16. ஹேமா ப்ரீத்தா:

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


16. ஹேமா ப்ரீத்தா:

தன் மகளுக்காக ஜூசை போட சமையலறைக்குள் நுழைந்த லட்சுமிக்கு மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட, தன் மகளின் மன சிந்தனை என்னவாக இருக்கும் என ஆராயத் தொடங்கியது...

ஒரு வேலை மாப்பிளை பிடிக்கவில்லையா.. ஆனால் அவள் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று அவள் இதுவரை கூறவில்லையே.. தன் மனதில் இருக்கும் எதையும் தெளிவாகவும் வெளிப்படையாகவும்
பேசும் பழக்கம் உடையவள் மாது..
இன்று அவளின் குழப்பத்திற்கு காரணம் புரியாது நின்றார்.

"மாது மா இந்த ஜூஸ்..
அதை வாங்கியவள் இன்னும் ஏதோ சிந்தனையிலேயே இருக்க மாதிரி இருக்கு?? என்னாச்சுடா?? என்ன யோசிக்கிற??" என அவள் தலையை பரிவாய் கோதிவிட்ட படியே கேட்க, "மாப்பிள்ளை பிடிக்கலையா டா உனக்கு? ".

மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை என கூற அவளிடம் ஒரு காரணமும் இல்லை
உண்மையை சொல்ல வேண்டுமானால் மதுவிற்கு விஜய்யை பிடித்துத்தான் இருக்கிறது.

விஜயேந்திரன் நேரடியான பேச்சும் அவனின் வசீகரமும் அவளை வெகுவாக இருக்கத்தான் செய்தது ஆனால் இப்போது அவள் மனதில் ஓடுவது எல்லாம் யார் அந்த ஆது?? என்பது மட்டும்தான்.

அவள் என்னைப் போலவே இருப்பாள் என்று விஜய் வேறு சொன்னாரே 'நீங்கள் இருவரும் ஒரே மாதிரி இருக்கீங்க ஆனா உற்றுநோக்கினால் ரெண்டுபேருக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்னு சொன்னாரு அப்போ விஜய்யும் ஆதுவும் நல்ல பழக்கமானவர்களா?' என ஆதுவை பற்றிய பல கேள்விகள் அவள் மனதை குடைந்து கொண்டிருந்தது.

'ஆது அவங்க முழு பேர் இதுதானா? அவங்க யாரு எங்க இருக்காங்க??' என அவள் மனம் தன்னை போல் இருப்பவளை பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தது.

தன் தாயின் கேள்விக்கு பிடித்திருக்கிறது என்று சொல்ல வெட்கம் வந்து தடுத்தாலும் இல்லை என்று சொல்ல மனம் விரும்பவில்லை..

"என்னடா நான் கேட்ட கேள்விக்கு பதிலே காணோம்?".

"பிடிச்சிருக்கு மா" என வெக்கத்தோடு சொல்ல.

"இல்ல யாரோ காலையில இப்போ என்ன அவசரம் கல்யாணத்துக்கு என்று கேட்டாங்க கொஞ்சம் நேரமா அவங்களை காணும் நீ பார்த்தியா மாது அவங்கள" என.

"அம்ம்மாஹா.....".

தன் மகளின் இந்த சிணுங்கலை கேட்டதும் அவளுக்கு இந்த திருமணத்தில் முழுமனதோடு தான் சம்மதித்து இருக்கிறாள் என
மனநிம்மதி கொண்டது..

"அப்ப சீக்கிரம் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்" என அவளை மீண்டும் சீண்ட.

"அம்மா.."அவள் நாணம் என்னும் என்னும் போர்வையில் தன்னை மறைத்துக் கொண்டாள்.

"என் பொண்ணுக்கு வெக்கம்ல கூட பட தெறித்த என் கண்ணே! பட்டுடும் போல இருக்கு" என அவளுக்கு திருஷ்டி எடுத்தார்.

"மாது மா நீ ரெஸ்ட் எடு நான் சமையல் வேலையை முடிச்சிட்டு வரேன் டா" என எழுந்து செல்ல முற்பட்டவரை கையை பற்றி, "அம்மா எனக்கு ஒரு சந்தேகம் ஒருத்தர் மாதிரியே ஏழு பேர் இருப்பாங்களாமா??".

"ஏன் மா கேக்குற??".

"இல்லமா என்னை மாதிரி ஒரு பொண்ணு இருக்கிறாளாம்மா அவ பேரு கூட ஆதுனு சொன்னாங்கமா "
இதைக்கேட்டு லட்சுமிக்கு இடியே தலையில் விழுந்து விடுவது போலிருந்தது அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "சிலர் அப்படியே நம்ப சாயல்ல இருப்பாங்க டா அது சகஜமான விஷயம் தான் உன் சாயலில் யாரையாவது பார்த்து இருப்பாங்க அதனால ஒன்றுபோலவே இருக்காங்கன்னு நினைச்சி இருப்பாங்க டா..
நீ எதை பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாக ரெஸ்ட் எடு டா".

"ஹ்ம்ம்ம்.. சரி மா".

'தற்போதைக்கு எதையோ சொல்லி அவள் மன ஓட்டத்தை நிறுத்தி ஆகிவிட்டது.அவளுக்கு உண்மைகள் தெரிய வந்தால் என்ன ஆகும்' என நினைத்தாலே கதி கலங்கியது லட்சுமிக்கு...

"என்னங்க நம்ம மாது திடிர்னு ஆது பத்தி கேக்குறாங்க எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க அவளுக்கு எப்படி ஆதர்ஷினி பத்தி தெரிஞ்சிதுன்னு தெரியலைங்க... எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க நம்ம மாது நம்மள விட்டுட்டுப் போயிடுவாளாங்க.." என அழும் தன் மனைவிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றார் முருகேசன்..

"என்னங்க மாதுப் பிறப்பு ரகசியம் அவளுக்கு தெரிஞ்சா?? நம்ம பொண்ணு நம்மள விட்டு போயிடுவாளா?? அதுக்கப்புறம் என்னை அம்மான்னு கூப்பிட மாட்டாளா?? அவளை பெத்தவங்க கிட்ட போயிடுவாளா??" என வெடித்து அழும் லட்சுமி என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாது திகைத்தார்.

"லட்சுமி இப்படி அழுகிறத முதல்ல நிப்பாட்டு மாது நம்ம பொண்ணு நம்மள விட்டு எங்கேயும் போகமாட்டா. அவளுக்கு நாமதான் அப்பா அம்மா நீ கண்டதையும் நெனச்சு மனசை போட்டு குழப்பிக்காத. அப்புறம் நீ அழுதுகிட்டு இருக்கறத மாது பார்த்தா அவ தாங்கிக்க மாட்ட நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத நிம்மதிய இரு மாது நம்ம பொண்ணு தான்" என ஒரு வழியா லட்சுமியை சமாதானம் செய்தார் முருகேசன்.

"ஆமா மாதுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா??" என முருகேசன் பேச்சை மாற்ற..

"அவளுக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்குங்க சம்மந்தி கிட்ட மேற்கொண்டு விஷயத்தை
பேசணும், கல்யாணம்
ஏற்பாடுகளை தொடங்கணும், ஐயரை போய் பாக்கணும், நிச்சயத்துக்கு நாள் குறிக்கணும், கல்யாணத்துக்கு நாள் பாக்கணும், முகூர்த்தப் புடவை எடுக்கணும், மண்டபம் புக் பண்ணனும், ஏகப்பட்ட வேலை இருக்குங்க இப்பவே இருந்து வேலையை தொடங்கினால்தான் சரியா இருக்கும் நீங்க சம்மந்திகிட்ட பேசுங்க".

"சரிமா நான் ராஜேந்திரன் கிட்ட பேசிட்டு சொல்லுறேன் லட்சுமி".

------------------------------------------------

அவனின் காதல் கலந்த காபியின் சுவை லயித்து போன ஆது அதை ரசித்து ருசித்து குடிப்பதிலேயே கவனத்தை செலுத்தினாள்.

'ம்ம் இவ நம்மள பத்தி எல்லாம் தெரிஞ்சிகிட்டாலோ ' என் மனதில் யூகித்தான்..

'ச்ச.. ச்ச.. அதுக்கு வாய்ப்பே இல்லை இருந்தாலும் இவகிட்ட கொஞ்சம் உஷாராதான் இருக்கணும் ஏதாவது ஏடாகூடமா வாய்விடதா வரைக்கும் உன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை டா இந்திரா தெரியாம அவகிட்ட நீயா வாயவிட்டு மாட்டிக்கிட்டா, அவ்ளோ! தான் ருத்ரதாண்டவம் ஆடிடுவா, பத்திரமா இருந்துக்கோடா இந்திரா' என தன்னைத்தானே தைரியம் சொல்லி கொண்டு அங்கிருந்து அகன்றான்.

காபி குடித்து விட்டு கீழே சென்றவள் நேராக சென்று சோபாவில் அமர ஆது வருவதைக் கண்ட அவள் அம்மா, "உனக்கு காபி கொண்டு வரட்டா தர்ஷி?? மாப்பிள்ளை எழுந்துட்டாரா?? அவருக்கும் காபி கொண்டு வரட்டா??" என கிச்சனில் இருந்து குரல் கொடுக்க .

"இல்லம்மா நானும் அவரும் காபி குடிச்சிட்டோம்..". அவரும் என்ற வார்த்தையை கவனிக்க தவறவில்லை.

அவள் தாய் சமையல் அறையில் இருந்து தர்ஷி இடம் வந்து, "நான் இப்ப தான் எழுந்தேன்
அதான் மாப்பிள்ளைக்கும் உனக்கும் காபி போட்டுட்டு இருக்கேன், நீ காபி குடிச்சிட்டானு சொல்ற அப்போ உன் புருஷனுக்கு நீ காபி போட்டுட்டு போய் குடுத்திய டா" என ஆர்வத்துடன் கேட்க..

"இல்லம்மா நான் போடல,அவர்தான் காபி போட்டுக் கொண்டுவந்து கொடுத்தார்".

நவீன் அவன் அறையில் இருந்து வெளிவந்த போது இவர்கள் பேசிக்கொண்டு இருந்தது கடைசி வாக்கியத்தை மட்டும் கேட்டுவிட,"இதப் பார்ரா காபி வித் டிடி மாறி காபி வித் லவ்வா " என அவளிடம் அவன் வம்பு இழுக்க.

"காலங்காத்தாலே!! என்கிட்ட அடி வாங்கி சாகாத ஒழுங்கா ஓடிப் போய்டு டா" என அவனுடன் மல்லுக்கு நின்றாள் ஆது.

தன் மகள் மீது அவள் கணவன் வைத்திருக்கும் அன்பை கண்டு நெகிழ்ந்து போனது அந்த தாயுள்ளம். "மாப்பிள்ளை உன் மேல
உசுரையே!! வச்சிருக்காரு எங்களாலயே!! அத புரிஞ்சுக்க முடியுது ஆது மா நீயும் கொஞ்சமாவது அவரோட அன்பா புரிஞ்சிக்க முயற்சி பண்ணுடா" என அக்கறையாய் தன் மகளுக்கு சில நல்ல அறிவுரை கூறிவிட்டு அகன்றார்.

"ஆது நானும் இதைப்பற்றி தான் பேசலாம்னு நேத்து உன்னைப் பார்க்க வந்தேன், அதுக்குள்ள அங்க நடந்த கலவரத்துல பேச முடியல ஆது, இத உன் கல்யாணத்து அன்னைக்கே உன்கிட்ட நான் பேசி இருக்கணும் நினைச்சேன் ஆனா அன்னைக்கு அதற்கான சந்தர்ப்பம் அமையல எதையும் கேக்குற மன நிலையிலும் நீ இல்ல, ஆது துருவ் காதல புரிஞ்சுக்க முயற்சி பண்ணு, உன்ன சுத்தி இருக்க எல்லாருக்குமே துருவ் உன்ன எவ்ளோ!! லவ் பண்றாருனு புரிஞ்சுக்க முடியுது ஏன் உன்னால புரிஞ்சுக்க முடியல?? நீ ஏன் அவர் காதலை உணர மாட்டேங்குற??".

"நீயும் புரியாத பேசத நவீன் எல்லாம் நடிப்பு அவ்வளவு பொய்".

"அவன் காதல் பொய்யானதுனு எத வச்சு சொல்ற?? அவன் காதலை உணர்ந்த தானே!! தெரியும் அது உண்மையா பொய்யானு அவன் காதல உணராமலேயே எப்படி அது பொய்னு முடிவு பண்ற??".

"எனக்கு தெரியும் நவீன் அவன் நடிக்குறான் மத்தவங்கள ஏமாத்த அவன் போடுற வேஷம்".

"எத வச்சு துருவ் ஹா இப்படி முடிவு பண்ற??" என நவீன் அழுத்தமாக கேட்க.

"அவளுக்கு அன்னைக்கு வந்த, அந்நௌன் நம்பர் மெசேஜுயும், அதில் அந்த முகம் தெரிய நபர் தன்னை ஆது என்று அழைத்ததும், அந்த முகம் தெரிய நபர் பப்புவாக இருப்பானோ என்ற ஆர்வத்தில் அவள் மனதில் அவன் மேல் உண்டான ஈர்ப்பும் அதன்பின் சுதா பார்ட்டியில் பப்புவின் சாயலில் விஜய்யை முதலில் கண்டதும் அவன் மேல் ஏற்பட்ட காதல் " என அனைத்தையும் சொல்லி முடித்தாள் தர்ஷி.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவன்."நீ சொன்னதுலயே உன் மன குழப்பத்துக்கான தீர்வு
இருக்கு தர்ஷி".

"நீயே நல்லா யோசிச்சு பாரு நீ பப்புவதன் மனசார காதலிச்சி இருக்க விஜய் பப்புவா இருப்பானோனு ஒரு யுகத்தில் தான் உனக்கு விஜய் மேல ஒரு ஈர்ப்பு வந்து இருக்கு, உன் மனசார நீ காதலிச்சது பப்புவதான், நீ சின்ன வயசுல இருந்து பப்பு ஓட நிபங்களோடயேதான் வாழ்த்துருக்க, இப்போ அது உன் மனசுல முழுசா காதலா மாறிடுச்சு தர்ஷி... துருவ் அப்படித்தான் உன்னோட நினைவுகளோடதான் அவன் ஒவ்வொரு நாளும் வாழ்த்துகிட்டு இருக்கான், அவன் உன்மேல வச்சிருக்க காதல் சாதாரணமானது இல்ல உன்ன யாரது நெருங்கனும்னு நெனச்ச கூட அவங்கள கொன்னு போற்றுவான் அந்த அளவுக்கு அவன் உன்ன லவ் பண்றன்".

"நவீன் நீயும் அந்த இந்திரன் மாதிரி பேசாத அவனும் இப்படிலாம் பேசித்தான் அன்னைக்கு என்ன குழப்பிவிட முயற்சி பண்ணினான்".

"நீ புரிஞ்சுக்க கூடாதுன்னு பிடிவாதம் பிடிக்கிற தர்ஷி உன் ஒண்ணுக்கும் உதவாத பிடிவாதத்தை ஓரம்கட்டிட்டு நல்லா யோசிச்சு பாரு" கூறிவிட்டு நவீன் அங்கிருந்து சென்று விட்டான்.

நவீன் பேசியதில் நியாயம் இருப்பதாகவே அவள் மனதுக்கு தோன்றியது ஆனால் எதையும் முழுமையாக நம்ப முடியவில்லை அவளால். மனம் முன்பைவிட இப்போது ஓரளவிற்கு தெளிவடைந்து போல்தான் தோன்றியது.. அவளுக்கு இதுக்குமேல் இதைப்பற்றி யோசிச்ச பைத்தியம்தான் பிடிக்கும் என தலையை சிலுப்பிக் கொண்டு எழுந்து அவள் அறைக்கு குளிக்க சென்றுவிட்டாள்..

உடல் முழுவதும்வேலைபாடுகள் கொண்ட அந்த ரோஜா நிற புடவையில் தேவதையாய் தன் ஈர முடியை துவட்டி கொண்டு நின்றிருந்தாள் ஆது அங்கு எதார்த்தமாக வந்த துருவ் அவளை கண்களால் பருக ஒப்பனை இல்லாத தன் மனைவியின் அழகு எங்கோ செல்ல இருந்த கால்களை அவள் அறையை நோக்கி கொண்டு வந்து நிறுத்தியது.

மார்பின் குறுக்கே கைகளை கட்டி கொண்டு கதவில் சாய்ந்தபடி நின்று தன் தேவதையின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான் துருவ்..
ஆது இப்போதுதான் குளித்து வந்ததால் அவள் அறையில் பரவியிருக்கும் சோப்பின் வாசம் அவனை மேலும் கிறங்கடித்தது..
யாரோ தன்னை பார்ப்பது போல் குறுகுறுக்க திடீரென்று நிமிர்ந்து பார்க்க அங்கு நின்றிருந்த துருவை கண்களில் கோபத்தோடு "என்ன" என்பது போல் பார்க்க. இப்போதுதான் பூத்த புத்தம் புதிய மலர் போல் இருக்க,
நீ இங்கே என்ன பண்றான் என கேள்வியாய் பார்க்க அவளின் மான் விழியும் சிவந்த ஆதாரத்தையும் கண்ட நொடி அவனுள் பிரளயமே தொடங்கியது கட்டுப்பாடுகள் அனைத்தும் நொடியில் தகர்க்கப்பட்டது அவனுள்..

அவள் ஏதோ பேச முற்பட அந்த மௌனத்தை கலைக்க விரும்பாதவன் அவளை தன் பக்கம் இழுத்து அவள் சிவந்த ஆதாரத்தை தன் உதட்டை கொண்டு சிறை செய்தன். முதலில் அவன் தொடுகையில் திடுக்கிட்டவள் பின் அவனின் இந்த முத்த அணைப்பில் சிலையானாள். ஆது அவனின் ஸ்பரிசம் அவள் மூளையின் செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி விட என்ன நடக்கிறது என்பதை கூட உணர இயலாது மௌனமாய் மௌன நிலையில் இருந்தாள். ஆது அந்த நொடி மென்மையை கரைய அவளின் அமைதியைக் கண்டு அவன் மனம் மகிழ்ச்சியில் குதித்தது.. 'என்னதான் என்னை வெறுப்பது போல் நடித்தாலும் இந்த பப்பு மேல் உனக்கு காதல் இருக்கத்தான் செய்கிறது ஆது குட்டி
உன் ஆழ்மனதில் எனக்கான காதல் இருக்கத்தான் செய்கிறது, கூடிய சீக்கிரத்துல உன் மனதில் இருக்கும் காதலை நீயே வெளிப்படுத்துவ வெளி படுத்தவைப்பேன் கண்ணம்மா'.

'என் ஆது ஓட காதல் முழுக்க முழுக்க எனக்கு மட்டும் தான் உன் மனசுல என் மேல இருக்க காதலை கூடிய சீக்கிரத்துல உன்ன உணர வைப்பேன் ஆதுமா' என மனதில் உறுதி கொண்டான்.
எந்த மௌனத்தை கலைக்க மனம் இல்லை என்றாலும் அவளை அணைப்பிலிருந்து விடுவித்துக் அங்கிருந்து அகன்றான் அவளின் இந்திரன்(துருவேந்திரன்) .. அவன் அகன்ற பின்னும் அவள் சிலையாய் அதே இடத்தில் நின்றிருந்தவள் சிறிது நேரம் கழித்தே தன் உணர்விற்கு வந்தாள்..

'என்ன பண்ணிருக்க தர்ஷி அவன் உன்னை தொடும் போது பளார்னு ஒரு அறை விடாம ஏண்டி அமைதியான நின்னுட்டு இருந்த (அதுக்கு மொதல்ல அவன் நாம பேச விட்டதான பேசவே விடலாயம் இதுல எங்க அடிக்க என மனம் கேள்வி கேட்க ) இப்போ எவ்வளவு கேவலமா நினைத்திருப்பான் உன்ன கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?? வெட்கமே இல்லையா' என தன்னைத் தானே நொந்து கொண்டாள் தர்ஷி..

'இந்த நவீன் பக்கி வேற இவனை பத்தி ஏதோ ஏதோ சொல்லி நம்ம மனசையும் கெடுத்து விட்டுட்டன்' என அவனையும் சேர்த்து நான்கு திட்டு திட்ட மனமானது ஒரு நிலையில் இல்லை என்பதை அவளால் நன்கு உணர முடிந்தது..

************
எழுத்தாளர்: ஹேமா ப்ரீத்தா

ஐடி: hemapreetha

************

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro