pagudhi 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng



hello hainga என்னடா இது கதைன்னு படிக்க ஆரம்பிச்சா ஏதோ ஒரு லூசு hi

சொல்லுதேன்னு யோசிக்கிறீங்கன்னு தெரியுது .இந்த லூசு தான் உங்களுக்கு கதையை சொல்ல போரேன் .ok let's move to the story.

வானில் முழுமதி பனித்துளிகளை தன் போர்வையாக்க ,கடல் தன் அலைகளை கொண்டு மெல்லியதொரு இசையை இந்த ராத்திரி நிசப்தத்தில்

துழாவ விட .அனைவரும் நிம்மதியாக துயில் கொண்டிருக்கும் அந்த நடுநிசியில் இரு கண்கள் மட்டும் வானில் நட்சத்திரங்களை வெறித்துக்கொண்டிருந்தது .

"பிரியா" என்ற குரலை கேட்டு தன் சிந்தனையில் இருந்து வெளியில் வந்தால் நம் கதையின் நாயகி பிரியா .(ok இப்போ ப்ரியாவை பத்தி ஒரு சின்ன intro குடுத்துடுறேன் )

பிரியா வட்ட முகமும் ,என்றும் முகத்தில் தவழும் புன்னகையும் அழகிய கண்களும் கச்சிதமான உடலமைப்பும் நளினமான நடையும் கள கள பேச்சும் என ராஜ கலையுடன் இருப்பவள் தான் நமது பிரியா .(மொத்தத்த்துல super figure)

"பிரியா இந்த ராத்திரில இங்க என்னடி பண்ணிக்கிட்டு இருக்க ?இன்னும் தூங்கலயா ??நாம நாளைக்கு காலைல siteku  கெளம்பனும் மறந்துட்டியா ?? " என கேட்பவல் நமது நாயகியின் தோழி மித்ரா . மித்ரா மற்றும் பிரியா ஒரே ஆஸ்ரமத்தில் வளர்ந்து இன்று வரை நகமும் சதையுமாய் இருக்கும் தோழிகள் .

பிரியா மித்ரா இருவரும் தொல்லியல் ஆய்வாளர்கள் .இந்திய தொல்லியல் துறையில் முக்கிய பதவி வகிப்பவர்கள் .

அவளது கேள்வியில் சிந்தனையில் இருந்து வெளி வந்த ப்ரியாவோ தனது மலர்ந்த சிரிப்புடன் "தூக்கம் வரல அதான் " என்றவள் அறைக்குள் நுழைந்து அவ்வறையின் ஓரத்தில் ஒளிர்ந்த மின்விளக்கின் அடியில் இருந்த புத்தகத்தின் உரையில் உள்ள "மாயாபுரி " என்னும் வார்த்தையை வருடியவள் .ஏதோ ஒரு விசித்திரமான உணர்வு எழ அதை புறம் தள்ளி நித்திரா தேவியின் அணைப்பில் ஆழ்ந்த துயில் கொண்டால் .அங்கு பிரியா சென்று துயில் கொள்ள மித்ராவோ "இந்த ராத்திரியில அப்டி என்ன யோசிச்சுகிட்டு இருப்பா ??யோசனையெல்லாம் மூல இருக்குறவுங்க தான பண்ணுவாங்க இவ ஏன் பண்ணுறா ??"(ஏண்டி உனக்கு மூல இல்லேன்னா எல்லாரும் அப்டியேவா இருப்பாங்க )

மாயாபுரி பேர் கேட்டோன ஏன் நம்ம ப்ரியாக்கு ஏதோ ஒரு உணர்ச்சி வருது ??

Stay tuned to know more

Hi friends இது என்னோட first ஸ்டோரியோட first எபிசொட் எப்படி இருந்துச்சுனு

Comment boxla போட்டுருங்க .I need your love and support.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro