என் உயிரினில் நீ.......-By Ashikmo

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


சரி கதை தலைப்பு நல்லா இருக்கேன்னு அப்படியே கதைய ஓபன் பண்ணா.....
குண்டுப்பெண் ப்ரியா, கைம் ஆண் (அதாங்க மனைவியை இழந்த பெண்ணுக்கு கைம்பெண்னு சொலவாங்க அதுக்கு எதிர்ப்பதம்) அர்விந்த்.
சரி கதை ஏதோ நல்லா போகும்னு போய் படிச்சா.......நல்லாத்தான் போச்சி எதுவரைக்கும் தெரியுமா...அவங்க டெல்லி போகும் வரைக்கும்.அதுக்கு அப்புறம் நல்லா போயிகிட்டு இருந்த கதையில விக்ரமனோட ஒரு நாலு படத்துல இருந்து இரண்டு இரண்டு சீனா சுட்டு ஒரு கதைய எழுதிருக்குறாப்ல.அதுல ஹைலைட் என்னன்னா ....என்டிங்க்...முடியல...

ஒருத்தன் ஹீரோயின குண்டுன்னு சொன்னதும் அவங்க உடனே ஜிம் போவாங்கலாம் , அப்படியே மெலிஞ்சி ஒல்லி ஆகிடுவாங்கலாம்.இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.அதுலயும் வில்லன்னு ஒருத்தன்.அவன போல ஒரு காமடி பீசு வேற யாருமே இல்லை.குண்டு ஹீரோயின் மிரட்டுவாலாம் அவரும் பயந்துட்டு உடனே அம்மா அப்பாவ கூட்டிட்டு போயிடுவாறாம்,அதுவும் கல்யாண அன்னைக்கு.சரி அவந்தான் போயிட்டான் கல்யாண்மாச்சும் நின்னு போகும்னு பார்த்தா.....
உடனே நம்ம டம்மி ஹீரோ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்குவாறாம்.சரி கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹீரோயின் கூட சேர்ந்து வாழ போறாருன்னு பார்த்தா ,அது நம்ம டம்மி ஹீரோவையும் அவரு முன்னால் மனைவியையும் தப்பா பேசினதுக்கு பழிவாங்கத்தான் இந்த கல்யாணம்னு ஒரு டயலாக் வேற.ஆமா நான் தெரியாமத்தான் கேட்குறேன், அந்த ப்ரியா பொண்ணுக்கு எப்டிப்பா தெரியும் நீங்க ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸாத்தான் இருந்தீங்க,அதுவும் அந்த குழந்தைக்கு அப்பா நீ இல்லைன்னு, நீயாச்சும் சொல்லிருக்கலாமே....
அப்புறம் இன்னொரு கேரக்டர் வரும் சங்கீதான்னு...ஹ்ம்ம் அது கொஞ்சம் பரவாயில்லைன்னுதான் சொல்லனும்.இதுங்கல போல லூசு மாதிரி நடந்துக்காம கொஞ்சம் நம்புற மாதிரி இருந்திச்சி.

இன்னொரு கேரக்டர் ரேனு....யப்பா காதுல பூ சுத்தி கேள்விப்பட்டிருக்கேன்.ஆனா காதுல மாலை போட்டது இந்த கேரக்டர்தான்.அவங்க ஆபீஸ் முதலாளிய விட இவங்க பணக்காரங்களாம்,ஆனா அவ அதெல்லாம் காட்டிக்காம ரிசப்சனிஸ்ட்டா வேலை செய்வாலாம்.இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.சரி இத கூட மன்னிச்சிடலாம் இவளுக்கு ஜோடியா ஒருத்தன் வருவான்..வழமையான கதைகள்ள வரும் உடல் அமைப்போட.பேசாம அவன இந்த ஸ்டோரிக்கு ஹீரோவா போட்டிருக்கலாம்.
அதுல எட்டு வருசம் கழிச்சி அந்த தீபக் வருவான் பாரு, கூட நாலும் பசங்களோட. எங்க போய் முட்டிக்கிறதுன்னே தெரியல. ஆனா ஒரு விசயம் இந்த ஸ்டோரியும் வாட்பெட்ல ரேங்க் 1 ஆஹ் வந்திருக்கு.அதுதான் எப்படின்னு தெரியல.

இதெல்லாம் விட்றலாம், கடைசில ஷாருக்கானோட "கல் ஹோ நாஹோ" ல இருந்து அப்படியே என்டிங்க சுட்டு ரைட்டர்ஜி ஸ்டோரிய கம்ப்ளீட் பண்ணிட்டாரு.என்ன அதுல ப்ரீத்தி சிந்தா அவலோட பொண்ணுகிட்ட அவ ஸ்டோரி சொல்லுவா,இங்க குண்டு (சாரி இப்போ மெலிஞ்சிட்டாங்க) ப்ரியா அவலோட பேத்திகிட்ட கதை சொல்ரா.ஆனா ப்ரியா மாதிரி பொண்டாட்டி எல்லாம் கதைல மட்டும்தான் வரும் போல.தியாகச்செம்மல். பேசாம அவளுக்கு ஒரு சிலை வெச்சிடலாம்.

(ஹாய் ப்ரெண்ட்ஸ் அவசரமா இந்த ரோஸ்ட் டைப் பண்ணேன்.இதுக்கு எப்படியான பிண்ணூட்டங்கள் வருகின்றது என்பதை வைத்து மற்ற ரோஸ்ட்கள் வரும்.புதுசா ஒரு ரைட்டர் தானா வந்து அவங்க ஸ்டோரிஸ ரோஸ்ட் பண்ண சொல்லிருக்காங்க.எதையும் தாங்கும் இதயம் போல அவங்களுக்கு.)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro