15

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு ஆணின் அரவணைப்பு ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது என்பது அந்த ஆணுக்கு அதை விட பெரிய மகிழ்ச்சி இருக்க முடியாது. ஒரு ஆண் தன்னை எண்ணி கர்வம் கொள்ளும் சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. ஜனனியின் தேவையை ஜீவா நன்றாகவே உணந்திருந்தான். ஆனால் அந்த தேவையை அவனால் பூர்த்தி செய்ய முடியுமா என்று தெரியவில்லை. காலம்தான் அதற்கு பதில் கூற வேண்டும்.இங்கு வீட்டில் மயங்கி விழுந்த சாரதாவை வித்யா ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருந்தாள். சாரதாவின் மயக்கம் அதிர்ச்சியால் ஏற்பட்ட ஒன்றென்று டாக்டர்கள் கூற வித்யா சற்று நிம்மதுப் பெருமூச்சு விட்டாள். நடந்த கலோபரத்தில் சாரதாவின் போன் வீட்டிலேயே கவனிப்பாரற்று இருந்தது.
சாரதாவின் கைபேசிக்கு பல தடவை அழைத்தும் அது ஏற்கப்படாமல் போக ஜீவா வித்யாவுக்கு அழைத்தான்.

" இல்ல ஜீவா சாதாரன மயக்கம்தான். ஆமா ஜனனி என்ன பண்றா? அவளால எப்போமே சாரதாவுக்கு தேவையில்லாத டென்சன் தான். இப்போ அவ எங்க பக்கதுல்ல இருக்காளா?" என்று கேட்டாள். வித்யா இப்பொழுது ஜனனியிடம் பேசினால் கண்டிப்பாக அவளை திட்டுவாள் என்று தெரியும். அதனாலேயே அவன் வித்யாவை ஜனனியுடன் பேச வைக்கவில்லை.

" வித்யா நாங்க இப்பவே அங்க கிளம்வி வர்றோம். சாரதா மிஸ்ஸ நீ பார்த்துக்க" என்றவன் காலை கட் செய்ய ஜனனி அவனை கேள்வியாக பார்த்தாள்.

" சார் அம்மாவுக்கு என்ன ஆச்சி" என்று கேட்க,

" அம்மாவுக்கு ஒன்னும் இல்ல ஜனனி. லேசான மயக்கமாம். ஹாஸ்பிடல்ல இருக்காங்க. சாப்பிடாம இருந்திருப்பாங்க போல. அதனாலதான் மயக்கம் வந்திருக்கும். கூடவே வித்யா மிஸ் இருக்காங்க. பயப்பட எதுவுமே இல்லை" என்றான்.

" சார் சாப்பிடாம எல்லாம் எங்கம்மா மயக்கமாகி இருக்க மாட்டாங்க. எல்லாம் நான் பண்ண காரியத்தாலதான் எங்கம்மாவுக்கு இப்படி ஆகியிருக்கும். எங்கம்மாவுக்கு ஏதும் ஆச்சின்னா நான் செத்துடுவேன் சார்" என்று அழுதாள். ஜனனி தான் ஒரு வளர்ந்த குழந்தை என்று ஜீவாவுக்கு அவளின் செயல்கள் மூலம் அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். இவ்வளவு கலோபரத்திலும் ஜீவா ஜனனியின் செயல்களையும், அவள் தன் தாயை நினைத்து குழந்தை போல் அழுவதையும் ரசித்தான்.

ஜீவா மற்றும் ஜனனியால் உடனே ஊருக்கு கிளம்ப முடியவில்லை. அடுத்த நாள் காலையில் பயணிக்கத்தான்  டிக்கட் கிடைத்தது. இரவு ஹோட்டலில் இருவரும் ஒரே அறையிலேயே தங்கி இருந்தனர். ஜீவாவால் ஜனனியை இன்று இரவு தனியாக தங்கவைக்க பயமாக இருந்தது. ஜனனி கட்டிலில் தூங்க ஜீவா ரூமின் பால்கனி கதவை திறந்த வெளியில் ஒரு கதிரையை போட்டு சுஜாதாவின் ' தப்பித்தால் தவறில்லை' படித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவனின் போன் அலற அதை எடுத்து பார்த்தவன் ஏதோ தெரியாத இலக்கத்தில் இருந்து அழைப்பு வந்திருந்தது." ஹலோ யார் பேசுறீங்க"

" ஹலோ நான் சதாசிவம் பேசுறேன். அமைச்ச்சர் திருவாசகத்தோட பிஏ. நீங்க ஹாலி ஏஞ்சல்ஸ் ஸ்கூலோட கோச் ஜீவாதானே"

" ஆமா ஜீவாதான் பேசுறேன்"

" சார், அமைச்சர் உங்கள பார்க்கனும்னு சொல்றாரு. கொஞ்சம் அப்பல்லோ ஹாஸ்பிடல் வரைக்கும் வரமுடியுமா? வரும் போது அந்த பொண்ணு ஜனனியையும் கூட்டிட்டு வாங்க" என்றார். சதாசிவத்தின் பேச்சு ' வரமுடியுமா' என்று ஆரம்பித்து ' ஜனனியையும் கூட்டி வாங்க' என்று கூறும் போதே அவனுக்கு தெரிந்தது, இதில் அவர்களுக்கு தெரிவுகள் எதுமில்லை. கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும் என்று.

" சரி சார். நாங்க ஒரு மணித்தியாலத்துல அங்க வர்றோம்" என்றவன் ஜனனியை அழைத்துக்கொண்டு அப்பலோவிற்கு அவர்கள் கூறியபடி ஒரு மணி நேரத்திலேயே ஜீவா வந்து சேர்ந்தான். இவர்களை கண்டதும் சதாசிவம் இவர்களை அமைச்சர் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அமைச்சர் இருந்த அறையில் காவியா இடுப்பு பகுதியில் பான்டேஜ்கள் போடப்பட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். இவர்கள் உள்ளே வந்ததும் அவர்கள் இருவரையும் ஒரு முறை ஏற இறங்க பார்த்த அமைச்சரின் கண்களில் கோபம் கொப்பளித்தது. கண்களால் சதாசிவத்தை வெளியே போக சொன்னவர் இவர்களை அங்கிருந்த சோபாவில் அமர சொன்னார்.

" காவியா நீ கேட்டுக்கிட்ட மாதிரி இரண்டு பேரையும் வரவைச்சிட்டேன். சொல்லும்மா என்ன பண்ணட்டும் இவங்க ரெண்டு பேரையும்" என்று கோபமாக தன் மகளை பார்த்து கேட்க ஜனனி நிஜமாகவே மிரண்டு போனாள்.

" அய்யோ அப்பா, இது என்ன உங்க அரசியலா , பழிவாங்க. சாம்பியன்ஷிப்ப விட ப்ரெண்ட்ஷிப்தான் முக்கியம்னு நினைச்ச அந்த முட்டாள பார்க்கனும்னு தோனிச்சி. அதனாலதான் இவங்கள வரவைச்சேன். தனியா இவள மட்டும் வரவைச்சா ஏதும் ப்ராப்ளம் ஆகும்னுதான் அவ கோச்சையும் சேர்த்து வரச்சொன்னேன். இது எங்களுக்குள்ள இருக்குற ப்ராப்ளம். உண்மையான சொல்லனும்னா தப்பு முழுவதும் எங்க ஸ்கூல் கோச் மேலதான். அவருதான் கீர்த்திகிட்ட அப்படி தப்பா ஆட சொல்லியிருக்காறு. தப்ப நம்ம பக்கம் வெச்சிக்கிட்டு மத்தவங்க மேல கோபப் படக்கூடாது" என்று கூற ஜீவாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

" இல்ல என்ன இருந்தாலும்...." என்று அவர் இழுக்க

" அப்பா, நான் சொல்றேன்ல. இந்த விசயத்த இத்தோட விடுங்க. இதுக்கு அப்புறம் இவங்களுக்கு உங்க ஆளுங்க ஏதும் தொந்தரவு கொடுத்தாங்க அப்புறம் என்ன மனுசியாவே பார்க்க மாட்டீங்க" என்றாள். ஒரு அதிகாரம் மிக்க அமைச்சரை அவரின் பதினாழு வயது மகள் மிரட்டுவதை பார்க்க ஜீவா ஒரு நொடி ஆடித்தான் போனான். மகள்களின் மிரட்டலுக்கு பணியாத தந்தைதான் இந்த உலகில் உண்டோ. காவியாவிடம் இனி பேசி பயனில்லை என நினைத்த அமைச்சர் திருவாசகம் அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.தனது தந்தை வெளியேறியதும் ஜனனியை காவியா ஏற இறங்க பார்த்தாள். ஜனனியின் கண்களில் ஒரு பயம் தெரிவதை கண்டவள் உள்ளூர சந்தோசப்பட்டுக் கொண்டாள்.

" ஹேய் லூசர் இங்க வா" என்று அவள் ஜனனியை அழைக்க ஜனனிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்த்தது.

" ஐ அம் நாட் அ லூசர், மைன்ட் யுவர் டங்க்" என்று கொஞ்சம் காட்டமாகவே கூறினாள்.

" ஹேய் நீ லூசர்தான். உண்மைய சொன்னா கோபம் வருதா உனக்கு" இதைக் கேட்ட ஜனனி,

" அந்த மேட்ச்ல நான் டிஸ்குவாலிபை ஆனதால நீ வின்னர். அதனால நான் ஒன்னும் லூசர் இல்லை. அந்த மேட்ச் இன்னும் பத்து ரவுண்ட் ஆடி இருந்தாலும் நீ என்ன ஜெயிச்சிருக்க முடியாது" என்றாள். காவியாவுக்கு ஜனனியின் கோபம் சிரிப்பை வரவழைத்தது.

" அந்த மேட்ச்ல நான் வின் பண்ணதால உன்ன லூசர்னு சொல்லல. உன்னால உன் எமோசன்ச கட்டுப்படுத்திக்க தெரியல. உணர்வுகளை கட்டுப்படுத்திக்க தெரியாத எல்லோருமே லூசர்தான் அப்படின்னு ஒரு புத்திசாலு சொல்லியிருக்காரு. நீ மட்டும் அன்னைக்கு கொஞ்சம் யோசிச்சிருந்தின்னா இன்னைக்கு சனாவ உன்னால சாம்பியன் ஆக்கி எங்க ஸ்கூல் கோச் முகத்துல கரிய பூசியிருக்க முடியும்" என்று கூற ஜனனி சற்று குழப்பமாக காவியாவை பார்த்தாள்.

" எப்படின்னு யோசிக்கிறியா? என்கூட மேட்ச்ல ஜெயிச்சிருந்தா நீயும் சனாவும்தான் பைனல்ஸ்ல ஆடியிருப்பீங்க. நீ பைனல்ஸ்ல இருந்து வித்ட்றா பண்ணியிருந்தின்னா சனா சாம்பியம் ஆகியிருப்பா. நீ ரன்னர் அப் ஆகியிருப்ப, ஆனா இப்போ உன்னோட முட்டாள்தனமான முடிவால நாங்க ஜாயின்ட் வின்னர்ஸ். உனக்கு மூணாவது இடம் கூட இல்லை" என்று சர்வசாதாரணமாக கூற ஜீவாவும் ஜனனியும் வாய் அடைத்து போயினர். ஆனால் காவியாவின் கூற்றை ஜனனி ஆமோதிப்பதாக இல்லை.

" எனக்கு சனா சாம்பியன்ஷிப் ஜெயிக்கிறாலா இல்லையா என்பது முக்கியமில்ல. சனாவ இப்படி பண்ணவங்கள அடிக்கனும் அவ்வளவுதான். நான் கரக்டாதான் பண்ணேன். நீ சொன்ன மாதிரி நான் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியா லூசராவே இருந்துட்டு போறேன். என் ப்ரெண்டுக்காக நான் லூசரா இருக்குறதுல ஒன்னும் கேவலம் இல்ல" என்று கூற காவியா ஒரு கணம் ஆடிப்போனாள்.எப்படியான நட்பு இது. தன் தோழிக்காக தன்னை முட்டாள் என்று மற்றவர்கள் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எத்தனை நட்புகளில் பார்க்க முடியும். தனக்கு இருக்கும் தோழிகள் யாராவாது இப்படி செய்வார்களா என காவியா நினைத்த போது அப்படி யாருமே இல்லை என்பது அவளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

" சனாவ அப்படி அடிக்க சொன்னதுல உன்னோட பங்கும் இருக்கும்னு நினைச்சித்தான் நான் உன்ன அடிச்சேன். உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சத்தியமா எனக்கு தெரியாது. ஐ ஆம் ரியலி சாரி" என்று கூற காவியா அவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro