அனிச்சம் பூ 9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நாட்கள் நகர்ந்தது , பாலா வின் விருப்பத்திற்காக செந்திலின் அப்பா ரகுநாதன் அவருக்குச் சொந்தமான தேயிலை தொழிற்ச்சாலையில் காலை நேரங்களில் அலுவலகம் மற்றும் தொழிற்சாலையிலும் , மதிய நேரங்களில் தேயிலை தோட்டத்திலுமாக , பாலாவை வேலைக்கு அமர்த்தினார் , பாலாவுக்குத் தேயிலை உலகம் புதிதாகவும் புரியாமலும் இருந்தது , பின் அதுவே அவனுக்கு உலகமாகி விட்டது .

தேவி , மீனாட்சியம்மா ரகுநாதன் அரவணைப்பில் இருந்தாள் , இரட்டைச் ஜடையும் , ஃபிரில் வைத்த மிடியும் , துள்ளல் நடையுமாய் , தேயிலைத்தோட்டதில்
தேன்சிட்டெனவே பறந்தாள் , தேவதையெனத் திரிந்தாள் , அன்பை அள்ளி எங்கும் தெளித்தாள் , மீனாட்சியம்மா வீட்டின் ஜன்னல்களில் ஹேர்கிளிப்பும் , மேசைகளில் வளையல்களும் , கண்ணாடிளில் ஸ்டிக்கர் பொட்டும் , நிசப்தங்களை உடைக்கும் கொலுசின் ஓசையுமாக , வீடெங்கும் அவள் வாசம் வீசியது , மூன்று தலைமுறைகளாக மகளே இல்லாமல் மருமகள்கள் இருந்த வீட்டில் முதல் முறையாய் ஒரு மகளின் வாசம் வீசுவதாய் ரகு நாதன் உணர்ந்தார் .

எங்கள் வீட்டிலும் பெண்பிள்ளை இருக்கிறாள் என்ற கர்வம் கூட அவருக்கு எட்டிப்பார்த்தது , தேவி , ரகு நாதனுடன் காலையில் வாக்கிங் செல்வது , தேனீர் சுவைப்பது , ஹின்டு நியூஸ் பேப்பர் படிப்பது , க்ராஸ்வேட் ஃபில் செய்து அவரிடம் காண்பிப்பது , இரவு என்னேரமானலூம் அவருக்காக காத்திருந்து அவரோடு கதைபேசியபடி உணவருந்துவது ,
என்று அவருக்கு பிறக்காத மகளாக , காலை விடியலும் மாலை முடியலும் அவளாகிப்போனாள் .

பாலாவின் திறமையும் உழைப்பும் ரகுநாதனை வெகுவாய் ஈர்த்தது , மூத்த மகன் சிவா ஆர்கிடெக் என்ஜினியரிங் மற்றும் எம்பிஏ முடித்து தன்நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் எமரால்ட் பில்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறான் ,

செந்திலோ பாலாவுடன் டெக்ஸ்டைல் படிப்பை தேர்தெடுத்து படித்திருக்கிறான் , ஆனால் பாலா தேயிலை பிஸ்னஸில் ஆர்வமாக இருப்பது அவருக்கு ஆறுதலாக இருந்தது ,

பாலா மாலை வீடு திரும்பும் போது தேவியின் பூ முகம் கண்டே புத்துணர்ச்சி பெற்றான் , பாலா ஒருமாதம் கழித்துத் தானும் தேவியும் தனி வீட்டில் தங்குவதாகவும் இரவில் மட்டும் தேவி உங்களுடன் இருக்கட்டும் , என்றும் மீனாட்சி அம்மாவிடம் கூறினான் ,

மீனாட்சி அம்மாவோ இதற்குச் சம்மதிக்கவில்லை , " இங்கே உங்களுக்கு என்ன பிரச்சனை சொன்னால் நான் சரி பண்ணுகிறேன் , தேவி சின்னப்பொண்ணு சமையல் கூடத்தெரியாது " என்றார் , பாலாவோ உங்களுக்கு சுமையாக இருக்கிறோமோ என்ற குற்ற உணர்வாக உள்ளது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டான் ,

இதைக் கேட்ட ரகுநாதனுக்கும் கோபமே மேலிட்டது , செந்திலிடம் " ஏன் பாலாவுக்கு இங்கே இருப்பதில் என்ன பிரச்சனை ? என்றார் ,

" நானும் சொல்லிப்பார்த்துட்டேன் பா அவன் பிடிவாதமா இருக்கான் , முதல்ல நீங்க அவன ஏத்துக்கமாட்டிங்கன்னு இங்க வரவே மாட்டேன்னு சொன்னான் , நான்தான் நீங்க எதுவும் சொல்லமாட்டீங்கன்னு கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்தேன் , அப்புறம் இங்க வந்தவுடன் வெளில வேலைக்கு போறேன்னு சொன்னான் , அதனால்தான் , நான் நம்ம எஸ்டேட்டிலே வேலைபார்க்கட்டும்னு உங்களிடம் சொன்னேன் ,

வேலைக்கு சேர்ந்த மறுநாளே முதல் மாதம் சம்பளம் வாங்கியவுடன் நானும் தேவியும் வெளியில் தங்கிக்கிறோம்னு சொன்னான் ", என்றான் செந்தில் .

"சரி அப்ப நம்ம கெஸ்ட் அவுஸில் தங்கிக்கட்டும் "என்றார் ரகுநாதன் ,

"சரிப்பா பாலகிட்ட சொல்றேன் "

மீனாட்சி அம்மாவும் ரகு நாதனும் தேவிக்கு தாலி பெருக்கி போடுவது என்று முடிவுசெய்து , நாள் குறித்து , மஞ்சள் கயிற்றை மாற்றி ஜெயினில் கோர்த்தனர் ,

பாலா , தேவி , இருவரின் தனி குடித்தனம் இனிதே ஆரம்பித்தது , சமையல் உட்பட அனைத்து வேலைகளையும் பாலாதான் செய்தான், காலை முதல் மாலை வரை பாலாவிடம் திட்டு வாங்குவது மட்டுமே தேவியின் வேலை ,

" தேவி எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைமா "

" தேவி சிந்தாமல் சாப்பிடு "

" குப்பையை டஸ்பின்ல போடு "

" லைட்ட போட்டா ஆஃப் பண்ணு "

" கதவை மெதுவா சாத்து "

" காலையில் நேரமா எழுந்திருச்சுப் பழகு "

" ஈர ட்ரஸ் எல்லாம் உதறி சுருக்கமில்லாம காயப்போடு "

" ட்ரஸ் மடிச்சு செல்வ்ல வை"

இது போல முதலில் அமைதியாகக்கூறியது , பிறகு கட்டளையாக ... பிறகு கோபமாக ... என்று , இப்போது தேவியின் காதில் தினந்தோறும் அட்சனையானது , என்றாலும் , திட்டி முடித்ததும் சமாதானம் செய்வான் , என்பதாலேயே அவன் திட்டுவதையும் திகட்டாமலே அனுபவித்தாள் ,

டென்த் பப்ளிக் ரிசல்ட் வந்தது தேவி ஸ்கூல் ஃபஸ்டாக தேர்வாகி இருந்தாள் , பாலா டீசியும் மார்க் ஷீட்டும் வாங்கியவுடன் அடுத்து தேவியை ஸ்கூலில் சேர்க்க ஆயத்தமானான் ,

தேவியோ பள்ளிசெல்ல மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தாள் ,

" போங்க மாமா இந்தத் தாலியோட ஸ்கூலுக்குப் போனா ஸ்டூடன்ஸ் எல்லாம் கேலி பண்ணுவாங்க" என்றாள் தேவி ,

" ஓ இதுதான் உன் பிரச்சனையா அப்போ தாலிச்செயினக் கழட்டி மீனாட்சிமாட்ட கொடுத்துரு , நீ எப்பபோ படிச்சு முடிக்கிறியோ அப்போ வாங்கிக்கலாம் " , என்றவனை கோபமாகப்பார்த்தாள் தேவி .

" ஏன் தேவி உனக்கு இந்த ஜெயினக்கழட்றதுல என்ன பிரச்சனை ? என்றான் ,

" மாமா தாலிய நீங்க நினைக்கிற மாதிரில்லாம் நினைச்சா போடவும் நினைச்சா கழட்டவும் கூடாது" என்றாள் ,

இதைக் கேட்ட பாலாவுக்கு சுருக்கென்று கோபம் வந்தது ,
இந்த வயதில் தாலி அணிந்ததே
தவறு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் இவள் வேறு , முட்டாள் தனமாய் பேசிக் கொண்டிருக்கிறாளே ,என்று நினைத்தவன் , தன் கோபத்தைக்
கட்டுப்படுத்திக்கொண்டு ,

"அதெல்லாம் ஒன்றுமில்லை தேவி , ஜஸ்ட் அது திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவோட ஆழத்த பலப்படுத்துற முயற்ச்சி , உண்மையான அன்பு இருக்கின்ற இடத்தில் தாலிக்கெல்லாம் வேலையே இல்லை" , என்றான் பாலா ,

அதையெல்லாம் தேவி சிறிதும் காது கொடுத்துக் கேட்கவே இல்லை " அதெல்லாம் முடியாது , சுமங்கலிப் பொண்ணுங்க தாலி கழட்டக்கூடாதாம் , நான் கழட்ட மாட்டேன்னா மாட்டேன்தான் ", என்றாள்

இவ்வளவு நேரம் பொறுமையாகப் பேசிய பாலா பொறுமை இழந்து அடிக்கக் கைகளை ஓங்கியவன் அடிக்காமல் விரல்களை சுருக்கிக் கொண்டான் , " இங்க பார் தேவி கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , நான் இப்ப ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் திரும்பி வரும்போது உன் கழுத்தில் இந்த ஜெயின் இருக்கக் கூடாது , நாளைக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் போடனும் அவ்ளவுதான் சொல்லிட்டேன் , என்று , கூறி விட்டு வேலைக்குச் சென்று விட்டான் ,

தேவியோ மீனாட்சி அம்மாவிடம் சொல்ல அவரோ பாலாவிடம் பேசி தாலியை கழட்டாதிருக்க வழிவகை செய்தார் , அவரின் பேச்சை தட்ட முடியாத பாலா தேவியை மனதுக்குள் திட்டித்தீர்த்தான் , மீனாட்சியம்மா கூறியபடி தேவியை டுட்டோரியல் சென்டரில் சேர்த்து விட்டான் . தேவியும் மிடியில் இருந்து சுடிதாருக்கு மாறினாள் ,

இரண்டு மாதங்கள் செல்லவும் டுட்டோரியல் சென்டரிலிருந்து பாலாவுக்கு அழைப்பு வந்தது , ஒரு வேளை தேவி நன்றாகப்படிப்தால் ரெகுலர் ஸ்கூல்ல சேர்க்கச் சொல்லி கூப்பிடுகிறார்களோ ? என்னவோ என்று நினைத்தான் ,

பாலாவும் செந்திலும் டுட்டோரியல் சாரைப்பார்க்க கிளம்பினார்கள் , அங்கே அவரோ " தேவிகாவ நீங்க ஸ்கூல் ஃபஸ்ட்ன்னு சொன்னீங்க , கரக்ட்தான் நானும் மார்க் ஷீட் பார்த்தேன் , ஆனா தேவிகா இப்போ எந்த சப்ஜக்டும் ஒழுங்கா படிக்கிறதில்லை க்ளாஸ் டெஸ்ட்ல எல்லாம் ஜஸ்ட் பாஸ்தான் வாங்குறாங்க , என்ன சொன்னாலும் கவனிக்க மாட்டேன்றாங்க , அதான் உங்கள்ட இன்ஃபாம் பண்ணிறலாம்னு வரச்சொன்னேன் , அவங்கள பாஸ் பண்ண வைக்க வேண்டியது எங்க பொருப்பு , அதே சமயம் ஸ்கூல் ஃபஸ்ட் வாங்கின பொண்ண மார்க் குறைந்து விட்டது என்று , நாளைக்கு நீங்க எங்களைக் குறை சொல்லக்கூடாது , அதைச் சொல்லத்தான் வரச்சொன்னேன் என்றவர் , சரி நீங்கபோகலாம் " என்றார் ,

பாலவும் செந்திலும் கிளம்ப முற்படும்போது , ஒரு நிமிஷம் , இதில் பாலா யாரு என்றார் அவர் ,

பாலா , நான்தான் என்று சொல்ல... அவர் நான்காய் மடித்த ஒரு பேப்பரை இது தேவகியின் டெஸ்ட் நோட்டில் இருந்து கிழித்தது என்று கொடுத்தார் ,

அதைப்பிரித்துப் பார்த்த பாலாவுக்கு கோபம் தலைக்கேறியது , அந்தப் பேப்பர் முழுதும் ஶ்ரீ ராம ஜெயம் போல் பாலா பாலா என்று நேர்த்தியாக போதிய இடைவெளி விட்டு எழுதியிருந்தாள் , அதைப் பார்த்த செந்திலோ சிரிப்பை அடக்க முடியாமல் வெகு சிரமப்பட்டான் .

வெளியே வந்த பாலா ச்ச... இவ ஏன்டா இப்படிப்பன்றா என்று செந்திலிடம் கேட்க போனவன் அவன் சிரித்த முகத்தை பார்த்து
" ஏன்டா என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கா " என்று செந்திலின் இரண்டு கைகளையும் முதுகின் பின்னே வைத்து திருப்பினான் ,

" டேய் விடுடா வலிக்குது " என்றான் செந்தில் , " நீ இதை கணேஷ்ட சொல்ல மாட்டேன்னு சொல்லு அப்பொழுதான் விடுவேன் , என்றான் பாலா , "

"சரி டா சொல்ல மாட்டேன்
விடுடா " என்றவன் , வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக பாலாவின் கண் முன்னே கணேஷிற்கு ஃபோன் பண்ணி ஸபீக்கரில் போட்டு , தேவியின் பாலா நாமத்தைக்கூற ,

கணேசோ " டேய் இவன் நம்மளையெல்லாம் படி படின்னு எவ்வளவு டார்ச்சர் பண்ணி இருப்பான் , வசமா தேவிக்கிட்ட மாட்டிக்கிட்டான்டா , முடிஞ்சா இப்ப தேவிய படிக்க வைக்கச்சொல்லுடா, என்று சிரித்தான் , அது சரி எப்படி எப்படி நீ துரத்தித் துரத்தி லவ் பண்ணனுமா ? நீ ப்ரப்போஸ் பண்ணா சீக்கிரம் ஓகே சொல்லாம இழுத்தடிச்சு , கடைசியா ஓகே சொல்லனுமா ? அது சரி ஆனாலும் தேவி உன்னோட கனவுல ஒரு லாரி மண்ணை ஒட்டுமொத்தமா கொட்டிருக்கக் கூடாது .. இப்ப தேவி துரத்த ஆரம்பிச்சுட்டா ! என்று கேலி செய்தான் ...

தேவியின் வரவிற்காக மாலைவரை காத்திருந்த பாலா , அவள் வந்து அவள் பணிகளை முடிக்கும் வரை பொறுமை காத்தவன் , பிறகு

தேவியின் முகத்திற்கு முன்பாக அவள் எழுதிய பேப்பரை நீ்ட்டி இது என்ன ? என்று கேட்க ,

"தேவி வழக்கம் போலத் திரு திரு பார்வையையே " பதிலாய் தந்தாள் ,

வயசுக்கு மீறின வேலை செய்யாதே ! என்று திட்ட முடிந்த அளவு திட்டி விட்டு அந்தப் பேப்பரை அவள் கண் முண்ணே கசக்கி தூக்கியெறிந்து விட்டு கோபமாக வீட்டை விட்டு வெளியே சென்றான் , தேவி அழுதபடி உறங்கிப்போனாள் ,

பாலா கார்டனில் கோபம் தீரும் வரை நடந்தவன் , வீட்டிற்கு வந்ததும் , அவன் காலடியில் அவன் கசக்கிப் போட்ட பேப்பர் கிடந்தது , அதை தூக்கி வீசப் போனவன் , அந்தக் கசங்கிய பேப்பரை விரித்து ஏனோ அவனறியாமலே மார்போடு வைத்துக்கொண்டான் , அவனது இதயத்துடிப்பில் அந்தக் காகிதம் அதிர்ந்து கொண்டிருந்தது , அவனுக்குள் ஏதோ இனம்புரியா உணர்வு , அதை வீச மனமின்றி தன் டைரியில் பத்திரப் படுத்தினான் .

அவ்வளவு குளிரிலும் வெற்று தரையில் உறங்கிக் கொண்டிருக்கும் தேவியை பார்த்தான் , " தேவி.. எழுந்திரு சாப்பிடலாம் என்று எழுப்பினான் அவள் திரும்பிப் படுத்தவள் மீண்டும் தூங்கினாள் ,
மீண்டும் எழுப்பிக்கொண்டிருக்கும் போதே மீனாட்சியம்மா அங்கு வந்தார் " என்ன பாலா தேவி தூங்கிட்டாளா சாப்பிட்டாளா இல்லையா ? "

" இல்லமா இனனும் சாப்பிடவில்லை " என்றான்.

" எனக்குத் தெரியும் ஒழுங்கா படிக்கலைன்னு நீ திட்டிஇருப்ப , செந்தில் சொன்னான் தேவி டெஸ்டுல மார்க் குறைவா எடுத்திருக்கான்னு , நான் கூட்டிட்டுப்போய் சாப்பிட வச்சு தூங்க வைக்கிறேன் " என்றார் ,

இல்லம்மா நான் பார்த்துக் கொள்கிறேன் , நீங்க போய் தூங்குங்க அம்மா , என்றான் .

பாலா ,பால் காய்ச்சி அவளை எழுப்பி குடிக்கச் செய்து விட்டு , முகம் கழுவச்சென்றவன் திரும்பி வந்து பார்க்கும் போது பாலைக்குடித்து விட்டு மீண்டும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் ,

அவளை இரு கரங்களிலும் ஏந்தி தூக்கி வந்து பெட்டில் படுக்கவைத்து ப்ளாங்கட்டை போர்த்திவிட்டான் , அவள் தூங்குவதையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் , அவளிடம் ஏதோ மாற்றம் இருப்பதாய் உணர்ந்தான் ஆம் அவள் சற்று வளர்ந்திருந்தாள் ,

இப்பொழுதெல்லாம் சற்று பொருப்புடன் நடந்து கொள்கிறாள் , கடமைகளை சரி வரச் செய்கிறாள் கடமையை மட்டுமா செய்கிறாள் காதலையும்  செய்கிறாள் என்று எண்ணி தனக்குள் சிரித்துக்கொண்டான் . ஆனால் படிப்பில்தான் சற்று சொதப்புகிறாள் , சரி இனி இவளுக்கு நாமே பாடம் சொல்லித்தரலாம் என்ற முடிவிற்கு வந்தான் .

நாட்கள் நகர்ந்தது .. தேவிக்கு பாலாவே பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்தான் , அவள் பாடத்தோடு பாலாவையும் சேர்ததே கவனித்தாள் ,

பாலா பேனா பிடித்து எழுதுவது , பின்தலை கோதுவது ,
பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டபடி யோசிப்பது , வணடி ஓட்டுவது ,
காற்றில் அவன் முடி கலைவது ,என்று அனைத்தையும் ரசித்தாள் , பாலா அவளுக்கு ஹிரோவாய் ஆனான் ,

பாலவும் அவளை கவனிக்கவே செய்தான் , அவள் தலையசைவில் ஆடும் ஜிமிக்கியும் ,
தவறு செய்து விட்டு விழிக்கும் திரு திரு தருணங்களையும் ,
அவள் எழுதும் போது முன்னே விழுந்து தொல்லை செய்யும் ஒற்றை ஜடையையும் ,
கேள்வியாகத் தூக்கும் ஒற்றைப் புருவததையும் , என அனைத்தையும் ரசித்தான் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro