33

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எப்போதும் ஒரு பெண்ணுக்கு தான் தானாக வாழ ஒரு ஆசை இருக்கும். ஆனால் அது எல்லா பெண்களுக்கும் அமைவதில்லை. பெற்றோருடன் இருக்கும் போது அவர்களின் ஆசைப்படியும் ,திருமணத்தின் பின் கணவனின் மகிழ்ச்சிக்காகவும் , தாயாகிய பின் குழந்தைகளுக்காகவும் வாழ்வது பெண்ணுக்கு ஏதோ உரிமை கொடுத்தது போல இந்த உலகில் எழுதப்படாத நியதி.எல்லா மானுடருக்கும் இதே ஆசை இருக்கும். எல்லோராலும் அதன் படி வாழ முடிவதில்லை. அப்படி நாம் இருக்கும் போது நமக்கு இந்த உலகில் கிடைக்கும் பெயர்கள்தான் ரொம்ப வித்தியாசமானவை. திமிர் பிடித்தவள், அகம்பாவக்காரி இப்படி பல. ஆனால் அந்த வசைபாடல்களை தள்ளி வைத்து நம் இஷ்டப்படி ஒரு நாள் இருந்தால் கூட அதில் கிடைக்கும் சுகத்துக்கு எதுவுமே ஈடு இணை இல்லை.

இலங்கை வந்ததில் இருந்து பிருந்தா தனக்கு பிடித்த வாழ்க்கையை மற்றவரின் தலையீடு இன்றி சந்தோசமாக வாழ்ந்து வந்தாள்.ஆனால் என்று விக்ரம் அவளை காதலிக்கின்றான் என்று தெரிந்ததோஅன்று அவளின் சுதந்திரம் பறி போனதாக உணர்ந்தாள். அவளின் கோபம் யார் மேல் என்று தெரியவில்லை. கவி அவளை ஏமாற்றியதா? இல்லை விக்ரம் அவளை காதலிப்பதாலா? இல்லை அவள் விக்ரமை காதலிப்பதாலா? இந்த மூன்று கேள்விகளுமே மிகவும் சுவாரஸ்யமும் ஆச்சரியமும் நிறைந்தது. ஒன்றுக்கொன்று முரண்பட்டது. பிருந்தாவும் கவியை ஏமாற்றினாள்.பிருந்தாதான் முதலில் விக்ரமை காதலிப்பதாக கூறினாள்.அதற்கு பதிலே விக்ரமின் காதல். கேட்கின்ற நமக்கே இவ்வளவு குழப்பம் இருக்கும் போது பாவம் பிருந்தா என்ன செய்வாள்.

"அக்கா ப்ளீஸ், கதவை திறங்க.எதுன்னாலும் பேசிக்கலாம்" என்று கவி பயத்துடன் பிருந்தாவின் அறைக்கு முன் நின்று அழுதுகொண்டிருந்தாள்.உள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. நாட்காளி ஒன்றை இழுக்கும் சத்தம் கேட்க மேலும் பயந்த கவி

"அக்கா இப்போ நீங்க கதவ திறக்கல நான் விக்ரம் அண்ணாகிட்ட போய் நமக்குள்ள நடந்த எல்லாத்தையுமே சொல்லிடுவேன்.அதுக்கு அப்புறம் எங்கம்மாவும் அண்ணனும் என்ன அடிச்சே கொன்னுடுவாங்க. உங்களுக்கு அதுதான் வேணும்னா நான் இப்பவே போறேன்" என்று கூறி சில நொடிகளில் கதவு திறந்தது.

அறைக்குள் சென்ற கவி பிருந்தாவின் அருகில் சென்று

"ஏன்கா இப்படி பண்றீங்க, எனக்கு எவ்வளவு பயம் ஆச்சு தெரியுமா?" என்று கேட்க பிருந்தா அவளை ஏறிட்டு பார்த்தாள்.

"ஏன் கவி எல்லோருக்கும் அவங்க அவங்க மனசுல இருக்குறத சொல்லுவதுக்கும் அதை நிறைவேற்றுவதற்கும் என்ன வேணா பண்ணிக்கிறாங்க. ஆனா என்னோட மனசுல இருக்குற ஆசைகள்,. சரி ஆசைகளை விடு, மன ஆதங்கத்த கூட யாருமே கேட்க தயாரா இல்லையே. விக்ரம் ஒரு ஆண். அதனால ஒரு வேலை அவருக்கு நான் சொல்ல வந்தது புரியாம இருந்திருக்கலாம். ஆனா நீ ஒரு பொண்ணா இருந்துகிட்டு எப்படி கவி என்கிட்ட இப்படி விளையாடி இருக்கலாம்.இந்த மூன்று நாளா என் மனசுல இருந்த பயத்த வார்த்தைகளால சொல்ல முடியாது.

முதல் முறையா ராமலிங்கம் என்ன படுக்க கூப்பிட்டப்போ கூட வராத பயம் அன்னைக்கு நீ பேசினத கேட்டதும் வந்திடிச்சி. ஏன்னா உன்ன எனக்கு அவ்வளவு பிடிக்கும்.உன்ன மாதிரி ஒரு தங்கச்சி எனக்கு இல்லையேன்னு ரொம்ப கவலைப்பட்டிருக்கேன். ஆனா உன் மனசுல நீ என்ன பத்தி கொஞ்சம் கூட அப்படி நினைக்கலன்னும் போது என் மனசு எவ்வளவு வேதனை பட்டது தெரியுமா.

கவி எனக்கு விக்ரம பிடிக்கும், ரொம்ப பிடிக்கும். சத்தியமா அவன நான் காதலிக்கிறேன். ஆனா என்னால அவன்கூட ...... சரி நீயும் வளர்ந்தவனதானே , நான் பச்சையாவே சொல்றேன். என்னால அவன்கூடா செக்ஸ் வெச்சுக்க முடியாது. அது ஏன்னு நான் உங்கண்ணனுக்கு விளக்கமா சொல்லிட்டேன்.உன்ன கை எடுத்து கும்பிட்டு கேட்குறேன்.இதுக்கு மேலயும் என்ன போர்ஸ் பண்ணாத.இல்லை நான் இருக்குறது உங்களுக்கு கஷ்டமா இருந்தா நான் வேற எங்க சரி போயிடுறேன்" என்று அழுதவளை கவி

"அக்கா இனிமே நீங்க நீங்களா இருக்கலாம். உங்களுக்கு சப்போர்ட்டா என்னைக்குமே நான் இருப்பேன்"என்று கூற பிருந்த அவளை கேள்வியுடன்

'மறுபடியும் முதல்ல இருந்தா' என்பது போல பார்க்க உடனே கவி

"ஐய்யோ அப்படி இல்லைக்கா. கூடவே இருப்பேன்னா ஒரு தோழியா, சகோதரியா, பிஸ்னஸ் பார்ட்னரா ஒரு செல்ல எதிரியா எல்லாமே இனி நான் மட்டும்தான். ஏன் இனி விக்ரமே உங்ககிட்ட வந்து எதுவும் பேசாத மாதிரி பண்ணிடுறேன். ஆனா ஒரே ஒரு ப்ராமிஸ் மட்டும் பண்ணி கொடுங்க. உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு மனசுல தோன்றினா மற்ற எதையும் யோசிச்சி உங்க மனச குழப்பிக்காம என்கிட்ட சொல்லனும்" என்று கூற கவியின் இந்த பதிலைக்கேட்டு நிம்மதி கொண்ட பிருந்தா

"கண்டிப்பா கவி நான் உங்கிட்டதான் இனி எல்லாமே செயார் பண்ணிக்கிறேன் சரியா" என்றாள்.

அடுத்த நாள் வீட்டிற்கு வந்த கவி தன் அண்ணனிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறினாள்.

"சொல்லு கவி என்ன பேசனும்"என்று கேட்க கவி

"அண்ணா பிருந்தா அக்கா கிட்ட...."என்று ஆரம்பித்து அவர்கள் ஊருக்கு சென்றதில் இருந்து முதல் நாள் இரவு நடந்தது வரை கூறி பிருந்தாவின் மன நிலையையும் எடுத்து கூறினாள்.

ஒருவரின் பிரச்சினையை அவர்கள் கூறுவதை காட்டிலும் மற்றவர் அதை கூற நாம் கேட்கும் போது நமக்கு தெளிவான ஒரு பார்வை கிடைக்கும்.அதுவும் கவி பிருந்தாவின் பிரச்சினைகள்,அவளின் மனப்போராட்டங்களை மிக தெளிவாக அவனுக்கு எடுத்துக்கூறினாள்.

"அண்ணா பிருந்தா அக்காவுக்கு டைம் வேணும்னா.அவங்களுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்.ஷீ லவ்ஸ் யூ. ஆனா .......நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதில்ல.அவங்களுக்கு டைம் கொடுக்கலாம்னா. அவங்க உடைஞ்ச ஒரு கண்ணாடி பொம்மை மாதிரி. அவசரப்பட்டு அதை நம்ம இஷ்டத்துக்கு அசிங்கமா ஒட்டுறத விட, பொறுமையா நேரம் எடுத்து அது முன்னாடி எப்படி இருந்திச்சோ அதே அழகோட  ஒவ்வொரு பகுதியா உடைந்த தடம் இல்லாம ஒட்டலாம்.பிருந்தா அக்காவுக்கு நம்ம மோரல் சப்போர்ட் கொடுக்கலாம்னா" என்று கூற தன் தங்கையின் கைகளை பிடித்தவன் தன் முகத்தில் வைத்து ஒற்றிக்கொண்டான்.

"ரொமப் தாங்க்ஸ் கவி, நீ இவ்வளவு அழகா சொன்னதாலதான் எனக்கு அவளோட மனநிலை கரக்ட்டா புரிஞ்சது. இல்லைன்னா என்னால சரியான ஒரு முடிவு எடுக்க முடியாம இருந்திருப்பேன்.விடை கூறமுடியாத கேள்விகள கேட்டே பிருந்தாவ நான் கார்னர் செஞ்சி என்ன கல்யாணம் பண்ண சம்மதிக்க வெச்சிருப்பேன். ஆனா அது எந்த அளவுக்கு உண்மையான உறவா இருந்திருக்கும்னு தெரியல. உனக்கு இருக்குற பக்குவம் எனக்கு இல்லாம போச்சின்னு நினைக்கும் போது என்ன நினைச்சு கவலையாவும் உன்ன நினைச்சி பெருமையாவும் இருக்கு.சரி இனி நம்ம பிருந்தாவுக்கு சப்போர்ட்டா இருக்கலாம். அவளுக்கு எது வேணும்னு தோனுதோ அத பண்ணலாம். நான் அவகிட்ட ரெண்டு கேள்வி கேட்டேன். இனிமே அதுக்கான பதில நான் எதிர்பார்க்க போறதில்ல. அதையும் நீயே அவகிட்ட சொல்லிடு. இனிமே அவளுக்கு எந்த தொந்தரவும் என் பக்கம் இருந்து வராதுன்னு" என்று கூறினான்.இதைகேட்ட கவிக்கு தன் அண்ணன் மேல இருந்த மரியாதை பல நூறு மடங்கி அதிகமாகியது.

இனி பிருந்தாவின் வாழ்க்கை அவளுக்கு பிடித்த மாதிரி அவள் இஷ்டம் போல இருக்க போகின்றது. அதிலும் கஷ்டங்கள் வரலாம், ஆனால் அதை எல்லாம் துடைத்தெறிய அவளுக்குத்தான் இப்போது அவள் மீது அன்பை பொழியும் ஒரு குடும்பமே உள்ளதே.

————————————————————————————————

ஆறு வருடங்களின் பின்...

லாஸ் ஏஞ்சலஸ் நகர்..

Tuxedo டிறஸ்ஸில் ஹாலிவூட் நடிகர்களுக்கு நிகரான ஹேண்ட்சம் லுக்கில் விக்ரம் இருக்க அவளின் அருகில் சிவப்பு நிற சேலை அணிந்து பிருந்தா உட்கார்ந்திருந்தாள்.அவர்களை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.பிருந்தாவின் கையில் இருந்த  ஆறுமாத குழந்தை அழுது கொண்டே இருந்தது. அவள் எவ்வளவு முயற்சி எடுத்தும் அது தன் அழுகையை நிறுத்தவில்லை.

"பிருந்தா அவள என்கிட்ட கொடு நான் சமாதானம் பண்றேன்"என்று கூற அவனை பார்த்து முறைத்தவள்

"ஏன் அவ நான் சமாதானம் பண்ணா ஏத்துக்க மாட்டாளாமா? இவ இப்பவே இப்படின்னா இவள கட்டிக்க போறவன் என்ன பாடு படபோறானோ?" என்று கூற மெலிதாக கூற விக்ரம்

"நான் என்ன பாடு படுவேனோ அதத்தான் அவனும் படுவான்" என்று கூறினான்.

அதே நேரம் மேடையில் நவநாகரீக ஆடை என்ற பெயரில் அலங்கோலமான அநாகரீக ஆடையில்  இருந்த பெண்

"This Year the best actress oscar goes to...." என்று கூறி சிறிது நேரம் எடுக்க விக்ரம் தன் வாய்க்குள்

"பிருந்தா,பிருந்தா ,பிருந்தா"என முனகிக்கொண்டிருந்தான்.


Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro