4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இதுவரை: ஸ்ரேயா குணாலிடம் தன் திருமண திட்டமிடும் மையம் பற்றியும், பிருத்வி பற்றியும் கூறுகிறாள்.. பின் குணாலை ரேஷ்மாவின் வீட்டின் மாடியில் உள்ள விருந்தினர் வீட்டில் தங்க வைக்கிறாள்.

______________________________________

இனி,

ரேஷ்மா: ஏய் ஸ்ரேயா. பயமா இருக்குடி..இதோ இப்ப ரிசப்ஷன். நாளைக்கு கல்யாணம்.. நான் பேசாம ஓடி போய்டவா டி?!! என்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது.

ஸ்ரேயா: ஏய் லூசு மாதிரி பேசாத. ரிசப்ஷன் வேணா பிருத்வியோட நடக்கலாம். ஆனால் உன் கல்யாணம் கௌதம் கூட தான்.. நான் இருக்கேன்.. என்னை நம்பு.. இன்னொரு தடவை இப்படி லூசு மாதிரி பேசின அறைஞ்சிடுவேன்..

ரேஷ்மா: சரி டி உன்னை தான் நம்பி இருக்கேன்..

ரேஷ்மாவின் அம்மா: ரேஷ்மா, ஸ்ரேயா இன்னும் ரூம்ல என்ன பண்றீங்க.. மாப்பிள்ளை அங்க வந்துட்டாரு.. சீக்கிரம் வாங்க.. ஸ்ரேயா அவளை கூட்டிட்டு வா மா..

ஸ்ரேயா: சரி ஆண்டி.. நீங்க போங்க.. இதோ வர்றோம்..

ரேஷ்மா: இவங்க வேற.. மாப்பிள்ளை மூப்பிள்ளை னு அந்த பொருக்கிக்கு மரியாதை குடுக்கறாங்க...

ஸ்ரேயா: ஏதும் பேசாம வா.. அந்த பொருக்கி என்ன சொன்னாலும் கண்டுக்காத இரு.. எல்லாம் நாளை காலை வரைக்கும் தான்..

பிருத்வி தன் அருகில் வந்து நின்ற ரேஷ்மாவை துச்சமாக பார்த்தான்..

நமுட்டுச் சிரிப்பு சிரித்தவன்,

பிருத்வி: நாளைக்கு நீ எனக்கு ஒய்ப் ஆயிடுவ.. அப்புறம் நீ permanent சேனல்.. என் கேர்ல்பிரெண்ட்ஸ் லாம் temporary சேனல்.. ஹ்ம்ம்..

ரேஷ்மா: பற்களை கடித்தாள்..

பிருத்வி: என்ன பல்லை கடிக்கிற போல.. திட்டனும்னு தோணுதா?!! திட்டு செல்லம்.. ஆனால் உன் வீடியோ என் pendrive ல இருக்குன்றதை மறந்துடாத😏

ரேஷ்மா கண் கலங்கினாள்.

பிருத்வி: கல்யாணம் முடியட்டும்.. அப்புறம் பாருடி..

இரண்டு மணி நேரத்தில் ரிசப்ஷன் முடிந்து அனைவரும் உறங்க சென்றனர்..

ரேஷ்மா அம்மா: ஸ்ரேயா ரேஷ்மாவ கூட்டிட்டு போய், ரெண்டு பேரும் சீக்கிரம் தூங்குங்க..காலைல 4 மணிக்கு எழுந்திரிக்கனும்..

ஸ்ரேயா: சரி ஆண்ட்டி..குட் நைட்..

ஸ்ரேயா: ஏய் ரேஷீ எதை பத்தியும் கவலைப்படாம நிம்மதியா தூங்கு... அவன் வேஷம் நாளைக்கு கலைஞ்சிடும்...

ரேஷ்மா: ஏதோ நீ இருக்க தைரியத்துல தூங்கறேன்டி.. குட் நைட்..

காலை 5:30 மணி,

ரேஷ்மா அம்மா: ஏய்ய் ரேஷ்மா, என்னடி இன்னும் பண்ற? அம்மாடி ஸ்ரேயா, மாப்பிள்ளை மணமேடைல வந்து உக்காந்துட்டார்...சீக்கிரம் இவளை அலங்கரிச்சு கூட்டிட்டு வா மா.. நேரமாச்சு..

ஸ்ரேயா: சரி ஆண்டி..நான் கூட்டிட்டு வரேன்..

ரேஷ்மா: ஏய் ஸ்ரேயா கௌதம் வந்துட்டான்..சரி.ஆனா இவனும் இங்கேயே இருக்கானே டி..என்ன பண்ண போற?

ஸ்ரேயா: சொல்றேன்..நீ வா..

ரேஷ்மாவை மணமேடையில் பிருத்வி அருகே அமர வைத்தனர்..

ஸ்ரேயா: குணால் இங்க வா..

குணால்: சொல்லு ஸ்ரேயா..

ஸ்ரேயா: எல்லாம் ரெடியா? எந்த சிக்கலும் இல்லை ல ?

குணால்: எல்லாம் ரெடி.. அவன் தப்பிக்கவே முடியாது.. நீ கவலைப்படாத...

அங்கே சென்ற ரேஷ்மா அப்பாவை கூப்பிட்ட குணால்,

குணால்: அங்கிள், கடைசி வரிசையில உக்காந்திருக்கவங்களுக்கு மணமேடையில நடக்கிற எதுவும் தெரியலையாம்..என்ன பண்ணலாம்?

ரேஷ்மா அப்பா: அட அதுக்கு தான தம்பி மணமேடையை focus பண்ணி இரண்டு கேமரா இருக்கு.. இந்த ஹால்ல மொத்தம் ஆறு டிவி இருக்கு..அதுல அந்த கேமரா பதிவுகளை பார்க்கலாம்.. நீ மண்டப ஓனர் கிட்ட போய் இந்த 6 டிவிக்கான remote ம் வாங்கி அதை எல்லாத்தையும் on பண்ணு..

குணால்: ரொம்ப நன்றி அங்கிள்..

நேஷ்மா அப்பா: அட நான் தான் பா உனக்கு நன்றி சொல்லனும்.. என் பொண்ணு கல்யாணத்துக்கு வந்திருக்கிற எல்லாரையும் பாத்து பாத்து கவனிச்சுக்கற.. உன் வீட்டு கல்யாணம் மாதிரி இழுத்துப்போட்டுகிட்டு வேலை செய்ற..

குணால்: இருக்கட்டும் அங்கிள்.. ரேஷ்மா எனக்கு உடன்பிறவா தங்கச்சி மாதிரி..சரி மண்டப ஓனர் எங்கே இருப்பார்?

ரேஷ்மா அப்பா: அதோ அந்த ரூம்ல இருப்பார்.. நீ போய் சீக்கிரம் ரிமோட் வாங்கி எல்லா டிவி யையும் on பண்ணிடு பா..நா வரேன்.. நிறைய வேலை இருக்கு..

மண்டப ஓனரிடம் ரிமோட்டை வாங்கிய குணால் ,

குணால்: ஸ்ரேயா இதோ ரிமோட்..

அதே நேரத்தில் ஐயர்,

ஐயர்:இந்தாங்க தாலியை எல்லார் கிட்டயும் குடுத்து ஆசிர்வாதம் வாங்கிண்டு வாங்கோ.. முகூர்த்தத்துக்கு நாழி ஆயிடுத்து..

ரேஷ்மா நெருப்பிலிட்ட புழு போல துடித்தாள்..

அவள் இதயம் படபடத்தது..

அதைக்கண்டு ரசித்துக்கொண்டிருந்தான் பிருத்வி..

கடைசி வரிசை வரை சென்று தாலி திரும்பி மணமேடை வந்தடைந்தது..

குணால் 6 டிவியையும் on பண்ணினான்..

ஐயர்: கெட்டிமேளம் கெட்டிமேளம்..

ரேஷ்மா : (மனதிற்குள்) கடவுளே என் வாழ்க்கை பாழாப் போக போதே!!!

திடீரென மண்டபம் முழுவதும் சலசலப்பு..

அதைக்கண்ட பிருத்வி தாலி கட்டாமல் திரும்பி பார்த்தான்...

  முன்  இருக்கையில்  அமர்ந்திருந்தவர்கள்  4 பேர் மணமேடை வந்து பிருத்வியை தர தர வென இழுத்து கீழே தள்ளினர்..

பிருத்வியின் அம்மா: யோவ் எதுக்குயா  என் பையனை இழுத்துட்டுப்போறீங்க?

ரேஷ்மா அப்பா,அம்மா: ஐயோ மாப்பிள்ளையை விடுங்க..

அந்த 4 பேரில் ஒருவர்: அந்த டிவில பாருங்க இந்த பொருக்கியோட
சுயரூபத்தை..

டிவியில் பிருத்வி லாட்ஜில் விலைமாதுக்களுடன் கூத்தாடுவது, தண்ணியடிப்பது அரைகுறை ஆடையுடன் இருப்பது என சகலமும் ஒளிபரப்பானது..

அதை பார்த்த பிருத்வியின் அம்மா அவனை பளாரென 4 அறை விட்டாள்..

பிருத்வி அம்மா: அடப்பாவி நீ இவ்ளோ மோசமான பெண் பொருக்கியா இருப்பேன்னு நான் நினைச்சே பார்க்கல.. இப்படி எல்லார் முன்னாடியும் என்னை தலைகுணிய வச்சிட்டியே டா... உங்கப்பா செத்தப்புறம் தனி ஆளா உன்னை வளத்தேனே.. இப்படி பாக்கவா?? ரேஷ்மா, என்னை மன்னிச்சிடு மா.. உங்க குடும்பத்துக்கு மாப்பிள்ளை ஆகற அருகதை இவனுக்கு கொஞ்சம் கூட இல்லை...

ரேஷ்மா: ஜயோ பெரிய வாரத்தை எல்லாம் சொல்லாதீங்க... இவன் யோகியதை உங்களுக்கு இப்பவாச்சு தெரிஞ்சுதே..

ரேஷ்மா அப்பா,அம்மா: அடப்பாவி கொஞ்ச நேரம் போயிருந்தா எங்க பொண்ணு வாழ்க்கையை நாங்களே நரகமாக்கியிருப்போமே டா உன்னால.. சே...

கூட்டத்தினர்: இவனை அடி பின்னுங்க டா.. அப்போ தான் புத்தி வரும்..

பிருத்வி: வேணாம் என்னை விட்ருங்க..

ஸ்ரேயா: நிறுத்துங்க... இவனை தண்டிக்கிற உரிமை நம்மளுக்கு இல்லை.. போலீஸ் அரெஸ்ட் ஹிம்..

பிருத்வி: அம்மா அம்மா என்னை விட்ற சொல்லு மா.. இனிமே நான் ஒழுங்கா இருப்பேன் மா..

அவனை காலால் எட்டி உதைத்த தாய்,

பிருத்வி தாய்: என் மூஞ்சிலேயே முழிக்காத டா..இவனை இழுத்துட்டுப் போங்க...

போலீஸ் பிருத்வியை இழுத்துச்செல்ல , பிருத்வியின் தாய் அழுதுகொண்டே மண்டபத்தை விட்டு சென்றாள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு!!!

ரேஷ்மா அம்மா: ஏங்க யார் இதை டிவில play பண்ணது? அவங்களுக்கு நாம ரொம்ப கடமைபட்டிருக்கோம்.. நம்ம பொண்ணு வாழ்க்கையையே காப்பாத்திடாங்க!!

ரேஷ்மா அப்பா: என்கிட்ட ரிமோட் கேட்டது குணால் தம்பி தான்.. தம்பி குணால் இங்க வா பா..

குணால்: நான் லாம் எதுவுமே பண்ணல அங்கிள்.. ஸ்ரேயா தான் தனி ஆளா இதெல்லாம் பண்ணிருக்கா.. நான் சும்மா அவ கூட போனேன்..

மணமேடையை விட்டு ஓடி வந்த ரேஷ்மா ஸ்ரேயாவை கட்டிக்கொண்டு அழுதாள்..

ரேஷ்மா: ரொம்ப தேங்கஸ் டி.. சொன்ன மாதிரி அந்த பொருக்கி கிட்டயிருந்து என்னை காப்பாத்திட்ட..

ஸ்ரேயா: ஏய் லூசு எதுக்கு இப்ப அழுவற? அதான் எல்லாம் சரி ஆயிடுச்சே..

ரேஷ்மா அப்பா, அம்மா:  அம்மாடி ஸ்ரேயா உனக்கு நாங்க ரொம்ப கடமைபட்டிருக்கோம் மா.. எங்க பொண்ணுக்கு துணையா நின்னு அவ வாழ்க்கையையே காப்பாத்திட்ட..

ஸ்ரேயா: குணால் துணையா இல்லைனா நான் இதை செஞ்சிருக்க முடியாது.. தேங்கஸ் குணால்..

குணால் அவளை பார்த்து சிரித்தான்..

ஸ்ரேயா: அங்கிள்,ஆண்ட்டி உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்..

ரேஷ்மா அப்பா & அம்மா: சொல்லுமா.. என்ன?

ஸுரேயா: ரேஷ்மா கௌதம காதலிக்கறது தெரிஞ்சும் நீங்க அந்த காதலை ஏத்துக்கல.. ஆனால் இந்த பொறுக்கிய பார்க்கிறப்ப கௌதம் நூறு மடங்கு நல்லவன்.. நாங்க படிக்கிற காலத்துல இருந்து அவன் எங்களுக்கு பழக்கம்.. ரேஷ்மாவை நல்லா பாத்துப்பான்.. தயவு செய்து உங்க பிடிவாதத்தை விட்டு ரேஷ்மாவை கௌதமோட சேர்த்து வைங்க.. உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பா..

ரேஷ்மா அப்பா, அம்மா: உண்மை தான் மா.. எங்க பிடிவாதத்தால தான் இவ்ளோ பிரச்னை.. ரேஷ்மா வா இப்பவே போய் கௌதம் வீட்டுல பேசுவோம்..

கௌதம்: அதுக்கு அவசியமே இல்லை அத்தை & மாமா.. நாங்க எல்லாரும் இங்க தான் இருக்கோம்..

கௌதம் அம்மா & அப்பா: சம்மந்திஸ் இதே மேடையில இப்பவே கௌதம்-ரேஷ்மா கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம்னு தோணுது. உங்க விருப்பம் என்ன?

ரேஷ்மா அப்பா & அம்மா: எங்க பொண்ணு விருப்பத்தை கேக்காம முடிவு எடுக்கறது எவ்ளோ பெரிய தப்புனு எங்களுக்கு இப்ப புரிஞ்சிடுச்சு.. அதனால அவளுக்கு சம்மதம் னா எங்களுக்கும் சம்மதம்.. என்ன ரேஷ்மா?

ரேஷ்மா வெட்கத்தில் தலைகுணிந்தாள்..

கௌதம் : அப்புறமென்ன என் ரேஷ்மா வெக்கத்தை பாத்தாலே தெரியல..

ஸ்ரேயா: தோடா மாப்பிள்ளைக்கு அவசரத்தை பாரு...

அனைவரும் சிரித்தனர்..

அப்புறமென்ன கெட்டிமேளம் நாதஸ்வரம் முழங்க கௌதம் , ரேஷ்மாவின் கழுத்தில் தாலி கட்டினான்..😊

ஸ்ரேயா: அப்பாடா ஒருவழியா என் ரேஷ்மாவுக்கு அவ நினைச்ச வாழ்க்கை அமைஞ்சிடுச்சு.. இப்பதான் நிம்மதியா இருக்கு..

ரேஷ்மாவின் பெற்றோரும் கௌதமின் பொற்றோரும் மனம் மகிழ்ந்தனர்..

அனைத்தும் முடிந்த பின்,

ரேஷ்மா அப்பா: அம்மாடி ஸ்ரேயா இங்க வா மா..

ஸ்ரேயா: என்ன அங்கிள்

என்றவளிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தை நீட்டியவர்,

ரேஷ்மா அப்பா: என் பொண்ணு கல்யாணம் நல்லபடியா அவளுக்கு பிடிச்ச கௌதமோட நடந்ததுக்கு நீ தான் மா காரணம்.. நீ இதுவரைக்கும் பண்ண எல்லா ஏற்பாடுகளுக்கும் சேர்த்து 3 லட்சம் தரனும்.. ஆனால் இப்ப ரொக்கமா என்கிட்ட 2 லட்சம் தான் இருக்கு.. 1 லட்சம் அப்புறம் தரேன் மா..

ஸ்ரேயா: அங்கிள் , நான் இத மத்த கல்யாணம் மாதிரி நினைச்சு நடத்தி குடுக்கல.. ரேஷ்மா எனக்கு வெறும் தோழி இல்லை.. என் சொந்த சகோதரி தான்.. அதனால எனக்கு இந்த பணம் வேணாம் அங்கிள்..

ரேஷ்மா : இதோ பாருடி.. வேணாம்னு சொன்ன னா உன்கிட்ட பேசவே மாட்டேன்... என் மேல சத்தியம்.. இப்ப நீ இதை வாங்கற..

ஸ்ரேயா: ஜயோ ரொம்ப பண்ணாத..சரி வாங்கிக்கறேன்.. குடுங்க அங்கிள்.. ஒரு நிமிஷம்.. குணால் இங்க வா..

குணால்: என்ன ஸ்ரேயா?

ஸ்ரேயா: குணால் இதை வாங்கிக்கோ..

என 50000 நீட்டினாள்..

குணால்: எதுக்கு ஸ்ரேயா இது?

ஸ்ரேயா: நீ கூட இல்லைனா இதெல்லாம் சாத்தியமில்லை குணால்.. தயவு செஞ்சு வாங்கிக்கோ...
ரொம்ப யோசிக்காத.. எனக்கு கை வலிக்குது.. சீக்கிரம் வாங்கு..

குணால் வாங்கிக்கொண்டான்..

ஸ்ரேயா: ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன்?

குணால்: தமிழ்நாட்டுக்கு வந்து முதல் முதலா உன்கிட்ட தான் பணம் வாங்கறேன்..

ஸ்ரேயா: நீ இத வெறும் சன்மானமா வாங்கல.. சம்பளமா வாங்கற😊

குணால்: புரியல ஸ்ரேயா!!

ஸ்ரேயா: you are appointed as assistant manager ☺

______________________________________

அடுத்த பகுதியில் சந்திப்போம்..

😊🙂☺😁😀

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro