அனிச்சம்பூ 11

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்த வீட்டில் குழந்தைகள் சாக்லேட் பேப்பர்களால் நிறைப்பது போல அந்தக் கல்லூரி வளாகத்தின் துப்புரவாளர்களால் சுத்தம் செய்த பிறகும் மரங்கள் தன் சருகுகளை உதிர்த்துக்கொண்டிருந்த காலை நேரம் , ஜீவிகா அந்த மரத்தடியின் ஸ்டோன் பெஞ்சில் தன் நட்புகளின் வருகைக்காக காத்திருந்தாள் .

அவளின் மனதில் சனி ஞாயிறு என்ற இரண்டே நாட்களின் இடைவெளியில் இனம்புரியாத ஏதோ இனிய உலகத்துக்குச் சென்று திரும்பியது போலிருந்தது , ஏன் இப்படித் தோன்றுகிறது என்றே யோசிக்கையில் எல்லாம் அவன் ( நம்ம ஹீரோ ) செயல் என்பதாகவும், நட்புகளுடன் பகிர்ந்து கொள்ள ஏதோ மகிழ்ச்சியான நிகழ்ச்சி இருப்பதாவும் தோன்றியது , ஆனால் எப்படிச்சொல்வது ?

இவர்களின்
நட்பு எல்லையில்
காதல் என்பது
தடைசெய்யப்பட்ட பகுதி ,

தன் தோழிகள் கூட காதலால்
காயம்படக்கூடாதென்று , முதலில் ஸ்டடீஸ் , கரியர், அப்புறமே காதல் என்று காதல் கட்டுப்பாட்டு அதிகாரியாய் செயல்படுவள் ஆயிற்றே இவள், மீறினால் இவர்களின் கூட்டத்தின் தலைமை இர்ஃபானிடம் சொல்லி ஆவன செய்து ஆப்பு வைத்துவிடுவாள் , இர்ஃபான் வீட்டில் காதல் புயலால் ஏற்பட்ட இழப்பு அவனை , தன் நட்புக்களையும் காதலில் இருந்து காப்பாற்றவே நினைத்தது , இந்தநிலையில்

எப்படிச் சொல்வது ,
யாரிடம் சொல்வது ,
அவனைக் கண்டதையும்
காதல் கொண்டதையும் ,
பகிர்ந்திடாத துன்பம்
மட்டும் பாரம் இல்லை ,
பகிர்ந்திடாத இன்பம்
கூட பாரம் தான் .

அதுவும் ஊர் பேர் தெரியாத ஒருவனைப் பார்த்ததிலிருந்து பைத்தியமாய் இருக்கின்றேன் என்றா? படும் அபத்தமாக அல்லவா இருக்கிறதது ,இப்படி அவள் மனம் நொடியில் நூறு நினைவுகளில் தவித்ததுக்கொண்டிருக்கும் பொழுது தான் ,

" ஜீவீ.... "
தோழியின் அழைப்பில் திரும்பினாள் ,

"ஏய் மானுக்குட்டி (மான்ஷா) ஏன்டி அங்க இருந்து வரும் போதே கத்தீட்டு வர்ற , இர்ஃபா எங்கடி ? "

ம்..பின்னாடி வர்றான் ,

இர்ஃபான் , நித்தின் , ஸ்வேதா , என்று அவர்களின் ஆஸ்தான மரத்தடியில் காலைக் கூட்டம் ஆரம்பித்தது , நித்தின் தன் கையிலிருந்த பேக்கை ஸ்வேதாவின் மடியில் போட்டுவிட்டு , நகர முற்படும் போது ,

"டேய் நித்தி என்னோட பென்ட்ரைவ கொடு " − மானு (யுத்தம் .... ஆரம்பம் )

சாரி மானு அத.....அத....

" சொல்லித் தொலடா எங்க என்னோட பென்ரைவ் மறந்திட்டு வந்திட்டியா ?

"இல்ல மானு என்னோட பேன்ட் பாக்கெட்டில் போட்டிருத்தனா மறந்திட்டு பேன்ட பென்ட்ரைவோட வாஷிங்மெஷினில் போட்டுட்டேன் "

" என்ன வாஷிங் மிஷின்ல போட்டடுட்டியா ?
அடப்பாவி உன்ன ஏன்டா கொரெனோ கொண்டு போல ? " எனக்குத் தெரியாது என்னோட பென்ட்ரைவ் எனக்கு வேணும் , அதுல ஃப்ரொசென் 2 ம், டாய் ஸ்டோரி 4 மூவியும் இருந்தது நான் இன்னும் பார்க்கக் கூட இல்ல ,

"அப்போ உனக்கு அந்த பொம்ம படம்தான் வேணும் , பென்ட்ரைவ் வேண்டாம் அப்படித்தான ? சரி விடு , ஜீவியோட லேப்டாப்ல நீ சொன்ன இரண்டு படமும் வச்சிருக்கா , நீ அதுல பார்த்துக்க ஓகேயா ? என்ற நித்தின் அவளின் பதிலுக்காக காக காத்திராமல் சற்றுத் தள்ளி நின்ற ஜூனியர் மாணவனின் தோளில் கை போட்டவாறு "ஆமா வர்ஷா பொண்ணு (அஸிஸ்டன்ட் ப்ரொபஸர் ) காலேஜ்கு வருதா இல்லையா ? ஆளே பார்க்க முடியல " என்று கேடடுக்கொண்டே இரண்டடி எடுத்து வைத்தான் ,

இங்கே முழுவதும் ஆங்ரிபேடாய் மாறிய மானுகுட்டி " இங்க பாரு இர்ஃபா அவனை " என்று நித்தினை முறைத்தாள் , சற்று தூரம் சென்ற நித்தின் அவனின் பேன்ட் பாக்கெட்டில் கைவிட்டு மானுவுடைய பென்ட்ரைவை எடுத்து கேட்ச் என்று சொல்லி இர்பாவிடம் வீசினான், அவனும் மிஸ் பண்ணாமல் கேட்ச் செய்து மானுவிடம் கொடுத்துவிட்டு ,

"ஏன்டா இப்படிப் பன்ற ? என்பது போல் நித்தினுக்கு சைகை செய்தான் " ,

திரும்பி அங்கே வந்த நித்தின்,

" நான் வாஷிங் மிஷினில் போட்டேன்னுதான் சொன்னேன் ஆனா மிஷின ஆன் பண்ணினேன்னு சொன்னேனா ?

ஆமா நீ என்ன சொன்ன மானு ? டாய்ஸ்டோரி.... 4.. ஹம்..... அந்தப் பென்ட்ரைவ்ல ப்ராஜக்ட் நோட்ஸ் இருந்துச்சு , அது மிஸ் ஆகிடுச்சுன்னு கவலை இல்ல , எலக்டீவ் 3 நோடஸ் அதில இருந்துச்சே அதப்பத்தியும் கவலை இல்ல , அது என்ன படம் ஃப்ரொசென் 2 , டாய் ஸ்டோரி 4 ம். அந்த பொம்மப் படம் மிஸ் ஆகிடுச்சுன்னு உனக்கு அவ்ளவு கோபம் வருது .... திருத்தமுடியாது டீ திருத்தவே முடியது... என்று மானுக்குட்டியிடம் சொல்லிவிட்டு , தன் விட்ட கடமையைத் தொடரப் போய்விட்டான் ( வர்ஷாவைப் பற்றி விசாரிப்பது ) .

ஏய் மலமாடு நில்லுடா , உன்னோட பேக்க யாரு உங்க பாட்டியா எடுத்துட்டு வருவா ? - இது ஸ்வேதா

ஆமா கரெக்டா சொன்ன நீதான பாட்டி அப்ப நீதான் எடுத்துட்டு வரனும் − நித்தின்

காலை குட்மானிங்கில் ஆரம்பிக்குமோ இல்லையோ ஆனால் இவர்களின் சண்டை இல்லாமல் ஒரு நாளும் ஆரம்பிக்காது ,

நின்றால் , உட்காரந்தால் என அனைத்திலும் சண்டை போடும் வல்லமை நித்தின் ஸ்வேதா மானுக்குட்டி மூவருக்கும் உண்டு இதில் அவ்வப்போது இர்ஃபான் ஜீவி யும் கூட விதிவிலக்கல்ல ,

நட்பின் சண்டைகள் எப்பொழுதுமே விசித்திரமானது , சமாதானத்திற்கும்
சாத்தியமில்லை , ஆனால் பிரிவுக்கும் வாய்பில்லை .

ஏய் ஜீவி என்னப்பா சைலன்டா இருக்க ? ஆமா நான் உனக்கு சாட்டர்டே மார்னிங் கால் பண்ணினேன் நீ அட்டன் பண்ணல , - இர்ஃபா

அப்டியா எப்போ ?

ம்.... 10. 45 இருக்கும்

'ம்கூம்.... பத்தேமுக்காலுக்கா அப்பத்தான் அவனப் பார்த்து எனக்கு பைத்தியம் புடிக்க ஆரம்பிச்சது ' மனதுக்குள் புலம்பினாள் ,
" ஓ 10. 45 ஆ அப்போ தீப்திக்கு இன்டர்வியூன்னு அவங்ககூட வெளில போயிருந்தேன் சாரி இர்ஃபா பார்க்கல..

நாட்கள் வாரங்களாக ...வாரங்கள் மாதமாக என்று ஒரு மாதம் முடிந்திருந்தது , ஜீவிகா அன்று பார்த்தவனை இன்றுவரை மீன்டும் பார்க்கவில்லை , அவள் மனதில் அவனின் நினைவுகள் நீங்கியபாடில்லை , அவளுக்குள் அவனை மீண்டும் பார்ப்போமா என்ற பயம் வர ஆரம்பித்தது , எங்கே கடைசிவரை அவனைப் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் வந்து அலைக்கழித்தது , நாம் ஒரு முட்டாள் தனமான ஆசையில் விழுந்திருக்கிறோம் என்பது அவளுக்கு அப்பட்டமாக உரைத்தது .
ஆனாலும் ஏனோ புத்தியும் காதலும் போட்டிபோட்டுக் கொண்டிருந்தது .

நட்புகளிடமும் அவளறியாமலே அமைதி காத்தாள் , வீட்டிலும் சில நேரம் தனிமை விரும்பினாள் , படிப்பில் கூட கவனம் சிதற ஆரம்பித்தது , செமினாரில் கூட சொதப்பினாள் அது இர்ஃபானின் கூர் பார்வையில் தவறவில்லை , சில நாளகவே இர்ஃபானுக்கும் ஜீவியிடம் ஏதோ மாறுதல் தெரிந்தது .

இர்ஃபான் செமினார் முடிந்ததும் நித்தின் , மான்ஷா , ஸ்வேதா மூவரையும் அனுப்பி விட்டு ஜீவிகாவிடம் தனிமையில் பேசினான் ,

" சொல்லு ஜீவி உனக்கு என்ன பிரட்சன ? "

" ஒன்னும் இல்லையே எனக்கு என்ன பிரட்சன ? "

" நானும் , கொஞ்ச நாளாக பார்த்துட்டுத்தான் இருக்கேன் நீ சரி இல்ல ஜீவி , உனக்குத் தெரியுமா ? அங்கிள் கூட என்கிட்ட கேட்டாங்க ஜீவிக்கு காலேஜ்ல எதுவும் ப்ராப்ளமான்னு "

துணுக்குற்ற ஜீவி "என்ன அப்பா உன்கிட்ட கேட்டாங்களா ? " என்றாள் ,

" ஆமா என்கிட்ட கேட்டாங்க நான் அப்டில்லாம் ஒன்னுமில்ல அங்கிள் நான் பார்த்துக்கிறேனு சொல்லி சமாளிச்சுட்டேன் , உனக்குத் தெரியுமா என் கிட்ட கேட்டுட்டு மறுபடியும் ஒரு மூனு நாள் அங்கிள் உன்னை அவேரே காலேஜ்ல ட்ராப் பண்ணினார் , நீ வீட்லயும் ஏதோ டிஸ்டப்டா இருந்துருக்க , ஏன் இன்னைக்கு கூட பாரு செமினார்ல சொதப்புற .. என்னாச்சு ஜீவி என்னிடம் கூட சொல்லக்கூடாதா ? யாரவது உனக்கு தொல்ல கொடுக்குறாங்களா?

" அப்டில்லாம் ஒன்னும் இல்ல
இர்ஃபா "

" நீ யாரையாவது லவ் பண்றியா ? "

அவள் இந்தக் கேள்வியை எதிர் பார்க்கவில்லை அவன் கண்களை நேராக சந்திக்க முடியாமல் சமாளித்தவாறு " நீயா ஏதாவது கற்பணை பண்ணிக்காத இர்ஃபா என்றாள் " .

அவனுக்கு தெளிவாக தெரிந்தது அவள் மறைக்கிறாள் என்று ஆனால் அவன் அதற்கு மேல் அவளிடம் கேட்டு அவளை சங்கடத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை ,
சரி ஜீவி வா கிளம்பலாம் என்று பேச்சை முடித்தான் .

அப்பா , இர்ஃபான் , எல்லாம் கேட்குற அளவுக்கு நடந்துகிட்டியே ஜீவி என்று
அவள் மனதுக்குள் தன்னைத்தானே நொந்து கொண்டிருந்தாள் .

பாலா அலுவலகத்தில் புது ஹெர்பல் ப்ராஜக்ட் விஷயமாக ஃபார்மா கம்பனிகளுடனான மீட்டிங்கில் இருந்தான் , மீட்டிங் முடிவதற்காகவே காத்திருந்தது போல பாலாவின் P A " சார் செந்தூரன்னு ஒருத்தர் உங்கள மீட் பண்ணனுமாம் சார் , நான் , உங்களுக்கு அப்பாயின்மென்ட் இல்லையேன்னு சொன்னேன் , செந்தூரன்னு சொல்லுங்கன்னு சொன்னார் சார் " என்றார்.....

பாசத்தை இதயத்தில்
பதுக்கி வைத்தான்
பதுக்கிய இதயத்தைப்
பூட்டிவிட்டான் இவன் ,

























Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro