1. முதல் பார்வை

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

(எனது அன்பான வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்... என்னை போன்ற கதை எழுதும் நபர்களுக்கு மிகவும் முக்கியமானது வாசகரின் comments தான்... எனவே அதை பதிவிட மறந்து விடாதீர்கள்....

உங்களுடைய உணர்வுகளை அந்த அந்த தருணத்தில் பதிவு செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.... நன்றி)

அன்று ஒரு நாள் வெள்ளி கிழமை என்றும் விடியாத விடியளாய் அமையும் என்று அறியாத நம் நாயகன், அவனின் வீட்டிற்கு பின்புறம் இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது இல்லத்திற்கு சென்று கொண்டு இருந்தான் அந்த இனிய பிரகாசமான காலை பொழுதினில்...

இதுவரை அவனின் வாழ்க்கையில் பெண் என்பவள் தாய் மற்றும் தங்கை என்ற உறவில் மட்டும் பெண்ணை நினைத்து வேறு எந்த உறவுகளும் தெரிந்திராத வயதில் ஒரு மாற்றத்தை உணர்கிறான். அது அந்த கதிரவனின் மாற்றத்தினாலா அல்லது தன் கண்களின் மாற்றத்தினாலா என்று அறியாமல்...

அந்த அறியாத வயதில் வந்த மாற்றம் என்னவென்று புரியாமல் ஏன் என்று அறியாமல் திகைத்து ஒரு கணம் கண்களை இமைத்தும் பல நொடிகள் இமைக்காமலும் கண்டுகொண்டு இருந்தான் தன் எதிரினில் உள்ள வீட்டின் வெளியினில் தனது நீண்ட கூந்தலை உலர வைத்து கொண்டிருந்த ஒரு பெண் எனும் தனது நாயகியை...

தனது நாயகி என்று ஏன் நினைத்தான் என்று அவன் அறியவில்லை. ஆனால் அவன் நினைத்து இருக்கலாம் தனது நாயகியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று...

வெள்ளி கிழமை காலையில் குளித்து விட்டு தனது பள்ளி உடையை உடுத்திக்கொண்டு தனது ஈரமான கூந்தலை தனது வீட்டின் வெளியில் தன்னைவிட மூன்று வயது பெரியவன் ஒருவனின் மனதில் புதியதோர் உணர்வை ஏற்படுத்தி விட்டோம் என்று அறியாமல் தனது கூந்தலை உலர்த்தி கொண்டு இருந்தால் சிந்து எனும் ஹேமா சிந்து...

அவள் அறியா வண்ணம் அவளை தனது கண்களால் அவளின் மனதை தன்னுடன் ஈர்ப்பதாக எண்ணிக் கொண்டு அவளையே இமை மூடாமல் அவளை கண்களால் அழைத்து கொண்டு இருந்தான் அர்ஜுன்...

அவன் அக் குழந்தையை கண்டது என்னவோ ஐந்து நிமிடங்கள் கூட இருக்காது. ஆனால் அவன் அந்த ஐந்து நிமிடங்களை கடந்தது என்னவோ மெதுவான இயக்கத்திலே (Slow motion-ல்). தானே குழந்தை வயதுடையவன் (பள்ளியில் அனைவரும் குழந்தைகள் தானே) என்று அறியாமல் கண்டு கொண்டு இருந்தான் அவளின் கூந்தல் அதிர்வலைகளை...

அந்த அதிர்வலைகள் என்னவோ இவனை அடித்து சென்று கொண்டு இருந்தது கடல் அலைகளை போல. ஆனால் எங்கு அடித்து சென்றது என்று தான் தெரியவில்லை...

பிறகு ஏதோ ஒரு அரவம் கேட்க தன்னிலைக்கு வந்தவன் அவ்விடத்தை விட்டு செல்ல முடிவெடுத்தான். அவளின் வீட்டை கடந்து செல்லும் வரையில் அவளையே வைத்த கண் எடுக்காமல் கடந்து சென்றான்...

அத்துடன் அவன் மனது அதை மறந்து இருந்தால் அதை சாதாரண நிகழ்வாக மாறி இருந்து இருக்கும். ஆனால் பாதை முழுவதும் அவள் (முகம் தெரிந்தது என்று கூற மாட்டேன் நண்பர்களே) நினைவாகவே அந்த காட்சி மனதினில் நிமிடத்திற்கு பலமுறை வந்து மறைந்து கொண்டு இருந்தது...

இவனை காயப்படுத்த அந்த இறைவன் நினைத்தானா இல்லையேல் பாடம் கற்பிக்க இறைவன் நினைத்தானா என்று தெரியவில்லை. இப்படி ஓர் நிகழ்வை அவன் வாழ்வில் ஏன் ஏற்படுத்தினார் அந்த இறைவன் காயப்படுத்தவா அல்லது வாழ்க்கை பாடம் கர்ப்பிக்கவா என்று காண்போமே...

Friends ennaala mudinthavarai long update poda try panran.... i'm expecting your most valuable comments and vote....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro