7

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"ஹாலி ஏஞ்சல்ஸ்" பாடசாலையில் ஆண் மாணவர்களை விட பெண் மாணவிகளே அதிகம் கற்றனர். ஆரம்பத்தில் அது பெண்கள் பாடசாலையாக மற்றுமே இருந்தது. சமீபத்திலேயே அது இரு பாலார் கற்கும் பாடசாலை ஆனது. அதனாலேயே அங்கு ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியைகளின் எண்ணிக்கை அதிகம்.

ஜீவாவுக்கு இந்த சூழ்நிலை மிகவும் புதியது. ஆசிரியர் பணி என்பது அவ்வளவு இலகுவானது கிடையாது. பயிற்சிகள் பல பெற்றால்தான் சரியாக அந்த வேலையை செய்ய முடியும். ஜீவா தனது கல்லூரி படிப்பை முடித்தபின் சில நாட்கள் ஆசிரியர் பயிற்சி வகுப்புக்களுக்கு சென்றிருந்தான். அதுமட்டுமில்லாமல் அவனுக்கு பிடித்த விளையாட்டையே சொல்லிக்கொடுக்கும் வேலை என்பதால் ஜீவா மிகவும் சந்தோசமாக இருந்தான்.

ஜீவா பாடசாலைக்கு வந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. வீட்டிலிருந்து தினமும் ஆனந்தி கால் செய்து அவனுடன் பேசுவாள். ஆனந்து பேசும் போது சங்கவி அவளிடம் போனை பிடுங்கி, சண்டை போட்டு பேசுவாள். 'நான் உனக்கு தங்கை இல்லையா' என கோபமாக கேட்பாள். இது எல்லாம் ஜீவாவுக்கு புதிதாக இருந்தது. ஆனால் மிகவும் பிடித்திருந்தது. இவ்வளவு நாட்களும் தான் இந்த அருமையான உறவை இழந்துவிட்டோமோ என்று எண்ணினான். ஜீவா தன் சகோதரிகளிடம் வித்யா மற்றும் சாரதா பற்று கூறியிருந்தான். ஆனந்தி பெரிதாக எதுவும் கூறாவிட்டாலும் சங்கவி அவனை கலாய்த்துவிடுவாள்.

தன் தங்கைகளின் எண்ணம் அவன் மனதில் ஓடிய அதே நேரம் அவனின் போன் சினுங்கியது. அவனுக்கு மிகவும் பிடித்த டைட்டானிக் பாடலையே அவன் ரிங்க்டோனாக வைத்திருந்தான். " ஹலோ அண்ணா எப்படியிருக்கீங்க" என்று கேட்க அது ஆனந்தி அல்ல சங்கவி என்று புரிந்தது.

" நல்லா இருக்கேன் சங்கவி"

" ஏண்ணா எப்ப பார்த்தாலும் என் பேர சொல்லியே கூப்பிடுற. ஒரு செல்லம், புஜ்ஜி, அம்முக்குட்டி, கண்ணம்மா இப்படி ஏதாச்சும் சொல்லி கூப்பிடலாம்ல" என்று கூற மறுமுனையில் அவன் மெளனம் காத்தான்.

"சரி சரி, உடனே சைலன்சர மாட்டிக்காத. ஆமா உன் ஆளு எப்படியிருக்கா" என்று கேட்க ஜீவா குழம்பி போனான். சங்கவி யாரை தன் ஆள் என்று கூறுகின்றால் என்று புரியவில்லை.

" புரியல்ல, யாரு என் ஆளு"

" ஓஹ் PT சாருக்கு புரியயா? அதுதான் அந்த வித்யா டீச்சர். அவங்க உன்மேல கோபமா இருக்காங்கன்னு ரொம்ப கவலைப்பட்டியே. சரி உங்க ஸ்கூல்ல மொத்தம் எத்தனை டீச்சர்ஸ் இருக்காங்க"

" முப்பத்தி ஐந்து பேர் இருக்காங்க. ஆமா எதுக்கு இப்போ இந்த டீட்டைல் எல்லாம் கேட்குற"

" நான் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. அதுல ரொம்ப அழகானவங்க யாரு?"  என்று கேட்க சங்கவி இன்றைக்கு ஏன் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்கின்றால் என்று புரியாமல் தவித்தான். ஆனால் அவளின் அந்த கேள்விக்கு அவன் யோசித்துக்கொண்டிருந்த தருணம் அவன் கண்களில் ஒரு அழகியின் பிம்பம் விழுந்தது.

அரக்கு நிற சேலைக்கு வெந்தேய நிறத்தில் ப்ளவுஸ் அணிந்து, தனது சிறிய கூந்தலை இன்று கொண்டை இடாமல் காற்றில் அலைபாய விட்ட வண்ணம் அவனை நோக்கி ஒரு தேவதை நந்தவனத்தேர் போல அசைந்து வந்தது.அந்த தேவதையை ஆவென்று வாய் பிளந்து ஜீவா பார்த்துக்கொண்டிருக்க போனில் சங்கவி கத்திக்கொண்டிருந்தால்.

" அண்ணா, அண்ணண்ணா, நொண்ணா லைன்ல இருக்கியா" என்று கேட்க சுய நினைவுக்கு வந்தவன் தன்னையும் அறியாமல் "சாரதா" என்றான். உடனே சங்கவி " ஓஹ் அவங்கதான் ரொம்ப அழகா" என்று கேட்க தான் என்ன காரியம் செய்துவிட்டோம் என்று கவலைப்பட்டவன் " சங்கவி நான் அப்புறமா கூப்பிடுறேன்.கொஞ்சம் வேலை இருக்கு" காலை கட் செய்தான்.

இன்று வரை அவன் எந்த பெண்ணையும் இப்படி அதிசயித்து பார்க்கவில்லை. ஆனால் சங்கவியுன் பேச்சு அவன் மனதை ஏதோ செய்தது. பொதுவாக காலேஜ், ஸ்கூலில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் காதல் பிறக்க முதல் காரணம் கூட இருப்பவர்களின் கிண்டல் பேச்சுக்கள்தான். சக மாணவனுடன் அல்லது மாணவியுடன் இன்னொருத்தரை இணைத்து கிண்டல் செய்யும் போது காதல் தானாக பூக்க ஆரம்பித்துவிடும். சும்மாவா சொன்னார்கள், ஒரு பொய்யை ஆயிரம் தடவை கூறினால் உண்மையாகிவிடும் என்று.

" என்ன ஜீவா சார், ரொம்ப யோசனையா இருக்கீங்க போல. எந்த கோட்டைய பிடிக்க போறீங்க?" என்று சாரதா கேட்க அவன் சுய நினைவுக்கு வந்தான். " அப்படிலாம் ஏதுமில்ல டீச்சர். வீட்டுல இருந்து கூப்பிட்டு இருந்தாங்க. அதான் பேசிக்கிட்டு இருந்தேன்" என்றான்.

" ஓஹ் சரி. வீட்ல எத்தனை பேரு சார் நீங்க"

" நான் இரண்டு தங்கச்சி, சித்தி, அப்பா" என்று கூற சாரதா " அப்போ அம்மா?" என்றவள் தான் கேட்ட கேள்வியில் இருந்த முட்டாள்தனத்தை புரிந்து கொண்டு உடனே, " சாரி சார். தப்பா கேட்டதற்கு" என்றால்.

"இதுல என்ன டீச்சர் இருக்கு. என் தங்கச்சி பிறந்ததும் அம்மா இறந்துட்டாங்க. சித்திக்கு ஒரு பொண்ணு இருக்கா" என்றான்.

" மிஸ், இந்த ஸ்கூல்ல ஆல்ரெடி ஒரு கோச் இருக்குறதா சொன்னாங்க. அப்புறம் எதுக்கு இன்னுமொரு PT மாஸ்டர்"

" ஓஹ் அதை கேட்குறீங்களா. அந்த கோச் கிக்பாக்சிங்க் மட்டும்தான் சொல்லிக்கொடுப்பாரு. ஏன்னா எங்க ஸ்கூல்ல ரெண்டு கிக்பாக்சிங்க் சாம்பியன்ஸ் இருக்காங்க. அதுல ஒருத்தி ப்ரைவேட்டா கோச் வெச்சு இருக்கா. மத்தவளுக்கு ஸ்கூலாலேயே அப்பாய்ண்ட் பண்ணியிருக்கோம். ஆனா ரொம்ப நாளா PT மாஸ்டர் இடம் காலியா இருந்தது. உங்க குவாலிபிகேசன்ல ஸ்போர்ட்ஸ் சர்டிபிகேட் ஜாஸ்த்தியா இருந்திச்சா, அதான் உடனே அப்பாய்ண்ட் பண்ணிட்டோம். இனிமே தேவைப்பட்டா அந்த கோச் இருப்பாரு. இல்ல உங்களாலேயே அந்த ரெண்டு பேரையும் மேய்க்க முடியும்னா அவர அனுப்பிடலாம். எதுக்கு தேவையில்லாத செலவு. ஆல்ரெடி மெனேஜ்மண்ட் எப்படி செலவை குறைக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க" என்று கூறினால்.

" இரண்டு பேரும் பொண்ணுங்களா?" என்று ஜீவா கேட்டான். " ஆமா சார் ரெண்டுமே பொண்ணுங்கதான். ஒருத்தி ஜனனி, இன்னொருத்தி சனா. சனா வீட்டாளுங்க ரொம்ப வசதியானவங்க. அவளுக்கு ப்ரைவேட் கோச் இருக்கு. இந்த ஜனனிதான் அவ அம்மாகிட்ட சண்டை போட்டு ஸ்கூல் மூலமா கோச் ஏற்பாடு செஞ்சிகிட்டா. ரொம்வ வாலுத்தனம் பிடிச்சவ. எதுக்கும் அவ கிட்ட கொஞ்சம் கவனமாவே இருங்க" என்று புன்னகைத்து சென்றால். சாரதா கூறியதில் இருந்து சனா மற்றும் ஜனனியை கான வேண்டும் என்ற ஆவல் அவன் மனதில் உதயமாகியது.

——————————————————————————-

" என்னங்க சொல்ரீங்க. சரி விடுங்க பார்த்துக்கலாம். கொஞ்ச நாள் தானே.அது வரைக்கும் என் சம்பளம் வரும். நம்மகிட்டயும் கொஞ்ச சேவிங்க்ஸ் இருக்கு. அதுக்கிடையில எப்படியும் உங்களுக்கு வேலை கிடைச்சிடும்" என்று வித்யா தன் கணவனிடம் கூறிக்கொண்டிந்தால். வித்யாவின் கணவன் ரவீந்தர் செலவைக் குறைக்கின்றோம் என்ற பெயரில் தன் தொழிலை இழந்துவிட்டிருந்தான். ரவீந்தர் ஒரு ஐடி கம்பனியில் கடந்த சில ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகின்றார். தான் வேலை இழந்ததை தன் மனைவி எப்படி புரிந்து கொள்வால் என யோசித்த வண்ணம் வீடு வந்தருக்கு வித்யாவின் வார்த்தைகள் இனிப்பாக இருந்தது.

கணவனுக்கு ஒரு கஷ்டம் வரும் போது மனைவி கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகள் அவன் கஷ்டத்தை காற்றில் அடிபட்டு செல்லும் சருகைப்போல ஆகிவிடும். ரவீந்தருக்கு இப்போது அதுவே நடந்தது. தன் மனைவியை இறுக்க அணைத்தவன் " ஐ லவ் யூ சோ மச் டீ பொண்டாட்டி. உன்ன மாதிரி ஒரு பொண்டாட்டி எல்லோருக்கும் கிடைச்சா ஆம்பளைங்க எல்லாம் நிம்மதியா சந்தோசமா வாழுவாங்க" என்று கூற அவனை பார்த்து குறும்பாக புன்னகைத்தவள், ஹலோ மிஸ்டர், என்ன மாதிரி இந்த உலகத்துல நான் மட்டும்தான் இருக்கேன். சோ நீங்க ரொம்ப லக்கி. அந்த ஒரே ஒரு பீசும் உங்களுக்கு கிடைச்சதுக்கு" என்று கூறி கண்ணடித்தவளை அவள் கணவன் இறுக்கி அணைத்தான். அந்த இரவு நேர குளிருக்கு அந்த அணைப்பு இதமாக இருந்தது. ஆனால் நிஜத்தில் அவள் உடல் குளிரில் நடுங்க சட்டென்று முழிப்பு வந்தது அவளுக்கு. அவள் படுக்கையில் அவள் மட்டுமே இருந்தால். பக்கத்து இடம் காலியாக இருந்தது. அதில் தன் கணவனும் இல்லை. தான் காதலித்தவனும் இல்லை. எல்லாம் கனவாக இருந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro