அனி்ச்சம் பூ 3

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ன்று ஞாயிற்றுக் கிழமை, இயன்ற அளவு பாலாஜி மனைவி மகளோடு நேரம் செலவிடுவதையே விரும்புவான், இன்றும் அதேபோல் தான் மூவரும் ஷாப்பிங் மற்றும் மதியம் லன்ச் முடித்து வீட்டில் தந்தையும் மகளும் வழக்கம்போல் , தேவியை வம்பிலுத்து அவள் கோபத்தைப் பதம்பார்த்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

"ஜீவிமா உன் மம்மி 2 காட்டன் புடவை எடுக்க 2 மணி நேரமா அந்த சேல்ஸ்மேன் பட்ட பாடு இருக்கே,

" அது கூடப்பரவாயில்ல டாடி ,  காட்டன் புடவை வாங்கிட்டு டிசைனர் புடவை வாங்க மம்மி திரும்பி பார்த்தாங்க பாருங்க , மம்மியைப் பார்த்தவுடன , அங்க இருக்க சேல்ஸ்மேன்ஸ் கண்ணுல அப்படி ஒரு பீதி.. மம்மிக் கிட்ட இருந்து தப்பிக்க அவங்க வேண்டாத சாமி இல்லை ,

" நல்ல வேளை ஜீவிமா , அவங்க வேண்டுதல் வீண் போகல , டிசைனர் சேரி எடுக்குற ப்ளான உன் மம்மி கைவிட்டுடாங்க " ,

"அது கூடப் பரவாஇல்லை டாடி உஙகளுக்கு ட்ரெஸ் எடுக்கும்போது , நீங்க நைஸா ரெஸ்ட்ரூம் போரேன்னு நழுவீட்டீங்களா? அங்க இருக்க டம்மி மாடல் பொம்மைக்கு ஒவ்வோரு ஷர்ட்டும் பேண்டும் ட்ராக் ஷூட்டும்  வச்சு வச்சு மேச்சிங் பார்த்தாங்க , அங்க இருக்க அக்கா , அண்ணாலாம் சிரிச்சாங்க ..

"என்ன தேவிமா இது ? ஓ .. அதான் , நான்ரெஸ்ட் ரூம் போயிட்டுத் திரும்பி வநதவுடன் எல்லாரும் என்னை ஒரு மாதிரிப் பார்தாங்களா? அடிப்பாவி... "

"டாடி அம்மா டரெஸ் எடுக்குற விஷயம் எப்டியோ தேனுமாவுக்கு தெரிஞ்சுருச்சுன்னு நினைக்கிறேன், அதான் தேனுமாவ ஷாப்பிங் கூப்பிட்டதற்குத் தலைவலின்னு நைஸா எஸ் ஆகிடாங்க, நாம வசமா மாட்டிக்கிட்டோம். என்ன தேனுமா அப்படித்தானே?

"அய்யோ நீங்க வேறமா , அபடில்லாம் ஒன்னும் இல்ல என்னமா அப்பாவும் மகளுமா தேவிமாவ இப்டி கேலி பண்றீங்க, பாரு தேவிமா முகமே கோபத்துல சிவந்திருச்சு "

" அந்த சிவப்ப பார்க்கனும்னுதான நானும் டாடியும் ரிஸ்க் எடுக்குறோம் " ,

அபபாவும் மகளும் எதிர்பார்த்த ஆங்ரிபேர்ட் சிறகை விரித்தது, தேவிகாவின் பொறுமை ஸ்டாக் இல்லாமல் தீர்ந்துபோனது ,

"அப்பாவுக்கும் மகளுக்கும் நைட் டின்னரும் இல்ல ஒன்னும் இல்ல பட்னியா படுங்க " என்றாள் தேவி கோபத்தில்,

" அப்பா ! நல்ல வேளை தப்பிச்சோம், எங்க நீங்க இன்றைக்கு புதுசா ட்ரை பண்ண பொட்டைடோ புலாவுக்கு எங்களைப் பலிகிடாய் ஆக்கிருவீங்களோன்னு பயந்தே போய்டோம் " என்றனர் அப்பாவும் மகளும் கோரஸாக..

தேவி கையில் கிடைத்ததை எடுத்து இருவரையும் அடிக்க ஆயத்தமானாள், இருவரும் ஆளுக்கு ஒரு மூலையாகச் சிதறி ஓட்டம் பிடித்து முற்றத்திற்கு வந்தனர்.

" அப்பாவும் மகளும் கடைசில என்னிடம் தான் வரனும், வாங்க அப்ப இருக்கு " ,  என்று செல்லக் கோபத்தோடு கிச்சனுக்குள் சென்றாள்,

ஜீவி முற்றத்தில் உள்ள கூடை ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருந்தாள் , பாலாஜி ஏதோ அலைபேசி அழைப்பு வர அதை பேசிக்கொண்டிருந்தான், ஜீவி ஊஞ்சல் ஆடியபடியே தூங்கிப்போனாள்.

ஃபோன் பேசிவிட்டு வந்த பாலாஜி , " ஜீவிமா தூங்கிட்டியா ..  எந்திரிடா சாப்பிட்டு தூங்கலாம் " என்று எழுப்பினான் ,

" போங்க டாடி " என்று மீண்டும் தூங்கினாள். தூங்கும் தன் மகளை தூக்கம் கலைக்காமல் தன் கரங்களில் ஏந்தி தூக்கி வந்து சோபாவில் படுக்கவைத்துத் தலைக்குத் தலையணை வைத்தான்.

கிச்சனிலிருந்து எட்டிப்பார்த்த தேவி "உங்க கைக்குழந்தையை ஊஞ்சல்ல இருந்து சோபாவுக்கு மாத்தியாச்சா " என்று கேலிப்புன்னகை யோடு கேட்டாள் ,

அதற்குள் தேனுமா , "தம்பிக்கு எப்பவும் ஜீவிமா குழந்தைதானம்மா " என்றார்,

"சரி தேவிமா , டிஃபன் ரெடி பண்ணீட்டு ஜீவிய எழுப்பி சாப்பிட வை " , என்று கூறிவிட்டு  ரூமுக்குப் போக ஆயத்தமானவனை , தேவி குரல் தடுத்தது , " மாமா டிஃபன் ரெடி ஆகிடுச்சு நீங்களும் சாப்பிட்டுப் போங்க " என்றாள்,

" இல்லமா பசி இல்லை " என்றான்.

"மகூம், ஏன் பசி இல்ல ? ஃபோன்ல யாரு பேசினா , உங்க முகமே சரிஇல்ல " என்றாள்.

"போச்சுடா ! அதெல்லாம் ஒன்றும் இல்லை , நீ டிஃபன் எடுத்துவை நான் வந்து சாப்பிடுகிறேன் " என்றான்.

இரவு உணவு முடித்து , உறங்க ஆயத்தமானார்கள், ஜிவி அவள் அறைக்குச் சென்றிருந்தாள், பாலாஜி படுக்கையில் இருந்தவாறு இருகரங்களையும் , பின்தலைக்குக் கொடுத்து ஏதோ சிந்தனையில் இருந்தான்,

" தேவி என்னங்க ஏதோ டிஸ்டப்டா இருக்கீங்க " என்றாள்,

"ஒன்னும் இல்லடா , வா " என்பது போல் கை நீட்டினான், தன் அருகில் வநத மனைவியை தன் கை வளைவில் கொண்டுவந்தான்,

தேவியின் தலை வருடி , அவளை ஆழ் பார்வை பார்த்து , " என்னோட ஃப்ரன்ட் காலேஜ் மெட் கால்செய்திருந்தான் , அதான் பழைய ஞாபகம் , என்றான்.

"அந்த ஃப்ரன்ட் யாரு ? " என்றாள்,

" தன்ராஜ் " என்றான், அந்த பெயரைக் கேட்டவுடன், தடுமாறி விழப்போகிற குழந்தை தன் தாயைப் பற்றுவதுபோல் அவள் தன் கணவனைப் பற்றினாள் , அவளின் நினைவுகள் நீண்டு கொண்டிருக்க .. நினைவுகளின் இறுதியில் அவளை உறக்கம் தழுவ , அவளின் தலை வருடி அமைதி படுத்திய பாலாஜிக்கோ உறக்கம் பிடிக்கவில்லை, சிந்தனைகள் பலவாறு விரிந்தது , தன் கை அணைப்பில் தூங்கிய மனைவியை விலக்கி தலைக்குத் தலையணை கொடுத்து , போர்வையைப் போர்த்திவிட்டு , பால்கனிக்கு வந்தான்.

பால்கனியில் ஜீவி ஏதோ சிந்தனையி்ன் வசம் இருந்தாள், அங்கு வந்த பாலாஜி ஜிவியைப் பார்த்துச் சிறிதாக அதிர்ந்து பின் கேட்டான்,

" என்னடா தூங்கலையா ? " அங்கு அப்பாவை எதிர்பாராத ஜீவி சற்றே  தடுமாறி பின் பதில் கூறினாள்,

" இல்ல டாடி , ப்ராஜக்ட் வொர்க்கிற்கு ஸ்டோரிபோர்ட் தயார்செய்யனும் , அதான் என்ன செய்யலாம் யோசாச்சிட்டு இருக்கேன் , நீங்க தூங்கலயா டாடி ? என்றாள் ,

" இல்லடா தூக்கம் வரல , ஜீவிமா நீ 7 மணிக்கே தூங்கினியே "

"ஆமா டாடி எழுந்து சாப்பிட்ட பிறகு தூக்கம் வரலை"

" ஓகேடா கண்ணை மூடித் தூங்க செய்டா , தூக்கம் வரும் , ஸ்டோரி போர்ட் வொர்க் நாளைக்குப் பார்கலாம்."

" ஓகே டாடி குட்நைட் ", என்று நகர்ந்தாள் , எங்கே ? கண்ணை மூடினாலே அவன் ஞாபகம் தான் வருகிறது , பிறகு எப்படி தூங்க... என்று மனதுக்குள் புலம்பிய படியே அறைக்குச் சென்றாள் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro