7. ஜக்கம்மா!

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

  இன்றைய ஆந்திரா, கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பெல்லாரி தான் அன்றைய கம்பளநாடு. அந்த நாட்டின் அரசனாக பால்ராச் நாயக்கர் இருந்தார்.

   கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாமியரின் படை எடுப்பால் இருக்குமிடங்களிலிருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள்.
இதற்கு இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக தெற்கு நோக்கி வந்தனர்.

  இந்நேரத்தில் மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்டனர். எனவே கம்பளத்து நாயக்கர்கள் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் அதிகம் குடியேறினர்.

   ஐக்கம்மா மூதாதையர், மதுரை அருகே உள்ள உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி ஊராட்சி யில் குடியேறினர். முன்பு இவ்வூரை அந்நாளில் வையாபுரி கிராமம் என்று அழைக்கப்பட்டது. அந்த கிராமத்தில் விவசாயம் செய்து மிகவும் செல்வ செழிப்பாக வாழ்ந்தனர் ஜக்கம்மா குடும்பம்.

   நாயக்கனூர் ஜமீன், அவருடைய குதிரைகளுக்கான தீவனத்தை, வையாபுரி கிராமத்தில் கொள் முதல் செய்துவந்தார். வழக்கம்போல தீவனம் கொள்முதல் செய்யவந்த ஜமீன், வையாபுரி கிராமத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில், ஜக்கம்மா வீட்டு வாசலில் சாணம் கலந்த நீர் தெளித்து அழகுபடுத்திக் கொண்டிருந்தாள். தாவணி கூட அணியாத வயது. அவளை ஜமீன் பார்த்து விட்டார். சிறு பெண்ணாக இருந்தாலும் அவளின் அழகு ஜமீன்தாரை மயக்கியது. ஜக்கம்மா வை இரண்டாம் தாரமாக மணக்க முடிவு செய்தவர், ஊர்த் தலைவரிடம் பேசினார். அந்த ஊர்த்தலைவர், ஜக்கம்மா வின் அப்பாவிடம் பேச, 

  "என் பெண் மிகச்சிறியவள். இன்னும் திருமண வயது வரவில்லை." என்று கூறி மறுத்தார்.
"ஜமீன்தாரை எதிர்த்து  வாழ முடியுமா? இன்னும் ஏழுநாளில் திருமணம் என்று ஜமீன்தார் கூறினார். தயாராக இருங்கள்." என்று கூறி விட்டுச் சென்றார் ஊர்த்தலைவர்.

   இங்கு இருந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று பயந்து ஊரைவிட்டு வெளியேற தீர்மானித்தனர். ஜக்கம்மா வின் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணன் மனைவி ஆகியோர், ஆடு, மாடு, பாத்திரம் மற்றும் தேவையான பொருட்களுடன் மேற்கு தொடர்ச்சி மலையிலேறி அதன் பின் பக்கம் உள்ள லிங்கநாயக்கன் பட்டிக்கு சென்றனர். அங்கு கடும் மழை பொழியவே தங்குவதற்கு இடம் இல்லாமல் போய்விட்டது. அதனால் பாறை இடுக்குகளில் தங்கும் நிலை ஏற்பட்டது. வாழும் சூழ்நிலை மோசமானதால். அண்ணன் மனைவி, ஜக்கம்மா வை திட்டித்தீர்த்தாள். "எப்படி வாழ்ந்தோம்?  இவளால் தான் இன்று இப்படி கஷ்டப்படுகிறோம்" என்று பார்க்கும் நேரமெல்லாம் திட்டவே, எல்லோரும் இரவில் தங்கிய பிறகு மலையில் ஏறி வையாபுரி நகரைப் பார்த்தாள். மனம் மிகவும் வேதனை பட்டது. குலதெய்வத்தை வணங்கி பின்வருமாறு வேண்டினாள். அந்த ஜமீன்தாரால் தான் நாங்கள் கஷ்டப்படுகிறோம்... அவன் குதிரைக்கு தீவனம் வாங்க வராமல் இருந்திருந்தால் நான் அவன் கண்களில் பட்டிருக்க மாட்டேன். தாயே உனக்கு என்மீது இரக்கம் இருப்பது உண்மை என்றால், இந்த வையாபுரி யில் குதிரை உண்ணும் கொள்ளு விளையக்கூடாது. குதிரைக்கு பட்டம் சூட்ட ராஜா இருக்கக் கூடாது... ராஜா பட்டம் சூட்டிய குதிரை இருக்கவே கூடாது. என்று சாமிக்கு மலையிலிருந்து கீழே விழுந்து இறந்தாள்.

   அன்றிலிருந்து எட்டாம்நாள் கோயிலுக்கு வந்திருந்த சிறுமிக்கு அருள் வந்து,

  "நான் ஜக்கம்மா வந்துருக்கேன். ..  இனி என்னைப் போல பெண்களுக்கு பிரச்சனை வராமல் காப்பேன். என்னை நினைத்து கூறும் அருள்வாக்கு பலிக்கும். என்னை நம்பி வந்தோரை வாழ வைப்பேன்." என்று கூறினாள்.

  அதன்பிறகு ஜக்கம்மா வை வணங்கி கூறும் அருள்வாக்கு பலித்தது. அந்த கிராமத்தில் கொள்ளு விளையவே இல்லை. ஐக்கம்மா இன்றும் வேண்டுவோர் நாவில் குடியிருக்கிறாள்.  

ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை சோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை சோதிடம், மாந்திரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது. இந்த சாதியினர் சொல்லும் வாக்கு உண்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முன்பு பலருக்கும் இருந்தது. எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள் எனப்படுபவர்கள்.

சோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான் திருமண வைபவங்கள், இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மனும் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார்.

எப்படி போகலாம் :
தூத்துக்குடியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் வந்தால் குறுக்குச்சாலை என்ற இடத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி ஊரின் நுழைவாயில் வளைவு இருக்கும். ஊருக்குள் 4 கிமீ சென்றால் கட்டபொம்மனின் கோட்டையும் ஜக்கம்மா கோவிலும் உள்ளது.

   நாமும் நமக்கு துணையிருக்க ஜக்கம்மா விடம் வேண்டுவோம்.

  எத்தனை காலம்தான் பெண்கள் கயவர்களிடம் பயந்து ஓடுவார்கள்?
ஜக்கம்மா போன்ற தெய்வசக்தி, பெண்களை கேவலப்படுத்துபவரை அழிக்கும் சக்தியை அவளைப் போன்ற பெண்களுக்கு கொடுத்தருளட்டும். .. அல்லது அந்த கயவர்களை எதனால் தண்டிக்கப் படுகிறார்கள் என்று தெரிவித்து அழிக்கட்டும்...  என்று கூறி அடுத்த அத்யாயத்தில் மற்றொரு பெண் தெய்வத்துடன் சந்திக்கிறேன்...
நன்றி!

      ---------*********---------   

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro