மின்ட் (Mint)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng






திருமணமாகி சரியாக ஒரு வாரம்.

"நான் சிகரெட் பிடிப்பேன்னு வீட்டுல சொன்னாங்கள்ள?" சிகரெட்டை பத்த வைக்கும்போது அவளிடம் கேட்டேன்.

"ம்ம்ம்" என்று பதிலளித்தாள் என் அருகில் மெத்தையின் ஓரத்தில் அமர்ந்திருந்தவள். சடங்கு, விருந்து என்று அலைச்சல் முடிந்து அன்று தான் அவளிடம் பேச நேரம் கிடைத்தது, அதுவும் நாளை கிளம்பும் தேனிலவுக்கு ட்ரெஸ் pack பண்ணும்போது.

"ட்ரெஸ் எடுத்து வச்சுட்டேன். நாளைக்கு எத்தன மணிக்கு கிளம்பனும்னு ஒன்னும் சொல்லலையே." என்று வினவினாள்.

"6 மணிக்கு"

கேரளாவில் புக் பண்ணியிருந்த விடுதிக்கு வந்து சேர மாலை 5 மணி ஆகிவிட்டது. வெளியில் இரவு உணவை முடித்துவிட்டு விடுதிக்குத் திரும்பினோம். ஒரு வாரமாய் கிடைக்காத தனிமை இன்று அறை முழுதும் நிரம்பி இருந்தது. சுடிதாரின் துப்பட்டாவை கையில் பிசைந்துக்கொண்டு தயக்கத்துடன் பால்கனி கம்பியின் அருகில் நின்றாள்.சில்லென்று தென்றல் வீசியது. குளிரில் தன் கைகளைக் கட்டிக்கொண்டாள். ஆனால் அந்த குளிரில் வெப்பம் அதிகரித்தது போல் இருந்தது எனக்கு. அமைதி இரைச்சலாகக் கேட்டது. துணிச்சலை வர வைத்துக்கொண்டு அவள் அருகில் நின்றேன். அவளை முத்தமிட நெருங்கியதும் முகத்தை வலது பக்கமாகத் திருப்பினாள். வெட்கத்தில் முகம் கவிழ்ந்தாள் என்றெண்ணி வலது பக்கமாக என் முகத்தை சாய்த்தேன். இப்போது இடது புறமாக முகத்தைத் திரும்பினாள். எரிச்சலடைந்த நான் ஒரு ஸ்டேப் பின்னால் நகர்ந்தேன்.

"என்ன? ஏன் முகத்த திருப்புற? கூச்சமா இருக்கா?" வெளிப்படையாகவே கேட்டுவிட்டேன்.

"அப்டி இல்ல."

"மற?"

"அது வந்து"

"என்ன வந்து"

"அது....அது... சிகரெட் பிடிக்கிறது உங்க தனிப்பட்ட விருப்பம், அத செய்யக்கூடாதுன்னு கண்டிஷன் போடுற உரிமை எனக்கு, ஏன் யாருக்கும் இல்ல."

"மற என்ன?"

பால்கனியியை விட்டு உள்ளே நகர்ந்து மேசையின் drawerஐ திறந்து ஏதோ கையில் எடுத்தாள். "இந்த சிகரெட் வாசனை எனக்குப் பிடிக்கல. கிஸ் பண்ண ரொம்ப பக்கத்துல வரும்போது அந்த வாசனை ஜாஸ்தியா இருக்கு. இந்த ஒரு மின்ட் ஸ்வீட் சாப்டுட்டு.."

எனக்கு திடீரென்று கோபம் உச்சத்தைத் தொட்டது. அவள் கிட்டத்தட்ட ஒரு முப்பது சிறிய மின்ட் பாக்கெட்களைக் காட்டியதும் ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பே கட்டாகக் கடையில் வாங்கிவிட்டாள் என்று சுதாரித்துக்கொண்டேன். நேற்றுக்கூட எனது புகைப் பழக்கத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை அவள். நான் நியாயமாக நடந்துகொண்டுள்ளேன் ஆனால் அவள் தான் இப்போது அநியாயமாக குறை சொல்வது போல் தோன்றியது.

"நான் சிகரெட் பிடிக்கிறதை மறைச்சதில்ல.. கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லிட்டேன்அப்போதுலாம் தலை ஆட்டிட்டு இப்ப வந்து குறை சொல்லுற?"

"நான் சிகரெட்டை முழுசா நிறுத்துங்கன்னு சொல்லலையே." சமாதானப்படுத்த முயற்சித்தாள்.

அவள் கையில் நீட்டிய மின்ட் பாகெட்களை பிடுங்கி ஒரு மூலையில் தூக்கி வீசிவிட்டு அவளிடம் பேச விருப்பமில்லாமல் அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டேன். வெளியே சென்றுவிட்டு ஒரு பாக்கெட் சிகரெட் முழுக்க முடித்துவிட்டு பிறகு பத்து மணிக்கு தான் திரும்பினேன். ஒருவித ஆதங்கம்.

நான் அறைக்குள் நுழைந்ததை அவள் அறியவில்லை. மெத்தையில் உறங்கிக்கொண்டிருந்த அவளிடத்தில் சிறு சலனமும் தென்படவில்லை. நானும் தூங்க மெத்தையில் படுத்த கால் மணி நேரத்தில் அவள் பேசினாள்.

"நீங்க பக்கத்துல வரும்போது அந்த சிகரெட் வாசனை பஸ் ஸ்டான்ட் இல் குறுகுறுன்னு பார்த்த ரவுடிங்களை நியாபகப்படுத்தி பயமுறுத்துது. காலேஜில் பசங்க சிகரெட்டை கையில் வச்சிட்டு கிண்டல் பண்ண ஆள்காட்டி விரலால் கூப்பிடுறது நியாபகம் வருது. அந்த கசப்பான நியாபகங்கள்  வேண்டாம். உங்க வியர்வையும் உங்க சட்டையின் சோப்பு  மணமும் என் நினைவுகளை ஆட்கொள்ளனும். சின்ன விஷயம்னு நினைச்சு தான் கேட்டேன்." என் முதுகை பார்த்து அவள் இவ்வளவு பேசினாலும் நான் திரும்பி பார்க்கவோ அவளை அங்கீகரிக்கவோ இல்லை. ஆனால் அவளின் மென்மையான குரல் என் கோபக் கனலை அணைத்தது. கணவனான நான் அவளிடத்தில் அச்சத்தை ஏற்படுத்துவது ஏற்புடையதல்ல அதுவும் இது என் அப்பா-அம்மா காலம் அல்ல. காலையில் நம் முடிவைக் கூறுவோம் என்று தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்ததும் அவள் breakfast சாப்பிட விடுதியின் buffet hall கு செல்ல தயாரானாள். அவள் குளித்துக்கொண்டிருக்கையில் நேற்று எங்கோ வீசியெறிந்த மின்ட் பாக்கெட்களை தேட கட்டிலின் அடியில் குனிந்தேன். ஒன்றும் தென்படவில்லை. சுதாரித்துக்கொண்டு மேசையின் drawer ஐ திறந்தால் அங்கே அவள் தேடி எடுத்து வைத்திருந்தாள். மின்ட் பாக்கெட்களை சுற்றி ஒரு தாளும் சுற்றியிருக்க அதைப் பிரித்தபோது Sorry:( என்று எழுதியிருந்தது புன்முறுவல் செய்ய வைத்தது. குளியலறையிலிருந்து அவள் வெளியே வந்ததும் என் முடிவைத் தெரிவிக்கும் விதத்தில் உடனே அவளை அணைத்து முத்தமிட எனக்கு அதிர்ச்சி. எதோ கற்சிலையை முத்தமிடுவது போல் அவள் அசைவின்றி என்னையே பெருவிழிகளால் நோக்கினாள்.

"கிஸ் பண்ணும்போது மின்ட் ஸ்வீட் taste வந்துச்சுல்ல...மற ஏன் நீ என்னைய கிஸ் பண்ணல?" என் முடிவை விளக்கினேன்.

சற்று தடுமாற்றத்துடன் அவள், " அது இல்ல..அது வந்து..நீங்க உங்க லிப்ஸ்ஐ ஒருவிதமா அசைச்சீங்க. ஆனால் அதுக்கு பதிலா எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல"

"கிஸ் பண்ண தெரியலன்னு சொல்றியா?" குழப்பத்துடன் வினவினேன்.

மௌனம் பதிலாய் அமைந்தது.

சத்தமாகச் சிரித்துவிட்டு அவள் முகத்தை மேல் திருப்பி அவள் கண்களைப் பார்த்து மொழிந்தேன், "தெரியலன்னா கத்துக்கொடுக்குறேன்"

அவளுக்கு நான் கற்றுக்கொடுக்கும் ஆசையில் எண் புகைப் பழக்கத்தையும் விடுவதற்கு அவள் எனக்கு வழிவகுத்தாள். கள்ளி, எல்லாம் தெரிந்து தான் மிண்ட் வாங்கியிருந்தாள். ஏதோ டூத்பேஸ்டை சாப்பிடுவதுபோல் இருந்தது. அதை மெண்டுவிட்டு சிகரெட் பிடிக்க வாய் ஒத்துக்கொள்ளவில்லை. மோகம் முப்பது நாள் என்பது போல் புகைப் பழக்கத்தை விட முப்பது நாள் எடுத்தது முத்தங்களுடன்.


(தள்ளிபோகாதே: ஒரு பெண் ஆணுக்காக பாடினால் எப்படி இருக்கும்? மேல லிங்க் இருக்கு. பித்து பிடிக்க வைக்கும்! இந்த chapter கு ஏற்றது நு தோனுச்சு.

Support the story by voting, commenting and following me. அந்த பாட்டையும் கேளுங்க)

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro