2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

' ஹாலி ஏஞ்சல்ஸ்' பாடசாலை உங்களை அன்புடன் வரவேற்கின்றது' என்ற வரவேற்பு பலகையுடன் அந்த பாடசாலை தனது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களுடன் பிரம்மாண்டமாக நின்றது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு, இதுவரையில் எந்த சேதமோ அல்லது பாரிய பராமரிப்பு செலவுகள் எதுவுமே ஏற்படவில்லை. ஆனால் சுதந்திரத்தின் பின் கட்டப்பட்ட எல்லா கட்டிடங்களுமே பாதி இடிந்தும் அல்லது பாரிய பராமரிப்பு வேலைகளுக்கும் உட்பட்டது என்பது நம் தலைவர்கள் நம் சமூகத்துக்கு ஆற்றிய பங்கை பறைசாற்றியது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் கணித பாட வகுப்பு முடித்து மிகவும் கலைப்புடன் காணப்பட்டனர். பாடசாலை முடிய இன்னும் இரண்டு பாடங்களே இருந்தன. ஆனாலும் அந்த வகுப்பில் ஒரு புத்துனர்ச்சி ஆரம்பமாக தொடங்கியது. காரணம் அடுத்த பாடம் தமிழ் இலக்கியம். பெரும்பான்மையான மாணவர்களுக்கு வேப்பங்காய் போல இருக்கும் தமிழ் இலக்கியம் இந்த பாடசாலையில் மாத்திரம் வேதம் படிப்பது போலாகும். அதற்கு முக்கிய காரணம் சாரதா.

" ஹேய் சைலண்ட் சைலண்ட். சாரதா மிஸ் வர்றாங்க. எல்லோரும் அமைதியா இருங்க" என்று வகுப்பின் மாணவத் தலைவி எல்லோருக்கும் எச்சரிக்கை விடுத்தாள். அவள் கூறியதும்தான் தாமதம் வகுப்பில் இருந்த அனைத்து மாணவ மாணவியரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து தங்கள் கைகளில் தமிழ் இலக்கிய புத்தகத்தை குரான், பகவத் கீதை, பைபிள் போல பய பக்தியுடன் வைத்திருந்தனர்.

யார் இந்த சாரதா? ஐம்பது வயதை அடைந்த தலைமை ஆசிரியரா? இல்லை எல்லா மாணவர்களையும் கண்டிப்புடன் நடத்தும் ஆசிரியையா?

அடர் சிவப்பு நிற ஜாக்கடுக்கு, பச்சை நிற புடவையில் மெரூன் நிறத்தில் பூ வேலைப்பாடு செய்த சேலை அணிந்து, இடை வரை இருக்கும் கூந்தலை அப்படியே கொண்டை இட்டு, கண்களுக்கு லேசான காஜல் பூசி, உதட்டுக்கு உதட்டுச்சாயம் பூசியுள்ளாரா இல்லையா என்று விவாதம் நடத்தும் அளவுக்கு உதட்டு சாயமும் இட்டு பத்தாவது வகுப்பு வந்தார் அந்த சாரதா டீச்சர்.

வகுப்புக்குள் வந்ததுமே எல்லோரும் " காலை வணக்கம் மிஸ்" என்று கூற எல்லோரின் வரவேற்புக்கும் புன்னகையுடன் சேர்த்த ஒரு வணக்கத்தை வைத்தால் அழகு பதுமை சாரதா. அழகுப்பதுமையா? ஆம் அழகுப்பதுமைதான். அவள் அழகு என்பது ஆரவாரம் இல்லாத அமைதியான ஒரு தெளிந்த நீரோடை. அந்த நீரோடையின் அமைதியில் ஒரு தடவை லயித்தவர்கள் அங்கிருந்த நகர விரும்பமாட்டார்கள்.

தமிழ் இலக்கிய ஆசிரியையான அவளை வைத்து அழகுக்கே இலக்கனம் எழுதலாம்.

பத்தாவது படிக்கும் மாணவர்கள் வெறுக்கும் பாடங்களில் ஒன்று தமிழ் இலக்கியம். அதையே இந்த மாணவர்கள் இவ்வளவு பயபக்தியுடன் படிக்க காரணம், சாரதா பழகிய சில நொடிகளிலேயே பல வருட பிணைப்பை ஏற்படுத்தும் ஆற்றல் உள்ளவள். ஆண் மாணவர்கள் மட்டுமன்றி பெண் மாணவிகளும் அவரின் நெருக்கத்துக்குரிய மாணவர்களாகிட வேண்டும் என்று தவம் இருக்கின்றனர்.

கண்களை உருட்டி அவள் பேசும் அழகுக்கு, இவள் இலக்கியம் படிப்பிக்கின்றாலா அல்லது கண்களால் இசை கச்சேரி நடத்துகின்றாலா என்ற சந்தேகம் மனதில் எழாமல் விட்டால்தான் அதிசயம். சிரிக்காமலேயே அவள் கன்னத்தில் குழி விழும். அந்த குழி படுகுழி அல்ல.

எல்லா மலரினிலும் ஒரு வாசம் இருக்கும். ஆனால் மகரந்தம் தாங்கும் மலரில் தனி ஒரு வாசம். எல்லா ஆசிரியருக்கும் ஒரு தாயின் குனம் இருக்கும். சாராதாவின் குனமும் மகரந்த மலரின் வாசம் போல தனியாக தெரியும். அதை உணர்ந்தவர் அதில் இருந்து வெளிவர விரும்பமாட்டார்கள்.

அந்த பாடசாலைக்கே செண்டர் ஆப் அட்றாக்சன் சாரதாதான். அவளின் உடைகளில் அவள் காட்டும் நளினமும், அவள் பேச்சில் இருக்கும் தெளிந்த நேர்மையும் ஆசிரியர்கள் மத்தியில் அவளுக்கு ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அதனாலாயே அந்த பாடசாலையின் எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சாரதாவின் அங்கம் அதில் கண்டிப்பாக இருக்கும். ஏதும் போட்டிக்கு அவர்கள் பாடசாலை சென்றால் கூட அதற்கு பொறுப்பாக அவளே செல்வாள். ஒரு சிலர் அறிவை காட்டி தங்களின் இடத்தை உறுதி செய்து கொள்வார்கள். அறிவுடன் சேர்த்து அழகும் இருக்கும் சாரதா சென்றால் அந்த போட்டி நிகழ்வுக்கு வந்த எல்லோருமே சாராதாவையே பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

தனது வென்சிற்பி பற்கலை காட்டி புன்னகைத்தவள் " என்ன எல்லோரும் ரொம்ப டயர்டா இருக்கீங்க போல இருக்கு. வேணும்னா இன்னைக்கு கிளாஸ் எடுக்காம விடட்டுமா?" என்று கேட்க வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும் ஒருமித்த குரலில்  " இல்லை மிஸ், இன்னைக்கு படிக்கலாம்" என்று கூறினர். வகுப்பில் இருந்த ஒரு மாணவன் மட்டும் " மிஸ், இன்னைக்கு சினிமா பாட்டு பத்தி படிக்கலாமா?" என்று கேட்க அவளது முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது.

அதென்ன்ன இலக்கிய வகுப்பில் சினிமா பாடல் என்று குழப்பமாக உள்ளதா. நறுமுகையே, கண்ணா மூச்சி ஏனடா, மலர்களை கேட்டேன் வனமே தந்தனை, நல்லை அல்லை போன்ற பாடல்கள் எல்லாம் தமிழ் இலக்கியத்துக்குள் வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. சாரதா எப்போதுமே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுபவர். மதியத்துக்கு மேல் இருக்கும் வகுப்பு என்றால் இப்படியான சுவாரசியம் மிக்க வகையில் வகுப்பை எடுத்து மாணவர்களின் கவனம் பாடத்தில் இருந்து திசை திரும்பாமல் பார்த்துக்கொள்வார். இன்று கடைசிக்கு முதல் நேர பாடம் என்பதால் அவளுக்கு இந்த பாடல் வகுப்புத்தான் சரியாக பொருந்தும் என்று தோன்றியது.

இன்றைய பாடமாக ' கண்ணாமூச்சி ஏனடா' பாடலையும் அந்த பாடலுக்கான பொருளும், பாரதியை பற்றியும், பாரதி கண்ணம்மா என் காதலியை எப்படி எழுதினார் என்பது பற்றி பல சுவாரசியமான தகவல்களை சாரதா தனக்கே உரிய அழகிய பாணியில் சொல்லிக்கொண்டிருந்தார். பாடம் மிகவும் கலகலப்பாக போய்கொண்டிருந்தது.

" மிஸ் உங்கள பிரின்ஸ்பால் மீட்டிங்க் ரூமுக்கு வர சொன்னாரு" என்று ப்யூன் கூற சாரதாவும் வகுப்பை பத்து நிமிடங்கள் முன்னராகவே முடித்துக்கொண்டாள். பொதுவாக ஆசிரியர்கள் தங்களது பாடத்துக்கு வராமல் போனாலோ அல்லது வழமையான நேரதை விட முன்னதாக முடித்துக்கொண்டாலோ மாணவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். ஆனால் சாரதாவின் வகுப்பில் அது எதிர்மாற்றமாக இருக்கும். சாரதாவின் பாடசாலைக்கு வரவில்லை என்றாலோ அல்லது ஏதாவது காரணத்துக்காக அவரின் பாட நேரத்தின் அளவு குறைந்தாலோ மாணவர்களுக்கு மிகவும் கவலையாகி போகும். மற்ற ஆசிரியர்கள் எப்போதும் இவளை கேலி செய்வது உண்டு. அதிலும் குறிப்பாக வித்யா. " என்ன சாரதா, உன் கிளாஸ்னு சொன்னா மட்டும் பசங்க மட்டுமில்லாம பொண்ணுங்க கூட ரொம்ப எக்சைட் ஆகிடுறாங்க. டீச்சர் கொஞ்சம் அழகா இருந்தா ஆம்பள பசங்க சந்தோசப்படுறது நியாயம். அதுக்காக பொம்பள பிள்ளைங்களும் ஆர்வமா இருக்குறதுலாம் ரொம்ப ஓவர்பா" என்று அடிக்கடி கலாய்ப்பாள். இப்படியான கேலிகளை நேரடியாக தொடுப்பவள் வித்யா ஒருத்திதான்.

ஆறு வருடங்களின் முன் சாரதாவும் வித்யாவும் ஒரே நேரத்திலேயே இந்த பாடசாலையில் வேலைக்கு சேர்ந்தனர். பழகிய கொஞ்ச நாட்களிலேயே சாரதாவும் வித்யாவும் மிகவும் நெருங்கிய தோழிகள் ஆகினர். சாரதா தமிழ் இலக்கியம் என்றால் வித்யா கணிதம். வித்யா மிகவும் கெட்டிக்காரிதான். ஆனால் கோபம் அதிகம் வரும். கோபம் அதிகம் உள்ள ஆசிரியர்கள் என்றாலே மாணவர்களுக்கு வேப்பங்கனிதானே. 

" சார் நீங்க கூப்பிட்டிங்கன்னு ப்யூன் சொன்னாங்க. என்ன விசயம் சார்" என்று கேட்க பிரின்ஸிபல் அவளை கதிரையில் அமருமாறு சைகை செய்தார். " சாரதா, நம்ம ஸ்கூலுக்கு PT பாடத்துக்கு ஆள் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம். ஒரு வேலைக்கு நூத்தி நாப்பது விண்ணப்பங்கள் வந்திருக்கு. இதுல இருந்து ஐந்து பேர மட்டும் கடைசி இண்டர்வியூவுக்கு கூப்பிடலாம்னு இருக்கேன். அதனால பைனல் காண்டிடேட்ஸ முடிவு பண்ற வேலைய உங்ககிட்ட கொடுக்கலாம்னு இருக்கேன். வேணும்னா நீங்க வித்யாவோட ஹெல்ப்பையும் எடுத்துக்கோங்க. ஆனா எனக்கு பைனல் லிஸ்ட் அடுத்த வாரமே வேணும்" என்று கூற அவளும் காண்டிடேட்ஸின் ரெஸ்யூமி அடங்கிய fபைலை வாங்க்கிக்கொண்டு நடக்க ஒரு ரெஸ்யூமி மட்டும் கீழே விழுந்தது. அதை கையில் எடுத்து பார்க்க " ஜீவானந்தம்" என்றிருந்தது.

------------------
நான் நிஜமாக இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. பழைய வாசகர்கள் எல்லாம் ஒரே நேரத்தில் வந்து படித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. வழமைபோல வாரத்துக்கு இரண்டு அப்டேட் தரலாம் என எண்ணியுள்ளேன். வெள்ளி ஒன்று... மற்றையயது திங்கள் அல்லது செவ்வாய்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro