பூ 3

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

           "ஏன்டா ஏன் திடீர்னு காரை  நிறுத்தி அப்பறம் சிரித்துக்கொண்டே காரை எடுத்த" என்றான்.

           "இல்லடா மோனு வீட்டில் நாலே பேருதான். அப்பா,அம்மா, தம்பி, மோனுதான்" என

            "இதுல சாக் ஆகுர அளவுக்கு என்ன இருக்கு...." என்றான் வைணு .
      
              "அவ அப்பா அம்மா அவளோட உண்மையான அப்பா அம்மா இல்ல...." என்றவுடன் "என்ன......."என்றான் வைணு   "ஏய் இப்ப நீ  ஏன்  இவ்வளவு சாக் ஆகுற" என்றான் அஸ்வின் .

              ஏன் என்ற காரணம் பாவம் வைணுவுக்கே தெரியவில்லை தன்னவளுக்கு யாரும் இல்லையே என்று தோன்றியதோ என்னமோ..  அவளை பற்றிய எண்ணங்கள் அவனை சுற்றி ரீங்காரமிட்டன.... அவன் அஸ்வினிடம் "அப்போ அம்மா அப்பா தம்பினுலாம்  சொன்னியே அவர்கள் எல்லாம் யார்?" என்க.

              "க்ங்ம்...அது என்னனு எனக்கு முழுவதும் தெரியாது... எதுவாக இருந்தாலும் சரி மோனுவை அவுங்க பெத்த பெண்ணை விட நல்லாவே பாத்துக்றாங்க... ஒரு  உண்மைய செல்லட்டா அவ அவுங்க வீட்டோட இளவரசி....அதுதான் அவள் குடும்பத்த பத்தி நீ கேட்டவுடன் கொஞ்சம்  சாக் ஆனேன் அப்பறம் கதிர்மாமா கவி அத்த பத்தி நினைத்தேன் சிரித்தேன் இதுல அவ தம்பி யோகி அவள விட அவனுக்கு எதுவும் முக்கியமில்லை" என்று கூறி சிரித்தான். 

              அஸ்வினிடம் அதற்கு மேல் அவன் எதையும் கேட்கவில்லை அவன் கூறிய வார்த்தைகள் வைணுவை அமைதி படுத்தியது போல...  அந்த பேச்சை விட்டு விட்டு மதுவை பற்றியும் நண்பர்கள் பற்றியும்  பேச  எப்போதும் போல வைணு அஸ்வினை வம்பிலுத்து கொண்டே சென்றாலும் மோனுவின் நினைவு வைணுவுக்கு வந்து கொண்டு தான்  இருந்தது அந்நினைவுடன் வைணுவின் வீடும் வந்தது.

           அவர்களின் வீடு பிரமாண்டமாக இருந்தது.  இரு மாடிகள் கொண்ட வென்னிற மாளிகை என்றே சொல்ல வேண்டும்.  பெரிய ஹால், அதனுடன் இணைந்த கிச்சன், தனியே பூஜை அறை, மேலும் மூன்று படுக்கை அறைகள் இருந்தது. மேலே அதேபோல் மூன்று படுக்கை அறை, ஒரு ஜிம்,சிறிய  library யுடன் இணைந்த working hall   அதனையடுத்து ஒரு பெரிய பால்கனி.  மேலே இருக்கும் ஒவ்வொரு அறையிலும் சிறிய பால்கனி இருந்தாலும் அங்கு இருந்து பார்த்தால் உச்சி பிள்ளையார் கோயில் அழகாக தெரியும் அதனால் என்னவோ  அது அவர்கள் அனைவருக்கும் மனம்  கவர்ந்த இடமாகவே இருந்தது குறிப்பாக வைணுவுக்கு.

          எப்போதும் போல் வாசலில் நின்று வைணுவை கண்ட  மகாமா... கட்டிக்கொண்டார். அவருடன் குணாப்பா,அஸ்வின் மற்றும் அபியும் இணைந்தது கட்டிக்கொண்டார்.  பார்ப்பதற்கு அழகாக இருந்தது.  அனைவரும் வீட்டிற்குள் செல்ல அவனது செல்ல நாய்...( இல்ல அப்படி சொன்னா வைணுக்கு பிடிக்காது. அப்பறம் அரஸ்ட் பன்னாலும் பன்னிருவான்) செல்ல புலிக்குட்டி
வைணுவின் மீது எப்போதும் போல  தாவிக்கொண்டது.

       நீங்க பாட்டுக்க குட்டினு சொன்ன உடனேயே அது சிறிய  குட்டினு.. நினைத்திராதிங்க... ராஜபாளையத்து Indian breed dog . வென்மை நிறமாக இருந்த நாய்க்கு அவன் சம்பந்தமே இல்லாமல் புலிக்குட்டி என பெயர் வைத்தான் என்பது வைணுக்கே  தெரியாது .

          அவன் திருநெல்வேலியில் இருந்தாலும் கூட இங்கு அவன் குடும்பத்திற்கு செய்ய வேண்டி அனைத்து கடமைகளையும் செய்து கொண்டுதான் இருந்தான்.... அவர்களுடன் இருக்கும் நாட்களை தவிர.அதுமட்டுமல்ல அவர்களின் விருப்பத்தையும் ஆசைக்களையும்
நிறை வேற்றி கொண்டுதான் இருந்தான்.

         அவன் தங்களுடனே இருக்க போவதை எண்ணி அவன் குடும்பம்  தாத்தா பாட்டியின் நினைவில் இருந்து வெளியே வந்தது.

          மகாமா "வைணு வா உனக்கு பிடித்ததை எல்லாம் செய்துள்ளேன்....... சாப்பிட்டலாம்"என கூற அபி "சூப்பர் மா செம செம செம  டெஸ்ட்.. அம்மானா அம்மா தான் உங்க கைப்பக்குவம் இருக்கே சான்சே இல்ல"என சாப்பிட்டு கொண்டிருக்க அவள் தலையில் அடித்த அஸ்வின் "நாங்க வர்ர வரைக்கும் சாப்பிடாம இருக்க மாட்டியா..."என்றான்.
வைணு"சரி விடுடா அபி சாப்பிடட்டும்" எனக்கூற மகாமா அஸ்வினிடம்
"ஏய் ஏன்டா என் பிள்ளைய அடுச்ச அதுவும் தலையில..." என்றார். "உள்ள இருக்கும் கெஞ்ச களிமண் மசாலாவும் கொட்டிட போகுது"என்றான் வைணு.
 
      "அப்பா பாருங்க என்ன அவன் கிண்டல் பன்னுறான்"என தனது தந்தையிடம் குறைக்குறினாள்.

     " விடுமா... உண்ணமைகள் சில நேரங்களில் கசக்கதான் செய்யும்"
என்றார். அனைவரும் சிரித்து கொண்டே உண்டனர்.

      அன்று முழுவது மிக அழகாகவும் சந்தோசமாகவும் சென்றது. அடுத்த நாள் காலையில் வைணு கார்த்தியை பார்க்க புறப்பட்டான். கார்த்தி தூரத்தில் நின்று அம்முவுடன்  கொண்டிருந்தான். என்ன பேசினார்கள் என்று வைணுக்கு தெரியவில்லை. தனக்கு பின்னால் இருந்து ஸ்கூட்டியில் மோனு செல்வதையும் பார்த்தான்.
வண்டியை நிறுத்தி நிமிர்ந்தவள்
கார்த்தியின் கன்னத்தில் பளார் என ஒன்று விட்டாள்...

       ஏன் தான் அண்ணாவாக நினைப்பவனை அடித்தாள் மோனு....

 

          

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro