பகுதி 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஓர்நாள் உனை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை.... ஒ...
ஓர்நாள் உனை நானும் பார்த்தே விட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை....

"என்னடி இன்னைக்கு ரொம்ப சந்தோசமா சுத்துற....மூஞ்சில தௌசண்ட் வாட்ஸ் பல்பு வேற எரியுதே....என்ன சங்கதி???"என மேஹாவின் தாய் ஹேமா கேட்க....

அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொண்டவள்.....பின்னாடி டேபிளின் மீது வைத்துள்ள குலோப் ஜாமுனை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு
"உ.....ன்.......ம..ரு...ம...க..னை...
பா...ர்..த்...த....னா....அ...தா.....ன்"

"என்னடி பப பப னு ஒலருற...ஒழுங்கா சொல்லு"

"ஒழுங்கா சொன்னா தான் நீ தொரத்தி தொரத்தி அடிப்பியே"என மனதில் எண்ணியவள்.....

"அதுவந்து ஹேம்ஸ்....."குலோப் ஜாமுன் டப்பாவை கையில் எடுத்தவள் பின்னாடி நகர்ந்து கொண்டே"அது வந்து....அதுவந்து...அது வந்து"

"சொல்லுடி"ஹேமா கத்த....

அவளறையின் வாசல் வரை வந்தவள் இனி சேப் ஜோன் தான் என அறிந்த பின் மறுபடியும் குலோப் ஜாமுனை வாயில் போட்டுக் கொண்டு
"உன் மருமகனைப் பார்த்தேன் ஹேம்ஸ்"சிரித்துக் கொண்டே கதவை சாத்தி விட்டாள்...

"எருமை மாடே....என்னடி சொல்லுற...தலையில இப்படி குண்டு தூக்கி போடுறியே"அவர் கத்த....

கதவை திறந்து மெதுவாக எட்டிப் பார்த்தவள்....

"அய்யோ அம்மா....நான் அப்போவே சொன்னனே கேட்டியா...போன வாரம் செஞ்ச அல்வா...கல்லுக்கே டப் காம்படிசன் கொடுக்குது...நீ அத குழி தோண்டி புதைச்சுடுனு....பாரு என் பேச்ச கேட்காம அத உன் தலைல வேற போட்டுக்கிட்டியா???அச்சச்சோ...."அவள் இதழோரம் சிறு புன்னகையினூடே சொல்ல....

"அடிக் கழுதை..."அவளை அடிக்க ஹேமா முன்னாடி வர....

கதவை சாத்திக் கொண்டவள்....
"ஒன் வே தான் ஹேம்ஸ்...அதுவும் என் சைடு தான்...அங்கே எந்த ரெஸ்பான்ஸ் இல்லை.....டோன்ட் வொர்ரி....போ போய் இனி கொஞ்சோ குலாப் ஜாமுன் கொண்டு வா....."

"அடியேய் அதுலயே இருபது என்னமோ இருந்துச்சு டி..."

"அதுக்காக....அப்படியே வெச்சுட்டு இருப்பாங்களா??இருபது லாம் எனக்கு இரண்டு மாதிரி...போ போ...கொண்டு வா"மேஹா கூற

"திருந்தாத ஜென்மம்..."திட்டிக் கொண்டே அவரும் சென்றார் குலோப் ஜாமுனை எடுக்க....

ஹேமாவின் செல்லப் பிள்ளை....வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும் மகளின் மீது பாசம் அதிகம்....வரமாய் வரமிருந்து ஆறு வருட போராட்டத்திற்கு பின் கண்ணன்,ஹேமா தம்பதியினருக்கு காதல் பரிசாக பிறந்தவள்.......

அவள் விளையாடுகிறாள் என நினைத்துக் கொண்டு தான் அவர் அதை எளிதில் விட்டுவிட்டார்.....

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்தவள் கிட்சனிற்கு சென்று தன் அன்னையுடன் வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்....

"ஹேம்ஸ் நான் செய்யுறேனே...பிளீஸ் பிளீஸ்" என அவள் கெஞ்ச....

"சரி செய்....என்ன செய்ய போற??? உனக்கு காலேஜ் இல்லையா??"

"இருக்கு ஹேம்ஸ்....எனக்கு ரெடியாக 15 மினிட்ஸ் போதும்....தள்ளிக்கோ நான் செய்யுறேன்..."

"என்ன செய்ய போறேனு சொல்லு டி...நான் ஹெல்ப் பண்ணுறேன்..."

"வேணாம் வேணாம்...நானே செய்வேன்....மேஹாவை நம்பினோர் கை விடப் படார்"என்றவள் தன் வீர சாகசங்களை ஆரம்பித்தாள்....

பல நிமிட போராட்டத்திற்கு பின் அவள் கிட்சனை விட்டு வெளியே வர....

ஹேமா அவளை முறைத்துக் கொண்டிருந்தாள்....

"ஈஈஈஈஈ"அவளுக்கு மட்டுமே தெரியும் அந்த ஒரு டம்ளர் காபி போட அவள் பட்ட பாடு....

காபி கொதித்த பின் டேஸ்ட் பார்த்தவள் சர்க்கரை குறைவாக இருக்க சர்க்கரையை போட்டாள்....

அது அதிகமாகி விட தண்ணீர் ஊற்றினாள்....

இப்போது காபி தூள் பத்தாமல் போக அதையும் கொட்டினாள்....

மாத்தி மாத்தி போய்க் கொண்டே இருக்க.....மூன்று டம்ளர் காபி இப்போது பத்து டம்ளர் ஆகி விட்டது....

இப்போது ஒரளவிற்கு டேஸ்ட்டாக இருக்க....மூன்று டம்ளர் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்....

"எரும எரும....ஒரு டம்ளர் காபிக்கா டி இவ்ளோ பில்டப் கொடுத்த...."

"ஈஈஈஈ"அவள் அதற்கும் இளித்து வைத்தாள்....

"காபி நல்லா தான் இருக்கு ...."என்ற ஹேமா உள்ளே செல்ல....

"அய்யோ.....போச்சு....ஹேமா பத்ரகாளியா ஆகுறக்குள்ள ஓடிரு மேஹா"என்றவள் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்....

"அடிப்பாவி...மூனு பேருக்கு காபி வைக்க சொன்னா ஒரு ஊருக்கே போட்டே வெச்சுருக்கா...."திட்டிக் கொண்டே இருக்க.....

"நிறுத்து ஹேம்ஸ்....நான் என்ன தப்பா பண்ண...சொல்லு தப்பா பண்ண...."

ஹேமா திருத்திருவென முழிக்க....

"உன் நல்லதுக்காக தான்...நீ நாள் முழுவதும் காபி குடிச்சுட்டே இருக்கணும்னு ஒரு நல்ல எண்ணம் தான்..."அவள் கண்ணடிக்க...

"அடிக் கழுதை...அப்போ சாப்பாடு சாப்பிட வேணாமா??"

"அதுவும் சாப்பிடு...இதுவும் குடி...சமத்துப் பாப்பாவ எல்லாத்தையும் குடிப்பியாம்...நான் உனக்கு லாலிபாப் வாங்கிட்டு வருவேனாம்"ஹேமாவின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்துவிட்டு குளிக்க சென்று விட்டாள்......

கல்லூரிக்கு சீக்கிரமே வந்தவள் முதல் பென்ச்சில் அமர்ந்து கொண்டாள்...
இன்றும் முதல் வகுப்பு முகிலோடது தான்...மனோ சார் வருவார் என நினைத்தவள் முதல் பென்ச்சில் அமர்ந்துக் கொண்டாள்....

எல்லாரும் விசித்திர சந்துவைப் பார்ப்பது போல அவளைப் பார்த்து செல்ல கண்களை மூடிப் படுத்துக் கொண்டாள்..

வகுப்பில் அவள் மட்டுமே இருந்து முதல் பென்ச்சிற்கு வர சொன்னால் கூட வரமாட்டாள்...
ஆனால் இன்று முதல் பென்ச்சில் இருப்பதால் தான் இப்படி பார்த்து செல்கின்றனர்....
எல்லாம் மனோ சாருக்காக என யாரும் அறியவில்லை....

அவருக்காக ஆசையாக காத்துக் கொண்டிருக்க வந்தது என்னவோ முகி தான்.....

முகம் வாடியவள் எழுந்து சென்று ஆனுவின் அருகில் அமர்ந்து கொண்டாள்....

"இப்போ இந்த முகி சார் வரலைனு யாரு டி அழுதா...."மேஹா ஆனுவிடம் கேட்க....

"உனக்கு தான் அவர் கிளாஸ் பிடிக்குமே டி..."

"அது அப்போ...இப்போ பிடிக்காது..."

"ஏன் ...."அவள் கேட்க...

"அது அப்படி தான்...."

"ஹாய் ஸ்டூடெண்ட்ஸ் என்னை ரொம்ப மிஸ் பண்ணீங்க போல"முகி சிரித்துக் கொண்டெ கேட்க.....

"இல்லை...இல்லை...."என மாணவர்கள் கத்த...

நீங்க மிஸ் பண்ணலனா என்ன....என் பேவரட் ஸ்டூடண்ட் மேஹா மிஸ் பண்ணிருப்பா...அப்படி தான மேஹா எனக் கேட்க....
ஏற்கனவே அவர் மீது கடுப்பில் இருந்தவள் "சத்தியமா இல்லை சார்.."எனக் கூறி அமர்ந்து கொண்டாள்...

மாணவர்கள் அனைவரும் சிரிக்க...
அதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா...எனக் கூறி சிரித்தவன் கிளாஸ் எடுக்காமல் வெட்டி நியாயம் பேச....மேஹா எதையோ பறிகொடுத்தவள் போல் படுத்துக் கொண்டிருந்தாள்....

வந்ததிலிருந்தே மேஹாவின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டிருந்த அர்ஜீ மற்றும் ஆனு ஏதோ சரியில்லை என மட்டும் நினைத்தனர்....

"ஹேய் என்னடி இவ்ளோ சாக்லெட் இருக்கு....யாரு தந்தா??"மேஹா கேட்க...

"உமா மேம் டி...அந்த மேம் ஒரு திருக்குறள் பைத்தியம் டி...நான் தினமும் ஒரு திருக்குறள் சொல்லி சாக்லெட் வாங்கிப்பேன்...அந்த அம்மா பனிஸ்மெண்ட்க்கு கூட திருக்குறள் சொல்லுனு சொல்லுவாங்கலாம்...யாரு போய் திருக்குறள் சொன்னாலும் ஒரு சாக்லெட் கிடைக்கும்..."

"அப்படியா??"என மேஹா கேட்க

"ஆமா டி..."என அவள் கூறினாள்...

"நமக்கு ஒரு சப்ஜெக்ட் இங்கிலீஷ் மத்ததெல்லாம் தமிழ்ல இருக்கப்பவே திருக்குறள் வராது.....இதுல இப்போ எப்படி???🤔🤔🤔கஷ்டம் கஷ்டம்.....
ஆனா சாக்லெட் வேணுமே....என்ன பண்ணலாம்"

"படிப்போம்...."என்றவள் குறளைப் படித்து விட்டு உமா மேம்மை பார்க்க சென்றாள்....

அவளுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருக்கும் என அவள் அறியவில்லை....

உமா மேம் எங்கே இருப்பாங்க எனத் தேடிக் கொண்டே செல்ல...அவர் அவருடைய கேபினில் இல்லை...

அங்கிருந்த ஒரு மேம்மிடம் கேட்க...
அவங்க இந்த டைம்ல முகி சார் கேபின்ல இருப்பாங்க மா எனக் கூறினார்...

சரி என்றவள் அங்கு சென்றாள்....

மேம் மே ஜ கம் இன்...என உள்ளே செல்ல அங்கு முகி,உமா,சோனி,மனோ நான்கு பேரும் இருந்தனர்...

மனோ காதில் ஹெட் போன் மாட்டி படுத்துக் கொண்டிருந்தான்....

அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் .....

அங்குள்ள மூவர் கத்திக் கொண்டிருப்பதை அறியவில்லை....

சோனி வந்து அவள் தோள்பட்டையை தொட

சுய நினைவிற்கு வந்தவள் திருத்திருவென முழித்தாள்....

என்ன மேடம் நின்னுட்டே தூங்குறீங்களா??முகி கேட்க

"ஹா ஹா உன் கிளாஸோட எபெக்ட் தான்...கிளாஸ் எடுக்க சொன்னா தூங்க வைக்கிற" என சோனி கூறி சிரிக்க

அவளை முறைத்தவன்
"என் பேவரெட் ஸ்டூடண்ட் அவ.. என்கிட்ட டவுட் கேட்க வந்துருப்பா அப்படி தான மேஹா" எனக் கேட்க

"இல்லை சார்....சாக்லெட் வாங்க வந்தேன்..."

"என்ன "அவன் ஷாக்கில் கத்த

"அசிங்க படுறதெல்லாம் உனக்கு புதுசா என்ன??"சோனி,உமா இருவரும் சிரிக்க....

"போ மா"என்று அழுத்துக் கொண்டவன்...."சரி சரி யாரு உனக்கு சாக்லெட் தரேனு சொன்னா??"

"உமா மேம்" என்றவள் இப்போதும் மனோவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்...

நானா எப்போ என்று உமா கேட்க

திருக்குறள் சொல்ல வந்தேன் மேம் என்றவள் சொல்ல வந்த குறளையே மறந்து விட்டாள் மனோவைப் பார்த்த பின்பு...





Haii haiii.....Indha upd full ah Meha nenachu pakrathu than....Haju kita sollitu Epd mano name kandupudicha,epd Abhi frnd anan athellam than....
confuse ana sollunga...clear panren😊😊

Tqq for ur cmnts😍

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro