அனிச்சம் பூ 2

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

         ன்டர்வியூவை முடித்துவிட்டு தீப்தியும் ஜீவிகாவும் ரெஸ்டாரன்டில் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்தனர்,

ஜீவிகாவின் மனம் ஏனோ இங்கும் அவன் முகத்தைத் தேடியது , மனதை ஒரு நிலைப் படுத்த எண்ணியவாறு, இன்டர்வியூவைப் பற்றி மீண்டும், விசாரித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் குளிர்பானங்கள் வந்திருந்தது , இருவரும் பேசிக்கொண்டே குளிர்பானங்களைப் பருகினர்,

ஜீவிகா நிமிர்ந்தபோது இங்கும்
அவன் முகம்... இப்பொழுது அவன் பார்வை  வெகு இயல்பாய் ஜீவிகாவைத் தொட்டுக் கடந்தது . ஆனால் கணநேரத்தில் கடந்துவிட்ட அவன் கண்களை நேராகச் சந்தித்த ஜீவிகாவிற்கு ,

இருமடங்கு வேகமாய்த் துடித்த இதயம், தன் நான்கு அறைகளுக்கும் பாலம் அமைத்து அதி வேக இரயில்ளை இயக்கித் தடதடத்துக் கொண்டிருந்தது .

அவனது முதல் பார்வையில் , ஒட்டுமொத்த பரவசமும் ஒற்றைப்புள்ளியில் சேர்ந்து கூராகி , அவள் மனதில் நேராக இறங்கியது , இப்பொழுது ஜீவிகா மீண்டும் தலையை நிமிர்த்தி அவன் இருக்கும் திசையை நோக்கினாள், அவன் அலைபேசியில் யாருடனோ தொலைபேசத் தொடங்கி இருந்தான், அவளையும் மீறி அவள் இதழில் ஒரு கால் வட்டக் குறும் புன்னகை குடிகொண்டது ..

இவளுக்குள் நடக்கும் பிரளயம் பற்றி அறியாத தீப்தி என்னும் ஜீவன் அந்த பட்டர்ஸ்காட்ச் மில்க் ஷேக்கை அதி சிரத்தையாகச் சுவைத்து முடித்துக் கிளம்ப ஆயத்தமாகி, " போகலாமா ? " என்று தன் அழகிய விழிகளால் வினவ , தன் தோழியின் விழியசைவைப் புரிந்து கொள்ளும் ஒத்திசைவில் ஜீவிகா இல்லை.

" என்ன ? " என்று பதிலுக்கு வினவினாள்.

" போலமான்னு கேட்டேன் " என்றாள் தீப்தி .

" ஹிம் .. போகலாம் " என்றது இதழ்கள் .
'இங்கேயே இருக்கலாம் ' என்றது இதயம் .
இதயம் பேசுவதையெல்லாம் மூளை மதிக்காதே! தீப்தியும் ஜீவிகாவும் ரெஸ்டாரண்டை விட்டுக் கிளம்பினர்.

சிறு குழந்தையாகச் சிணுங்கிய இதயத்திற்காகப் போகும்பொழுது ஓர் பார்வையை அவன் இருக்கும் திசையில் பதித்தாள், இப்பொழுதும் அவன் அலைபேசியில் தான் நிலைகொண்டிருந்தான் .

வீட்டிற்கு வந்த ஜீவிகா தன் லேப்டாப்பில் அனிமேசன் கோர்சின் ப்ராஜக்ட் வொர்கினைச் செய்யத் தொடங்கினாள். க்ராபி்க்ஸ் வொர்க் என்றால் ஜீவிகாவிற்குப் பசியும் தூக்கமும் கூட தூரம் சென்றுவிடும் . அதிலேயே முழ்கி விடுவாள். அங்கே ஜீவிகாவின் தாய் தேவிகா வந்தாள் ..

ஜீவிகாவின் அம்மா என்றதும் 50 , 55
வயது மதிக்கத்தக்க , என்று கற்பனை செய்து விடவேண்டாம் , தேவிகாவிற்கு வயது 39 மீராஜாஸ்மினின் சாயலில் இருப்பவள் , குழந்தை குணம் கொண்ட குடும்பத்தலைவி .

அப்பா பாலாஜிக்கு வயது 44 , பளிச் புன்னகையும் பொறுப்பும் பொறுமையும் கொண்ட திறமைக்குச் சொந்தக்காரன் , இருவரும் இளமையின் விளிம்பில் இருப்பவர்கள்தான் , ஜீவிக்கு அண்ணனோ அக்காவோ என்று என்று நினைக்கும் அளவிற்கு அழகிய தோற்றமும் கூட ...

தேவிகா , " ஜீவி என்ன இது மணி6.30 ஆச்சு , இன்னும் ரூம்ல என்ன பண்ற ?ஆமா இன்டர்வியூ முடிந்து எத்தனை மணிக்கு வந்தீங்க? நான் 2 மணி வரைக்கும் காத்திருந்தேன் , அப்புறம் தான் தூக்கம் வந்ததுன்னு உள்ளே போனேன் , ஆமா தீப்திய சாப்பிடச் சொன்னியா? " என்று கேட்க,

" ம்... சொன்னேன் மா, சாப்டாங்க , 2.15 க்கு வந்துட்டோம் மா , தேனுமா தூங்கிட்டு இருந்தாங்க , சரி தொந்தரவு செய்ய வேண்டாம்னுதான் நாங்க இரண்டுபேரும் சாப்பிட்டோம் மா " என்றாள் .

தேனுமா சமையல் வேலை செய்பவர், ஜீவி பிறந்த காலத்திலிருந்தே இவர்கள் வீட்டில் இருப்பவர். அவரைப் பிரித்துப் பார்த்ததில்லை, நான்கு பேர் கொண்ட குடும்பமாக , குடும்பத்தில் ஒருவராகவே வாழ்பவர்.

தேவிகா ," ஜீவி உங்க அப்பா வந்துட்டாங்கனு நினைக்கிறேன், கார் சத்தம் கேட்கிறது , நான் போய் காஃபி கொடுக்கிறேன். நீயும் லேப்டாப்பை மூடிவச்சிட்டு வா, எப்பொழுதும் இதையே பார்த்துட்டு இருக்காம " என்றாள் .

"ம்... இன்னும் கொஞ்சம் வொர்க் இருக்குமா 10 மினிட்ஸ்ல வாரேன்." என்றாள் .

"ம் சீக்கிரம் வா, டாடி வந்தவுடன் உன்னைதான் கேட்பார் " என்றவள் சென்றுவிட ,

பாலாஜி ஃப்ரஷ் ஆகிவிட்டு காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தான்,

ஜீவி , தான் ஃப்ளாஸில் செய்த க்ராபிக்ஸையும், வெப்டிசைனயும் பாலாஜியிடம் காட்டி விளக்கிக் கொண்டிருந்தாள். " பாலா சூப்பர்டா, வெரிகுட் " , என மகளைப் பாராட்டிக் கொண்டிருந்தான்.

ஜீவிகா பாலாஜியிடம் " என்னோட ஃபேக்கல்டி நெக்ஸ்ட் இயர் கனடால ஷெரிடன் காலேஜ்ல அனிமேசன் கோர்ஸ்கு அப்ளே செய்றாங்களாம் பா . நானும் அங்க அப்ளே செய்யவா ? .. அங்க கோச்சிங் நல்லாருக்குமாம் பா .. ப்ளீஸ் பா ..." என்றாள்

சில கணம் அமைதி காத்த பாலா " ஹிம் .. ஓகே டா , ஏற்பாடு செய்கிறேன் " என்றான் .

அவளால் நம்பமுடியா சந்தோஷத்தில் ,"ரியலி ? என்று தந்தையை கட்டிக்கொண்டு
லவ் யூ டாடி, தேங் யூ வெரிமச் என்றாள் ,

இரவு உணவை முடித்து தூங்க ஆயத்தமானாள், ஆனால் தூக்கம் ?
அது அவளை தொட்டு விடமால் எட்டி நின்று வேடிக்கை பார்த்தது ,

ஜீவிகாவின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்தது , ' யார் அவன்?அவனைப் பார்த்ததிலிருந்து நான் ஏன் இப்படி மாறிப்போனேன்? எவனோ ஒருவனைப் பார்த்து விட்டு, அவனையே நினைத்துக் கொண்டு, ச்சே! என்ன இது ! நானா இப்படி? இதுதான் காதலா? இதற்கு முன் நாம் இது மாதிரித் தவித்திருக்கிறோமா? இருக்கலாம் , ஆனலும் இப்படி இல்லை ,  சிலரிடம் பேசும் போது நட்பா காதலா என்ற குழப்பம் இருக்கும் , ஆனால் இரண்டுமே நாம் தீர்மானிப்பது தான் என்று நட்புக்குத்தானே கரம் நீட்டுவேன் ஆனால் ' ,

இது போன்றொரு
இனிய பிரளயத்தை
இதயம் இதுவரை
எதிர்கொண்டதில்லை

அழகில் மயங்கி ஒரு
ஆழிப்பேரலையிலும்
அகப்பட்டதில்லை

என் உறக்கம் பரித்த
அந்த இரக்கமற்ற
இனியவன் எவனோ ? ..

                              ----------------












Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro