பூ - 1

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்று ஞாயிற்றுக்கிழமை. வாரத்தின் முதல் நாளே என்றாலும் ஆறு நாட்களும் கல்லூரி சென்று வந்த அவளுக்கு அதுவே கடைசி நாளாக இருந்து . அவளுடைய அறையில் பகல் பத்து மணி ஆனது கூட தெரியாமல் தூங்கி கொண்டிருந்தாள் மோனு.

அவளுடைய அப்பா கதிரவன் . அவள் அம்மா கவிதாவுக்கு சமையலில் உதவி செய்து கொண்டிருந்தார்.

"இருபத்திரண்டு வயதாகுது.... எப்பதான் ஞாயிற்றுக்கிழமை சீக்கிரம் எழ கத்துக்க போராளோ... இன்னும் தூக்கிட்டு இருக்கா.... ஏய் மோனு எழுந்திருக்க போரியா இல்லையா..." என்றார்.

" டு மினிட்ஸ் கவிமா... வர்ரோன்ன்ன்ன்....... " என்று மீண்டும் தூங்கினாள்.

"மா இப்ப அக்காவ ஏன் எழுப்ரீங்க அவ தூங்கட்டும்" என்றான் மோனுவின் தம்பி யோகேஷ் என்ற யோகி .

" அதானே தூங்கட்டும் என் பொண்ணு" என்று மகளுக்குப் பரிந்து பேசினார் கதிர்.

"இப்படி இரண்டு பேரும் அவளுக்குசெல்லம் குடுங்க.... போர வீட்டில் என்ன பன்னுவீங்க" என்றார் கவிமா.

"அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம், இப்ப அக்காக்கு பிடித்த இந்த மீனை சமைங்க" என்று மீனை நீட்டினான் யோகி.

" இப்படித்தான் இருக்கனும் தம்பினா.... "என்று வெளியே வந்தாள் மோனு.

"இந்தா டீ...சூடா இருக்கு.. பாத்து குடி..."என்றார் கவிமா

" இப்ப நீங்க மட்டும் என்ன பண்றீங்கலாம்...அக்காக்கு ஏன் டீ கொண்டு வந்திங்க.. லேட்டாதானே எழுந்தது..." என்று வம்பிழுத்தான் யோகி.

எப்போதுமே அவர்கள் அப்படித்தான்... வீட்டிற்கு முதல் பிள்ளை அதுவும் பெண் பிள்ளையாக இருப்பினும் அவள் அந்த வீட்டின் செல்லப்பிள்ளை தான்.

குணசேகரன் நேர்மையான தொழில் அதிபர். அவருக்கென அவருடைய சொந்த உழைப்பில் உருவாக்கிய ஐந்து கம்பெனிகள் இருந்தது. அவர் மனைவி மகாலட்சுமி. அவர்களுக்கு இரு புதல்வர்கள் அஸ்வின் , வைணவன் மற்றும் ஒரு புதல்வி அபிநந்தினி.

அஸ்வின் MBA முடித்து விட்டு தந்தையுடன் தொழில் செய்யும் இளம் தொழில் அதிபர். அவன் தொடங்கியதே அவர்களின் ஐந்தாவது கம்பெனி.

அடுத்ததாக வைணவன் இல்ல ACP VAINAVAN IN CRIME BRANCH. சிறுவயதில் ஒரு நேர்மையான மற்றும் தைரியமான காவல் அதிகாரியால் அவனுக்கு காவலராக வேண்டும் என்ற எண்ணம் வந்தது பதினோரு வயதில்....

அபிநந்தினி கணிதம் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறாள்.

வைணு பிறந்தது திருச்சியில் தான். ஆனால் அவன் பத்தாம் வகுப்பு படித்த பின் தன் தாத்தா பாட்டியுடன் இருக்க வேண்டும் என முடிவெடுத்து திருநெல்வேலி சென்றான். எப்போதாவது தான் வருவான்.... வந்த உடனேயே சென்றிடுவான். காரணம் அவன் தாத்தா பாட்டியே... அவனது முதல் போஸ்டிங் கூட அங்கு தான். ஆனால் அவர்களின் மறைவுக்குப் பின் அவனால் அங்கு இருக்க இயலவில்லை. அதனால் transfer வாங்கிக்கொண்டு திருச்சிக்கே திரும்பி வந்து கொண்டிருந்தான். அவனை பிக்கப் பன்ன அஸ்வின் சென்று கொண்டிருந்தான்.

இதற்கிடையில் மோனுவின் செல்போன் தனது வயலினை வாசித்து.... அது அவளுடைய ring tone.

"ஏய் மோனு கிளம்பிட்டியா இல்லையா.... நா இன்னும் அரை மணி நேரத்தில வந்துருவேன் பிக்கப் பண்ண வந்துரு...." என்று அவள் பேசத்துவங்கும் முன் பேசி முடித்து போனை வைத்தாள் அவள் தோழி அம்மு.

அவளும் மோனுவும் சிறுவயது நண்பர்கள்.
அவள் தனது பெரியம்மா மகளின் அதாவது அவள் அக்காவின் திருமணத்திற்கு திருநெல்வேலி சென்று வந்து கொண்டிருந்தாள். இருவரின் வீடும் பக்கத்தில் தான் நடந்து சென்றாலே ஐந்து நிமிடத்தில் சென்றிடலாம்.... அம்மு வீட்டில்....
அப்பா தங்கராஜ். அம்மா வேம்பு. இரு தம்பிகள் கோபி மற்றும் கடைக்குட்டி கலை.

"அம்மா நா உடனே ரயில்வே ஜங்ஷன் போணும்... இல்லைனா என்னய அம்மு என்ன வேணாலும் செய்வா... நா கிளம்புரேன்..." என்று அவசரமாக புறப்பட்டாள்.

மோனு வீட்டிலும் சரி அம்மு வீட்டிலும் சரி இவர்கள் இருவருமே ஒன்று தான். இருவரும் படிப்பதும் ஒன்று தான் கணிதம் முதுகலை இரண்டாம் ஆண்டு... இன்னும் ரெண்டு நாள்ல காலேஜ் முடிந்து எக்ஸாம்க்கு மட்டும் போனால் போதும்.....

மோனு " மா...ப்பா பாய் நா போய்ட்டுவர்ரேன்" என தலைகூட சீவாமல் கிளம்ப

"ஏய் இரு பொட்டு வச்சுட்டு போ.. எப்ப பாத்தாலும் அவசரம்..." என்றார் கவிமா.

" நா என்ன உங்க மருமகனையா பாக்க போரேன் எல்லாம் சரியா இருக்கனு பாத்துட்டு போரதுக்கு...."என்றாள்

" உனக்கு இந்த வாய் மட்டும் இல்ல அவ்வுளவு தான்... பாத்து போ..." என பொட்டை வைத்து வழி அனுப்பிய கவிதா "அவன் என்ன பாடுபட போரனோ உன்னோட..." என புலம்பிய படி உள்ளே சென்றார். அவளும் தனது ஸ்கூட்டரில் புறப்பட்டாள்.

மோனு... அம்முவ சரியான நேரத்திற்கு பிக்கப் பன்னிருவாளா....இல்ல.....






Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro