5

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஜீவாவின் தனது பயணத்துக்கு தேவையானவற்றை தயார் செய்து கொண்டிருந்தவன் ஏதோ நினைவு வர ஆனந்தியின் அறைக்குள் சென்றான்.

" ஆனந்தி"

" எண்ணன்னா. பேக்கிங்க் செய்ய ஏதும் ஹெல்ப் பண்ணனுமா"

" இல்லை. எனக்கு .. எனக்கு" என்று ஏதோ கேட்டு தடுமாற அவளுக்கு குழப்பமாக இருந்தது. " எண்ணன்னா ஏன் தயங்குற எதுவானாலும் கேளுண்ணா" என்று கூற அவன் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான்.

" பசங்களுக்கு எப்போமே அம்மான்னா ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கல. சித்திக்கு என் மேல ஆரம்பத்துல கோவம் இல்லைன்னாலும் கொஞ்சம் தூரமாத்தான் இருப்பாங்க. ஆனா நான் பண்ண ஒரு தவறால அவங்க என்ன பார்க்குற பார்வையே வேற மாதிரி ஆகிடிச்சி. பசங்களுக்கு பொதுவா அவங்க அம்மா கூட இருக்கும் போது ரொம்ப கெத்தா இருக்கும். இது எங்க அம்மாடா அப்படின்னு சொல்ற மாதிரி. ஆனா எனக்கு அந்த கொடுப்பினை இல்லாததால நான் உன்ன அந்த ஸ்தானத்துல வெச்சிதான் பார்த்திருக்கேன். நான் கேட்க போறத தயவு செய்து தப்பா புரிஞ்சிக்காத. சித்திக்கிட்டயும் சொல்லிடாத. எனக்கு உன்னோட ஒரு துப்பட்டா கிடைக்குமா. என்கிட்ட அது இருக்கும் போது நீ என்கூடவே இருக்குற மாதிரி பீல் ஆகும். அம்மாகிட்ட பேசுறதா நினைச்சி அதுக்கூட பேசிக்குவேன்" என்று கூற ஆனந்திக்கு மிகவும் கவலையாகி போனது. அண்ணன் தன்னை அம்மா ஸ்தானத்தில் வைத்தி பார்த்திருக்கின்றான் எனும் போது அவளுக்கு மிகவும் பெருமையாகவும் இருந்தது.

ஜீவா பார்ப்பதற்கு சற்று அழகாகவே இருப்பான். ஆனந்தியின் தோழிகள் வீட்டுக்கு வந்தாலோ அல்லது அவனை எங்கும் வெளியில் கண்டாலோ சைட் அடிக்காமல் விட்டதில்லை. இதை ஆனந்தியிடமே அவர்கள் வெளிப்படையாக கூவார்கள். ஒரு சில தோழிகள் வெளிப்படையாகவே அவளை நாத்தனார் என்று கூப்பிடுவதும் உண்டு. அதிலும் குறிப்பாக சுபா ஒரு படி மேலே சென்று சில நாட்களாக இந்த விடயத்தில் சீரியசாகவே இருந்தால். இப்போது எப்படி என்று தெரியவில்லை.

ஜீவா இப்படி கேட்டதும் ஆனந்தியால அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் எதுவும் பேசாமல் தனது அறைக்குள் சென்றவள் தனக்கு மிகவும் பிடித்த ஒரு துப்பட்டாவை அவனிடம் கொண்டு வந்து கொடுத்தாள். " அண்ணா பொண்ணுங்க அவங்க டிறஸ்ல எதை வேணும்னாலும் மத்தவங்களுக்கு கொடுப்பாங்க. ஆனா துப்பட்டா மட்டும் கொடுக்க மாட்டாங்க. அதுலயும்  சில துப்பட்டாங்க அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கும். அதை எக்காரணாம் கொண்டும் கொடுக்கவும் மாட்டாங்க, ஏன் பழசானா கூட தூக்கி வீசமாட்டாங்க. அந்த மாதிரி ஒன்னுதான்னா இது. இதுல இருந்து உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன், நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு. உனக்கு அந்த வேலை கிடைச்சதுன்னா நீ அங்கேயே தங்கிடுன்னா. எப்பவாச்சும் ஒரு பண்டிகைக்கு மட்டும் வீட்டுக்கு வா. சித்தி நல்லவங்கதான். ஆனா அவங்களுக்கு உன் மேல மட்டும் ஏன் கோபம்னுதான் தெரியல. சரி ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு விதம். அவங்க நம்ம அப்பாவோட பொண்டாட்டிதானே தவிற நம்மல பெத்த அம்மா இல்லையே. சரி அதை விடு. பெஸ்ட் ஆப் லக். நீ எப்போமே சந்தோசமா இருக்கனும்" என்றவள் அவன் அருகில் வந்து நெற்றியில் முத்தமிட்டால்.

எல்லா வீடுகளிலும் அண்ணன், தங்கை, அக்கா என அன்பை வெளிப்படுத்த முத்தமிடுவது வழக்கம். ஆனால் பெரியவன் ஆனது முதல் ஜீவாக்கு அந்த அன்பு கிடைக்கவில்லை. ஆனால் இன்று ஆனந்தியின் முத்தம் அவனை ஆச்சரியப்படுத்த அவளை நிமிர்ந்து பார்த்தான். " என்ன பார்க்குற, அதான் என்ன அம்மா மாதிரின்னு சொல்லிட்டேல்ல. அம்மா இருந்திருந்தா உனக்கு செல்லமா இப்படி முத்தம் கொடுத்திருக்க மாட்டாங்களா? அதுவும் இண்டர்வியூவுக்கு போற. உன் வாழ்க்கையில இது ஒரு முக்கியமான தருணம் . அம்மாவே தந்ததா நினைச்சிக்க. ஏதும் யோசிக்காம போயி இண்டர்வியூவ சக்சஸ் பண்ணிட்டு வாண்ணா. ஆனா தயவு செஞ்சி இண்டர்வியூ அன்னைக்கு தாடிய ஷேவ் பண்ணிட்டு போ" என்று புன்னகையுடன் கூறினால்.

தன்னை விட வயதில் மிகவும் இளையவள். தான் அவளை அம்மாவாக நினைப்பதாக கூறியதும் அம்மாகவாகவே மாறி போனது அவனுக்கு பெரிய ஆச்சரியம் எதுவுமே இல்லை. கடவுளால் பெண்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட உணர்வுதான் தாய்மை. அது அவர்களுக்குள் இயற்கையாக இருக்கின்றது. இங்கும் அதுதான் நடந்தது. தன்னிடம் எப்போதும் ஜீவா அதிகம் பேசுவதில்லை என்று ஆனந்திக்கு தெரியும். ஆனால் தான் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதும் அவள் புரியாமல் இல்லை.

————————————-

" உட்காருங்க மிஸ்டர் ஜீவானந்தம்" என்று சாரதா கூற அவன் உட்கார்ந்தான். சாரதா மற்றும் வித்யாவையே சிறந்த காண்டிடேட்டை தெரிவு செய்ய பாடசாலை நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தனர். கூடவே வித்யாவும் இருப்பதால் சாரதாவுக்கும் இவ்வளவு பெரிய லிஸ்ட்டில் இருந்து நான்கு பேரை தெரிவு செய்வது கஷ்டமாக இருக்கவில்லை. பல காண்டிடேட்ஸ்களை சாரதாவுக்கு தெரியாமல் வித்யாவே போட்டோவை பார்த்து ரிஜக்ட் செய்தது வேறு கதை.

வேலை சார்ந்த கேள்விகள் முடித்த பின், பொதுவான கேள்விகள் ஆரம்பமானது.

" சோ மிஸ்டர் ஜீவா, ஜீவான்னு கூப்பிடலாம்ல" என்று வித்யா கேட்க அவன் " யெஸ் மேம்" என்றான். இவன் அவளை மேம் என்று கூப்பிட வித்யா கடுப்பானால். இண்டர்வியூவில் வைத்து ' டோண்ட் கால் மீ மேம். கால் மீ வித்யா' என்று சொல்ல அவளுக்கும் ஆசைதான். ஆனால் எடுத்த எடுப்பிலேயே நாம் வழிவது அவனுக்கு தெரிய கூடாது என நினைத்தால். ஏனென்றால் இந்த வேலைக்கு அவன் மிகவும் பொருத்தமானவனாக இருந்தான்.

" நீங்க உன்க ரெஸ்யூமில அன்மேரீட்னு போட்டிருக்கீங்க. நிஜமாவே அன்மேரீட்டா இல்லைன்ன டைவோர்ஸ் ஏதும் ஆகியிருக்கா. ஏன்னா சில பேருக்கு டைவோர்ஸ் ஆனா கூட அன்மேரீட்தான் அப்படிங்கிற எண்ணம் இருக்கு" என்று கூற சாரதாவுக்கு சிரிப்பு வந்தது. சாரதாவுக்கும் ஜீவா இந்த வேலைக்கு பொருத்தமானவனாக இருப்பான் என்று தோன்றியது. ஆனால் வித்யா கேட்கும் கேள்விகள் இனி வரப்போகும் நாட்களில் அவனுடன் சகஜமாக பேச சங்கடமாக்கிவிடும் என்ற பயமும் இருந்தது.

அவனோ வித்யாவின் கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லாமல், " அப்படி ஏதும் இருந்திருந்தா நான் டைவோர்ஸ் அப்படின்னு போட்டிருப்பேன். ஏன்னா சில கம்பனிங்களோட காரியர் சைட்ல மேரீட், அன்மேரீட், டைவோர்ஸீ அப்படின்னு போட்டிருப்பாங்க. ஆனா உங்க ரெஸ்யூமி பார்ம்ல அத சேர்க்காம விட்டதுதான் இந்த மாதிரி குழப்பத்துக்கு காரணமா இருக்கும்னு தோனுது. நீங்க பார்ம்ல கரக்டா போட்டிருந்தா இப்படியா குழப்பம் வராதுல்ல" என்று வித்யாவை அவன் கலாய்க்க சாரதாவுக்கு சிரிப்பு வந்தது.

ஜீவாவிம் பல்ப் வாங்கிய வித்யாவால் கோபத்தை அடக்க முடியவில்லை. உடனே அவனை கேள்வியால் மடக்க நினைத்தவள் " அப்போ நாங்க பார்ம கரக்டா ரிலீஸ் பண்ணலன்னு சொல்ரீங்களா மிஸ்டர்?" என்று கோபமாக கேட்டால். " நான் அப்படி சொல்லல மேம், பொதுவா இப்படியான fபார்ம் எல்லாம் ஆன்லைன்ல இருந்து சுட்டு அப்படியே போட்றுவாங்க. அந்த நேரங்கள்ள இப்படியான தவறுகள் வருவது சகஜம்தான்" என்று கூற மீண்டும் அவன் தங்களை ஆன்லைனில் பார்மை திருடிய கூட்டம் என  மட்டம்தட்டி பேசுவது வித்யாவுக்கு கோபத்தை கொடுத்தது. நிலமை கொஞ்சம் சூடாகுவதை உணர்ந்தாள் சாரதா.

" சரி மிஸ்டர் ஜீவா, நாங்க இன்னைக்குள்ள ரிசல்ட் சொல்லிடுவோம். சோ வெயிட் பார் அவர் கால்" என்று கூற அவன் வெளியேறினான். ஜீவாவுக்கு தான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றியது. தனது பேச்சால் வித்யா கோபம் கொண்டதும் அதை சாரதா சரியாக கணித்து அதை கையாண்ட விதமும் அவனை ஆச்சரியப்படுத்தியது.

" சாரதா இவன் ரொம்ப திமிர் பிடிச்சவனா இருக்கான். இந்த வேலைக்கு இவன் வேணாம். அந்த ரமேஷ செலக்ட் பண்ணிடு. கல்யானம் ஆனவன்னாலும் ரொம்ப க்யூட்டா இருக்கான்" என்று கூற உடனே சாரதா, " ஹேய் அதெல்லாம் முடியாது. உன்னோட ஒரு மாச சம்பளத்துல எனக்கு டிரீட் கொடுக்குறேன்னு சொல்லிருக்க. பேச்சு மாற கூடாது. ஜீவாவத்தான் செலக்ட் பண்றோம். நீ எனக்கு டிரீட் கொடுக்குற. என் செல்ல வித்யா கேட்டு நான் செய்யாம இருப்பேனா" என்று அவள் காலை வாரிவிட வித்யா வாய் பிளந்து நின்றால்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro