அனிச்சம் பூ 10

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

செந்தில் பாலாவிடம் " பாலா எம் பி ஏ படிக்க யு எஸ் ல அப்ளே பண்ணப்போறேன்டா ," என்றான்

ஓகே நல்ல விஷயம் போய் படிடா , எப்ப அட்மிசன் , நீ எப்ப கிளம்பபுற ? 

" கிளம்புற இல்ல , கிளம்புறோம் "

"என்னடா சொல்ற ? "

"ஆமா உனக்கும் எனக்கும் சேர்த்துத்தான் அப்ளே பண்ணப்போறேன் , நீ என்ன கேக்குறதா இருந்தாலும் அப்பாவிடம் கேட்டுக்க , அப்பா நம்ம இரண்டு பேருக்கும் சேர்த்து அப்ளை பண்ணச்சொன்னார் .

பாலா ரகு நாதனிடம் "அப்பா வேணாம்பா , செந்தில் மட்டும் போகட்டும் " என்றான் ,

ரகு நாதனோ " எனக்குத் தெரியும் நீ இப்படி சொல்வேன்னு , உன்னைப் படிக்க வைக்கிறதால எனக்கு எந்த கஷ்டமும் இல்ல , அட்மிசன் ஃபீஸ் செம் ஃபீஸ் நான் கட்றேன் , ஏதாவது பார்டைம் ஜாப் கிடைக்குமான்னு பாருங்க , கிடைச்சா அதில் வர்ற பணத்தை உங்க செலவுக்கு வச்சுக்கங்க , நான் உங்க பேர்ல போடுற பணத்தை வேணும்னா எடுத்து செலவு பத்ணுங்க வேணாம்னா விட்டுருங்க , நீ படிச்சு வேலைக்கு போய் சம்பாதித்த பிறகு , நான் செலவு செய்த பணத்தை வேணும்னாலும் திரும்பக் கொடு , நான் வாங்கிக் கொள்கிறேன் , அதற்காக அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்கறமேன்னு , அடுத்தவங்க பணத்தில் எப்படி படிக்கறதுன்னு  நினைச்சு ,உன்னோட திறமையையும் , படிப்பையும் கெடுத்துறாத , அப்புறம் நாளைக்கே உங்கப்பா மனசு மாறி உன்னைப் பார்க்க வந்தால் , என்னைப்பற்றி என்ன நினைப்பார் , என்னை நம்பி வந்த பிள்ளையை எஸ்டேட்டில் வேலைக்கு விட்டுட்டு தன் மகனை மட்டும் படிக்க வைக்கிறார்னு தப்பா நினைக்கமாட்டாரா? நீ ரொம்ப திறமைசாலி , உனக்கு இன்ரஸ்ட் இருந்துச்சுனா டீ டேஸ்டிங் அன்ட் ப்ளான்டேசன் டெக்னாலஜி டிப்ளமோ கோர்ஸ் அஸ்ஸாம் இன்ஸிடியூட்ல படிச்சிட்டு , அப்புறம் யூஎஸ்ல எம் பி ஏ அக்ரி பிஸ்னஸ் மேனேஜ்மன்ட் படிப்பா , உனக்கு யூஸ் ஃபுல்லா இருக்கும் , இது என்னோட ஒப்பினியன் , அப்படி இல்லனா உனக்கு என்ன படிக்கனுமோ படி " என்றார் ரகுநாதன் ,

பாலாவுக்கும் தேயிலை மீதிருந்த ஆர்வத்தால் அஸ்ஸாமில் டீ கோர்ஸை படித்து பின் அக்ரி பிஸ்னஸ் படிக்க முடிவெடுத்தான் , ஆனால் அவனுக்கு தேவியை விட்டு பிரிவது தன்னால் இயலுமா என்பதே பெரிய கவலையாக இருந்தது ,

தேவி , பாலாவிடம் " மாமா நீங்க யூஎஸ் போறீங்களா ? மாமா என்னை விட்டுட்டு எங்கேயும் போகாதீங்க மாமா" என்று அழுக ஆரம்பித்தாள் ,

"ஏய் நான் இப்போ போகல நான் போக நான்கு ஐந்து மாதமாகும் " ,

"எப்பனாலும் நீங்க போகவேண்டாம் இங்கதான் இருக்கனும் என்று மீண்டும் அழுதவளை தன்னோடு சாய்த்துக் கொண்டு அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து சரி மாமா எங்கேயும் போகல , ஓ கேயா ? என்று பொய் சொல்லி சமாதானப் படுத்தியவன் மனமோ சமாதானம் ஆகாமல் அவளை விட்டு போவதை நினைத்துப் பயந்தது , தானாக அவன் கைகள் அவளை இறுகப் பற்றியது , அவளை விலகினால் அவள் கற்பூரமாய் கரைந்து விடுவது போல் பயத்தில் , அவளை விட்டு நீங்கும் எண்ணமில்லாமலே இருந்தான் .

ன்னங்க சொல்ரீங்க , பாலா யுஎஸ் போய்டா அப்புறம் தேவி என்னபண்ணுவா ? ஏற்கனவே வீட்ல எல்லாரையும் விட்டுட்டு இங்க வந்து இருக்கா இங்க அவளுக்கு தெரிஞ்ச ஒரே முகம் பாலா தான் , அவனையும் அனுப்பி விட்டுட்டா தேவி என்னபண்ணுவா பாவம் , என்றார் மீனாட்சி அம்மா ரகுநாதனிடம் ,

ரகுநாதன் " அப்புறம் நான் என்ன பண்றது செந்தில அப்ராட் அனுப்பி வைத்துவிட்டு , பாலாவ மட்டும் இங்க வேலை பார்க்கச் சொல்ல மனசு இடங்கொடுக்கல , இரண்டு வருஷமா அங்கேயேவா இருக்கப்போறாங்க இடை இடையில வந்துட்டு போகட்டும் , என்றார் ரகுநாதன் ,

என்ன இருந்தாலும் தேவியும் பாலாவும் இன்னும் வாழ்கையை ஆரம்பிக்கல , பாலவோட இருந்தா பரவா இல்ல , வயசுப் பொண்ண இரண்டு வருஷமா நம்ம வச்சிருக்கது தப்புங்க ,

" பின்ன என்ன பண்றது ? என்றார் ரகுநாதன்

" பாலாவுக்கும் தேவிக்கும் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணலாம் , முதல்ல தேவி முறைப்படி பாலாவோட மனைவி ஆகட்டும் , ஒரு வேளை தேவி கன்சீவ் ஆனாக்கூட ஒரு குடும்பமா ஆகிடுவாங்கல்ல , அதனால பாலா ஊருக்குப் போறதுக்குள்ள இதுக்கு ஒரு முடிவு பண்ணனும் , என்றார் மீனாட்சி ,

" நீ பேரன் பேத்திய பார்கிற முடிவுக்கு வந்துட்ட இனி நான் சொல்லி நீ கேற்க்க போறதில்லை , இனி உன் இஷ்டம் " என்று சிரித்தார் ரகு நாதன் ,

நாட்கள் நகர நகர பாலாவுக்கு பிரியப்போகிறோம் என்ற எண்ணமே தேவி மீதான பிரியத்தை அதிரித்துக் கொண்டிருந்தது , அவளை தன் பார்வை வட்டத்துக்குள்ளே வைக்க ஆசைப்பட்டான் , கிடைத்த நேரத்தை யெல்லாம் தேவியுடனேயே கழித்தான் , தேவியோ தன்னைத் திட்டாமல் அன்பைக் கொட்டும் புது பாலாவைக் கண்டாள் , திட்டும் போதே திகட்ட திகட்ட விரும்பியவள் அன்பைக் கொட்டும் போது சொல்லவும் வேண்டுமோ ?

மீனாட்சியம்மா தன் மூத்த மகனையும் மருமகளையும் வரவைத்து அவர்கள் மூலமாக நல்லநாள் பார்த்து பாலாவுக்கும் தேவிக்கும் சாந்திமுகூர்த்தம் ஏற்பாடு செய்தார் , பாலா இதே முன்பென்றால் கண்டிப்பாக இதற்கு சம்மதித்திருக்க மாட்டான் , அவளின் குழந்தை முகம் பார்க்கையிலே ஏனோ அவனது குற்ற உணர்ச்சி அவனைத் தட்டிக்கேட்கும் ,
பள்ளி செல்பவளைத் திருமணம் செய்தோமே என நினைக்கும் போதே அவன் மனம் அவனை எள்ளி நகைக்கும் , செல்லமாய் வளர்ந்த சின்னஞ் சிறு பெண்ணை குடும்பத்திலிருந்து பிரித்தோமே என மனம் குழம்பித் தவிக்கும் ,

அவளுடய கல்வி எதிர்காலம் என அவளின் முன்னேற்றத்திற்காக அவளை நெருங்காமல் காதல் எல்லையில் கடைக்கோடியில் எட்டியே நின்றுகொண்டிருந்தான் .

உனகும் எனக்கும் 
இடைவெளி தான்
இப்பொழுதும்
ஏனோ உன்
குழந்தை முகம்
எனைக் கட்டிப் போடும்
எப்பொழுதும் .

அதனால் தானடி
காதல் சட்டமிட்டு
எனைச் சுற்றி
ஓர் வட்டமிட்டு
அதன் விட்டத்திற்குள்
கட்டுப்ட்டே  நிற்கிறேன்
முப்பொழுதும் ...

ஆனால் உன்னை
விட்டு எட்டி செல்ல 
நினைக்கையிலே
ஒட்டிக் கொண்ட
வெறுமை வந்து
எனைத் தட்டித்தட்டி
தள்ளிவிடுதே உன்னிடம் .

ஆனால் இப்பொழுதோ ,

இயல்பாய் இருக்க இயலாமல் தவித்தான் , அவன் தன்னைச் சுற்றி வட்டமிட்டு எட்டிநிற்க கட்டுப்பட்ட காதல் அவளை விட்டுப்போக நினைக்கையிலே ஒட்டிக் கொண்டு உரிமை கோருகிறது . அவளை விட்டுப் பிரியநேரும் வெறுமை அவனை பயமுறுத்தி அவள் பக்கதில் அழைத்துச் செல்கிறது .

தேவி மீதுள்ள பேரன்பெனும் பெருங்காதல் அவள் என்னவள் என் மனைவியெனும் உரிமை எடுத்துக் கொள்ளவும் , கொடுத்துக் கொள்ளவும் , விரும்பியது , ஒரு நன்நாளில் தேவி பரிபூரணமாக பாலாவின் மனைவியானாள் .

மாதங்கள் சென்றது , பாலா அஸ்ஸாமில் நான்கு மாத டீ டெக்னாலஜி டிப்ளமோ கோர்ஸ் படித்து முடித்திருந்தான் , செந்திலுக்கும் பாலாவுக்கும் யு எஸ் யுனிவர்சிட்டியில் அட்மிசன் கிடைத்து , இருவரும் யு எஸ் சென்றனர் , தேவி தற்போது மூன்றுமாதம் கற்பமாக இருந்தாள் , பாலா தேயிலையை இறக்குமதி செய்து தரம் பிரித்து மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்தில் பார்ட் டைம் வேலைப் பார்த்துக் கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்தினான் ,

செந்தில் எம்பிஏ கன்ஸ்ட்ரக்சன் மேனேஜ்மென்ட் படித்தான் ,

பாலவிற்கு அவ்வப்போது தன் அப்பா கூறியது நினைவில் வந்து வருத்தியது , அவர் கூறியது உண்மை என்பது போல் அல்லவா கல்யாணம் குழந்தை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் , தேவியைப் படிக்கவைத்து , தானும் நல்ல நிலமைக்கு வந்த பிறகு , அப்பா அக்கா விடம் உண்மையைச் சொல்லி அவர்கள் ஆசிர்வாதத்துடன் வாழ்கையை ஆரம்பிக்க வேண்டும் என எண்ணியதற்கு மாறாக திருமணவாழ்கை குழந்தை என்று ஆகிவிட்டதே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் , அப்பாவின் முகத்தில் எப்படி விழிப்பது ? என்றெல்லாம் யோசித்து , பெற்ற அப்பாவிடமும் வளர்த்த அக்காவிடமும் மீண்டும் சேரும் எண்ணத்தையே கை விட்டிருந்தான் .

தேவிகாவிற்கு ஆறு மாதங்கள் கழித்து பெண் குழந்தை பிறந்தது , பாலா அவள் முகம் பார்த்துக் கவலைகள் மறந்தான் , செந்திலோ பாலாஜீ தேவிகா இருவரின் பெயரின் கடைசி எழுத்துக்களைச் சேர்த்து  குழந்தைக்கு ஜீவிகா என்று பெயர்வைத்து கொஞ்சி மகிழ்ந்தான் , பாலாவுக்கும் தேவிகிக்கும் ஜீவிகாவே உலகமானாள் .

பாலா படித்து முடித்து யு எஸ் ஸிலேயே வேலைக்குச் சேர்ந்தான் தேவியையும் ஜீவிகாவையும் தன்னுடனேயை வைத்துக்கொண்டான் , ஏழு வருடங்கள் அங்கேயே வேலைபார்த்து பின் இந்தியா திரும்பி தன் சேமிப்பு அனைத்தையும் டீ பிஸ்னஸிலேயே முதலீடு செய்தான் வங்கி கடன் பெற்று தொழிலை ஆரம்பித்தான் .

இரவு பகல் பாராமல் உழைத்தான் , நீலகிரி மற்றும் அஸ்ஸாம் , காங்ரா , டார்ஜ்லிங் என்று சிறந்த தேயிலை களைத் தேடி கொள்முதல் செய்து முதல் தரமான டீ யை உற்பத்தி செய்து ருஷ்யா, போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமேரிக்க ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தான் ,

மேலும் தனக்குச்சொந்தமான எஸ்டேட்டில் தேயிலை தவிர வாசனைப் பயிர்கள் , சிறுதானியங்கள் , போன்றவற்றையும் விளைவித்து , மூலிகைத் தோட்டங்களையும் உருவாக்கி ஹெல்த்ரிங்ஸ் , ஹெர்பல் டீ , க்ரீன் டீ , அதோடு மருத்துவ குணமிக்க மலர்களால் ஆன டீ , மற்றும் வாசனைப்பயிர்கள், என அவற்றையும் ஏற்றுமதி செய்தான் , பத்து ஆண்டுகள் வரை தொழில் வந்த லாபத்தை மீன்டும் தொழிலியே முதலீடு செய்து தொழிலைப் பெருக்கி உலகத்தரம் வாய்ந்த எலைக்ஸ் என்ற டீ நிறுவனத்தை உருவாக்கினான் , தொழில் ஆரம்பித்து இந்த பதிமூன்று ஆண்டுகளில் தனக்கென அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தான் ,

பாலாவின் நிர்வாகத்தில் , தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் முதல் தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வரை அனைவரையும் , சமமான மரியாதையுடனே நடத்தினான் , அர்களுக்குத் தகுந்த ஊதியம் , மற்றும் வைப்புநிதி , மருத்துவச் சலுகைகள் , காப்பீடுகள் , என அனைத்தும் முறையாகச் செயல்படுத்தினான் , தொழிலும் குடும்பமுமே பாலாவின் உலகமாய் இருந்தது , ஆனால் அவன் மனதில் உள்ள குற்ற உணர்ச்சி தன் அப்பாவையும் அக்காவையும் பார்க்கவிடாமல் அவனைப்பாடாய் படுத்தியது .

ஃபேஸ்புக் போன்ற இணையப் பக்கங்களில் கூட கம்பனி பெயரிலேயே அக்கவுன்டை க்ரியேட் பண்ணியிருந்தானே தவிர அவனது பர்ஸ்னல் ப்ரொஃபைல் க்ரியேட் பண்ணவில்லை , மறந்தும் அவன் மற்றும் அவனது குடும்ப ஃபோட்டகளை பதிவிடுவது இல்லை , கணேஷ் மற்றும் செந்திலின் ஃபேஸ்புக் , இன்ஸ்டா , பக்கங்களில் கூட இவனது ஃபோட்டோகளை பதிவிட அனுமதிப்பதில்லை , ஆனால் எப்படியோ தன்ராஜ் இவனை அறிந்துகொண்டு , ஃபோன் செய்து பேசியபிறகுதான் அலையடித்தன பாலாவின் பழைய நினைவுகள் , அந்த நினைவுகளில் மூழ்கிப் பால்கனியில் நின்றவனை தேவிகாவின் குரல் அசைத்தது ,

" என்ன மாமா தூங்காம
இங்க என்ன பண்றீங்க? "....

பாலா தேவியைத் திரும்பிப் பார்த்தான் , ஏனோ இப்பொழுதும் அவள் முகத்தில் அந்த குழந்தை குணம் குடிகொண்டுதான் இருந்தது , ஆம் அவள் மனதை கடினமாக்கும் அல்லது கலங்கவைக்கும் எந்த காரணியையும் அவள் அருகில் நெருங்ககூட விட்டதில்லை அவன் , அவனைப் பொருத்தவரை இன்றும் அவள் குழந்தைதான் , காதலிதான் , மனைவி என்பதையே மறந்திருந்தான் .

தன் அருகில் வந்து நின்றவளை தன்னோடு சேர்த்துகொண்டு அவள் முகம்பார்த்து மெலிதாய்ப் புன்னகைத்தான் , தென்றல் சிறு குழந்தை போல இருவரையும் சுற்றி விளையாடியது , வானில் நிலவு உலவியது , நிலவின் வெள்ளை ஒளியில் இருவரும் கொள்ளை அழகில் மிளர்நதனர் . இவர்கள் நிலவைப் பார்க்கவில்லை , மாறாக நிலவு இருவரையும் பார்த்து பொறாமை கொண்டது , ஆம் அன்று முதல் இன்று வரை இவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் தேய்ந்து வளரும் நிலவுக்குத்தானே தெரியும் , என்றுமே தேயாத இவர்களுடைய காதலின் அருமை .


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro