8-😘 அம்புலி மாமாவின் காதலி 😘 "ஜெரி"

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

😘 அம்புலி மாமாவின் காதலி 😘 "ஜெரி"

அத்தியாயம் - 8

தென்றலின் வருடலோடு செங்கதிரவன் விஜயம் செய்தான் பூவுலகில்.. அவ்வேளையை கொண்டாடும் விதமாக குருவிகளின் கீச் கீச் சத்தம் இன்னிசையாக பொழிந்தது...

சீக்கிரம் எழுந்த அனு மகேஷின் அம்மாவிற்கும் சமைப்பதற்கு உதவி செய்தாள்.. அனு "ஆண்டி என்ன ஹெல்ப் பண்ணும் சொல்லுங்க"

மகேஷின் அம்மா " இந்த காஃபியை எல்லாரும் கொண்டு கூடுடா... அப்பறம்  ஆண்டின்னு கூப்படாதே அம்மா என்று கூப்பிட்டு சரியா" என்று தலையை தடவி விட....

அனு "எதுக்கு அப்படி கூப்பிட சொல்லுறீங்க" என்று தயக்கமாக கேட்டாள்... "எனக்கு ஒரு பொண்ணு இருந்தா உன்ன மாதிரி தா இருந்திருக்கும் அதா" என்று கூறினாள் மகேஷின் அம்மா..

அனு அவர்களை கட்டி அனைத்து "நா இத்தனை வருஷம் யாரையும் அம்மா என்று அழைத்தது இல்ல, ஏன்னா! அப்படி சொல்ல எனக்கு யாருமே இல்ல... ஆன இப்போ நீங்க இருக்கிங்க" என்று கூறி அவர் கொடுத்த காஃபியை அனைவருக்கும் கொண்டு கொடுக்க சென்றாள்...

மகேஷ் அறைக்குள் சென்ற அனு கட்டிலில் முகத்தை முழுவதுமாக மூடியபடி தூங்கும் இருவர்களில் யார் மகேஷ் என்று தெரியாமல் முதலில் படுத்து இருந்தவன் மகேஷ் என்று நினைத்து எழுப்பினாள்..

"மகேஷ் எந்திரிங்க" என்று அழைக்க எழும்பவில்லை அவன்.... கையில் இருந்த காப்பி ட்ரேயை‌ அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு, மகேஷின் உடலை தொட்டு எழுப்ப, போர்வைக்குள் இருந்த கை அவள் கையை பிடித்து இழுத்து தன்மேல் சாய்த்து கொண்டது அவள் கத்தாமல் இருக்க மற்றோரு கையால் வாயை மூடினான்...

"இங்க பாரு அனு செல்லம் உன் கிட்ட சொல்லாம அமெரிக்கா போனது தப்பு தா.. அதுக்கு என்ன வேண்ணா தண்டனை தா ஆனா பேசம மட்டும் இருக்காதே.. பிளிஸ், இத்தனை வருஷம் உன்ன பார்க்காம பேசம எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு எனக்கு மட்டும் தா தெரியும்.. இப்போ உன் வாய்ல இருந்து கை எடுக்குறே தயவு செஞ்சு கத்தாதே" என்று விக்ரம் கூறினான்..

அனு ஓங்கி அறைந்தாள் விக்ரம் கன்னத்தில் "எவ்வளவு தைரியம் இருந்தா என் கைய பிடிப்ப... யாரு டா நீ... உனக்கு எனக்குமான உறவு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு... இப்போ நீ யாரோ நா யாரோ" என்று கூறி அறையை விட்டு வெளியில் செல்ல போக...

விக்ரம் அனுவின் கையை பிடித்து "சாரி" என்று ஏதோ சொல்வதற்கு முன் மகேஷ் விக்ரமின் கையை பிடித்து கொண்டு "ஒழுங்கு மரியாதையா அவ கைய விடு" என்று கோவத்துடன் கூறினான்..

விக்கிரமும் கையை விட்டு விட்டான்.. அனு வெளியில் சென்றது மகேஷ் விக்ரம் சட்டையை பிடித்து "எவ்வளவு தைரியம் இருந்தா அனு கைய பிடிப்ப" என்று அடிக்க கை ஓங்கினான்...

"அவ கையா பிடிக்குற எல்லா உரிமையும் எனக்கு இருக்கு" என்று விக்ரம் கூற.. மகேஷ் "அப்படின்னா"..

விக்ரம்"அவளும் நானும் லவ் பண்ணோம்..‌ ஆன, இப்போ சின்ன பிரச்சனை அதுனால சண்டை போட்டுட்டு போறா"  மகேஷ் "என்ன! அதா அவ, நீ வீட்டுக்கு வந்த முதல் பல உணர்வுகளை முகத்துல காட்டுனாளா..

விக்ரம் "ஆமா ப்ரோ " மகேஷ் "எப்பத்துல இருந்து நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிங்க"

விக்ரம் "அதுவா ப்ரோ! நானும் அவளும் ஒரே ஹோம்ல தா இருந்தோம் சின்ன வயசுல இருந்து.. அவன்னா, ரொம்ப பிடிக்கும் எனக்கு.. அது நாளடைவில காதலா மலர்ந்து அப்படி இருக்கும் போது தா எனக்கு அமெரிக்கா போற ஆஃபர் வந்தது... அங்க போனா எங்க வாழ்க்கை நல்லதுன்னு நினைச்சே, அத அவ கிட்டையும் சொன்னே ஆனா அவா போக வேண்டான்னு சொல்லிட்டா... அதான் அவ கிட்ட சொல்லாம அமெரிக்கா போய்ட்டேன்" என்று மெதுவாக கூறினான்..

அப்போது அமிர்தா கத்தும்  சத்தம் கேட்டு அந்த அறைக்கு ஓடினார்கள்..
அனைவரும் அமிர்தா அறைக்குள் சென்று அவளை எழுப்பி தண்ணீர் கொடுத்து என்னவென்று விசாரிக்க "ஒரு பயங்கரமான கெட்ட கனவு கண்டேன் அதான் பயத்துல கத்திட்டே" என்று மேல் மூச்சு வாங்க கூறினாள்..

"சரி..சரி எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும் " என்று அனைவரையும் கிளம்புங்க என்று மகேஷின் அம்மா கூறினார்..

அமிர்தா தனக்கு வந்த கனவை நினைத்து பார்த்தாள் .

"அமிர்தா"

"யாருடா கூப்பிடறது வாய்ஸ் இவ்ளோ கொடுமையா இருக்கே" என தனக்குள் முனுமுனுத்துக் கொண்டே திரும்புகிறாள்....

"அமிர்தா இங்கே வா" அக்குரல் வந்த திசையைத் தேடி நடக்கிறாள்.மலை போன்ற இரு பாறைகளுக்கு நடுவில் இருந்து கேட்கிறது.

"யாரு?" எனக் கேட்கிறாள்.

"எனைப் பார் அமிர்தா" அந்தக் குரல்
"வாவ்! வாட் அ பியூட்டி இவ்ளோ அழகா இருக்க, உன்வாய்ஸ் மட்டும் ஏன் இவ்ளோ கொடூரமா இருக்கு? இவன் யார் உன் பாதுகாவலனா?" அமிர்தா.
"என்னடி கூறினாய் நான் அழகா என் உருவத்தைப் பார்க்கிறாயா?"எனக் கேட்கும் போதே காற்று வேகமாக அடிக்கிறது, மரங்கள் அசைந்து அதன் சருகைகளைந்து சத்தம் எழுப்புகிறது. முழு நிலவு கொஞ்சம் கொஞ்சமாக தேய்கிறது. பெயர் அறியா பறவைகளும் ஒலி எழுப்புகிறது. அவளின் மீன்விழிகள் உருளுகிறது மெதுவாக அந்த உருவங்களைப் பார்க்கிறாள்.அவளின் பயத்தைக் கண்டவுடன் அப்பெண் வானம் இடியும் வண்ணம் பெருங்குரலெடுத்து சிரிக்கிறாள். அலைப் பாய்ந்த காற்றில், அவள் ஆறடி பின்னியக் கூந்தல் விரிந்து சடைப்பிடித்து பறக்கிறது. அவனின் பால்வண்ண நிறம் கரி கருமையை குத்தகைக்கு எடுக்கிறது. மான்விழிகள் சிவந்து குரோதம், ரத்தம் வழிந்தோட மினுமினுக்கறது. அவளின் பால் பற்கள் சிவப்பு நிற குறுதி வழிந்தோட மாறுகிறது. கோவை இதழ்கள் சிதைவுற்று.. இதழ்களா? எனக் கேட்கும் வகையில் கீறல் உள்ளது. அவளின் வெண்மை நிற தாவணி பறந்து அக்கொடிய வனப்பை பறைசாற்றுகிறது அங்கங்கே இரத்தக் கீறல்களுடன் காய்ந்தும் காயாமலும் பார்ப்பவரை பயமுறுத்தும் வண்ணம் உள்ளது. பக்கத்தில் உள்ள ஆடவனோ கரிய நிறத்துடன் கூரிய பற்களுடன் குறுதி மின்ன ஜொலிக்கிறான். அமிர்தா சற்று பின்னே நடக்கிறாள். அதை உணாந்த மிருதன் அவள் கழுத்தை அங்குள்ள மரக்கிளையின் உதவியால் பிடித்து அருகில் இழுக்கிறாள். உச்சகட்ட பயம், பதற்றத்தில் அமிர்தாவிற்கு வாய் உலர்ந்து போனது. "என்னைவிட்டுவிடு" அமிர்தா கேட்கிறாள்.

"எனக்கு  உன் குறுதி வேண்டுமடி" எனக் கூறி தனது பாதி வெந்துபோன கையால் அவள் கழுத்தைப் பிடித்து தன் கூரிய பற்களால் கடிக்கிறாள் அவளை தரையில் தள்ளி துடிக்கும் கைகால்களை சிறை பிடித்து அவளின் செங்குறுதியால் தனது பசியை தீர்க்கிறாள் மிருதன்.

அதை நினைத்து பார்க்க.....பார்க்க அமிர்தா உடல் நடுங்கி கொண்டே இருந்தது...

..................................................................................................................................................................................................................................................................................................................

அனைவரும் கிளம்பி மகேஷின் அம்மா கூறிய இடத்திற்கு புறப்பட்டனர்..

மகேஷ் "அம்மா நாம எங்கே போறோம்" என்று கேட்டான்.. "இன்னும் கொஞ்ச நேரத்தில அங்க போய்டுவோம் அப்பறம் நீயே தெரிஞ்சுப்பே" என்றார் மகேஷின்அம்மா கூறினார்...

ஓர்  சிறிய வீட்டிற்குள் அழைத்து சென்றார் அனைவரையும் மகேஷின் தாய்... அங்கு வயது முதிர்ந்த பெரியவர் தன் கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டு இருந்தார்.. அவர் இவர்கள் நால்வரையும் காண்பதற்கு தான் இத்தனை ஆண்டு தன்னுயிர்ரை கையில் பிடித்து கொண்டுயிருந்தார்...

மகேஷின் அம்மா அவரிடம் ஏதோ சொல்ல போக.. அவர் கைகளால் வேண்டாம் என்று நிறுத்திவிட்டு "எல்லாம் நான் அறிவேன்" என்று பார்வையில் கூறினார்... அவர்கள் நால்வரையும் தன் அருகில் அழைத்தார்.. அவர்களும் அவர் படுத்திருந்த படுக்கையின் அருகில் சென்றனர்...

"பெற்றவ.....ர்களின் பெற்றோர்கள் செய்த பாவத்.....தையும் பெற்ற சாபத்தையும் பெற்ற....வர்களின் பிள்ளை.....கள் பெறுகின்றனர் 'இதுதான் காலத்தின் கொடுமை என்று கூறவா?' அல்லது 'விதியின் விளையாட்டு என்று கூறாவா?' என்று தெரியவில்லை" என்று கபீர் கூறினார் திக்கிதிணறி....

மகேஷ், விக்ரம், அமிர்தா,அனு இவர்கள் நால்வருக்கும் கபீர் கூறுவது புரியாமல் அவர் முகத்தை பார்த்து கொண்டு இருந்தனர்... மகேஷ் "நீங்க என்ன சொல்லுறீங்க எங்களுக்கு எதுவுமே புரியல..., என் அம்மா என்ன பண்ண பாவம் பண்ணாங்க? அவங்க சின்ன எறும்புக்கூட பாவம் செய்ததில்லையே" என்று மகேஷ் தன் அம்மாவை ஒரு கையால் அணைத்து கொண்டான்...

கபீர் உயிர் போகும் தருவாயிலும் சிறிது சிரித்து கொண்டே "ஆம்! உன் அம்மாவும் எந்த தவறும் செய்யவில்லை... உன்னை ஈன்றவளும் எந்த தவறும் செய்யவில்லை.. உன்னை ஈன்றவளின் தந்தையே தவறு செய்தார்" என்று பேசமுடியாமல் கூறினார்...

மகேஷ் அதிர்ச்சியாய் தன் தாயே பார்க்க, அவர் தலை குனிந்து கொண்டார்.... "ம்மா நீங்க என்னோட அம்மா இல்லையா என்று ஏக்கத்தோடு கேட்டான்" அதற்கு அவள் "நா உன் அம்மா தாண்டா ஆனா உன்ன பெத்தது நா இல்ல" என்று கூற மகேஷ் அப்படியே உடைந்து விட்டான்...

கபீர் தன் மகன் காதில் ஏதோ கூற அவன் உள் அறைக்குள் சென்று ஒரு சிறய பெட்டியை எடுத்து கொண்டு வந்தான்... அந்த பெட்டியை திறந்து அதற்குள் இருந்த நாலு தாயத்தை எடுத்து அவர்கள் கையில் கட்டிக்கொள்ள கூறினார்... அவர்கள் இதையேன் நாங்க கட்ட வேண்டும் என்ற தோரணையில் பார்த்தனர்..

கபீரின்மகன் " இந்த நாலு தாயத்தும் பல வருசமா பல தர்க்காவில் வைத்து ஓதி தவம் செய்து பல சக்திகளை உள்ளடக்கிய சக்திவாய்ந்த தாயத்து, இத எக்காரணம் கொண்டும் இந்த தாயத்தை நீங்க நால்வரும் கழட்ட கூடாதுன்னு அப்பா சொல்ல சொன்னாரு" என்று கூறீனார்...

"எதுக்காக இத நாங்க கட்டன்னும்? எங்கள சுத்தி என்ன தா நடக்குத்து? எதுவுமே புரியல..... தயவு செய்து என்ன நடக்குதுன்னு சொல்லுங்க" என்று கத்தினாள் காலையில் கண்ட கனவின் வெளிப்பாட்டால் அமிர்தா..

கபீர் "அதற்கான நேரம் இன்னும் வரவில்லை... மகளே இன்னும் சில காலம் காத்து கொண்டு இரு... இப்பிரச்சினைக்கு காரணமானவனே உன்னிடம் கூறவருவான்" என்று கூற...

அந்த வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் தானாக கீழே விழுந்து உடைய ஆரம்பித்து..  வீட்டில் உள்ள விளக்கு எல்லாம் தானாய் அனைந்து.... அனைந்து பற்றியது...

கபீரின்மகன் ஏதோ விபரிதம் நடக்கபோகுது என்று நினைத்து கொண்டு அவர்கள் கைகளில் தயத்தை கட்டிவிட்டான்...

"என் உயிர் போக போகிறது.. என் அருகில்  வாருங்கள் நால்வரும்" என்று கடைசி நிமிடத்தை எண்ணிக் கொண்டிருந்த கபீர் அழைக்க, அவர்களுக்கும் சென்றனர்...

அவ்வேளையில் மிருதன் அந்த இடத்தில் வந்து கபீர் கழுத்தை நெரிக்க கபீர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க சில குறிப்புகள் கொடுத்தான் " அமானுஷ்ய காடு, மிருதன், பாறை, பெட்டி, ரத்தத்துளி என்று கூறி முடிக்கவும் கபீர் உயிரும் பிரிந்து அவ்வேளையில்..

"உங்க நால்வரையும் கொல்லாமல் விடமாட்டேன், உங்கள் உயிர் என் கையில் தான் போகும்... உங்களை யாரும் என்னிடமிருந்து காப்பற்ற முடியாது" என்று கர்ஜித்துக் கொண்டே அவர்களை தாக்க முற்ப்பட்டான் மிருதன்.. ஆனால், அவர்களின் அருகில் செல்லுமுன்னே மிருதனை தூக்கி எரிந்து விட்டது அவர்கள் கையில் இருக்கும் தாயத்து.. மிருதனுக்கு ஏதோ சக்தி குறைந்தது போல் உணர்ந்தான்... "எப்படியும் நீங்கள் நால்வரும் என் கோட்டைக்கு ( அமானுஷ்ய காடு) தானே வருவீர்கள் அங்க உங்களை பார்த்து கொள்கிறேன்" என்று கண்களில் வெறியோடு கூறிகொண்டு பெரும் கூக்குரலோடு மறைந்து கொண்டாள்...

அவர்கள் அனைவரும் என்ன நடந்தது புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது கொண்டது... கபீரின்மகன் "நால்வரும் சீக்கிரம் அந்த பெட்டிய தேடி போங்க... அது தா உங்க உயிர பாதுக்காக்கும் " என்று கூற....

விக்ரம் "அந்த காடு எங்க இருக்கு எங்களுக்கு தெரியாதே" என்று மூன்று பேருக்கும் சேர்த்து அவனே பதில் கூறினான்.... கபீரின்மகன் "எனக்கு அது தெரியாது, ஆனா ஓன்னு மட்டும் சொல்லுறே 'எவ்வளவு சீக்கிரம் அந்த பெட்டிய கண்டுபிடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிங்க'.... உங்க உயிர பாதுக்காக்குற சக்தி அந்த பெட்டிக்குள்ள தா இருக்கு.... கவனமா இருக்க, உங்க கையல இருக்க தாயத்துக்கு எப்போ வேண்ணா அதோட சக்கி குறையலாம்... இது தற்போதைய பாதுக்காப்பு கவசம் மட்டுமே" என்று அழுத்தமாக கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்...

ஐவரும் எங்கு செல்ல என்று தெரியாமல் காரில் ஏறி அமர்ந்தனர்.. மகேஷின்அம்மா " கோவிலுக்கு போகலாம் அது தா நமக்கு பாதுகாப்பு" என்று கூறினார்...

கார் கோவிலில் முன் நின்றது... அவர்கள் அனைவரும் இறங்கி கோவில் உள்ளே சென்றனர்... மகேஷ் மட்டும் கோவமா அல்லது இயலாமையா என்று சொல்ல முடியாத ஒரு உணர்வுடன் கோவிலின் குளக்கரை நோக்கி சென்று விட்டான்... மற்றவர்கள் கோவிலின் பிரகாரத்தில் வீற்றிருக்கும் அம்பாளிடம் சென்றனர்... அவர்கள் அனைவரும் ஒரே மனநிலையில் இருந்தனர் இதிலிருந்து எப்படி தப்பிப்பது...

இங்கு மிருதன் கோவத்தின் உச்சியில் இருந்தான்... காட்டில் இருக்கும் கல்லறையின் மேல் ஏறி நின்று  கூக்குரலிட்டு கத்தி கொண்டு இருந்தான்... அவன் சத்தத்தில் காட்டில் இருக்கும் மிருகங்கள் மிரண்டு ஓடியது... வானமும் அவன் குரலுக்கு ஏற்றது போல் பல இடிகள் ஒன்னு நினைத்து ஒரே இடியாய் வந்து காட்டில் இருக்கும்  மரங்களும் எரித்தது.... இன்னும் அவன் கோவம் அடங்காமல் அவன் இருந்த கல்லறைகள் தாண்டி சென்ற சிங்கத்தை  தன் அருகில் இழுத்தான்.. அந்த சிங்கம் இவன் உருவத்தை கண்டு நடுங்கி இவனிடம் தப்பி ஓட நினைக்க, மிருதன் அதன் தலையை ஒரு கையால் பிடித்து  தன் அருகில் இழுத்தான்.... சிங்கம் பயத்தில் அவனிடம் மிருந்து தப்பிக்க தன் கூரிய நகங்களால் அவன் முகத்தை காயமாக்கியது.... அதில் மேலும் கோவம் ஏறியது மிருதனுக்கு...

அதன் தலையை தன் முகத்திற்கும் அருகில் கொண்டு வந்து சிங்கத்தின் வாயை கடித்து தின்றான் மிருதன்... அதோடு விடாமல் தன் கையின் கூரிய நகங்களால் சிங்கத்தின் தலையை நெரித்து தனியாய் எடுத்து கால்களின் போட்டு கோவம் தீரும் வரை மிதித்து....மிதித்த நசிக்கினான்... அதன் பிறகு தலை பிய்த்து எடுத்த இடத்தில் வாயை வைத்து இரத்தத்தை உறிஞ்ச எடுக்க ஆரம்பித்தான்.. அதன் வெறு தோலை மட்டும் தூக்கி எரிந்தாள்.‌‌.. இதுபோல் தான் அந்த நால்வரையும் கொல்லவேன் என்று மனதில் நினைத்து எக்காளித்து கொண்டான் மிருதன்..

மகேஷ்  குளத்தின் படியில் தலையில் கைக் கொடுத்து அமர்ந்து இருக்க, அவன் அருகில் நிழல்ஆட யார் என்று நிமிர்ந்து பார்த்தான்.... இதற்கு முன் இங்கு வரும் போது பார்த்த அதே தெய்வீகமான முகம் கொண்ட மனிதரை பார்த்தான் (4 அத்தியாயத்தை சொல்லி இருந்த அதே சித்தர் தா)...

மகேஷ் அவரைப்பார்த்ததும் எழுந்து நின்றான்.. அவர் அவனை பார்த்து சிரித்து கொண்டே "கர்ணனை குந்தி பெற்றெடுத்தாலும் கர்ணனை வளர்த்தது ராதையே...... உலகம்  கர்ணன் குந்தியின் மகன் என்று கூறுமே தவிர.... தாய் எப்போழுதும் ராதை என்று தான் கூறும்.... கர்ணனுக்கும் என்றுமே முதல் தாய் ராதையே அதன் பிறகு தான் குந்தி..... அதுபோல் தான் ராதைக்கும் தன் மகன் என்றால் அது கர்ணன் தான் முதலானவன் அதன்பிறகே யாரும்" என்று கூறினார்...

அதை கேட்ட மகேஷ்க்கு இதுவரை இருந்த குழப்பம் அனைத்தும் வடிந்து போனது... அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான் சந்தோஷமாக... ஆனால் இப்போழுது இருக்கும் பிரச்சனை நினைத்து பார்த்தும் மறுபடிம் முகம் கவலையை தத்தெடுத்து கொண்டது....

தெய்விகமான முகம் கொண்ட மனிதன் "எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கேயே விடையும் இருக்கிறது.... பிரச்சனையின் பிறப்பிடத்திலே விடையின் ஆணிவேரும்  அடங்கியிருக்கிறது  தேடி செல் அவ்விடத்தை" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்...

மகேஷ்ற்க்கு இப்போது மனம் தெளிவு பெற்றது.. தன் அம்மாவை தேடி சென்றான் அவருக்கு தெரியும் பிரச்சனையின் பிறப்பிடம் எதுவென்று.. அவர் ஓர் இடத்தில் அமர்ந்து இருந்தார்.. அவர் அருகில் அமர்ந்து ஏதோ சொல்ல போனான் மகேஷ்.. ஆனால், அதற்கு முன் அவரே பேச ஆரம்பித்தார்...

" மகேஷ் நீ எப்பவுமே என்னோட மகன் தா... இப்போ இத பத்தி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பமில்ல... நாம இத பத்தி எப்போ வேண்ணா பேசிக்கலா.... இப்போ உன்னோட உயிரும் அந்த பிள்ளைங்க உயிரும் ஆபத்துல இருக்கு அந்த பிரச்சனைய முடிப்போம்" என்று கூறினார் மகேஷ் அம்மா...

" எனக்கு இந்த பிரச்சினை எங்க இருந்து ஆரம்பிச்சது அத மட்டும் சொல்லுங்க ம்மா... அந்த பிரச்சனை பத்தி நா எதுவும் கேட்க மாட்டேன்" என்று கூறினான் மகேஷ்.. அனுவும் அமிர்தாவும் "ஆமா! அத மட்டும் சொல்லுங்க... அப்போ, தா எங்களால அந்த அமானுஷ்ய காட்டை கண்டு பிடிக்க முடியும்" என்று கூறினார்கள்..

மகேஷின் அம்மாவும் அது சரி என்றுபட்டாத்தால் அந்த ஊரின் பெயரை மட்டும் கூறினார் "    
" 'பூம்பொழில்' இந்த ஊர் தா உங்க பிரச்சினையின் ஆணிவேர் இங்க போனா உங்களுக்கு ஏதாவது தீர்வு கிடைக்கலாம்... நீங்க நாலு பேரும் அங்க கிளம்புங்க" என்று கூறினார்

அவ்வூரின் பெயரை கேட்டத்தும் அமிர்தாவிற்கு ஏதோ புரிவது போல் இருந்தது அவள் பல உணர்வுகளை காட்டியது.... அதை யாரும் கவனிக்கவில்லை ஆனால், மகேஷ் மட்டும் கவனித்தான்...

"சரி நீங்க மூனு பேரும் இங்க இருக்கிங்க விக்ரம் எங்க" என்று கேட்டான் மகேஷ்...

"அவனுக்கு ஏதோ கால் வந்தது அதான் பேச போய் இருக்கான்" என்று கூறினாள் அமிர்தா... "ஆமா ஆமா அவன் கேர்ள் பிரண்ட் யாராவது கால் பண்ணி இருப்பாங்க பேச போய் இருப்பான் " என்று எரிச்சலாக கூறினாள் அனு.... அதைகேட்ட, மகேஷ் சிரித்து விட்டான்... அனு அவனை முறைக்க வாய்யில் கை வைத்து அமைதியாக இருந்தான் மகேஷ்...

அமிர்தா "நா போய் அவன கூட்டிட்டு வரேன்" என்று எழுந்து சொன்றாள்...

விக்ரம் தன் நண்பர்களிடம் பேசிவிட்டு திரும்ப... மகேஷ்டம் பேசிய அதே மனிதன்  அவன் அருகில் வந்து "உன் கனவின் விதை பயிரிட்டு அறுவடைக்கு காத்து கொண்டு இருக்கிறது கவனமாக இரு" என்று தோளில் தட்டி கொடுத்து என்றார்...

விக்ரம் மனம் பயம் கொண்டாலும், தன் நண்பர் இங்கு யாருமில்லையே... அப்படி இருக்கும் போது அது யாருக்கு நடக்கும் இளக்காரமாக நினைத்தான்... மகேஷ் அமர்ந்து இருந்த இடத்திற்கு சென்றான் விக்ரம்...

" உன்ன தேடி தானே அமிர்தா வந்தா இப்போ அவ எங்க" என்று கேட்டான் மகேஷ்... "என்ன தேடியா... அவ வரலையே" என்று விக்ரம் கூறினான்..

"உன்னை தேடி அவள அனுப்புனா இப்போ அவள தேடி இன்னோருத்தர அனுப்ப வேண்டியிருக்கு" என்று நெத்தியில் தட்டி கொண்டு "நா போய் அவள கூட்டிட்டு வரே நீங்க எல்லாரும் இங்க இருங்க" என்று கூறி அவளை தேடி  சென்றான்....

மகேஷ் கோவில் முழுவதும் தேடினான் அமிர்தாவை ஆனால், அவளை காணவில்லை.... எங்க சென்றாள் என்று பதட்டத்தோடு தேடினான் மறுபடியும்... அப்போதும் அவள் கிடைக்கவில்லை... ஒருவேளை அவள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று இருப்பாளோ என்று நினைத்து அங்கே சென்று போய் பார்த்தான்... அங்கு அவர்கள் நால்வரும் மட்டுமே இருந்தனர்....

அனு "மகேஷ்! அமிர்தா எங்க"..... "அவள காணும் அனு".... "என்ன சொல்ற, கோவில் முழுக்க தேடிப்பார்த்தியா... "என்று அனு பயத்துடன் கேட்டாள்.... "ஆமா நா எல்லா இடத்துலையும் பார்த்தே  அவள காணும்" என்று வருத்தத்துடன் கூறினான்....

மற்ற இருவரும் சற்று பயந்தனர்.. "ஒருவேள அந்த மிருதன் அவள எதுவும் பண்ணி இருப்பானா" என்று பயத்துடன் கேட்டாள் அனு...

மகேஷ் அப்படியே தரையில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டு இருந்தான்... அனு பயத்தில் ஏதோ உளரிக் கொண்டு இருந்தாள்... "அவன் தா.... அவள தூக்கிட்டு போய் இருக்குன்னு" என்று அழுத்தமாக கூறினாள் அனு....

மகேஷ் "நிச்சயமா மிருதன் அவள எதுவும் பண்ணல... அவ எங்க இருக்கான்னு எனக்கு தெரியும்" என்று அழுத்தமாக கூறினான்..

"எங்க போனா அவ" என்று கேட்டான் விக்ரம்... "பூம்பொழில்" கிராமத்திற்கு".. அனு "நாமளும் அங்க தானே போக போறோம் அப்படி இருக்கும் போது அவ மட்டும் ஏன் தனியா போனா"... "அத அவ கிட்டே போய் தெரிஞ்சுக்கலாம்" சீக்கிரம் ரெண்டு பேரும் கிளம்புங்க" என்று கூறினான்....

தன் தாயிடம் விடைபெற்று அம்பாளின் அருளோடு பூம்பொழி கிரமத்தை நோக்கி பயணம் தொடங்கினர் அந்த நால்வரும்... அமிர்தா மட்டும் தன் விதியின் சாபத்தை தனியாக நின்று நீக்க நினைக்குறாள்... ஆனால் இவர்கள் நால்வரின் விதி ஒன்றென்னு அறியாமல் பேதை பெண் தனியாக கையாள நினைக்குறாள்... அவளின் எண்ணம் தவறு என்று சொல்லி புரியவைப்பானா மகேஷ்?....

1. அமிர்தாவிற்கு எப்படி தெரியும் ?

2. அமானுஷ்ய காட்டை கண்டு பிடித்து பெட்டியை எடுப்பார்களா ?

3. மிருதனின் அடுத்த செயல் என்ன?

4. மற்றோரு அகோரி யார் ? மிருதனா...??? மனிதனா....???

                        இனி அடுத்த அத்தியாயத்தில்...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro