19

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

மனிதனின் செயல்பாடுகள் எப்பொழுது எப்படி இருக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒரு புதிர். கடவுளால் சுய சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பினங்ககளில் மனிதன் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்க காரணமும் அதுதான். சுய சிந்தனை என்பது மட்டும் மனிதனுக்கு இல்லாவிட்டால் அவனும் பிறந்ததும் எழுந்து ஓடும் ஆட்டுக்குட்டியை போலவே இருந்திருப்பான்.

"விக்ரம் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் கிடையாது. எனக்கு கவிய பார்க்கனும் போல இருந்திச்சி. நேத்து நான் ரொம்ப நேரமா உங்க மொபைலுக்கு டிரை பண்ணேன் நீங்க எடுக்கல. கவிகிட்ட மொபைலும் இல்ல. என்னோட கால நீங்க பார்க்கலன்னா கூட பரவாயில்லை. என்னமோ தெரியல என் கால் எல்லாம் பார்த்துட்டு ஹிருனிய அனுப்பி வெச்சிடுறீங்க. அந்த பொண்ணு என்னமோ நல்ல பொண்ணுதான். ஆனா என்னால அவகூட கேசுவலா இருக்க முடியல. அதான் என் பர்த்டேனு சொன்னா நீங்க வருவீங்கன்னு பொய் சென்னேன், ஆனா நான் சொன்ன பொய்யால உங்க வீட்டுக்கு வந்து உங்கம்மா கையால சாப்பிட கூடிய பாக்கியம் கிடைக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல" என்று கூறியவளை புன்னகையுடன் ஏறிட்டான்.

"நான் ஆரம்பத்துல நீங்க சொன்னத நம்பித்தான் வந்தேன். ஆனா உங்களையும் கவியையும் வீட்டுல விட்டு போனதுக்கு அப்புறமாத்தான் உண்மை தெரிஞ்சது இன்னைக்கு உங்க பிறந்த நாள் இல்லைன்னு. நம்ம அன்னைக்கு பூவரசன் குலம் போயிட்டு வந்ததுல இருந்து நீங்க சரியான மனநிலைல இல்லைன்னு தெரிஞ்சது. அப்புறமா உங்களுக்கு உடம்புக்கு முடியாம போன அன்னைக்கு நான் கவிந்திய ஹாஸ்பிடல்ல உங்ககிட்ட விட்டுட்டு வந்தேன். ஆனா அடுத்த நாளே உங்க காய்ச்சல் கானாம போயிடிச்சி. அப்போதான் எனக்கு ஒரு விசயம் புரிஞ்சது கவிந்திகிட்ட ஒரு பழக்கம் இருக்கு, அவ எல்லோர்கிட்டயும் ரொம்ப வேகமா நேருக்கம் ஆகிடுவா. சோ உங்களுக்கு உங்க உடம்ப விட மனசுலதான் ஏதோ சொல்ல முடியாத பாரம் இருக்குனு புரிஞ்சிக்கிட்டேன். இல்லைன்னா நீங்க ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி அடுத்த நாளே உங்களால அவ்வளவு ஈசியா ரிக்கவர் ஆக முடியாது. எப்படியும் மறுபடி கவியை பார்க்க நீங்க ஏதும் முயற்சி செய்வீங்கன்னு தெரியும். ஆனா இப்படி ஒரு திருகுதாளம் பண்ணுவீங்கன்னு நான் கனவுலயும் நினைக்கல" என்று புன்க்கைத்தபடி கூற அவள் அவனை முறைத்தாள்.

"ஆமா நான் சொன்னது பொய்யின்னு எப்படி தெரிஞ்சது? அப்போ எல்லாமே தெரிஞ்சுதான் பண்ணிருக்கீங்க ஹ்ம்" என்று அவள் ஒரு மாதிரி உதட்டை சுழிக்க விக்ரமோ அவள் குண்டு கன்னத்தில் விழுந்த குழியில் தன்னை தொலைத்தான்.

"அப்புறம் எதுக்கு நான் பண்ண கால் எதையுமே ஆன்சர் பண்ணாம ஹிருனிய எனக்கு ஹெல்ப் பண்ண அனுப்பினீங்க. உங்க தங்கச்சிய என்ன மாதிரி ஒருத்திக்கிட்ட அனுப்ப கூடாதுன்னா" என்று கேட்டாள்.

"எப்படி தெரிஞ்சதுன்னா எல்லாம் கூகூள் டாக்டர்னாலதான். உங்க பிறந்த நாளைக்கு உங்களுக்கு பிடிச்ச மாதிரி ஏதும் வாங்கி கொடுக்கலாம்னு உங்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்னு கூகுள்ள தேடும் போதுதான் இன்னைக்கு உங்க பிறந்த நாள் இல்லைன்னு தெரிய வந்தது. இங்க பாருங்க பிருந்தா, பூவரசன் குலத்து வீட்டுக்கு நீங்க போனப்போ நான் கார்ல நீங்க வரும்வரை உங்களுக்காக காத்துக்கிட்டு இருந்தேன். அப்போ என் மொபைல்ல சினி செய்திகள் வாசிக்கும் போது நீங்க யாரு என்கிற உண்மை எனக்கு தெரிஞ்சது.அதுக்கு அப்புறமா உங்கள் பத்தி ஆன்லைன்ல இருக்குற எல்லா நியூசையுமே படிச்சேன். உங்க வாழ்க்கைல பட்ட கஷ்டம் முதல் கொண்டு எல்லாமே அங்க வெட்ட வெளிச்சம் போட்டிக்காட்டியிருந்தாங்க. நீங்க பூவரசன் குலம் வீட்ட விட்டு வெளில வந்ததும் நிறைய கேள்விகள் கேட்கனுமென்று என் மனசுல இருந்திச்சி. ஆனா அப்போ நீங்க இருந்த நிலைமையில என்னால எந்த கேள்வியும் கேட்க முடியல. அதுக்கு அப்புறமா உங்களுக்கு உடம்புக்கு முடியாம போயிடிச்சி. அப்பப்போ சில தனியா வரும் சில லேடி க்ளையண்ட்ஸ்கு ஹெல்ப் செய்ய கவிந்திய கூட்டி போவேன். ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு ரகம். சில பேருக்கு அவங்கள மேடம்னு சொல்லலைன்னா கோவம் வரும். ஏன் சில பேரு எங்களோட வெப்சைட்ல இருக்கும் ரிவ்யூ செக்சன்ல நெகட்டிவ் காமண்ட்ஸ் போட்டுடுவாங்க. அப்படி நெகடிவ் காமண்ட்ஸ் போட்டா அது எங்களோட கம்பனிய ரொம்ப பாதிக்கும்.அதனாலதான் நான் கவி கிட்ட யாருக்கும் ஏதும் ஹெல்ப் செய்ய கூட்டி போனா மேடம்னு சொல்ல சொல்லிடுவேன். ஆனா அன்னைக்கு அவ உங்ககூட கொஞ்சம் நெருக்கமா இருக்குறத பார்த்ததும் பயத்துல கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன். ஆல்ரெடி எனக்கு கம்பனில வார்னிங்க் கொடுத்திருக்காங்க. இன்னும் ஒரு கம்ப்ளைண்ட் கஸ்டமர்கிட்ட இருந்து என்னைப்பத்தி போகும்னா என்னோட ஜாப் போயிடும். என் வருமானத்த நம்பித்தான் என்னோட குடும்பம் இப்போ இருக்கு. அதனாலதான் நான் அப்படி பண்ணேன்" என்று கூற விக்ரமை இரக்கமாக பார்த்தாள்.

"சாரி விக்ரம், நான் இதெல்லாம் எதுவுமே யோசிக்காம ஏதேதோ நினைச்சிட்டேன். வெரி சாரி" என்றவள் அவளின் வலக்கரத்தை அவனிடம் நீட்டியவள்

"ப்ரெண்ட்ஸ்" என்று கூற அவளின் நட்பு என்ற அங்கீகாரத்தை பெறுவதை விட அவளின் கரத்தை தொட்டுவிடலாம் என நினைத்தான் விக்ரம் "ப்ரெண்ட்ஸ்"என்று கைலாகு கொடுத்தான்.

"சரி விக்ரம் நேரமாகிடிச்சி. நான் ரூம் போறேன் நீங்களும் வீட்டுக்கு போங்க" என்றவள் தனறைக்குள் வந்தாள்.

வீடு செல்லும் வழியில் விக்ரமிற்க்கு பிருந்தாவை பற்றி நினைக்காமல் ஒரு கணம் கூட இருக்க முடியவில்லை. அவளை அழைத்து வரும் போது தனது இருசக்கற வாகனத்தில் அவள் அமர்ந்திருந்து வந்தால் என்பதுவே அவனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் இந்த மகிழ்ச்சி எதற்காக என்று மட்டும் புரியவில்லை.

போகும் வழியில் புனித அந்தோனியர் சர்ச்சை பார்த்ததும் அவனது முகம் இறுகியது. புத்தியால் மறக்க வேண்டும் என்றும் இதயத்தால் மறக்க கூடாது என்று நினைக்கும் முகம் அவன் கண்முன் வர ஆக்சிலேட்டரை மிக வேகமாக முறுக்கியவன் காலிமுகத்திடலுக்கு (Galle face) சென்றான். ஆங்காங்கு பஜ்ஜி , வடை என்பன விற்பனை செய்யும் சிறிய கடைகள் பிசியாக இருக்க அவனோ கடல் ஓரமாக போடப்பட்டிருக்கும் நடைபாதையின் விளிம்பில் கால்களை கீழே தொங்க போட்டு உட்கார்ந்தான்.எத்தனையோ நாட்கள் தான் உயிருக்கும் மேலாக மதிக்கும் காதலியை அவளின் தாயுடைய அனுமதியுடனேயே இங்கு அழைத்து வந்திருந்தவனுக்கு அவள் இல்லை என்று ஆனபின் வரும் ஒவ்வொரு தடவையும் விக்ரமால் அழுகையை கட்டுபடுத்த முடியாது. சிறிது கண்கள் கலங்க அமர்ந்திருந்தவனுக்கு சடுதியாக கலங்கிய கண்களுடன் இருந்த பிருந்தாவின் முகம் நினைவுக்கு வந்து போனது. பிருந்தாவின் நினைவு அவனுக்கு வர அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வர ஆரம்பித்தது.

Galle Face Pictures (From Internet)

தன் மனதில் நான்சி மட்டுமே இருக்கின்றால்,என்றும் இருப்பால் என நினைத்தவன் நினைப்பில் பிருந்தா அவனை இப்படி நினைவில் வந்து இம்சிப்பது அவனுக்கு எதுவோ போல் இருந்தது. நான்சியை நினைக்கும் நேரத்தில் அவள் வந்தது அவனுக்கு அவள் மேல் கோபத்தை வரவைத்தாலும் அவன் மீது அவனுக்கே வெறுப்பை வரவைத்தது.

இரவு வெகு நேரமாகியும் விக்ரம் வீடு வராததால் பிருந்தாவுக்கு தன் தாயின் கைபேசியில் இருந்து கால் செய்த கவி

"அக்கா நீங்க ரூம் போய் சேர்ந்துட்டீங்களா"என்று கேட்க அவள்

"ஆமா கவி, வந்துட்டேன். இது என்ன அம்மா நம்பரா?" என்று கேட்டாள்.

"ஆமாக்கா அம்மா மொபைல்தான், இல்ல அண்ணா இன்னும் வீடு வரல்லயா. அதான் உங்கள டிராப் பண்ணிட்டானா என்று கேட்கத்தான் கூப்பிட்டேன். அண்ணாவோட மொபைலுக்கு கால் பண்ணா அவன் எடுக்கவே இல்லை. ஒரு வேலை அவன் வேற எங்கயும் போயிட்டானோ தெரியல" என்று கூற பிருந்தாவும் சரி என்று கூறி காலை கட்செய்தவள் உடனே விக்ரமுக்கு அழைக்க அவன் மொபைல் ரிங்க் முழுவதும் போய் கட் ஆனது. என்ன செய்வது என்று புரியாமல் முழித்தவள் சரி நாளைக்கு அவனுக்கு கால் செய்து என்ன நடந்தது என்று கேட்கலாம் என நினைத்து தூங்க நினைத்தாள்.

அன்று இரவு மிகவும் தாமதமாகவே வீடு சென்றவன் தனதறைக்கு செல்ல அவன் முன் வந்த கவிந்தி

"ஏண்ணா இபப்டி பண்ற.ஒரு நாளைக்கு ரொம்ப ஜாலியா இருக்க. இன்னொரு நாள் உலகமே அழிஞ்சி போன மாதிரி இருக்க. ஒன்னு கவலையா இரு, இல்ல சந்தோசமா இரு. இப்படி நேரத்துக்கு ஒரு மாதிரி இருக்காத ப்ளீஸ். உன்ன நினைச்சி அம்மா அழாத நாளே இல்லை. மாசம் முடிய பணம் கொடுக்கிறது மட்டும்தான் உன் வேலைன்னு நினைக்காதண்ணா. உன் முகம் கொஞ்சம் வாடினாலும் அம்மா இங்க மனசுக்குள்ள புழுங்கி போயிடுறாங்க" என்க அவளைப்பார்த்தான்.

"நடந்தது உனக்கு தெரிஞ்சும் ஏன் இப்படி பேசுற கவி. என்னால எதையுமே மறக்க முடியல. மறக்கனும்னு நினைச்சி நான் பண்ற எல்லாமே எனக்கு அதையே ஞாபகப்படுத்துது" என்றவனை கவி கேட்ட அடுத்த கேள்வியால் மிகவும் கோபமானான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro