22. யார் அவள்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மீனா: "Hi அத்தை...." என்று மீனா அங்கிருந்தவரை அழைக்க...

சிந்துவின் அம்மா: "மீனா, இந்த நேரத்துல என்னடா பண்றிங்க ரெண்டுபேரும்..."

மீனா: "இவனுக்கு ஒரு Punishment தரணும்னு துரத்தினேன் அத்தை, அவன் நிக்காம ஓடி வந்துட்டான் இங்க, இப்போதான் பிடிச்சேன்..."

அர்ஜுன் சிந்துவின் அம்மாவை யார் என்று தெரியாமல் மீனா அவரை அத்தை என்று கூப்பிடவும் அவளின் அத்தை என்று நினைத்து கொண்டான்...

சிந்து அம்மா: "சரி உள்ள வா அங்க பூச்சிலாம் இருக்கும் கடிச்சுட போகுது... நீயும் உள்ள வாப்பா..." என்று அழைக்க

அர்ஜுன்: "இல்லை அத்தை Time ஆகிடுச்சு நான் கிளம்புறேன் நீங்க பேசுங்க"

சிந்து அம்மா: "என்ன அத்தையா..." என்று அவர் கேட்க

மீனா: "அத்தை, நான் உங்களை அத்தைனு சொல்ற நாலா தான் அவனும் சொல்றான்... நானும் சரி ஷங்கரும் சரி யார் எப்படி கூப்பிடுறோமோ அப்படி தான் அவனும் கூப்பிடுவான்..." என்று சொல்லவும் சிந்து அம்மா "ஷாந்தி" புன்னகைத்தார்....

ஷாந்தி: "சரி இருக்கட்டும் வாப்பா, கொஞ்சம் நேரம் இருந்துட்டு போ... மீனாவும் இருக்கா தான அப்புறம் என்ன வா..." என்று அன்போடு அழைக்கவும் உள்ளே சென்றான் உதட்டினில் புன்னகையுடன்....

உள்ளே சென்ற அர்ஜுனும் மீனாவும் Soba வில் அமர்ந்தார்கள்... சிந்து அம்மா ஷாந்தி

ஷாந்தி: "Tea குடிக்கரையாப்பா, இல்லை Coffee வேணுமா உனக்கு....."

அர்ஜுன்: "எனக்கு Tea, Coffee குடிக்கற பழக்கம் இல்லை அத்தை..." என்றான்

அவன் அத்தை அத்தை என்று அலைக்கும் போதுலாம் அவருக்கு அவன் மேலே ஒரு பிரியம் பாசம் ஏற்படுகிறது... அவரும் சிரித்து கொண்டே

ஷாந்தி: "தண்ணியாச்சும் குடிப்பயா, இல்லை அதுவும் இல்லையா..." என்று கிண்டல் செய்தார்

அவனும் புன்னகைத்து கொண்டே அவர் கண்களை பார்த்து

அர்ஜுன்: "குடிப்பேன் அத்தை, ஆனா நிறையா குடிப்பேன்..." என்றான்

ஷாந்தி: சிரித்து விட்டு "நல்ல பையன் தான்" என்று Certificate வேறு கொடுத்தார்..."

ஷாந்தி: "மீனா உனக்கு கொத்தமல்லி காபி தான வேணும், இல்லை உன் Friend மாரி பச்சை தண்ணி வேணுமா..."

மீனா: "ஐயோ அத்தை, அதை அவனுக்கு கொடுங்க எனக்கு நீங்க Super ah வைத்து தருவீங்களே அந்த கொத்தமல்லி Coffee போதும்....

சிந்துவின் அம்மா சிரித்து கொண்டே உள்ளே சென்றார்....

மீனாவும் அர்ஜுனும் பேசிக்கொண்டு இருந்தனர்... அப்போது மீனாவின் சத்தம் கேட்பது போல இருக்க சிந்து வெளியே வந்தால்.... வெளியே வந்து முதலில் பார்த்தது அர்ஜுனை தான்... யாரோ அருகினில் நிற்பது போல உணர்ந்து அர்ஜுன் திரும்பினான்... அப்போது

"அந்தி பொழுதில் மறையும் சூரியன்

மங்கலாக கட்சி தரும்

கதிரவனின்

மஞ்சள் நிற பிரகாசம் போல

களைப்பில் கலையிழந்த உனது முகம்

பிரகாசத்தை மட்டும் வீசுவது எவ்வாறு"

அங்கே சிந்து அருகினில் வந்து நின்றதை கண்டு நொடியில் எழுந்தான் சிந்துவை பார்த்தபடியே.... அவளின் கண்களும் அவனது கண்களை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது... மீனா இவர்கள் இருவரும் முழிப்பதை பார்த்து....

மீனா: "என்னடா புதுசா பாக்கற மாறி பாக்குற, நீ என்ன சிந்து பேய பாத்தா மாறி முழிக்கற..." என்று சொல்லும் போது ஒரே நேரத்தில் இருவரின் கண்களும் மீனாவை கூர்மரியாக பார்த்தது கோபத்துடன்.... அதை அவள் கண்டு

மீனா: "போதும் போதும் எரிச்சுடாதீங்க..., என் கண்ணு சுடுது..." என்று சொல்லவும் சிந்து அம்மா வரவும் சரியாக இருந்தது....

ஷாந்தி: "சிந்து நீயும் வந்துட்டயா, வா நீயும் உட்காரு..." என்று சொல்ல மீனா அருகில் சென்று அமர்ந்தாள்...

மீனாவும் சாந்தியும் பேசிக்கொள்ளும் நேரத்தில் அவ்வப்போது அவர்கள் இருவரும் பார்வையால் பார்த்துக்கொண்டார்கள்...

அப்புறம் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள்... வெளியே செல்லும் போது அர்ஜுனும் சிந்துவும் பிரியும் ஏக்கத்துடன் பார்த்தனர்...

மீனா அவள் வீட்டிற்கு சென்று விட அர்ஜுன் வந்தவழியே திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான்.... வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு உறங்கிவிட்டான்...

மறுநாள்

காலை 6 மணிக்கே கிளம்பிய அர்ஜுன் தனது தந்தையுடன் பள்ளிக்கு சென்றான்... அவர் பள்ளியில் விட்டதும் வாழ்த்தி அனுப்பினார்....

இங்கு மீனா, சிந்து, நவீன் ஆகியோர் 8 மணிக்கு பள்ளிக்கு சென்று தனது Sports Dress க்கு மாறினார்கள்... பள்ளியில் ஆண்டுவிழா போட்டிகள் தலைமை ஆசிரியரால் துவங்கப்பட்டது... பின்னர் மீனா, நவீன் மற்றும் சிந்து விடைபெற்று அவர் அவர் வகுப்பு நண்பர்களுடன் சென்று கலந்து கொண்டனர்...

இங்கு ஷங்கர் சிறிது தாமதமாக வந்து சேர்ந்தான்... வந்தவுடன் அர்ஜூனுடன் சேர்ந்து கொண்டான்... இங்கு Spots Meet ஆனது மிக சிறப்பாக ஆரம்பித்தது...

அர்ஜுன் தான் விளையாடவிருக்கும் பகுதிக்கு சென்று ஷங்கருடன் இருந்தான் இன்று சனிக்கிழமை முதல் நாள் Sports Meet இதில் இறுதி போட்டிக்கான மாணவர்களை தயார் செய்து நாளை இறுதி போட்டிகள் நடைபெறும்.... எனவே வந்திருந்த அனைத்து மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பணியாற்றினார்கள்...

அர்ஜுன் காலையில் Badminton போட்டியிலும் மதியம் Shuttle Cock போட்டியிலும் கலந்துகொள்வதாக இருந்தது.... ஷங்கர் Volley Ball காலையிலும், Basket Ball மதியமும் விளையாடுவதாக இருந்தது... அவனும் Volley Ball விளையாடும் இடத்திற்கு செல்வதற்கு முன்பு அர்ஜுன் அவனை அழைத்தான்...

அர்ஜுன்: "டேய் ஷங்கர்...."

ஷங்கர்: "என்னடா..."

அர்ஜுன்: "All the Best da நல்லா விளையாடு... நீ தான் நாளைக்கு Win பண்ணனும் Volley Ball ல... சரியா மதியம் பாக்கலாம்... நல்லா பண்ணுடா, Ball சரியான இடத்துல place பாத்து அடி... ரொம்ப நேரம் எடுத்துக்காம விளையாடு..." என்று சொல்ல அவன் புன்னகையுடனே சரிடா என்று புது தெம்புடன் சென்றான்....

முதலில் கால் இறுதிக்கான விளையாட்டு ஆரம்பித்தது, அதில் அர்ஜுன் ஷங்கர் இருவருமே வெற்றி பெற்று அரை இறுதிக்கு சென்றனர்... கால் இறுதிக்கான ஆட்டம் முடிந்ததும் அரை இறுதிக்கான ஆட்டம் ஆரம்பித்தது அதில் அர்ஜுன் கொஞ்சம் சொதப்பியதால் மூன்றாம் இடத்திற்கு இரண்டு மாணவர்கள் இருக்கும் நிலை வந்தது... அவர்கள் இருவருக்கும் 3 புள்ளிகள் எவர் முதலில் எடுக்கிறார்களோ அவர்கள் இறுதி ஆட்டத்தில் கலந்துகொள்ள முடியும் என்பது நிபந்தனை ஆனது, அவன் எதிரே உள்ளவரை சாதாரணமாக நினைத்து விளையாடியதால் அரை இறுதி போட்டிகளில் தோற்றான்... அவன் அதில் இருந்து விலகும்படி ஆகியது.... அவனது வருத்தத்தை கண்ட அவனது PET Sir அவனை திட்டாமல் மதியம் இருக்கும் விளையாட்டில் உனது முழு திறமையை காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.... அவனும் அதில் வெற்றிபெறுவேன் என்று உறுதிகொண்டு ஷங்கர் இருக்கும் இடத்திற்கு சென்றான்...

ஷங்கர் அங்கு அரை இறுதி ஆட்டத்தில் அடுத்தது விளையாட காத்து கொண்டு இருந்தான்... அவனிடம் சென்று "

அர்ஜுன்: "என்னடா அடுத்து நீ விளையாட போறியா நல்லா விளையாடு" என்று அவனை ஊக்குவித்தான்...

அவனும் அடுத்ததாக விளையாட போகும் போட்டியை பற்றி எண்ணிக்கொண்டு இருந்ததால் அர்ஜுனின் போட்டி பற்றி கேட்கவில்லை...

பின் ஷங்கர் விளையாட்டில் கலந்து அதில் வெற்றி பெற்றான் அவனது குழுவுடன்... அதன் பிறகு ஷங்கர் அவனை சந்தித்து போட்டியை பற்றி கேட்க விவரத்தை சொன்னான்...

ஷங்கர்: "சரிடா மதியம் இருக்க Shuttlecock game ல கவனமா விளையாடு"... என்றான்

மத்திய உணவு முடித்தவுடன் சிறிதுநேரத்திற்கு பின்பு shuttlecock game indoor ல் ஆரம்பித்தது... இதுவரை அவன் வெட்டவெளியில் இருக்கும் Ground ல் தான் விளையாடி உள்ளான், ஆனால் இப்போது indoor ல் விளையாடுவதால் சிறிது தடுமாற்றம் ஆரம்பத்தில் அடைந்தான்... அதன் பிறகு அவன் சாதாரணமாக விளையாடுவதில் Ball ஆனது வேகமாக சென்றது அதை உணர்ந்துவிட்டு அதற்க்கு தகுந்தாற்போல விளையாடி அரை இறுதிவரை சென்று வென்றான்....

அவன் வெற்றி பெற்றதில் அவனது ஆசிரியர்களும் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சிகொண்டனர்... நாளை இறுதிப்போட்டி எனவே அதற்காக அவன் சில பயிற்சிகளை எடுத்துக்கொண்டு இருந்தான் மாலையில்... ஷங்கரும் கூடவே இருந்தான்....

இங்கே சிந்துவின் பள்ளியின் விளையாட்டு பற்றி பார்ப்போம்... 

ஆண்டுவிழா போட்டிகள் ஒரே நாளில் நடைபெறுவதால் மீனா அவளால் shuttlecock விளையாட்டில் பங்குகொள்ள முடியவில்லை... அவளும் shuttlecock ல் கொஞ்சம் weak எனவே அவள் நன்றாக விளையாடும் volley ball ல் கலந்துகொடால்...

பெண்களுக்கான volley ball குழுவில் கலந்துகொள்ள விருப்பம் இருந்த மாணவிகள் குறைவாகவே இருந்த காரணத்தினால் இரண்டு குழுவினர்களுக்குள் மட்டுமே போட்டிகள் நடைபெற்றன... அதில் மீனாவின் குழுவில் இருந்தவர்கள் எளிதாக வெற்றிபெற்றனர்... அவள் அதை முடித்தவுடன் அவள் நவீன் இருக்கும் இடத்திற்கு சென்று அவள் அவனை பார்த்தல்... அவனும் Running Race ல் முதலாவதாகவும் Chess Game ல் இறுதிப்போட்டியில் விளையாடிக்கொண்டு இருந்தான்... அவனை பார்த்து விட்டு சிந்து இருக்கும் இடத்திற்கு சென்றால்....

அங்கே சிந்து கலந்து கொள்ளும் போட்டி அப்போது தான் ஆரம்பிக்க இருந்தது... அவளிடம் சென்று

மீனா: "All the best சிந்து நல்லா விளையாடு சரியா..." என்று சொன்னால்

சிந்து: "Thanks மீனா..." என்று சொல்லிவிட்டு விளையாட சென்றால்

சிந்து தனியாக தான் விளையாட போகிறாள், Singles game அது எனவே ஆரம்பிக்க தயாராகினால்....

முதல் Service யார் ஆரம்பிப்பது என்று ஒரு Game விளையாடினார்கள் அதில் ஆரம்பித்திலேயே அவள் தனது யோசனைகள் மூலம் Ball சரியான இடத்தில அடித்து அவள் வெற்றிபெற்றால்... பின் Game ஆரம்பிக்க Service செய்தால், அவளது ஒரு ஒரு Move ம் வேகமாகவும் நேர்த்தியாகவும் விளையாடி அதிகமாக power shot அடித்தும் வெற்றி பெற்றால்....

அதன் பிறகு அவள் இறுதி ஆட்டத்தில் கலந்துக்க நேரடியாக தேர்வு ஆனால்... இறுதி ஆட்டத்தில் அவள் கலந்துகொள்ள போவது அவளுடைய senior student... அந்த பெண்ணும் சிந்துவை போலவே திறமை உடைய ஒரு மாணவி... என்ன அவள் சிந்துவை விட senior மற்றும் திறமையும் அதிகம் அவள் கொஞ்சம் உயரமும் கூட...

சிந்து final ஆட்டத்தை ஆவலுடன் மீனா பார்க்க இருந்தால், அதே போல விளையாட்டு ஆரம்பிக்க சிந்து கொஞ்சம் திணறினாள், ஏனென்றால் Ball ஆனது அவள் தடுக்க இயலாதவண்ணம் அவள் முகத்திற்கு நேராகவே வந்தது பிறகு அவள் வயிற்றுக்கு அந்த பெண் Ball அடித்தால்... அதனால் அவளால் பல points இழக்க நேர்ந்தது...

சிந்துவும் Service செய்யும் போது அவள் அடித்த Cut shot பயனளிக்கவில்லை... ஏனென்றால் அந்த பெண் லாவகமாக பந்தை தடுத்து ஆடினால்... சிந்துவும் எதிரே உள்ள பெண் எடுத்த points க்கு சரிசமமாக வர மிகவும் சிரமம் பட்டால்...

இறுதியாக இருவரும் 13, 13 என்ற points ல் இருந்தார்கள்... ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது... தற்போது எதிரே உள்ள பெண் service செய்கிறாள் பால் front box க்கு சற்று வெளியே விழ போனது, அதை அடிக்க சென்ற சிந்து கொஞ்சம் அதிகமாகவே குனிந்து ball எடுக்க வேண்டியதாக இருந்தது, அடித்தும் விட்டால்.....

பின் அவள் அடித்த பந்து மேலே தூக்கி செல்லப்பட்டது... அதை அந்த பெண் Cut shot அடித்தால் வேகமாக... குனிந்த அவள் மேல எழுவதற்குள் பந்து Back box க்கு சற்று உள்ளே விழுந்தது... தற்போது சிந்து 13, அந்த பெண் 14... அந்த பெண் Game ball service செய்ய போகிறாள்...

அந்த பெண் service செய்தால்... தற்போது அவளும் சிந்துவும் நீண்ட நேரம் விளையாட வேண்டியதாக இருந்தது.... இறுதியாக சிந்து Tired ஆகி பந்தை விட்டு விட்டால்...

அந்தப்பெண் Win செய்ததாக அறிவித்தனர்... சிந்துவுக்கு இரண்டாவது இடம் தான் கிடைத்தது.... சிறிது நேரம் வெற்றி பெற்ற அந்த பெண் சிந்துவை நோக்கி வந்தால்....

அந்த பெண்: "எனக்கு விளையாடனும்னு விருப்பம் இல்லை, ஆனா உன்னை பார்த்ததும் விளையாடியே ஆகவேண்டும் என்று முடிவு செய்து தான் விளையாட ஆரம்பித்தேன்... கடைசியா உன்ன நான் Win பண்ணிட்டேன் பாத்தியா" என்று கூறி ஒரு கர்வமாக சிரித்தால்.... சிந்துவும் மீனாவும் அவளை பார்த்து முழித்தனர்.....

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro