மனசு கஷ்டமாச்சு

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு நடந்துவந்துக்கொண்டிருந்த குழந்தை முன் zipஐ கழட்டியவன், படித்து என்ன செய்யபோற என கேள்வி கேட்டு பத்தாவது படித்த தங்கைக்கு திருமணம் செய்து வைத்த அண்ணன், தெரியாத ஓர் ஆண் பின் தொடர்து வந்து காதல் சொன்னதால் காலேஜ் படிப்பை நிறுத்திய தகப்பன்,  ஓவர்டைம் பார்த்ததால் வேலையை நிறுத்த சொன்ன கணவன், கையில் காசே இல்லாவிடினும் மனைவியை வீட்டிலேயே பட்டினியோடும் கடனோடும் முடக்கிவைத்த கணவன், வெளியூரில் வேலைக் கிடைத்ததும் வேலைக்காரியாய் இருக்க அழைத்துச் சென்ற கணவன், புதிய நாட்டில் மொழி அறியா முகம் தெரியா இடத்தில் அவளுக்கு விருப்பம் இருக்கிறதா என கேட்காமலே முடிவெடுத்த கணவன், சொந்தக்காரர்களுக்கு பயந்து மகளின் வெளினாட்டு படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த தகப்பன், மற்றவர்களுக்கு பயந்து வற்புறுத்தி குழந்தை பெற்றெடுக்க வைத்த கணவன், நோய்க்கு மருந்து அளித்த மருத்துவரை சீண்டிய நோயாளி. என்னத்த சொல்ல.

15 வயதில் சமைக்க வைத்த பெற்றோர், மாமியார் வீட்டில் ரசம் வைக்க தெரியாவிடின் மரியாதை குறைந்துவிடுமாம். தம்பி முட்டை எவ்ளோ அழகா பொறிச்சிருக்கான், பாரேன்.

சோஷியல் மீடியாவில் சுடிதாரில் சிரித்த பெண்ணின் படத்தை சேவ் செய்து அதை மற்ற ஆண்களிடம் தமிழனாய் இருந்தால் ஷேர் செய்த மாணவன். பெண்கள் எதற்கு சோஷியல் மீடியாவுல முகத்த காட்டுறாங்க, ஒரு நடிகை போட்டோவ வச்சிட்டு இல்ல வேணாம் அதுக்கும் எவனாவது ஹாய் நு மெசேஜ் பண்ணுவான், ஒரு பூ போட்டோ வச்சிட்டு சந்தோஷமா சுத்துங்க, அது தான் பாதுகாப்பு. 

அப்புறம் ரோட்ல நடந்துடாதீங்க. யாராவது உங்கள சைட் அடிச்சாளோ அல்லது காதல் கீதல் நு வந்து torture பண்ணாலோ என்ன ஆவது? அப்புறம் உங்க வீட்டு கௌரவம் தான் கப்பல் ஏறும். அவன் மானம் அல்ல. 

பேப்பரில் படித்த கதைகளல்ல இவை. எனக்கு, என் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு, என் தோழிகளுக்கு நடந்தவை இவை. கற்பனை அல்ல இவ்வுதாரணங்கள், ஒவ்வொன்றுக்கும் நேரம், இடம் என சாட்சி உள்ளன.

அப்புறம், எனக்கு அட்வைஸ் பண்ணாதீங்க. தவறு செய்யும் ஆணை திருத்துங்கள். படிக்க, வேலை செய்ய, தன் பெற்றோரைப் பார்த்துக் கொள்ள,  தன் தோழிகளோடு படம் பார்க்க, தன் ஆசைக்கு ஒரு செல்பியை ஆன்லைனில் அப்லோட் செய்ய, தன் மனதுக்கு பிடித்ததை பேச, எழுத விடுங்கள், பெண்ணை. 

முதலில் ஆணை திருத்துங்கள். அதெப்படி ஆண்கள் நு பொதுவாக சொல்லலாம், நான் நல்லவனாக்கும். தவறு செய்யும் ஆண்களின் எண்ணிக்கையை விட தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் ஆண்கள் எண்ணிக்கை அதிகமானதும் 'சில ஆண்கள்' என குறிப்பிடுகிறேன். அதுவரை அமைதி காத்த நீங்கள் 'ஆண்கள் அநீதி இழைக்கிறார்கள்' என நான் கூறும்போது அமைதியாய் இருங்கள். 

அப்புறம் 'not all men' என்ற argument எவ்வாறு பெண்களுக்கு அநீதியாகும் என தெரிந்துக்கொள்ள ஓசியாய் google இருக்கிறது. படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Also, read 'Why I'm no longer talking to white people about race' - சிறந்த புத்தகம்.

இதை எல்லாம் செய்த பின் எந்த தவறும் செய்யாத, தன் வாழ்க்கையை வாழ முற்படும் பெண்ணுக்கு அட்வைஸ் பண்ணலாம்.



Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro