18

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

நான்சி என்ற பெயரை கேட்டதுமே பிருந்தாவுக்கு பிடித்து போனது. ஒரு சில விடயங்கள் நமக்கு காரணம் இன்றி உடனே பிடித்துவிடும். அதே போல் சில விடயங்கள் எவ்வளவுதான் நாம் விரும்ப வேண்டும் என்று நினைத்தாலும் நம் மனதுடன் அவை ஒட்டவே ஒட்டாது. நான்சியை பற்றி மேலும் தெரிந்து கொள்ள நினைத்தவள்

" அவங்களுக்கு என்னாச்சி கவி" என்று கேட்ட தருணம் கவியின் தாய் அவர்களை காபி குடிக்க அழைக்க அந்த பேச்சு அத்துடன் தடைப்பட்டது. அதன் பின் கவியின் தாய் சமையல் வேலைகளை கவனிக்க பிருந்தாவும் கவியும் கிரிஸ்டோபர் நோலன் முதல் அனுராக் காஷ்யப் வரை பேசிக்கொண்டே இருந்தனர். பேசிக்கொண்டே இருந்தனர் என்பதை விட கவி பேசிக்கொண்டே இருந்தால். பிருந்தாவுக்கு நிஜமாகவே கவி பேசும் சில விடயங்கள் புரியவே இல்லை. கவியின் பேச்சுக்கு சமமாக பிருந்தாவும் பேசுவாள் என நினைத்த கவிக்கு அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க அவள்

"என்னக்கா நான் மட்டுமே பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க எதுவுமே பேசாம இருக்கீங்க. உங்களுக்கு தெரிஞ்சத என்கிட்ட செயார் பண்ணீங்கன்னா என்னோட அறிவும் கொஞ்சம் கூடும்ல" என்க அவளை பார்த்து புன்னகைத்த பிருந்தா

" சினிமாவ பத்தி உனக்கு தெரிஞ்சதுல ஒரு பத்து சதவீதம் கூட எனக்கு தெரியாதுப்பா" என்றவள் அவளின் சிறு வயது வாழ்க்கை முதல் சினிமாவில் தான் எப்படி அறிமுகம் ஆனால் என்பது வரை கூறி முடிக்க கவியின் கண்கள் கலங்கியிருந்தது.

" உங்க வாழ்க்கை முழுவதும் போராட்டமாவே முடிஞ்சிடிச்சில்ல. சினிமா வாழ்க்கை பார்க்கத்தான் வெளில அழகா இருக்கும் போல. உள்ள எவ்வளவு போராட்டங்கள், அவமானங்கள். சாவித்திரி தொடங்கி இப்போ ரீசண்டா சுசாந்த் சிங்க் வரைக்கும் ஒன்னு வாழ்க்கை வெறுத்து சூசைட் பண்ணிக்கிறாங்க. இல்லன்னா ஏன் செத்தாங்கன்னே புரியாம திடீரென்று செத்து போறாங்க. ஸ்ரீதேவி,எல்விஸ் பிரஸ்லி , மைக்கேல் ஜாக்சனவிடவா நமக்கு உதாரணம் வேணும்" என்று கூற பிருந்தா பிரமிப்பாக அவளை பார்த்தால்.

மதிய உணவு நேரத்திற்கு விக்ரம் வர எல்லோரும் ஒன்றாகவே உண்டார்கள். விக்ரமின் தாய் சிங்கள மக்கள் சமைக்கும் முறையில் மிகவும் ருசியாக உணவுகளை சமைத்திருந்தாலும் உணவுகளில் காரம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. இதை கவனித்த விக்ரமின் தாய்

" என்னம்மா ரொம்ப காரமா இருக்கா. நான் அப்பவும் காரத்தை குறைவாத்தானே போட்டேன்" என்று கூற அவளோ மனதுக்குள்

'குறைவா போட்டதே இவ்வளவு காரம்னா அப்போ எப்போதும் போல சமைச்சிருந்தா நம்ம கதி அதோ கதிதான் '.

" இல்லம்மா கொஞ்சம் காரம் அதிகம்தான் பரவாயில்லை , ஆனா சமையல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு. அதுவும் இப்படி ஒரு மீன் சமையல என் வாழ்நாள்ளயே சாப்பிட்டது இல்லை " என்றால்.

கவி " அக்கா பொதுவா எங்க ஆளுங்க எல்லாம் காரம் கொஞ்சம் அதிகமாவே பாவிப்போம். அதான் உங்களுக்கு காரமா இருக்கு போல" என்று கூற புன்னகையுடன்

" பராவாயில்லைடா ரொம்ப நல்லாவே இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு "என பிருந்தா கூறினால்.

உணவு உண்டு முடிந்ததும் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க மூன்று பேர் உட்கார கூடிய சோபாவில் கவி தன் தாயின் மடியில் தலைவைத்திருக்க தன் அண்ணனின் மீது கால்களை வைத்து படுத்திருந்தால். கவியின் தலையை அவளின் தாய் தடவிக்கொடுக்க விக்ரம் அவளின் கால்களை மசாஜ் செய்து கொண்டிருந்தான். விக்ரமின் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்தால் இப்படித்தான் பேசிக்கொண்டு இருப்பார்கள். பிருந்தாவும் பந்தா எதுவும் இல்லாமல் அவர்களுடன் ஒன்றியிருக்க அவர்களும் வழமைபோல சாதாரணமாகவே இருந்தனர். ஆனால் பிருந்தாவுக்குத்தான் இதை பார்த்ததும் உரிமையுடன் தன்னை இப்படி சீராட்ட யாருமில்லை என்பது உரைத்தது. அந்த எண்ணம் வந்ததும் அவள் கண்கள் தானாக குளமாக அது அருவியாக முன் அவள் அதை கட்டுப்படுத்தினாலும் விக்ரம் அதை கண்டு கொண்டான்.

இதை எதுவும் கவனிக்காத விக்ரமின் தாய் அவளுக்கு வெற்றிலை மடித்து அதில் சிறிது சுண்ணாம்பும், பாக்கும் சேர்த்துக்கொடுக்க அவள் கேள்வியாய் நோக்கினால்.

"சாப்பிட்டதும் இத சாப்பிட்டா நம்ம சாப்பிட்டது நல்ல ஜீரணம் ஆகும்னு எங்கம்மா எப்போமே சொல்வாங்க. நான் அடிக்கடி இதை சாப்பிடுவேன். நீயும் சாப்பிட்டு பாரும்மா" என்று கூற பிருந்தாவால் மறுக்க முடியவில்லை. அவர் கொடுத்த வெற்றிலை மடிப்பை வாங்கி வாயில் வைத்து மெல்ல துவங்க அவளுக்கு அதன் வாசமும் சுவையும் பிடிக்கவில்லை எனினும் விக்ரமின் தாய்க்காக கொஞ்ச நேரம் மென்று கொண்டவள் சிறிது நேரத்தின் பின் துப்பினால். சாதாரணமாகவே சிவந்திருக்கும் பிருந்தாவின் உதடு வெற்றிலை உண்ட காரணத்தினால் இன்னும் சிவப்பாகியிருந்தது. அவளின் உதட்டை பார்த்தவனுக்கு என்ன தோன்றியது தெரியவில்லை உடனே தன் தங்கையின் கால்களை தட்டிவிட்டு தனதறைக்குள் புகுந்து கொண்டான். அவன் திடீரென்று அவ்விடத்தை விட்டு செல்ல பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் விசித்திரமாக பார்க்க விக்ரமின் தாய்

"அவன் இப்படித்தான் ஏதாச்சிம் வேலைல இருக்குறப்போ ஏதோ ஒரு ஞாபகம் வர உடனே அத பார்க்க போயிடுவான். நீ ஒன்னும் யோசிக்காத" என்று கூற அவர் அவளை ஒருமையில் விழிக்க ஆரம்பித்திருந்தது மிகவும் பிடித்திருந்தது. கடந்த சில மாதங்களாக தன்னை எல்லோரும் "மேடம்" என்று அழைத்து அவள் காதுக்கு அது ஏதோ ஒரு கெட்டவார்த்தை போல இருந்தது.

தனதறைக்கு வந்த விக்ரம் கண்ணாடி முன் நின்றவன் அதில் தெரியும் தன் பிம்பத்தை பார்த்தவன் தன்னை பார்த்து தானே கேள்வி கேட்டான்

"என்ன நினைச்சிக்கிட்டு இருக்க விக்ரம் உன் மனசுல. நான்சிய தவிற எந்த பொண்ணையும் நீ இப்படி பார்த்ததே இல்லையே. உன்னோட நடவடிக்கைகள் எதுவுமே சரியா இல்லை விக்ரம்" என்று நக்கலாக கேட்க

'ஏன் எதுவுமே தப்பா பார்க்கலையே. அவ அழகா இருந்தா அதான் பார்த்தேன், அழக ரசிக்கிறது தப்பா.'

"அழக ரசிக்கிறது தப்பில்லை விக்ரம், ஆனா நீ அந்த அழகை முழுங்க போறவன போல பார்க்குற. அப்புறம் நீ அப்படி பார்க்குறது அந்த பொண்ணுக்கும் தெரியும்"

'இல்லை அவளுக்கு அது தெரியாது'

"அப்போ தெரிஞ்சா?" என்ற தன் மனசாட்சியை

'தெரிஞ்சா என்ன , என் வாழ்க்கைல பொண்டாட்டின்னா அது நான்சி மட்டும்தான். பிருந்தா அழகா இருக்கா. அதனாலதான் நான் பார்த்தேன் அவ்வளவுதான்' என்று தன் மன்சாட்சியை அடுத்து பேச விடாமல் அடக்கினான்.

விருந்து முடிந்ததும் பிருந்தா ஹோட்டலுக்கு செல்ல தயாராக அவளை இன்னும் கொஞ்ச நேரம் இருக்க சொல்ல மாட்டார்களா என்ற எண்ணம் அவளுக்கு வந்தாலும் அப்படி யாருமே கூறவில்லை. கவியை தவிர மற்றவர்களுக்கு தெரிந்த பிருந்தா ஒரு மிகப்பெரிய நடிகை. அவர்கள் வீட்டில் இருக்கும் வசதிகள் அவளுக்கு போதாமல் இருக்கும் என்றே விக்ரமும், அவனின் தாயும் நினைத்தனர். ஆனால் கவியோ

"அக்கா நைட்டுக்கு இங்கேயே தங்கிட்டு காலைல போறிங்களா. சூப்பரா இருக்கும் " என்று கூற மரியாதை நிமித்தம் அதை மறுத்தவள் மனதுக்குள்

' இந்த சின்ன பொண்ணுக்கு கேட்கனும்னு தெரிஞ்சது இந்த பெரிய லூசுங்க ரெண்டுக்கும் தெரிய மாட்டேங்குது. ஒருவார்த்தை இருந்து போம்மா எனறு சொன்னா குறைஞ்சா போக போகுது' என நினைக்க விக்ரம்

"இல்லை கவி, அது சரியா இருக்காது. அவங்க ஹோட்டலுக்கே போகட்டும்" என்று கூற அவனின் தாயும் அதை ஆமோதித்தார்.

இந்த தடவை அவளை அனுப்பிவைக்க கால்டாக்சியை புக் பண்ண போக பிருந்தா

" விக்ரம் உங்க பைக்ல என்ன கூட்டி போறீங்களா. எனக்கும் உங்க ஊர கொஞ்சம் பார்த்த மாதிரி இருக்கும்" என்று கூற அவனின் தாய்

"தம்பி போய் விட்டுட்டு வாப்பா" என்று கூற தன் தாயின் சொல்லை தட்ட முடியாதவன்

"சரிம்மா" என்று கூறி தனது மோட்டார் சைக்கிளை எடுத்து வந்தான்.

பிருந்தா சேலை கட்டியிருந்ததால் ஒரு பக்கமாக அமர்ந்தவள் இதுவரை அதிகமாக மோட்டார் சைக்கிளில் பயனிக்காததால் அவளால் சரியா பாலன்ஸ் செய்து உட்கார முடியவில்லை. இருந்தாலும் ஒருவழியாக உட்கார ராஜாளி பறக்க தொடங்கியது.

வழி நெடுகிலும் அவள் எதுவுமே பேசாமல் அந்த பயணத்தையும், எதிர் காற்று கொடுத்த இதமான வருடலையும் ரசித்து வந்தாள். அவள் அந்த குறுகிய பயணத்தை ரசித்து வருகின்றால் என்பது புரிந்தவன் அவளை தொந்தரவு செய்யாமல் அவனும் அமைதியாக வந்தான். அவளின் ரணம் நிறைந்த மனதுக்கு அந்த மிதமான பயணம் இதமாக இருந்தது.

ஹோட்டலை வந்தடைந்ததும் அவனின் பைக்கை விட்டு இறங்க மனமில்லாமல் பிருந்தா இருக்க அவளை திரும்பி பார்த்ததும் தன் நிலை உணர்ந்தவள் உடனே பைக்கை விட்டு இறங்கியவள் அவனை பார்த்து புன்னகையுடன்

" ரொம்ப தாங்க்ஸ் விக்ரம், இந்த நாள என் வாழ்க்கைல மறக்கவே முடியாது" என்று கூற அவளின் நன்றியை புன்னகையுடன் ஏற்றவன்

" இட்ஸ் ஓக்கே பிருந்தா, வேற ஏதும் சொல்லனுமா" என்று கேட்க அவள்

" நிறைய விசயங்கள் உங்ககிட்ட பேசனும், ஆனா இப்போ ஒரே ஒரு விசயம் சொல்லனும்" என்றால். அவனும் என்ன என்று கேட்க அவள் கூறிய விடயத்தை கேட்டு அவன் கோபப்படுவான் என நினைத்தவள் அவனோ அதை சர்வ சாதாரணமாக ஏற்றுக்கொள்ள அவனை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro