மித்திரன்

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வெகு குறுகிய 3 நாட்களில் அதிகப்படியான வேலை என்பதால் Quarterly reviewகான பணி மும்முரமாக நடந்துக்கொண்டிருந்தது. இரவு 10 மணி வாக்கில் டைனிங் டேபிளில் அமர்ந்து லேப்டாபில் தட்டிக்கொண்டிருந்தேன் நான். திடீரென்று என் முதுகை அவள் தட்டியதும் திரும்பி பார்க்க, அவள் என் அருகில் வைக்கப்பட்ட டீ கப் ஐ கைக் காட்டினாள்.
தாங்ஸ் என்று கூறிக்கொண்டே கப் ஐ கையில் எடுத்தேன்.
"நீங்க எப்ப நான் டீ வச்சதை கவனிப்பீங்கன்னு பார்த்துட்டு இருந்தேன். மனுஷன் வேற உலகத்துலைல இருக்காரு...டீ ஆறிடும்னு தட்டினேன்."

வெறுமன தலையசைத்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினேன். அவள் என் தோளில் அவளின் உள்ளங்கையை ஊன்றி என்னைத் தாண்டி லேப்டாப் ஐ உற்றுப் பார்த்தாள். திரையில் ஓடிய எண்களைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டாள்,"இந்த வேலையெல்லாம் ஆபிஸில் செய்ய வேண்டியது தான?"

"அங்க செய்யலாம் தான். ஆனா அங்க நான் கேட்காம சூடா டீ வருமா? ஆருவதுக்குள்ள குடிங்கன்னு நச்சரிக்க அங்க என் பொண்டாட்டி இருக்காளா என்ன?" டீ காரமாக இருந்தது.

பதிலுக்குக் கண்களைச் சுருக்கி முரைப்பதுபோல் பாசாங்கு செய்தாள் அவள். "நான் தூங்கப் போறேன். வேற ஏதாவது வேணுமா?"

"இன்னொரு கப் இஞ்சி டீ?"

Flask ஒன்றை கிட்சனிலிருந்து கொண்டு வந்து தன் எதிர்பைக் காட்டும் வண்ணம் பெரும் சப்தத்துடன் டேபிளில் வைத்தாள். "ஏற்கனவே போட்டு வச்சாச்சு. சீக்கிரம் தூங்குங்க."

காலையில் எழுந்து வழக்கத்தைவிட அரை மணி நேரம் முன்பே ஆபீஸை வந்தடைந்தேன். சீக்கிரம் சென்றதால் அவளை metro ஸ்டேஷனில் இறக்கியும்விடவில்லை அவளைக் காலையில் பார்க்கவும் இல்லை. அன்று என் டிபார்ட்மண்ட் ஆட்கள் சிறு நடுக்கத்துடன் தான் தென்பட்டனர். தவறுகள் நேர்தால் வேலை நீளும் என்பதால் கடினமாகவே நடந்துக்கொண்டேன் checking விஷயத்தில். சென்னை கிளை headquarter என்பதால் தென் இந்தியாவின் அனைத்துக் கிளைகளின் லோன் விவகாரங்களைச் சரி பார்த்து ஒப்படைத்தாக வேண்டும்.

பகல் 12 மணிக்கு review முடிந்தது. வங்கியின் chief executive officerஇன் கருத்துகளைக் கேட்க அவரின் cabin கதவைத் தட்டினேன். எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று தன் approval ஐ வழங்கிய பின் கூறினார், "வெளிநாட்டில் Standard Chartered Bank நடைமுறைப் படுத்தும் schemeகளை இங்கு இந்தியாவுக்குக் கொண்டுவரனும். ஆனா அதற்கு முன் அவற்றை இந்திய சூழ்நிலைக்கு ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும். அவற்றுக்கான பணிகளை நீங்கள் தான் ஏற்கப்போறீங்க. வெளிநாட்டுல இருக்கும் scheme களை விளக்கவும் உங்களோடு சேர்ந்து scheme ஐ வடிவமைக்கவும் Standard Chartered உடைய UK branch இலிருந்து ஒருவர் வர்ரார். இங்க டிபார்ட்மண்ட் administrative வேலைகளை கம்மி பண்ணிட்டு உங்க டீம் இதுல கவனம் செலுத்துங்க. வேண்டும்னா admin வேலைய முடிக்க புதுசா ஆல் சேர்த்துக்குங்க,"

"Sure Sir" என்று பதிலளித்துவிட்டு வெளியேற ஆயுத்தமானேன்.
"மித்திரன்."
"பெயர் கேட்டு திரும்பினேன்,"யெஸ் ஸார்?"

"இது உங்களுக்குக் கிட்டிய பெரிய வாய்ப்பு. Show your capability in this."

எல்லாம் சிறப்பாய் முடிந்த திருப்தியில் CEO cabinஇலிருந்து வெளியே வந்ததும் எனது டிபார்ட்மண்ட் ஆட்கள் தான் கண்ணில் தென்பட்டனர். மனோஜ் என்னைக் கண்டவுடன் கையசைக்க அவன் டேபிளை நெருங்கியதும் என் டிபார்ட்மண்ட் ஆட்கள் அங்கே கூடியிருந்ததைக் கவனித்தேன். ரொம்ப படுத்தியெடுத்துட்டோமோ என்று குற்ற உணர்ச்சி மேலோங்கியது.

"அப்புறம், நம்ம CEO மச்சான் என்ன சொன்னாரு?" கேலியாகக் கேட்டாலும் சிறு திடுதிடுப்பு இருந்தது அவன் குரலில். எல்லோர் மனதிலும் இருந்த கேள்வியை மனோஜ் தைரியத்துடன் வாய்விட்டுக் கேட்டுவிட்டான். என் பதிலுக்காக என் டீம் என்னை நோக்கியது.

புன்னகையுடன் விவரங்களைக் கூறியதும் அவர்களின் முகத்தில் சந்தோஷம் கலந்த சோர்வைக் கண்டவுடன், "எல்லாரும் half day எடுத்துங்குங்க. இது உங்களோட உழைப்புக்கும் என்னுடைய high expectations ஐ பொறுத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் வேலையை முடித்ததற்கும் " என்று மகிழ்ச்சியுடன் அறிவித்தேன்.

உடனே மனோஜ் ஆவலுடன் "லஞ்ச் போகலாமாடா? இப்படி வேலை வாங்குனதுக்கு நீ தான் sorry கேட்கும் விதமா எங்களுக்கு treat தரனும்" என்று கேட்டான். ஆனால் மனதில் அவளின் நினைவு தான் அசைப்போட்டது எனக்கு. கடந்த 3 நாட்களாக அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அதோடு இந்த புதிய வேலையைப் பற்றியும் அவளிடம் உடனடியாகத் தெரிவிக்க ஆவல்.

"நாளைக்கு போலாம்டா. நைட் முழுக்க வேலை பார்த்ததுல என்ஜாய் பண்றதுக்குக் கூட எனர்ஜி இல்ல."

"போதும் டே, உன் ரீல் அந்துட்டு. நீங்க யார் கூட லஞ்ச் போறீங்கன்னு எங்களுக்கு தெரியும். ஆனா உன் காசுல எல்லாருக்கும் ஒரு நாள் treat தர்ற சொல்லிட்டேன்."

இளித்துக்கொண்டே அங்கிருந்து உடனடியாகக் கிளம்பி  கார் ஐ எடுத்தேன். அவளை இப்ப பார்க்கணும். மூன்று நாட்களாய் பேசாததை இன்று கொட்டித் தீர்க்கணும். அவளுக்கு இன்ப அதிர்ச்சியைத் தரனும். அவள் லஞ்ச் செல்வதற்குள் அவளை மடக்கி வெளியே புது உணவகத்தில் சாப்பிட அழைத்துச் செல்ல உத்தேசம்.

அவளின் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் அங்கிருந்த receptionist இடம் என்னை அறிமுகப்படுத்தினேன். நல்ல வேளை, அவள் இன்னும் வெளியே செல்லாமல் ஆபீஸ் இல் தான் இருந்தாள் என்று receptionist விவரத்தைத் தெரிவித்தார்.

காலடி ஓசை என்னை நெருங்குவதை உணர்ந்து என் போன் இல் facebook ஐ மூடிவிட்டு அன்னார்ந்தேன்.

"என்னது? ஒண்ணுமே சொல்லாமா திடுதிடுன்னு வந்து நிக்குறீங்க?" அவளின் கண்கள் அதிர்ச்சியில் தாமரை மொட்டின் இதழ் போல் விரிந்தன.

"உன்ன இப்ப பார்க்கனும்னு தோனுச்சு. வந்துட்டேன்."

என் விளையாட்டுத்தனமான பதிலை நம்புவதா இல்லையா என்று அறியாமல் திகைத்தாள்.

"வா லஞ்ச் போலாம்!"

"இல்ல, என்னால இப்ப வர முடியாது."

இப்போது அவள் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தினாள். மறுபேச்சு பேச முடியாமல் அவளை நோக்கினேன். அவள் தன் முதுகின் பின்னால் அவளுடைய ஆபீசையே திரும்பி திரும்பி நோட்டம் விட்டாள்.

"பர்மிஷன் வாங்கனுமா லஞ்ச் போக?"

"இல்ல."

"மற என்ன?"

"நீங்க திடீர்னு வந்து நின்றால் நான் என்ன பண்றது? சொல்லிட்டு வந்துருக்கலாம்ல," அவளின் வார்த்தைகள் நீண்டன தயக்கத்துடன்.

அப்போது எதிர் திசையிலிருந்து ஒருவர் எங்களை நோக்கி வந்தார். எங்களைக்  கடந்து செல்வார் என்று தான் எண்ணினேன் ஆனால் அவர் நின்று கையிலிருந்த file ஐ அவளிடம் கொடுத்து "இதையும் சரி பார்த்துடுங்க" என்று கூறிவிட்டு சென்றார். அவளின் எதிரில் நின்ற என்னைப் பார்த்து மரியாதைக்குப்  புன்முறுவல் கூட செய்யவில்லை. இவளும் தலை ஆட்டினாள் அவரின் கட்டளைகளுக்கு.

அப்போது எழுந்தது என்னுள் இருந்த சுயமரியாதை. மதியாதார் வாசல் மிதிக்காதே என்பர். இங்கு நான் வந்ததே முட்டாள்தனம். நான் திரும்பி வேகமாக என் காரை நோக்கி நடந்தேன்.

"மித்திரன்!" அவள் என்னை அழைத்தும் செவிசாய்க்கவில்லை நான்.

"மித்திரன்!"

அவள் தேவையில்லை.

[எனக்கு பிடிச்ச பாட்டும்(உன்ன இப்ப பார்க்கனும், கயல் படத்திலிருந்து) போட்டிருக்கேன்! பார்த்துருங்க அதையும். Character name சொல்லியாச்சு! மித்திரன்! மத்த நான்கு chapter மாதிரியே இதுவும் இருக்கணும்னு ரொம்ப கஷ்டப்படுறேன் ஆனா அப்டி வருதான்னு தெரியல. Support the story எம் மக்களே! வோட் போடுங்க பிடிச்சிருந்தால்:) ]

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro