🌚5🌚

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

இதமான காலைப் பொழுதின் பெங்களூர் நகர சாலையில் அந்த கருநீலநிறக் கார் சென்றுகொண்டிருந்தது.

சென்றுகொண்டிருந்தது என்பதை விட பறந்துகொண்டிருந்தது என்று கூறுவதே பொருத்தமானதாகும். அந்தளவு வேகத்தில் இருந்தது அந்தக் கார்.

அவ்வாறு பறந்து வந்த கார் குறிப்பிட்ட அந்த பெரிய வீட்டின் கம்பவுண்ட்டுக்குள் நுழையவும் அந்த வீட்டில் இருந்த ஒரு அறையின் பெல்கனியில் நின்றிருந்தவாறு இயற்கையின் அழகை இரசித்தவாறும் அதோடு இந்த கார் கண்ணில் படுகிறதா என்று மெயின் கேட்டின் மேல் நொடிக்கு ஒருமுறை பார்வையை செலுத்திக்கொண்டும் இருந்த அவள் அந்த காரைக் கண்டதும்

"அம்மா...! நவாண்ணா வந்துட்டான்"
என்று குஷியாக கூச்சலிட்டவாறே ஓடி கீழிறங்கவும் சரியாக இருந்தது.

இவள் இவ்வாறு சத்தம் போட்டபடி கீழ் இறங்கும் போது அதே மேல் மாடியில் இருந்த இன்னுமொரு அறையில் விடிந்தது கூட அறியாமல் கும்பகர்ணனாக இல்லை இல்லை, கும்பகர்ணனின் கொள்ளுப்பேத்தியாக தூங்கிக்கொண்டிருந்த இன்னுமொருவள் படக்கென எழுந்தமர்ந்து தான் கேட்டது உண்மைதானா என்று சில வினாடிகள் காதை கூர்மையாக்கி கீழே ஏதாவது அரவம் கேட்கிறதா என்பதை உன்னிப்பாக கவனித்தாள்.

தான் கேட்டது உண்மை தான் என்பதை நொடியில் அறிந்து கொண்டவள் கட்டிலில் இருந்து குதித்து இறங்கி பாய்ச்சலுடனே கீழே வந்து சேர்ந்தாள்.

அவளது கோலத்தைப் பார்த்து முதலாமவள் சிரிக்க அவர்கள் இருவரினதும் பாசத்துக்குரிய அம்மாவோ பார்வையாலே அவளை எறித்தார்.

அக்காவின் சிரிப்பைப் பார்த்து பதிலுக்கு அவளை முறைத்தவள் அம்மாவின் முறைப்புக்கு அசடுவழிந்து விட்டு அவரை அணைக்க கைகள் இரண்டையும் விரித்தபடி அவர்களிடம் செல்ல அவரோ அவளை தள்ளிவிட்டு அவள் அறியாவண்ணம் சிரித்தார்.

"அம்மாஆஆஆஆ"

"ஷ்ஷ்ஷ்ஷ்"
என்று வாயில் விரல் வைத்து அவளை மிரட்டியவர் அவளை இழுத்து நெற்றியில் முத்தம் இட்டார்.

"என் செல்ல அம்மா"
என்றவாறே அவளும் அம்மாவை பதிலுக்கு முத்தமிடச்செல்ல

"நவாண்ணா" என்ற மற்றவளின் குரலில் அவளது அம்மா அவளைப் பார்த்து சிரிக்க,

"இன்னேக்கி தப்பிச்சுட்டீங்க இல்ல. நாளைக்கு இருக்குமா... இருக்கு"
என்றவள் அம்மாவையும் இழுத்துக்கொண்டு வாசலை நோக்கி சென்றாள்.

அப்பொழுது தான் வந்திறங்கினான் அவன்.

அம்மாவின் நிறத்தில் அப்படியே அப்பாவின் சாயலில் பார்ப்போரை வசீகரிக்கும் மிடுக்குடனும் கூர்மையான பார்வையோடும் இருந்தவன் தன் மொத்த குடும்பமே தன்னை பார்த்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை கண்டு அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.

தன் இளைய தங்கையைப் பார்த்து சிரித்துக்கொண்டே வந்தவன்,
"இது என்னடா குட்டிமா குரங்குக்கு வால் தொங்குற மாதிரி தொங்கிட்டு இருக்கு"
என்ற படி அவளின் பின்னால் தூங்கிக்கொண்டிருந்த ஹேண்ட்ஸ் பிரீயை தூக்கி கையில் எடுத்தான்.

மற்ற இருவரும் இவளைப் பார்த்து சிரிக்க,

"இது எப்போ என் கூட வந்தது.
என் இமேஜையே டேமேஜ் பண்ணிட்டுது"
என்ற எண்னவோட்டத்தோடே அண்ணாவை பார்த்து இழித்து வைத்தாள் அந்த வீட்டின் கடைக்குட்டியான அனைவரினதும் செல்லத்துக்குரிய நிஷ்மிதா.

அதற்கிடையில் அம்மா-மகன் விசாரிப்பு முடித்திருக்க தன் இளைய தங்கையின் இரண்டு பக்க கன்னத்தையும் பிடித்து இழுத்து கிள்ளிவைத்து,
"இந்த இழிப்புக்கு மட்டும் ஒண்ணும் குறைச்சல் இல்ல. எப்ப தான் நீ திறந்த போற குட்டிமா"
என்றவன் அம்மா முன்னே செல்ல தன் இரண்டு தங்கைகளையும் இழுத்துக்கொண்டு மாறா கம்பீர நடையுடன் உள்ளே நுழைந்தான்.

அவ்வாறு நுழைந்த அவன் தான் "நவநீதன் ராகவ்".
என்.ஆர் க்ரூப் ஒப் கம்பெனியின் ஏகபோக உரிமையாளன்.

தனது இருபத்தேழுகளை பல வெற்றிகளுக்கு மத்தியில் கடந்து கொண்டிருக்கும் ஆறடி ஆணழகன்.

இவன் இருபத்தேழுகளைக் கடந்து கொண்டிருக்கிறான் என்றால் என். ஆர் குரூப் ஒப் கம்பனி தனது இருபத்தாறாவது வயதில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

நேத்ரதேவன் ராகவ் - நிகிழினி ராகவ் தம்பதியின் முதல் வாரிசு.

சிறுவயதில் இருந்தே எந்நேரமும் பெற்றோருடன் ஒட்டி உறவாடியே பழகியவன் ஆகையால் தந்தையின் வியாபார குணமும் தாயின் அன்பு செலுத்தும் குணமும் அவனோடு சேர்ந்தே வளர்ந்திருந்தது.

அவ்விரண்டு குணங்களும் தான் அவனை இந்தளவு உயரத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாகவும் அமைந்திருந்தது.

தன் கல்லூரி வாழ்வின் கடைசி வருடத்தில் இருந்த நவா சற்றுமே எதிர்பார்க்காத விதத்தில் தான் தன் தந்தையை இழந்தான்.

ட்ராபிஃக்கில் இருந்த வாகனத்தில் அவரது உயிர் எந்த குழப்பமும் இல்லாமல் அவரது உடம்பை விட்டும் பிரிந்து சென்றிருந்தது.

தொழிலதிபராக வலம்வந்து கொண்டு இருந்த தேவன், என். ஆர் க்ரூப் ஒப் கம்பனியை ஆரம்பித்து இருபத்தியொரு வருடங்கள் சிறப்பான முகாமைத்துவத்துடன் வெற்றிகரமான முறையில் நடாத்திச் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

அவர் பிரிந்ததும் தான் இவர்கள் மத்தியில் பிரச்சினையே ஆரம்பித்தது. நேத்ர தேவனுக்கு இரண்டு தம்பிமார்கள். அவர்கள் இருவரும் தேவனின் இறப்புக்கு பின்னர் போலியான ஆவணங்களை தயாரித்து இவர்களது சொத்துக்கள் அனைத்தையும் தங்கள் பெயர்களில் மாற்றி அமைத்துக்கொண்டிருந்தனர்.

இந்த விபரம் தேவனின் இறப்பு நடந்து ஒரு கிழமையில் இந்த குடும்பத்திற்கு இடியாக வந்திறங்கியது.

நவா அப்படியே ஸ்தம்பித்து நின்றான். என்ன செய்வது? ஏது செய்வது? என்ற எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் அப்படியே ஸ்தம்பித்தான்.

அம்மா, இரண்டு தங்கைகள் தன் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பது அவனது மூளைக்கு உரைத்ததும் தான் அவன் விழித்தான்.

விழித்தவன் நவநீதன் ராகவ் ஆக இல்லாமல் நேத்ரதேவன் ராகவ் ஆக விழித்தான்.

கூடவே இருந்து குழிபறித்த சித்தப்பா இருவர் மீதும் கொலைவெறியே உருவானாலும் அதை ஒதுக்கித்தள்ளியவன் ஒரு இலட்சியத்தோடு தன் பயணத்தை தொடர்ந்தான்.

சொத்துக்கள் அனைத்தும் சித்தப்பாமார் தங்களுக்கு சார்பாக ஆவணங்களை தயாரித்து பறிமுதலாக்கியிருக்க இவனுக்கு மிச்சமாக இருந்தது என். ஆர் கம்பனியின் மீது மக்கள் வைத்திருந்த "நன்மதிப்பு" மட்டுமே ஆகும்.

வணிகத்தைப் பொறுத்த வரையில் நன்மதிப்பு கூட பெருஞ் சொத்தாகும். அந்த நன்மதிப்பை மாத்திரம் முதலாகக் கொண்டு தன் இலட்சிய வேட்கையை தொடர்ந்தவன் தான் தன் இலட்சியத்தை அடைந்தும் இன்னும் ஓயவில்லை.

இன்று பெரும் புகழுக்குரிய இளம் தொழிலதிபராக வலம்வந்து கொண்டிருக்கிறான். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் பல கிளைகளைக் கொண்ட மிகவும் பிரம்பாண்டமான கம்பனியாக இன்று என். ஆர் க்ரூப் ஒப் கம்பனி திகழ்கின்றது.

உணவைத் துறந்து, உறக்கத்தை துறந்து, நட்பை துறந்து குடும்பத்தை துறந்து இரவு பகல் பாராமல் உழைத்தான் நவா. அந்த உழைப்பின் பலனே இன்று விருட்சகமாய் வளர்ந்து, போட்டி நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நின்று இவனது நிறுவனத்தை அசைக்க முற்பட்டாலும் முடியவே முடியாது என்ற நிலையில் அசைக்கமுடியா அட்சரமாக முழு பலத்துடன் நிமிர்ந்து நிற்கின்றது.

நான்கு இதழ் கொண்ட பூவாக இன்று இவனது குடும்பம் எந்த குறையும் இல்லாமல் இருந்தாலும் தந்தையுடனே இருந்த நவாவுக்கு தந்தையின் இழப்பு அடிக்கடி ஞாபகத்தில் வந்து மனதைப் பிழியும் இருந்தாலும் எதையும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டான்.

தன் இரு தங்கைமாருக்கும் தந்தையாகவே இன்று மாறியிருப்பவன், தன் குடும்பத்தின் மீது அளவற்ற அன்பை பொதித்து வைத்திருக்கிறான். அம்மா உட்பட தங்கைமார் இருவரும் கூட அவ்வாறு தான். நவாவின் மீது அளப்பரிய பாசத்தை வைத்திருக்கின்றனர்.

நவநீதன் ராகவ், கோடீஸ்வரனாக இருந்தாலும் பெண்களை அதிகம் மதிப்பவன். கெட்ட பழக்கங்களுக்கும் இவனுக்கும் இடையிலான தூரம் வானத்துக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் எவ்வாறோ அவ்வாறு தான். அவன் சிறுவயதில் இருந்து வளர்க்கப்பட்ட விதமும் அவ்வாறே.

நிகிழினி ராகவ் இந்துமதத்தின் தீவிர நம்பிக்கையாளர். எனவே அவரின் வளர்ப்பு என்றும் தவறாது.

அனைத்து மதங்களும் நல்லவற்றை செய்யும் படியும் தீயவற்றை தவிர்க்கும் படியுமே போதிக்கின்றன. ஆனால் அந்த போதனைகளை நம்மில் எத்தனை பேர் பின்பற்றுகின்றனர் என்பதே இங்கு கேள்வியாகும்.

நவா இன்று இந்த காலை வேளையில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருப்பது   வியட்நாம் நாட்டிற்கான இரண்டு வார தனது வியாபார பயணத்தை நிறைவு செய்து கொண்டே ஆகும்.

நவா எங்கு இருந்தாலும், எந்த வேலைப்பழுவுக்கு மத்தியில்  இருந்தாலும் தினம் வீட்டிற்கு எடுக்கும் அழைப்பை என்றுமே தவறவிட மாட்டான். தன் அழைப்புக்காக வீட்டில் மூன்று ஜீவன்கள் தவம் கிடக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்தவன் அல்லவா அவன்.

அன்றைய பகல் கடந்து இரவும் வந்தது. இரண்டு வாரங்கள் கடந்து தன் அம்மாவின் சமையலை ரசித்தபடி மனநிறைவோடு குடும்பத்தினரோடு தன் இரவு உணவை முடித்துக்கொண்டவன்.
வழமை போல அம்மாவுடனும் தங்கைமாரோடும் சுவாரஷ்யமாக கதையளந்து கொண்டிருந்தான்.

வேலைக்கார அம்மா கொண்டு வந்து கொடுத்த பாலை டீப்பாயில் மேல் வைத்தவன்,
"அம்மா நான் மோர்னிங் சென்னை போறேன் நீங்களும் வாறீங்களா? அப்டியே பெரியம்மா வீட்டுக்கு போய் வரலாம்"
என்றவன் பதிலுக்காக தாயை பார்த்திருக்க,

"உனக்கு ஏதாவது வேலை இருக்கா கண்ணா?"

"இல்ல மா. நம்ம கம்பனி ப்ரான்ச் போர்ட் மீட்டிங் ஒன்னு அரேஞ் பண்ணிருக்கேன். அதுக்கு போகணும். பெரியம்மாவும் எப்போ பேசினாலும் ஒரே புகார். அதான் அங்கேயும் போய் வரலாம்னு. உங்களுக்கும் டிக்கட் அரேஞ் பண்ணிருக்கேன் மா."-நவா

மூத்தவள் இவர்களையே பார்த்தபடி அமர்ந்திருக்க இளையவளோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் அண்ணனின் போனில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

"ஓஓஹ். என்னடா திடீர்னு?"

"திடீர்னு இல்லமா. எவ்ளோ நாளுக்கு மொத பிளான் பண்ணிருந்தது தான். இந்த டுவர் பென்டிங்ல இருந்ததனால எரேஞ் பண்ணிக்க முடியல.
நீங்க வர்றீங்க தானே."

"ஓகே பா. போலாம்"

"இது அம்மா"
என்று அவரது கன்னம் கிள்ளியவன் "குட் நைட்" சொல்லியபடியே நிஷ்மிதாவின் கைகளில் இருந்த போனை பிடுங்கிக்கொண்டு மாடியேறினான்.

"நவாண்ணா"
மூத்தவளின் குரலைக் கேட்டவன்.

"சொல்லு சனா"
என்றவாறே திரும்பினான்.

"மில்க்"
என்று முறைப்பு பாதியும் சிரிப்பு பாதியுமாக பால் கிளாஸை நீட்டினாள் சனா.

"மறந்துட்டேன், தேங்க்ஸ் பேபி"
என்று கூறி அதனை வாங்கிக்கொண்டவன் தன்னறை நோக்கி நடையைக்கட்ட சின்னவளும் அவனுக்குப் பின்னாலே அவளது அறைக்கு சென்றாள்.

கீழே இருந்த இருவர் முகத்திலும் யோசனை படர்ந்திருந்தது.

சென்னையில் இருக்கும் கிளை இவர்களது தந்தையின் இறப்புக்குப்பின் சிறிது காலம் மோசடிக்கார சித்தப்பாக்களின் கைகளில் தான் இருந்தது.

நேத்ராதேவனின் பால்ய நண்பன் ஒருவர் தான் இவர்கள் சார்பாக நீதிமன்றில் அவரது வக்கீல் மூலம் வாதாடி சட்டரீதியாகவே அதனை இவர்கள் உடமையாக்கிக் கொடுத்தார். அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆவார். நவநீதன் ஆரம்பத்திலே இதற்கு வன்மையாக எதிர்ப்பு தான் தெரிவித்தான்.  ஆனால் அவரால் தான் தன் நண்பனின் உழைப்பு மோசடிக்காரர்களின் கைகளில் தவழ்வதைப் பார்க்க முடியவில்லை.

இந்த சிக்கல்களுக்கு மத்தியில் கிடைத்த இந்த கிளை நிறுவனத்தின் மீது நவா ஏனோ அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. இவனது கண்காணிப்பின் கீழ் தான் அனைத்து விடயங்களும் நடைபெறுவதாக இருந்தாலும் ஏனைய கிளை நிறுவனங்களில் போன்று இவனது நேரடி தலையீடு இந்த கிளை நிறுவனத்தில் இருப்பது இல்லை. இவனது தலையீடு மிகமிகக் குறைவு என்றே கூறலாம்.

அவனால் இந்த கிளையை முழுமையாக விட்டுவிடவும் முடியவில்லை. அதற்கு காரணம் நேத்ரதேவன் முதலாவது ஆரம்பித்த கிளை சென்னை கிளையாகும். ஐந்து மாடிகளை மட்டும் கொண்டு இருந்த இந்த கிளை நிறுவனத்தை பதினைந்து மாடிகளைக்கொண்ட நிறுவனமாக மாற்றி பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்து நடத்திக்கொண்டிருக்கின்றான்.

சென்னைக்கு இவன் செல்வதே அரிது என்றால். அதிலும் இந்த கிளைக்கு செல்வது மிகவும் அரிதாகும்.

அவனின் இந்த திடீர் விஜயத்திற்கு காரணம், மீண்டும் ஏதாவது சிக்கலாக இருக்குமோ என்றே அம்மாவினதும் மகளினதும் இப்போதைய யோசனைக்கு காரணமாகும்.

ஆனால் இவர்கள் நினைப்பது போல் இல்லாமல் அவன் ஒரு முக்கிய மீட்டிங்கிற்கே சென்னை கிளம்ப தயாராகி இருக்கிறான் என்பதே உண்மை ஆகும்.


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro