யாதிரா - 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வீட்டின் இருள் கண்களைத் தாண்டி என் மனதில் ஊடுருவியது. பல நாள் எதிர்பார்பை வளர்த்து பின் ஏமாந்து நொந்து வாழ்க்கையின் விளிம்பில் நிற்கிறேன். எல்லோரும் அறிவுரைத்தது போல் கடினமாக உழைத்தேன், எல்லோரிடமும் சிரித்து பேசினேன், என் உடலின் குறைப்பாட்டைத் தாண்டி எவராவது எனக்கு வாய்ப்பு அளிக்கமாட்டாரா என ஏங்கினேன். எல்லாம் கைக்கூடாத நிலையில் இம்முடிவுக்கு வருவதைப் பற்றி எவருக்கும் குறை சொல்ல அருகதி இல்லை. தவறான முடிவு என்று வஞ்சிப்பவர்கள் இம்முடிவை எடுக்கும் முன் எனக்கு உதவி இருக்கவேண்டும். சக மனிதனுக்கு இரக்கம் காட்டும் குறைந்தபட்ச மரியாதை மட்டுமே நான் எதிர்பார்த்தேன்.

"அன்னைக்கு நான் கேட்டப்போவே சரின்னு சொல்லியிருக்கனும்.இப்போ உயிருக்கு பயந்து கெஞ்சுரியா?" ஏப்ரனில்(apron) இருந்த கத்தியை வருண் எடுத்து கடத்தியவனின் நாக்கின் அருகே கொண்டு செல்ல

கட்!

"அடுத்து வாயுல ரத்தம் வர்ர மேக் அப் போடுங்க. சீக்கிரம்!" இயக்குனர் மிரட்டினார். 

ஹிந்தியிலும் தமிழிலும் எடுக்கப்படும் கிரைம் படத்தில் வருண் நடித்துக்கொண்டிருந்தான். கண் தெரியாத ஒருவன் செய்யும் கொலைப் பற்றிய படம். இந்த மோனோலாக்(monologue) வருண் எழுதி இயக்குனரிடம் சேர்க்குமாறு கேட்டிருந்தான். சமுதாயத்தால் கைவிடப்பட்டவனின் ஆதங்கத்தை அவனால் உணர முடிந்தது, அதைப் படத்தில் காட்டுவது முக்கியம் எனவும் தோன்றியது. மோனோலாக்(monologue) முடிந்ததும் இயக்குனர் பாராட்டினார். பல நாள் காத்திருந்த ஸ்கிரிப்ட் படமாக்கப்பட,  முன் இருந்த நிச்சயமற்ற நிலையிலிருந்து நிலையான வெற்றிக்கு மாறப் போகிறோமென நம்பிக்கை பிறந்தது வருணுக்கு. இப்பொழுது யாதிராவுக்கு போன் செய்வதில்லை வருண். எமர்ஜென்சி சர்ஜரியில் இருக்கிறாள் என பதில் வந்தால் முன்பு காத்திருந்து அடிப்பான் ஆனால் இப்பொழுது போனை வைத்துவிட்டு அடுத்த வேலையைக் கவனித்தான். அவள் சொன்னது உண்மைதான், குணமாகிய பின் டாக்டரை எதற்கு பார்க்க வேண்டும்? இருப்பினும் இதயத்தின் ஓரத்தில் "எப்படி இருக்கீங்க" எனும் கேள்வி ஒலித்தது. "நல்லா இருக்கேன் டாக்டர் யாதிரா," மனதுக்குள்ளேயே பதில் சொன்னான் வருண்.

படப்பிடிப்பு முடிந்து ஹிந்தியிலும் தமிழிலும் ஒரே நாளில் வெளியிடப்படும் அந்த நல்ல நாள் வந்தது. தன் ரசிகர் மன்றம் மும்பையில் இருந்தாலும் தமிழ்நாட்டில் தமிழில் வரும் படத்தை முதலில் காண துடித்தான் வருண்.

ஆல்-வெல் மருத்துவமனையில் யாதிராவை சந்தித்து கிட்ட தட்ட ஒரு வருடத்தை தொடவிருந்தது. இதுவரை யாதிரா தன் பர்ஸனல் நம்பரை கொடுக்காததால் மீண்டும் மருத்துவமனைக்கு போன் செய்து யாதிராவை அழைக்க விரும்பினான். யாதிராவுடனும் அம்மாவுடனும் தன் தமிழ் படத்தைப் பார்க்க ஆவலாய் இருந்தான் வருண்.

"டாக்டர் யாதிரா லீவ்ல இருக்காங்க சார்."

"நாளைக்கு திரும்ப ஹாஸ்பிடல் வரும்போது நான் போன் பண்ணேன்னு சொல்லுங்க."

"சார், அவங்க மூனு மாசம் லீவ் எடுத்துருக்காங்க."

வருணுக்கு தூக்குவாரிப்போட்டது. வீட்டை சுற்றி வரும் குட்டி நாய் போல் மருத்துவமனையையே சுற்றிவருபவள் யாதிரா. மூனு மாத லீவ் விசித்திரம் தான்.

"ஏன் மூனு மாசம் போயிருக்காங்கன்னு தெரியுமா?"

"இல்ல சார்,தெரியாது."

"அவங்க நம்பர் எதாவது இருக்கா?"

"இல்ல சார், அதுலாம் கொடுக்க கூடாது."

நர்ஸ் போனை வைத்தாள். அடுத்த வாரத்துக்கு சென்னைக்கு புக் செய்திருந்த ப்ளைட்டில்(flight) இன்றே சென்னை போக வேண்டுமென தோன்றியது. யாதிரா இவனிடம் எதுவும் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டாள். ஆனால் அம்மாவின் நியாபகம் வர தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு இவ்வொருவாரத்தில் மும்பையிலிருந்து என்ன செய்ய முடியுமோ அதை செய்தான். நண்பர்களுக்கு போன் செய்து மருத்துவமனையின் அருகே ஓடும் கால்-டாக்ஸி, ஆட்டோக்களை விசாரிக்க வைத்தான். ஒரு ஆட்டோக்காரர் யாதிராவின் வீட்டைக் காட்டினார். அவளைப் பற்றி எந்த தகவலும் தெரியாமல் இருப்பது அவனின் பீதியை மேலும் அதிகரித்தது.

அம்மாவுடன் சென்னையில் இறங்கியதும் ஹோட்டலில் அம்மாவையும் உதவிக்கு ஆளையும் வைத்துவிட்டு யாதிராவின் வீட்டுக்கு விரைந்தான் வருண். "ஏன் இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாய்" என பூட்டிய வீடு அவனைக் கண்டு சிரித்து. இவ்வீட்டை விட்டால் அவனுக்கு யாதிராவைப் பற்றி எதுவும் தெரியாது என்பதால் அவ்வீட்டையே வெறித்து பார்த்தான்.

"தம்பி, யார் நீங்க? ஏன் வாசுதேவன் வீட்டு முன்னாடி இவ்ளோ நேரமா நிக்குறீங்க?" என அதட்டிய காலனி செக்யூரட்டி வருணை அடையாளம் கண்டுக்கொண்டு அதிர்ச்சியானான். ஊர் முழுக்க இவனின் புது பட போஸ்டர் ஒட்டியிருந்தது.

"டாக்டர் யாதிரா எங்கே? அவங்க குடும்பம் எங்க?"

"அதுலாம் தெரியாதுங்க சார். ஆனா ஒரு மாசத்துக்கு முன்னாடி டூர் போறோம்னு சொன்னாங்க."

"அவங்க நம்பர் இருக்கா?"

"மிஸ்டர் வாசுதேவனோட நம்பர் இருக்கு. வேணுமா சார்?"

நம்பரை வாங்கிக்கொண்ட வருண் உடனடியாக அவரைத் தொடர்புக் கொண்டான்.

"ஹலோ, மிஸ்டர் வாசுதேவன்?"

"யெஸ்."

"டாக்டர் யாதிராவோட அப்பா?" இப்பொழுது மறுமுனை அவனின் நோக்கத்துக்காக அமைதிக் காத்தது.

"சார், நான் வருண். டாக்டர் யாதிராவோட பேஷண்ட். அவங்கள பார்க்கனும்."

"இல்ல பா. அவங்களுக்கு யாரையும் பார்க்க விருப்பம் இல்ல."

"சார், எனக்கு தெரியும் நீங்க அவங்க கூட தான் இருக்கீங்க நு. நான் அவங்க கிட்ட பேசனும்."

"ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாதீங்க."

"சார்! போனை ஸ்பீக்கர்ல போடுங்க. அவங்க பேசாட்டியும் நான் பேசுறத அவங்க கேட்கனும். டாக்டர் யாதிரா! கேட்குதா?" மறுமுனை பதில் சொல்லவில்லை.

"ஓகே பைன்(fine). பேசாத. நான் பேசுறேன். என்னோட முதல் தமிழ் படம் வெளிவருது. அத உன் கூடயும் அம்மா கூடயும் நாளைக்கு first day first show பார்க்கனும்னு ஆசையா தமிழ்நாடு வந்துருக்கேன். என் உயிரை இரண்டு தடவை காப்பாத்தி இருக்க. ஹாஸ்பிட்டலயும் மும்பைலயும். நீ இல்லாம என்னால இந்த வெற்றிய கொண்டாட முடியாது. நான் உன்ன பார்க்கனும். ஹலோ? ஹலோ?" லைன் கட் ஆகவில்லை ஆனால் யாரும் பேசவும் இல்லை.

சில நொடிகள் கழித்து, "தம்பி, நாளைக்கு அம்மாவோட ஷோ பாருங்க."

"இல்ல, நான் டாக்டர் யாதிரா கிட்ட பேசனும்."

"தம்பி, ரெண்டு நாள் கழிச்சு அட்ரஸ் அனுப்புறேன். வந்து பாருங்க." வாசுதேவன் போனை கட் செய்தார்.

யாதிரா, என்ன ஆச்சு உனக்கு? இத்தனை நாள் தொலைப்பேசியில் என் உயிரை கெட்டியாய் பிடித்தவள் இப்பொழுது போன் பேச மறுக்கிறாள்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro