில் இருந்து வருகின்றன. அனிதா வீட்டை விட்டு சென்றபின் ராமசாமி வீட்டுக்கு கடிதங்கள் வருவது மிகவும் குறைந்து போனது.

ஒரு வாரத்தில் வருகின்றேன் என்று சென்றவன், மூன்று வாரங்களாகியும் வரவில்லை. ராஜாவுக்கு என்னாச்சோ என்று  பயம் எனக்கு வர ஆரம்பித்தது. யாரிடமும் போய் கேட்கும் துணிவும் எனக்கில்லை. நாட்கள் செல்ல செல்ல ராஜா என்னை ஏமாற்றிவிட்டானோ என்ற பயம் வர ஆரம்பித்தது. அவனிடம் இருந்து எந்த ஒரு செய்தியும் இல்லை. ராஜா பீகார் சென்று இன்றுடன் ஒரு மாதம். அப்போதுதான் புதிதாக ஒரு தலைவலி வந்தது. என் திருமணம்.

என் தந்தையின் தூரத்து உறவுதான் பாலக்குமார். அவரது பெற்றோர்கள் சிறு வயதில் இறந்து போக, அவரை அவரது மாமா ஒருத்தர்தான் வளர்த்து வந்தார். அவர் கன்ஸ்ட்ரக்சன் கம்பனியில் கணக்காளராக இருக்கின்றாராம். என் தந்தைக்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது. காரணம் மாப்பிள்ளைக்கு சொந்தம் என்று கூறிக்கொள்ள யாருமே இல்லை. அவரையும் தன் கன்ட்ரோலில் வைத்துக்கொள்ளலாம் என்று எனது தந்தை மனக்கோட்டை கட்டினார். என்னால் எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. என் நிலமை அப்படி. ராஜாவை பற்றி ஒரு செய்தி கூட இல்லாத நிலையில் நான் என்னவென்று பேசுவது. ராஜா இருந்திருந்தால் கூட அவனாகவே வந்து பெண் கேட்பது போலதான் நாங்கள் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இப்போது அது எதுவுமே சாத்தியம் இல்லை.

சம்பிரதாயத்துக்கு பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தது. மாப்பிள்ளை என்னுடன் தனியாக பேச வேண்டும் என்றார்.

"வனிதா நான் சுத்தி வலைச்சு பேச விரும்பல்ல. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. நான் இன்னொரு பொண்ண விரும்பினேன். ஆனா நான் என் விருப்பத்த கூட அவகிட்ட சொல்லல. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம் ஆகிடிச்சி. என்னால அவள மறக்க முடியல. ஆனா அதுக்குள்ள என் மாமா திடீரென்று இந்த ஏற்பாட்ட பண்ணிட்டாரு. ஒன்னு நீங்க இந்த கல்யாணத்த வேணாம்னு சொல்லனும், இல்லன்னா நான் வேணாம்னு சொல்லனும். ஒரு பையன் பொண்ணு பார்த்துட்டு போய் அந்த பொண்ண வேணாம்னு சொன்னா ஊருக்குல அந்த பொண்ணுக்கு மறுபடி வரன் பார்க்குறது எவ்வளவு கஷ்டம்னு தெரியும். சோ அதனால நீங்களே என்ன பிடிக்கலன்னு சொல்லிடுங்க" என்றார்.

கடவுள் என் பக்கம் இருக்கின்றார். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இதை காரணமாக வைத்தே என் திருமண பேச்சை தள்ளி வைக்கலாம்.

"சரிங்க. நான் என் வீட்டுல சொல்லிடுறேன்" என்றேன். நானாக பிடிக்கவில்லை என்று கூறினால் என் தந்தை என்னை அடி பின்னி விடுவார். மாப்பிள்ளைக்கு காதல் சமாச்சாரம் இருந்ததாக கூறித்தான் இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும். இதை மாப்பிள்ளையே சொன்னார் என்று கூறினால் என் தந்தை அவரை எப்படியும் விசாரிப்பார். அப்போது பாலக்குமார் எப்படியும் அவரின் சொல்லா காதலை என் தந்தையிடம் கூறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

--------------------------

Chapter Heade Pic Credits - GuardianoftheMoon

உண்மைய சொல்லனும்னா எனக்காக நேரம் ஒதுக்கி இந்த படத்த செய்து கொடுத்தாங்க.Thank GOTM.

அப்படியே GuardianoftheMoon Pls update podunga.
miru_writes update pls.
Maayaadhi update pls
vaanika-nawin PS release aachu. so ini update podalame.
மக்களே என்னோட கடமைய நான் செஞ்சிட்டேன். நீங்க எல்லோரும் போய் இவங்களுக்கு மெசேஜ் அனுப்பி தொல்லை பண்ணீங்கன்னா அப்டேட் கிடைக்க வாய்ப்பிருக்கு.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro