அனிச்சம் பூ 52

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

செந்து கைகளைக் கட்டியவண்ணம் சிறிதாய்த் தலைசாய்த்து , அவள் பேசுவதை மென் சிரிப்பில் கேட்டுக் கொண்டிருக்க ..

ஜிவியின் கைகள் தவறி அவள் வைத்திருந்த பலூன் காற்றில் பறக்க , ஜீவி ஏமாற்றமாய் பலூனைப் பார்க்க , கண்இமைக்கும் நேரத்தில் செந்து மாடியின் சுற்றுச் சுவரில் ஏறி பலூனை லாவகமாகப் பிடிக்கப்போக மீண்டும் நழுவி பக்கவாட்டில் உயர்ந்து பறக்க , செந்து சுவரின் விளிம்பில் கால் விரல்களை மட்டும் ஊன்றி நின்றவாறு எட்டிப் பலூனைப் பிடிக்க முயல ,

செந்து , சற்றே தடுமாறியதைப் பார்த்த ஜீவி ஏதோ விபரீதம் நடந்துவிடுமோ எனப் பதற்றமாக " மாமா வேணாம் மாமா நீங்க இறங்குங்க , பலூன் போனா போகட்டும் " எனக்கூற ...

" இல்ல ஜீவி அங்கபாரு அந்த வேப்பமரத்துல மாட்டிருச்சு போய் எடுத்திட்டு வாறேன் ,

" ப்ளீஸ் மாமா நீங்க விளிம்புல நிக்குறீங்க பேலன்ஸ் மிஸ் ஆகிடுமோன்னு பயமாஇருக்கு " , என்று அவன் கால்களை பிடித்தவாறு பேசியவளின் இதயம் அதிரடியாய்த் துடித்துப் பதட்டத்தைப் பன்மடங்காக்கி அவளைப் பலவீனப்படுத்தியது , அவள் கண்களில் நீர் திரையிட ஆரம்பித்திருந்தது , அதைக் கண்ட செந்து , திண்டிலிருந்து கீழ் இறங்கி , அவளின் விழிகளில் வழிந்த நீரைத் துடைத்த நொடி , ஜீவி அவனை இறுக அணைத்து அதிரும் தன் இதயத்தை அமைதிபடுத்த துடித்தாலும் அதைச் செய்யவிடாது ஏதோ ஒன்று அவளைத் தடுக்க , தவிப்புடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ,

அவளைப் பார்த்த செந்துவோ , கால் லைட்டா ஸ்லிப் ஆனதைப் பார்த்துட்டாளோ ! போச்சு டா ! என்னசொல்லப் போகிறாளோ ? எனத் தயங்கி அவளைச் சமாதானப்படுத்தும் நோக்கில் , " என்ன ஜீவிமா இந்த சின்ன விசயத்துக்கு ஏன் இ்பபடி பதட்டப் படுற " எனக்கேட்க

அவளோ " எது மாமா சின்ன விசயம் இந்த திண்டு ஒட்டுல விரல மட்டும் பதிச்சு , எட்டி பலூனப்பிடிக்கிறேன்னு பேலன்ஸ் தவறினா என்ன ஆகும் மாமா ? என அதே பயத்துடன் பேச ,

சரி விடு ஜீவிமா , அன்றைக்கு நீ கூட இதே திண்டில்தான முழங்காலைக் கட்டி உட்கார்ந்து வேடிக்கை பார்த்திட்டு இருந்த , அப்போ அதைப் பார்த்து எனக்குப் பயமா இருந்தது , நான் அப்படி உட்கார வேண்டாம்னு சொன்னேன் , நீ கேட்டியா ?

" என்ன மாமா நீங்க .... நான் சேஃபா தான் உட்கார்ந்திருந்தேன் " ,

"அதே மாதிரிதான் நானும் பேலன்ஸ் பண்ணிதான் நின்னேன் " ,

"நீங்க பேலன்ஸ் பண்ணி நிற்கல மாமா ..அந்த பலூன் பறந்தா உங்களுக்கு என்ன மாமா ? இதுக்குப் போய் ஏன் ரிஸ்க் எடுக்குறீங்க ..?

" எனக்கு ஒன்னும் இல்லை , உனக்குத்தான் தீராத காதல்னு சொன்ன ? " என அவன் கூறியதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ஜீவி , தன் இருகரங்களையும் அவனின் முகத்திற்கு முன்பாக கூப்பி , " அய்யோ சாமி தெரியாம சொல்லீட்டேன் , இனி எனக்குப் பலூனே பிடிக்காது போதுமா ?..எனக்கூற ..

அவள் ஆத்திரத்தில் கூறினாலும் ஏனோ செந்துவுக்கு வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்த வேண்டியிருந்தது ...

ஜீவியோ கண்களில் நீர் மின்ன , " சரி வாங்க மாமா கீழ போகலாம் , எனக்கூற .

"ஜீவிமா கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு போலாம் ,

" சரி நீங்க இருங்க நான் போறேன் , என்று ஜீவி நகர ..

செந்துவுக்கு புரிந்தது , நான் செய்தது தவறுதான், ஒரு நொடி தவறியிருந்தால் கீழே விழுந்திருக்கக் கூடும் , அவளைச் சமாளிக்க பதில் அளித்தாலும் , என் கவனக் குறைவுதான் காரணம் , சரி அப்படியே இருந்தாலும் இந்த மாடி எவ்வளவு அடி உயரம் இருந்துவிடப் போகிறது ? என்று சற்றே எட்டிப்பார்க்க ...எப்படியும் 35 அடிக்கும் மேல் இருக்கும் , விழுந்திருந்தாலும் பெரிதாக என்னஆகியிருக்கும் ? காலில் அடிப்பட்டிருக்கும் அவ்வளவுதானே ?... இதற்கு ஏன் இவ்வளவு பயம் பதட்டம் ..
ஆனால் , பாவம் அவளுக்குப் பயமும் பதட்டமும் சற்றும் குறையவில்லை போல , அதனால்தான் இவ்விடம் விட்டு நகர்கிறாள் , செல்பவளின் கரம் பிடித்து இழுத்து ஆறுதலாக அணைத்து அவளின் பதட்டத்தையும் , பயத்தையும் குறைக்கலாம் , ஆனால் அதை அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ ? ஒருவேளை நான் மனதில் காதல் உணராமல் இருந்திருந்தால் , இயல்பாய் அவளை அணைத்து ஆறுதல் கூறியிருப்பேனோ என்னவோ ? ,

ஆனால் இப்பொழுது , ஆசை கொண்டு அலைகழியும் மனதுக்குச் சரியும் தவறும் புரியவில்லை , நெருங்கவும் விலகவும் தெரியவில்லை , தான் கொண்ட காதலை அவளிடம் சொல்லவும் தவிற்கவும் முடியவில்லை , நட்புகளிடத்திலாவது பகிரலாம் அதற்கும் வழி இல்லை ,
திருமணத்தன்று இரவு ரஷ்மியைப் பார்க்கச் செல்லவதற்காக ஹோட்டல் அறையில் நிர்மலோடும் , வினயோடும் அவ்வளவு கலவரம் செய்து , இரவெல்லாம் தூங்காமல் கண்கள் சிவக்க ஓரிடத்தில் சிலையாய் நின்று விட்டுச் சிறிது நாட்களிலேயே ஜீவியைக் காதலிக்கிறேன் பேர்வழி என்று அவர்களிடத்தில் கூறினால் ,

வினய்கூட பராவாஇல்லை ஏதோ கலாய்த்து விட்டுப் பிறகு புரிந்து கொண்டு ஆல் தி பெஸ்ட் மச்சி என அணைத்துக் கொள்வான் ,

ஆனால் இந்த நிர்மல் ஆளைத் துளைப்பதுபோல் ஓர் கூர்பார்வையில் என்னைத் தவிக்க வைத்து வேடிக்கை பார்ப்பான் , ம்கூம்... இவன்களிடம் சொல்லக்கூடாது , பிறகு பகிராத காதல் , பாரமாய் மனதை அழுத்துகிறதே , என நினைத்த வேளை , சாய்சரண் குரலில் காற்றில் கேட்ட கவர் சாங் ஏதோ அவனுக்காகவே பாடப்பட்டதாய்த் தோன்ற அதை அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்க ,

https://www.youtube.com/watch?v=guMgxvVwGDo

ஜீவி கீழே சென்றுவிட்டாலும் , ஏனோ அவள் சூடி இருந்த மல்லிகையின் வாசமும் , அவளின் ஜஸ்டிட்டி பர்ஃயூமின் மணமும் , அவன் சுவாசத்தோடு கலந்து அவனை ஏதோ செய்ய , இரு கை விரல்களையும் கோர்த்துப் பின்னந்தலைக்குத் தந்து அண்ணாந்து வானம் பார்க்க , அங்கே வானவேடிக்கையாக
வண்ண மயமான மத்தாப்புச் சிதறல்கள் உதிர்ந்து கொண்டிருந்தது , எதேச்சையாய் பக்கவாட்டில் திரும்ப அந்த பலூனோ , மரத்தின் கிளைகளுக்கிடையே அசைந்தாடிக்கொண்டிருக்க ...

அதைப் பார்த்தவனுக்கு ஏனோ சிறிதாய் சிரிப்பு வராமல் இல்லை , சிறது நேரத்திற்கு முன் , ஜீவியின் கன்னத்தோடு கன்னம் உரசி , அவளின் கைகளுக்குள் சிறைபட்டு , அவன் கண்களுக்கு முன்பாகவே அவள் அணைப்பில் முத்தம் சில பெற்று , அவளின் தீராத காதல் பட்டியலில் முதலிடம் வகித்தது , ஆனால் இப்போதோ கிளைகளுக்கிடையில் அத்துவானமாய் அனாமத்தாய் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு .....

" நல்ல வேளை நீ என் கையில் சிக்காம தப்பிச்சிட்ட .. இருந்தாலும் , இப்படி நீ அந்தரத்தில் தொங்குகிறதைப் பார்க்க கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கு " , என மனதோடு பலூனிடம் பேசிக்கொண்டிருந்தவனுக்குத் தெரியவில்லை , தன் நிலைமைதான் பலூனிடமெல்லாம் பேச்சு வார்த்தை நடத்தும் அளவுக்கு பரிதாபமாகிவிட்டது எனறு ...

கீழே அறைக்குச் சென்ற ஜீவியோ , படுக்கையில் விழுந்து தலையணையில் முகம் புதைக்க , அவளின் இதயம் நிறைந்த காதலோ , எந்த நேரமும் உன்னைக் காட்டிக் கொடுப்பேன் என்று மிரட்டாத குறையாக அவளைப் பயமுறுத்திக்கொண்டிருந்தது ,

செந்து மாமா அவர் காதலை இழந்து கட்டாயத்திற்கு உட்பட்டு தன்னை மணந்தது தெரிந்தும் , அவர் காதலின் சுவடுகள் கரைவதற்குள் நான் எப்படி என் காதலுரைப்பது ? அப்படியே இருந்தாலும் , திருமணத்திற்கு முன்பிருந்தே இவரைக் காதலித்தது தெரிந்தால் , என் சுயநலத்திற்காக இந்த திருமணத்திற்குச் சம்மதித்து , இவரும் ரஷ்மி அக்காவும் சேர்வதற்கு இருந்த வாய்ப்பைக் கெடுத்ததாக நினைக்கமாட்டாரா ? என ஜீவியின் சொல்ல முடியாத காதல் கண்ணீராக உருமாறிக் கொண்டிருக்க ,தன் மாமனின் கடலளவு அன்பில் காதலைத் தேடி களைத்துப்போயிருந்தது ஜீவியின் மனது ,

குழப்பமும் கண்ணீரும் ஒருங்கே சேர்ந்து தலைவலிக்கு வித்திட இரு விழிகளையும் மூடித் தலையணையை அணைத்து உறங்க முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருக்க , நிமிடங்கள் சேர்ந்து மணியாகிக் கொண்டிருக்க ,
வீட்டில் சற்றே சலசலப்பு கேட்க ஆரம்பித்திருந்தது , திருவிழாவிலிருந்து அனைவரும் வீடு திரும்பிஇருந்தனர் ,

மாடியில் செந்தூரியிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த செந்து , அனைவரும் வருவதைப் பார்த்து கீழே இறங்கி வர ,
ஜெயந்தி , தேவி , ரேவதி மூவரும் , அரச்சனை செய்த தாம்பூலங்களை பூஜை அறைக்குள் வைப்பதற்காகச் செல்ல ,

அஸ்வதியோ பாட்டியிடம் மாட்டிக்கொண்டு , இங்க பாருங்க பெரியப்பா பாட்டிய , எதாவாது சொல்லிக்கிட்டே இருக்காங்க , என ஜெயராமின் தோள்சேர்ந்து சலுகை எதிர்பார்க்க , ஜெயராம் , ஒரு குறுஞ்சிரிப்பில் தாயைப் பார்க்க , பாட்டியோ , ஜெயராம் நீ கொடுக்குற செல்லம்தான் , இவ ரொம்ப குறும்பு பண்றா பா , எனக் கூற ..

அஸ்வதியோ " இல்ல பெரியப்பா நான் நிஜமாவே பாட்டி கொடுத்த வெற்றிலைப் பெட்டியை தெரியாமல் மறந்துதான் வீட்டிலேயே வச்சுட்டுப் போயிட்டேன் " எனக்கூற ...

பாட்டியோ " அதுபரவாயில்லப்பா , தேர் பார்க்கும் போது ஒரு பெண் என் கால்ல தெரியாம மிதிச்சுட்டா , அஸ்வதி அவகிட்ட ஏன் பார்த்து நில்லுங்க ஆண்டின்னு சொன்னதுக்கு , அந்த அம்மா ஏதோ முறைச்சு பார்த்திருக்கு , அதுக்கு சமயம் பார்த்து அந்த அம்மாவ பாவம் அய்யர் மேல தள்ளி விட்டுட்டா பா " எனக்கூற ..

துணுக்குற்ற ஜெயராம் அஸ்வதியைப் பார்க்க அவளோ குறுகுறு விழியோடு பாவமாய் நிற்க .. , ஜெயராமோ வந்த சிரிப்பை கட்டுப்படுத்தி என்னடா நீ ...ஏன் இப்படிப் பண்ற எனக் கேட்க ...

அஸ்வதி " இல்ல பெரியப்பா முதல்ல அந்த ஆண்டி , பாட்டி காலை தெரியாம மிதிச்சுட்டாங்க , சரி பார்த்து நில்லுங்க ஆண்டின்னு சொன்னேன் , அப்புறம் மறுபடியும் பெரியமம்மாவையும் இடிச்சுட்டாங்க , எனக் கூறிக் கொண்டிருக்க ..

அங்கு வந்து அமர்நத பாலா அஸ்வதியிடம் சற்றே மெதுவாக " அதுசரி பாட்டி சொல்லும்போது , அந்த அம்மாவ தள்ளி விட்டுட்டா பாவம் அய்யர் மேலன்னு சொன்னாங்க , இதுல பாவம் யாரு அந்த அய்யரா ? இல்ல அந்த ஆண்டியா ? என்று கேட்க ,

அஸ்வதி பாலாவின் காதில் ஏதோ கூற , சிரித்த பாலா , அஸ்வதியைச் செல்லமாக காதைத் திருகி விட்டு , ஜீவியை கண்காளால் தேட , அவளைக் காணாதது கண்டு , அங்கு வந்து அமர்ந்த செந்துவிடம் , ஜீவி எங்க செந்து ? என்று கேட்க ,

அங்கு வந்த அனன்யா , " மாமா , ஜீவிக்கா தலைவலின்னு ரூம்ல படுததிருக்காங்க என்று கூற ..

பாலா அறைக்குச் சென்று பார்க்க அங்கே ஜீவியோ , தலைவலி தந்த வேதனையில் வாடிய முகத்தில் விழிகளை மூடிப் படுத்திருக்க , பாலா அவளை மெதுவாக எழுப்ப , ஜீவி விழிகளை மெல்லத்திறந்து பார்க்க , அவளின் சிவந்த விழிகளும் வாடிய முகமும் அவள் அழுததை அப்பட்டமாய் காட்டிக்கொடுக்க , அதை பார்த்த பாலாவின் முகத்தில் வருத்தமும் குழப்பமும் குடிகொள்ள ,

" என்ன ஜீவிமா தலை ரொம்ப வலிக்குதா ?.. ஹாஸ்பிட்டல் போகலாமா ? "

"இல்ல டாடி இப்போ கொஞ்சம் பரவாயில்லை ,"

" ஏதும் ப்ராப்ளமா ஜீவிமா "

" ஒன்றும் இல்லை டாடி " என்று எழுந்து அமர்ந்து பாலாவின் தோள் சாய்ந்து விழிமூடி அவனை இறுகப் பற்றிக்கொள்ள ,

அவள் அப்படி இறுகப் பற்றி இருப்பதிலேயே அவள் தலைவலியின் தீவிரம் புரிய , " சரிடா நான் உனக்கு டேப்லட் எடுத்துட்டு வாறேன் " என பாலா எழமுற்பட ,

ஜீவியோ " வேணாம் டாடி ப்ளீஸ் நீங்க இங்கயே இருங்க என அவன் மடியில் படுக்க , அவன் ஃபோனை எடுத்து ஜெயந்திக்கு அழைத்து , மாத்திரை எடுத்து வரச்சொல்லிவிட்டு , தன் மகளின் தலையை வருடி விட்டவனுகுக் , கவலை விரிய ஆரம்பித்தது , ஜீவிக்கு என்ன ஆயிற்று , சிறுவயதிலிருந்து இவள் அழுதாலே தலைவலி வந்துவிடும் , இவள் அழுதிருக்கிறாள் , செந்துவிற்கும் இவளுக்கும் இடையில் ஏதோ நடந்திருக்கிறது , இருவருக்குள்ளும் என்னதான் பிரச்சனை ? இதேபோல் தான் திருமணம் முடிந்த இரண்டாம் நாள் அழுதிருந்தாள் , இதோ இன்றும் , ஏன் இப்படி , இருவருக்கும் ஒத்துப்போகவில்லையா ? .. இந்தத் திருமணத்திற்கு நான் சம்மதித்திருக்கக் கூடாதோ ?... என் மகளின் வாழ்வில் தவறு செய்துவிட்டேனோ ? சிறுபிள்ளைத் தனமாக அவள் எடுத்த முடிவிற்கு நான் துணை போனது தவறோ ? என்று நினைத்துக் கொண்டிருக்க ,

ஜெயந்தியோ ,தைலம் , மாத்திரை , இட்லி என்று அனைத்தையும் கொண்டுவந்துவிட்டு , ஜீவியைப் பார்த்தவள் " என்ன ஜீவிமா கோவிலுக்கு வரும் போது நல்லாத்தானடா இருந்த ... இப்போ பார்த்தா முகமெல்லாம் வாடியிருக்கு ... " எனக்கேட்க ..

ஜீவி " இல்ல அத்த கோவில்ல கூட்டம் , அதோட இரைச்சல் , ஸ்பீக்கர் சத்தம்.. அதுதான் தலைவலி எனக்கூற ..

" சரிடா நீ சாப்பிடு " என்று , சாப்பிட மறுத்த ஜீவிகாவிற்கு ஊட்டிவிட்டு , பாலா நீ இன்னும் ட்ரெஸ் கூட ச்சேன்ச் பண்ணலயா ? நீ போ , நீ போய் சாப்பிடு , ஜீவிய நான் பார்த்துக்கிறேன் எனக் கூற ...

சற்றே தயங்கிய பாலா , அக்கா ஒரு நிமிஷம் .. எனத் தனியே அழைக்க .. என்ன ? என்பதாய் பின் சென்றவளிடம் " அக்கா தேவியிடம் ஜீவிக்கு தலைவலின்னு சொல்லிவிட வேணாம் க்கா அவ ஜீவி அழுதது தெரிஞ்சா புலம்பித் தீத்துருவா எனக்கூற ...

ஜெயந்தி முகத்தில் குழப்ப ரேகை படர " என்ன பாலா ஜீவிக்கு எதும் பிரச்சனையா ? அழுதிருக்காளா ?எனக்கேட்க ,

பாலா " ஆமாக்கா ஆனா அவளுக்கு தலைவலிக்கிறதால இப்போதைக்கு எதையும் கேட்டு  தொல்லை கொடுக்க வேணாமேன்னு நான் எதுவும் கேட்க வில்லை " எனக் கூற ...

சரி பாலா நீ போ நான் பார்த்துக்கொள்கிறேன் " எனக் கூறிவிட்டு வந்தவள் ஜீவியிடம் " ஜீவிமா செந்து மாமா உன் மேல் ஏதும் கோவப்பட்டனா? எனக்கேட்க ,

ஜீவி அவசரமாக " இல்லை " எனத் தலையாட்ட ,

" அப்புறம் ரஷ்மியிடம் பேசினானா ? இல்லை ரஷ்மியைப் பற்றி உன்னிடம் பேசினானா ? .. " எனக்கேட்க..

" இல்லை அத்த , அதெல்லாம் ஒன்றுமே இல்லை அப்படி ரஷ்மிக்கா வைப் பற்றி பேசினாலும் , இல்லை ரஷ்மிக்காவிடம் பேசினாலும் அதிலென்ன தவறு , அதுவுமில்லாமல் செந்து மாமாவே ரஷ்மி அக்காவிடம் பேச நினைத்தாலும் அவங்க பேசமாட்டாங்க , அத்தை .. எனக்கூற..

அதைக் கேட்ட ஜெயந்தி , குறுஞ்சிரிப்பில் அவளைப் பார்த்துவிட்டு , அதில்லடா ரஷ்மி நல்ல பொண்ணுததான் .. ஆனாலும் செந்துவுக்கு ரஷ்மிக்காக காத்திருக்காம கல்யாணம் செய்து விட்டோமேன்னு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கும் , அதனால் தான் செந்து ரஷ்மியிடம் பேசினான்னு கேட்டேன் , ரஷ்மி செந்துவிடம் பேசினாளான்னு கேட்கலை , என்றவள் , சரிடா இந்த மாத்திரையைப் போட்டுட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடுடா ... என்று கூறி நகர ,

ஜீவி ஜெயந்தியின் கையைப்பற்ற என்ன என்பதாய்த் திரும்பியவளிடம்,

ஜீவி , " அத்த நீங்க செந்து மாமாவிடம் எதுவும் கேட்காதீங்க " எனக் கூற

ஜீவியைப் பார்த்த ஜெயந்தி " சரிடா உன் மாமன நான் ஒன்னும் கேட்கல போதுமா ?.. " என மருமகளின் தலைவருடிவிட்டு , புன்சிரிப்பில் நகர்ந்து செல்ல ,

இரவு உணவு முடிந்ததும் தூங்கச் செல்லாமல் செந்துவோடு சேர்ந்து அரட்டை அடித்து கொண்டும் , விளையாண்டும்  கொண்டிருந்த அனன்யாவையும் , அஸ்வதியையும் , ஜெயந்தி போய் தூங்க சொல்ல , அவர்களிருவரும்

" போங்க பெரியம்மா தூக்கம் வரல கொஞ்ச நேரம் கழிச்சு போகிறோம் " எனக் கூற ,

"சரி டா இரண்டுபேரும் கொஞ்சநேரம் கழிச்சு போய் தூங்குங்க " என்றவள் ,

" செந்து ஒரு நிமிஷம் என்னோடு வா " என அழைக்க ,

" என்னமா " என செந்து பின்செல்ல ..

அஸ்வதியோ " பெரியம்மா , அண்ணா கூட தனியா பேசனும்னு தான் எங்க இரண்டுபேரையும் தூங்க போகச்சொன்னீங்களா ? அதெல்லாம் முடியாது உங்க கூட நானும் வருவேன் " எனக்கூற ,

ஜெயந்தி மாடியை நோக்கி கார்த்திக் .. கார்த்திக் ... (அஸ்வதி , அனன்யாவின் அப்பா ) என அழைக்க , அஸ்வதி அமைதியாகி ஜெயந்தியைப் பார்க்க , ஜெயந்தி மெளனமாய் சிரித்து விட்டு , நீ வா செந்து நம்ம போலாம் , எனக்கூற...

செந்துவோ " வாத்தியாரைக் கூப்பிட்டாத்தான் உன் வாய் அடங்கும் போலையே ! என அஸ்வதியிடம் சிரித்து விட்டு , ஜெயந்தி பின் செல்ல ,

வாசலுக்கு சென்ற இருவரும் வாசற்படியில் அமர .. செந்து " சொல்லுங்கம்மா என்ன விஷயம் " என ஆரம்பிக்க ,

" ஆமா ஜீவிக்கும் உனக்கும் என்ன பிரச்சனை "

துணுக்குற்ற செந்து " ஏன்மா பிரச்சனைலாம் ஒன்னும் இல்லையே ! ஏன் மா ஜீவி ஏதும் சொன்னாளா ?

" ... ம்.. அப்படியே உன் பொண்டாட்டி சொல்லிட்டாலும் "

உன் பொண்டாட்டி என்ற அந்த வார்த்தையில் செந்துவின் காதில் வழியே தேனாறு பாய்ந்து இதயத்தில் நிறம்பிவழிந்து கொண்டிருக்க , அவன் கண்களில் நட்சத்திரங்கள் ஒளிர்வதை கண்ட ஜெயந்தி , "என்னடா நீயும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிற... ஜீவியும் ஒன்னும் சொல்ல மாட்டேன்கிறா ..பத்தாததுக்கு நீங்க செந்து மாமாட்ட எதுவும் கேட்காதீங்கன்னு என்னிடம் சொல்றா எனக் கூற ...

செந்து , " அப்போ என் ஒய்ஃப் கிட்ட ஒன்னும் கேட்கமாட்டேன்னு சொல்லீட்டு , இப்போ என்னிடம் வந்து என்ன பிரச்சனைன்னு கேட்கறீங்க , இந்த நம்பிக்கை துரோகத்தை நான் வன்மையா கண்டிக்கிறேன் மா , என போலிக் கோபத்தில் கூற ...

செந்து சொல்லிய அந்த ஒய்ஃப் என்கிற வார்த்தையில் இப்பொழுது ஜெயந்தியின் காதில் தேனாறு பாய்ந்து இதயத்தை நிறைத்துக் கொண்டிருக்க , " ஜீவி அழுதுருக்கா போல செந்து , அழுது அழுது தலைவலியை இழுத்துக்கிட்டா , நான் போய்பார்க்கும் போது , கண்ணெல்லாம் சிவந்து இருந்தது , எனக் கூற...

துணுக்குற்ற செந்து என்னம்மா சொல்றீங்க , ஜீவி அழுதிருந்தாளா?  நிஜமா ஏன் அழுதான்னு எனக்குத்தெரியாதும்மா , ஏன் அழுதான்னு உங்ககிட்ட ஏதும் சொன்னாளா மா ?

இல்ல செந்து தலைவலிதான் வேறு ஒன்னும் இல்லைன்னு சொல்லீட்டா , அதான் உனக்குத் தெரியுமேன்னு உன்னிடம் கேட்க வந்தேன் எனக்கூற ...

இல்லம்மா இங்க அவ அழுகுற அளவுக்கு ஏதும் நடக்கல .. நானும் ஜீவியும் மாடிலதான் பேசிட்டு இருந்தோம் , அப்போ அவ கையில் வச்சிருந்த பலூன் காத்துல பறந்துடுச்சு , சரி அதை பிடிச்சு அவ கையில கொடுக்கலாமேன்னு , மாடிச்சுவர்ல ஏறி அதைப் பிடிக்கப் போனேன் கொஞ்சம் ,கால் சிலிப் ஆகிடுச்சு , உடனே பயந்துட்டா , கீழ இறங்குங்க மாமான்னு சொன்னா , அவ பயப்படுறதப் பார்த்ததும் உடனே கீழே இறங்கீட்டேன் , அப்புறம் அவ கீழ ரூமுக்கு வந்துட்டா , எனக்கூற ...

செந்துவை முறைத்த ஜெயந்தி " உன்னை என்ன பண்றது , எருரு...மை .. எருமை ... யாராவது பலூனுக்காக உயிரைப் பணயம் வைப்பாங்களா ? " என்று சற்றே பதட்டமாக திட்ட ...

" அம்மா அதெல்லாம் நான் பேலன்ஸ் பண்ணீட்டேன் அவதான் பயந்துட்டா .." எனக்கூற ..

சரி அவ ரூம்கு போனாளே என்ன பண்றா ஏது பண்றாள்னு எட்டிப் பார்த்தியா ?

செந்தூரி கால் பண்ணிஇருந்தா மா , அவளிடம் பேசிவிட்டு , ஜீவி என்ன பண்றான்னு பார்க்கலாம்னு இருந்தேன் , அதற்குள் பாலா மாமா ஜீவி ரூம்கு போனார் , சரி அவர் வரட்டும் போலாம்னு இருந்தேன் , அதற்குள் நீங்க போய்டீங்க , சரி நீங்க வந்ததும் போலாம்னா , ரேவதி சித்தி என்னைச் சாப்பிட உட்கார வச்சிட்டாங்க , சரி அவளும் சாப்பிட வருவாள்னு நினைச்சேன் ,ஆனா அவ வரல எனக் கூற"..

ஜெயந்தி , " சரி திருப்பூர்ல இருந்தப்ப எப்பவாவது இப்படி அழுதிருக்காளா செந்து ? எனக்கேட்க ..

இல்லமா ... நல்லா ஜாலியாத்தான் இருந்தா .. ஆனா என்ன , பாலா மாமா சில சமயம் வெளி மாநிலத்திற்குச் செல்லும் போது கால் பண்ணா ரீச் ஆகாது , அப்போ மட்டும் ஒரு மாதிரி டல்லா இருப்பா .. அப்புறம் சரி ஆகிடுவா , அவளை மட்டும் கீழ் ரூம்ல தனியா விட்டுட்டு நான் மேலே தூங்க சங்கடமா இருந்தது அதனால் நான் கிழ ஹால்லதான் தூங்குவேன் அவளும் ரூம்ல தனியா படுக்க ஒருமாதிரி இருக்குன்னு ஹால்லதான் தூங்குவா மா .. நல்லா ஜாலியாதான் பேசிட்டு இருப்பா ...எனக் கூற ..

ஜெயந்திக்கு இப்போது மனதுக்கு சற்றே ஆறுதலாக இருக்க , " செந்து நீ ரஷ்மியிடம் பேசுனியா ? எனக் கேட்க ,

சற்றே மெளனித்த செந்து ஆமா மா ...சில நாள் முன்புதான் பேசினேன் , ஆனா மறுபடியும் எனக்கு கால் பண்ணாதீங்க நான் பேச மாட்டேன்னு சொல்லீட்டா , எனக்கூற ...

" ஹிம்ம்... என்றவள் , இங்கு பாரு செந்து உன்னோட வாழக்கையில ரஷ்மி முடிந்துபோன அத்தியாயம் , ரஷ்மியோடு வாழ்க்கை நின்னுபோயிறாது , நடந்து முடிந்ததை நினைத்து , இருக்கிற நாட்களை தொலைக்கக்கூடாது ... ரஷ்மியை மறந்துட்டு , ஜீவியோடு வாழ முயற்சி செய்.. எனக்கூற..

அழுத்தமான அமைதிகாத்த செந்துவோ , ஜெயந்தியை நேருக்கு நேராகப் பார்த்து நான் ஏன் மா ரஷ்மியை மறக்கனும் ? எனக் கேட்க , ஜெயந்தியோ சிற்றதிர்ச்சியை விழியில் ஏந்தினாள் ...

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro