அனிச்சம் பூ 4

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ந்த அலைபேசி அழைப்பு , அது வந்ததிலிருந்து பாலாஜியின் நினைவலைகள் அவனுள் மோதி மோதி காலக்கடலின் 22 ஆண்டுகளுக்கு முந்தய ஆழத்திற்கு அவனை மூழ்கச் செய்தது .

அன்று பாலாஜி கல்லூரியின் இறுதி ஆண்டின் இறுதி பரிட்சைக்காக ஆயத்தமாகி இருந்தான் , தன் தந்தையிடம் விடை பெற்று வீட்டிலிருந்து கல்லூரிக்கு விரைந்தான், ஆனால் அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை , கல்லூரியின் தனக்காக காத்திருக்கும் விபரீதமும், அதன் மூலம் தன் வீட்டிற்கு திரும்ப வரவே முடியாத சூழ்நிலையும் உருவாகும் என்று,

கல்லூரியின் இறுதி ஆண்டின் மாணவர்களின் பிரியாவிடை பேச்சுக்களும்,

"அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா " என்று பாடல் முணுமுணுப்புகளும் ,

பாரதிக்கண்ணம்மா, காதலுக்கு மறியாதை பாட்டு கேசட்டுகளின் பரிமாற்றங்களும்,

மே 9 நியுஸிலேன்ட் vs பாகிஸ்தான் மேச் ,

டேய் அந்த படத்துல திண்டுக்கல் லியோனி நடிச்சுருக்கார்டா,

என்று பல்வேறான ஒலிக்கலவைகளுன், சற்று நேரத்தில் நடக்கப்போகும் பரிட்சைக்கு சம்மந்தமில்லாத அனைத்து ப்பேச்சுக்களும் அரங்கேறிக்கொண்டிருந்தது.

                       senthil

பாலாஜி தன் நண்பன் செந்திலிடம் "டேய் நீ ஹாஸ்டல் வக்கேட் பண்ணியாச்சில்ல " உன்னாட லக்கேஜ எங்க வீட்டல கொண்டுபோய் வச்சுட்டு , நேரா த்யேட்டர்கு போகலாம் என்று கூறிக்கொண்டாருந்தான், அங்கே இவர்களின் நண்பன் கணேஷ் ஒரு வித பதட்டத்துடன் பாலாஜியிடம் வந்து ,

"டேய் பாலா உங்க அக்கா மாமனார் பேரு என்ன ? ராஜாங்கம் தானே " என்றான்,

"ஆமா அதுக்கென்னடா இப்போ, "
இல்லடா அவரோட பொண்ண நம்ம, தனா இரண்டுநாளா அவங்க தோட்டத்து வீட்ல அடச்சு வச்சுருக்கானாம்,

"ஏய் .. நீ என்ன சொல்ற ...."

"ஆமான்டா அவன்தான் அந்த ரமேஷ்ட சொல்லீட்டு இருந்தான் "

" இப்ப அவன் எங்கடா?

" கேன்டீன்ல "

பாலாவின் கோபம் தலைக்கேறியது, ஆத்திரத்துடன் கேன்டீனுக்கு விரைந்தான தன்ராஜை பிடித்து உலுக்கினான், தன்ராஜ் அவனை எதிர்கவோ, வாதிடவோ இல்லை,

மாறாக கண்ணீருடன் "பாலா அவங்க அப்பா மேல இருக்க கோபத்துல நான் முட்டாள் தனமா அவளை அடச்சு போட்டுடன்டா,
ஆனா அவள அடச்சு போட்ட அன்றைக்கே, அவளை விட்ரலாம்னு நினைச்சேன் ஆனா , அவ வீட்ல போய் சொல்லிட்டானா விஷயம் பெருசாகிடும்னு பயமாகிருச்சுடா, எங்க அம்மாவுக்கும் , அண்ணனுக்கும் , தெரிஞ்சா அவங்களே என்னை தேவிகா வீட்ல ஒப்படைச்சு , வெட்டிப் போட்ருவாங்க.  அவளை அவங்க வீட்ல ரகசியமா தேடிக்கிட்டு இருக்காங்க , நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு ",என்று தலையில் கை வைத்து பெஞ்சில் தொப்பென்று அமர்ந்தான்.

" டேய் துரோகி , இதை எப்படா என்னிடம் சொல்ற , அது எங்க அக்கா வாழ்ற வீடு , முதல்ல வா , போய் தேவிகாவை  அவங்க வீட்ல விட்ரலாம் " , என்று தன்ராஜை அழைத்துக் கொண்டு கிளம்பிய பாலா, தன்னைப் பின் தொடர்ந்த நண்பர்கள் செந்திலையும், கணேஷையும் பார்த்து , " நீங்க எங்கடா வர்றீங்க , நீங்க ரெண்டுபேரும் போய் எக்சாம் அட்டன் பண்ணுங்க " என்றான்.

" அதெல்லாம் முடியாது வா நாம் முதல்ல அந்த பொண்ணை வீட்ல சேர்க்கிற வேலையைப் பார்க்கலாம் , என்றான் செந்தில்.

கணேசும் " அதெல்லாம் உன்னைத் தனியா அனுப்பமுடியாது பாலா நாங்களும் வர்றோம் " என்றான் , தன்ராஜ் மேல் ஒரு சந்தேகப் பார்வையை பதித்தவாறு .

அடுத்த 20 நிமிடத்தில் நால்வரும் தன்ராஜின் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தனர், சாவியை எடுத்து பூட்டை திறக்க முற்பட்ட தன்ராஜ் அதிர்ந்தான் , வீடு திறந்து கதவு உட்புறம் பூட்டிஇருந்தது ,பொறுமை இழந்த பாலா கதவைத் தடதட வென தட்ட ஆரம்பித்தான், கதவு திறக்கப்பட்டது , திறந்தவுடன் பாலா புயலென நுழைந்து தேவகியை தேடி அவளிடம் ஓடினான் .

அவள் களைப்பான முகத்துடன் தண்ணீர் அருந்தி விட்டு நிமிர்ந்தாள், பாலாவைப் பார்த்தவுடன்தான் அவள் கண்ணில் உயிர் வந்தது , கதவைத் திறந்த தன்ராஜின் தாய் பொம்மியம்மா, தன்ராஜை பார்த்த வுடன், " அட்பாவி என்ன காரியம் பண்ணிஇருக்கடா , நீ என் வயித்துலதான் பிறந்தியா , நா இப்போ என்ன பண்ணுவேன்னு தெரியலையே " என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் .

தேவிகா பாலாவின் அருகே வந்து அவன் கரங்களை இறுகப்பற்றிக் கொண்டாள், பொம்மியம்மா பாலாவைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு ," தம்பி இந்த ராஸ்கல் மேல எனக்கு நேத்துல இருந்தே சந்தேகமாக இருந்தது , இவன் முகமே சரியில்ல , தோட்டத்துக்குத் தண்ணி பாய்ச்சக்கூட வராதவன் , இரண்டு நாளா இந்த வீட்டு சாவி இவங்கிட்டயே வச்சிருந்தான் , காலையில் இங்க வரலாம்னு சாவியைப் பார்தேன் காணோம், பூட்ட உடைச்சு கதவை திறந்து பார்த்தா , இந்த தங்கத்த அடச்சுப்போட்டு வச்சிருக்கான் , இந்த உருப்புடாதவன் , என் பெரிய மகனை வரச்சொல்லி செய்தி அனுப்பிட்டு , அப்புறம் குடிக்க தண்ணீர் கொடுத்தேன், அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க , ஊருக்குள்ள நேத்துக்கூட அரசல் புரசலா பேசிக்கிட்டாங்க புள்ளய காணோம்னு" என்றவர் முகத்தில் கவலை படிய , மேலும் ஆரம்பித்தார் ,

" சின்னக் குழந்தையா இருந்திருந்தா, வெளிப்படையா தேடிருப்பாஙக , ஆனா ப்த்தாவது முடிச்சு பதினொன்வது போற புள்ளயாச்சே, அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் . இவன் இப்படி ஒரு காரியத்தைப் பண்ணீட்டானே, சீதையவே தீக்குளிக்க வச்ச உலகம், புள்ளய அடைச்சு மடடும் தான் போட்டிருந்தான், புள்ள நல்லடிபடியாதான் இருக்கான்னு சொன்னா இந்த உலகம் நம்பவா போகுது , நான் என்ன பண்ணுவேன், புள்ளயோட ரெண்டு அண்ணன்களுக்கும் ரெண்டு தாய்மாமனுக்கும் தெரிஞ்சா இவன வெட்டிப்போட்ருவாங்களே... இந்த சின்ன புள்ள யோட வாழ்கையும் என்ன ஆகும்னு தெரியலையே " , என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தாள் ,

கணேஷ் , செந்தில் , பாலா மூவரும் அடுத்து என்ன செய்வது என்று கலந்து பேசிக் கொண்டிருக்க ,

கணேஷ் " டேய் பாலா இப்ப இந்த பொண்ண வீட்டிற்கு கூட்டிட்டுப்  போறது நல்லதில்லை ஊருக்கே தம்பட்டம் அடிஞ்சுச் சொன்ன மாதிரி ஆகிடும் , பகல் நேரம் , நைட் கொண்டுபோய் விடலாம் " என்றான் ,

செந்தில் , ஹிம் சரி " வீட்ல என்ன சொல்றது? "என்றான் ,

" அவளுக்கு என்ன நடந்ததோ அதை அப்படியே அவங்க வீட்ல சொல்லட்டும் " என்றான் கணேஷ் ,

மீண்டும் கதவு திறக்கும் சத்தம் கேட்டது , அங்கே தன்ராஜின் அண்ணன் செல்வம் வந்திருந்தான் , பொம்மியம்மா  மகனைப் பார்த்தவுடன் ஓ.. என்று அழ ஆரம்பித்து அனைத்தையும் கொட்டித்தீர்த்தார் ,
அவன் திகைத்து அடுத்த கணம் தன்ராஜை அடித்து தீர்த்தான்,

" ஏன்டா அவர் என்மேல்தானடா போலிஸ் கம்லைன்ட் குடுத்தார் , நானே அதைப் பெருசா எடுத்துக்கல அப்புறம் ஏன்டா உனக்கு இப்படி புத்தி போகுது சொல்லுடா ? அடைச்சு மட்டும்தான் போட்டிருந்தியா இல்ல அவளிடம் ... " என்று சொல்லும்போதே தன்ராஜ் இடைமறித்து , " அண்ணா சத்தியமா எந்த தப்பும் செய்யவில்லை , என்னை நம்புங்க என்று அழுதான்,

" இதை நான் நம்பலாம் இந்த ஊர் நம்புமா? சொல்லுடா அந்த புள்ளையோட வாழ்கைக்கு என்ன பதில் சொல்லப்போற " என்றவன் , செய்வதறியாது திகைத்து நின்றான்.

"அப்படி என்னதாங்க பிரச்சனை உங்களுக்கும் எங்க மாமாவுக்கும் " என்றான் பாலா ,

"எனக்கும் அவருக்கும் தனிபட்ட பகை ஒன்னும் இல்லங்க , போன வாரம் அவங்க பங்காளி வீட்ல ஒரு பொண்ணு தற்கொலை பண்ணி இறந்துருச்சு , போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்ல அந்த பொண்ணு 3 மாதம் கர்ப்பம்னு வந்திருக்கு ,
அந்த பொண்ணு தற்கொலை செய்வதற்க்கு முன்பு , இரண்டு முறை என்னிடம் பேசிக் கொண்டு இருந்ததையும் , அது என்னிடம் அழுதபொழுது நான் அந்த பொண்ணை திட்டினதையும் ராஜங்கம் பார்த்திருக்கார் , அதனால் அந்த பொண்ணோட சாவுக்கு நான்தான் காரணம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டு போலீஸ் என்கொயரில என்பேர ஸ்டாரங்கா சொல்லிட்டார், போலிஸ் நான் என்ன சொல்லியும் நம்பவில்லை , என் மேல ஆக்சன் எடுத்தாங்க " என்றான் செல்வம் .

"இப்போ கேஸ் என்னாச்சு ? " என்றான் பாலா ,

" அந்தப் பொண்ணோட தற்கொலைக்குக் காரணம் , என்கூட படிச்சவன் என்னோட ஃப்ரன்ட் , அவனும் அந்தப் பொண்ணும் இரண்டு வருஷமா காதலிச்சுருக்காங்க , ஆனா அவன் இப்போ உயிரோட இல்லை , அவன் ஒரு ஆக்சிடன்ட்ல இரண்டு மாசத்துக்கு முன்பு இறந்துவிட்டான், அதனால்தான் இந்தப் பொண்ணு சூயிசைட் அட்டன் பண்ணீட்டா , அவன் இறந்தவுடன் அந்த பொண்ணை இரண்டு முறை பார்க்க நேர்ந்தது , அதோடு அவனில்லாம என்னால வாழ முடியாது , நான் சாகனும் சொல்லி அழுதா , அதனால்தான் நான் அந்த பொண்ணை திட்டினேன், யாரோடும் யார் வாழ்கையும் முடிஞ்சிடாது , தைரியமாக இருன்னு சொன்னேன், ஆனா அந்த பொண்ணு தற்கொலை முடிவுக்குக் கர்ப்பமும் ஒரு காரணம்னு போலீஸ் என்னை விசாரிச்சப்பத்தான் எனக்குத் தெரிஞ்சது , நான் ஒருவாரம் உள்ளே இருந்த பொழுது  நல்ல வேளையா என்னோட ஃப்ரன்ட் ஒருத்தன் "அவங்க இரண்டுபேரும் ரெஜிஸ்டர் மேரேச் செய்திருந்தாங்கன்னும் அவன்தான் சாட்சி கையெழுத்து போட்டதாகவும், போலிசிடம் சொல்லி, போலிசும் எவிடன்ஸ் கரக்டா இருந்ததனால் , என்னை ரிலீஸ் பன்னாங்க நேத்துதான் வந்தேன் என்றான் " செல்வம் .

மேற்கொண்டு பொம்மியம்மா ஆரம்பபித்தார் ,
" அதுவுமில்லாமல்  செல்வத்துக்கு பொண்ணுபார்த்து இன்றைக்கு கல்யாணம்ன முடிவாகி இருந்தது , இந்த பிரச்சனையில் பொண்ணு வீட்டுக்காரங்க கல்யாணத்தை நிறுத்தீட்டாங்க , இன்நேரத்துக்கு புது மாப்பிள்ளயா இருக்க வேண்டியவன், என் புள்ள இப்படி பிரச்சனை மேல் பிரச்சனைல சிக்கித் தவிக்கிறான் " , என்று அழுக ஆரம்பித்தார் .

இப்பொழுது பாலாஜிக்கு தன்ராஜின் கோபத்திற்கான காரணம் புரிந்தது, தன் அண்ணன் மானமும் வாழ்கையும் கேள்விக்குறி ஆன கோபத்தில் இவ்வாறு செய்துவிட்டான் ,கோபம் நியாயம் தான் ஆனால்அதை வெளிப்படுத்திய விதம் மிகவும் தவறு .

இப்பொழுது என்ன செய்வது, தன்ராஜை தேவி அண்ணன்களிடமும் தாய் மாமான்களிடமும் இருந்து எப்படிக் காப்பாற்றுவது ?

இந்த சின்னப்பெண்ணின் நிலை ,
இவள் இரண்டு நாளாக காணமல் போனது ஊருக்குள்ளும் தெரிந்து விட்டது ,என்ன செய்வது எனத்தெரியாமல் குழப்பத்தில் நின்றான்.

பொம்மியம்மா தன் மூத்த மகன் செல்வத்திடம் தயங்கித் தயங்கி ஏதோ கூறிக்கொண்டிந்தார் ,

அதை கேட்ட செல்வம் ,
" என்னம்மா நீ சுய நினைவோடுதான் சொல்றியா ? என்று வெடித்தான்.

அப்படி பொம்மியம்மா என்ன சொல்லவந்தார் ? அவர் சொல்லப்போகும் விஷயத்தில் பாலாவின்  வாழ்கையில் புயலும் , பூகம்பமும் ஒருசேர வரப்போவதை அவன் அறிவானா?


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro