7

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வனஜா வனஜா எந்தன் வனஜா
உன்னை காணாமல் தானே
நான் ஆனேன் கஜகஜா

புரியல ல.
நா சொன்ன மத்த விஷயம் மட்டும் உங்களுக்கு புரிஞ்சுட்டா என்ன?

இல்ல இல்ல
அப்புறம் என்ன கொஷ்டினு ஹா

வனஜாவின் வருகைக்கான காரணம்:

அம்மா கஷ்டபடுறா
அதனால சீக்கிரம் எனக்கு கல்யாணம் பண்ணணுமாம்.

அட்ரா சக்க
ஒருத்தன் என்னடா னா ஸ்டெத் குடுத்துட்டு போறான்.

பின்குறிப்பு: ரவுடியாவும் இருக்கலாம்.

இவ என்னடா னா கல்யாணத்துக்கு ப்ரோபசல் தூக்கிட்டு வரா.

பாய்ப்ரெண்டு வேணும் தேடுனப்ப இவங்கெல்லாம் எங்க போனாங்க.

ஒருவேள நம்ம கேர்ள்ப்ரெண்ட் மெட்டீரியல் இல்லியோ.

இருக்கும்.

இதுக்கு என் தாய்க்குலத்தோட பதில் என்ன தெரியுமா?

யோசிக்கலாம்.

கைல கேஷ் கம்மியா இருக்கு.

இப்ப போய் கல்யாண செலவு அவ படிப்பு வேற இருக்குல்ல.

ஹப்பா (!)

தாயே தாய்க்குலமே
என்ன பெத்தத தவிர்த்து நீ பண்ண நல்ல காரியம் இது தான்.

என் போன் ல இருந்து பீப் சத்தம் வந்துச்சா நா இருந்த குஷி மூடுக்கு குதிச்சு குதிச்சு போனேனா

போய் பாத்தா மெஸேஜ்.

வேற யாரு
நம்ம ஒட்டடை தான்.

இப்பதான் நியாபகம் வருது
இவன் அன்னிக்கு என் போன்ல தான் விளையாடிட்டு இருந்தான்.
அப்ப இவன் தான் என் நம்பர அவனுக்கு அந்த வளந்து கெட்ட மாடுக்கு கொடுத்துருப்பான்.

எடுபட்ட பய
பச்ச் புள்ள மாதிரி இருந்துட்டு என்ன வேல லாம் பாத்துருக்கான்.

கொலைகாரன் கூட்டணி ல இருக்கவன் வேற எப்படி இருப்பான்.

அதுவும் கரெக்ட் தான்.

இப்ப இவனுக்கு என்ன வேணுமாம்.

"யக்கா சீக்கிரம் வா . உன் தெரு முனைல இருக்கேன்."

அட எரும மாட்டு மாடே
இங்கன எதுக்கு வந்து நிக்கான்.

அய்யோ ஏதும் அடி பட்டுருக்குமோ
இப்ப என்ன பண்றது
இவன் சொன்னான்னு அங்க போய் வேற ஏதும் பிரச்சினை ஆயிட்டா.

தாய்க்குலம் வேற கிட்சன் ல கெல்ப்க்கு வா னு கூவிட்டு இருக்கு.

ஆல் ப்ராப்ளம்ஸ் ஒன் டே.

டார்சான்ட கேட்போமா.

அவன் மட்டும் காந்திக்கு அடுத்த பொறப்பா
ஏன்டி விவரம் இல்லாதவ மாதிரி பேசிக்கிட்டு கிடக்க.

ஆனா...

"நேத்ரு, இன்னும் அங்க என்ன பண்ற.எப்பபாரு அந்த போனு தானா. நாங்கலெல்லாம் உனக்கு மனுஷங்களா தெரியலயா. அக்கா வந்துருக்கா அவகிட்ட பேசுவோம்னு கொஞ்சமாச்சும் நினைப்பு இருக்கா.எனக்கு அப்புறம் உன்ன அவளும் அவள நீயும் தான பாத்துக்கணும்."

இப்படியாக ஒரு அர்ச்சனை தொடங்கியது.

வந்ததுக்கு நல்லா வத்தி வைச்சுட்டடி வனஜா

வந்த உடனே அட்டெண்டன்ஸ் போட்டவள அடிச்சு அனுப்பிட்டு இப்ப என்ன டயலாக்கு.

எல்லாம் கடுப்பு அம்மா இவ சொன்னதுக்கு ஒத்துக்கலல அதுக்கு.

இவளுக்கு இந்த பொழப்பு எதுக்கு ?

அம்மா சொன்னத ஒட்டு கேட்ட நா எங்க
அம்மா ஒத்துகலனு போட்டு குடுத்த நீ எங்க

இனியும் இங்க நின்னு வருத்தா வேகாதுனு
கீழ போயிட்டேன்.

அங்க போனா அணைக்கால் கடைக்கு போயிட்டு வா னு அனுப்பிட்டாங்க.

அணைக்கால் கடை எங்க தெரு முக்குல இருக்கு.

தெரு முக்குல வில்லங்கமும் இருக்கு.
அவ்வ்வ்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro