34

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒரு கையில் குழந்தையையும் மறு கையில் உலகில் உள்ள அனைத்து சினிமாக்காரர்களும் தவம் இருக்கும் விருது,தன் இருகைகளையும் கட்டிக்கொண்டு தங்க நிறத்தில் பிருந்தாவின் கைகளில் ஜொலித்துக்கொண்டிருந்தது.

கவி இவர்களை நோக்கி வர பிருந்தா

"என்ன கவி சரியான டைமுக்கு நீ வரவேயில்லை. எனக்கு கொஞ்சம் கவலை தெரியுமா. இந்த அவார்ட்ட வாங்கும் போது நீ இங்க இல்லைன்னு" என்று கூற கவி

"இந்த வாண்டு என்ன ச்சூச்சூ பண்ணிடிச்சே.அதான் கழுவிட்டு வரலாம்னு ரெஸ்ட் ரூம் போனேன்.ஆனா அங்க ஏதோ இன்னைக்கு இலவச சாப்பாடு போடுற மாதிரி அவ்வளவு கூட்டம். ஒரு வழியா முடிச்சிட்டு வர்ரதுக்குள்ள உங்களுக்கு அவார்ட்ட குடுத்துட்டாங்க. ஆனா நீங்க ஸ்டேஜ் ஏறும் போதே ஹாலுக்கு வந்துட்டேன். என்னோட சீட்டுக்கு போக டைம் இல்ல.அதனால நான் நின்னுகிட்டே பார்த்தேன்"என்று கூறி பிருந்தாவை அணைத்தாள்.

விருது வழங்கும் வைபவம் முடிந்ததும் மூவரும் கார் ஒன்றில் தங்களின் ஹோட்டலுக்கு செல்ல தொடங்கினர். பிருந்தாவின் கையில் இருந்த குழந்தை தங்க நிறத்தில் ஜொலிக்கும் விருதை தன் வாயில் வைத்து எச்சில் செய்து கொண்டிருந்தது.

"அக்கா நீங்க ஸ்டேஜ்ல சொன்னது உண்மையா, இனிமே நீங்க நடிக்க போறது இல்லையா?" என்று கேட்க கவி கேட்க

"ஆமா கவி, இனிமே நான் நடிக்க போறது இல்லை. இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெசல் கவி. First female prime minister பற்றிய படம்.அவங்க பட்ட கஷ்டங்கள் எல்லாம் ரொம்ப அழகா காட்டியிருப்பாங்க.அஜய் அப்பாவோட தயாரிப்பில் வெளியாக இருந்த இந்த படம் கடைசி நேரத்துல ஏற்பட்ட பைனான்சியல் ப்ராப்ளம்னால பாக்ஸ் மூவீஸ் வாங்கிட்டாங்க.பாக்ஸ் மூவீஸ் இன்வால்வ் ஆனதாலதான் இந்த படம் எல்லா fime festival லயும் ஓடிச்சி.இல்லன்னா இதுவும் நம்ம தமிழ் சினிமா இண்டஸ்ட்றில இருக்குற எத்தனையோ நல்ல படங்கள போல இருந்திருக்கும். இதுதான் என்னோட கடைசி படம். என் வாழ்க்கைய இனிமே நான் வாழ போறேன்" என்றவள்

"ஹேய் கவி உனக்குத்தான் சினிமா தகவல்கள் என்றால் ரொம்ப பிடிக்குமே.  உனக்கொரு தகவல் சொல்ரேன் கேட்ட்குக்கோ.இந்த film festival ல இருக்குற பாலிடிக்ஸ் நம்ம ஊரு அரசியல விட ரொம்ப மோசம் . ரொம்ப established டைரக்டர்ஸ் அல்லது பெரிய ஹீரோவோட படம்னா எல்லோரும் பார்ப்பாங்க.ஆனா அதுவே தெரியாதவங்க படம்னா எவனுமே பார்க்க மாட்டான்.போட்டிக்கு வந்த எல்லா படத்தையும் பார்க்காம எப்படி இவனுங்க அவார்ட் கொடுக்க முடியும்?" என்று கூற ஆச்சரியமாக கவி

"அப்போ இங்க இருக்குற ஜட்ஜர்ஸ் போட்டிக்கு வந்த எல்லா படத்தையும் பார்க்க மாட்டாங்களா?" என்று கேட்க பிருந்தா

"உலகத்துலயே மிகப்பெரிய பாலிடிக்ஸ் நடக்குற இடம்தான் இந்த ஆஸ்கார் விருதுதான்.சரி சுரேஷ் எங்க ?ஆளவே கானோம்?" என்று கேட்க

"சுரேஸ் கால் பண்ணாருக்கா. என்ன sheraton Grand hotel ல பிக் பண்ணிக்குறேன்னு சொன்னாரு.அங்க நம்ம ப்ராண்ட் launching event கான ஒரு மீட்டிங்க் இருக்குதாம்.நான் அங்கேயே இறங்கிக்கிறேன். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப டயர்ட்டா இருப்பீங்க.நீங்க ஹோட்டலுக்கு போங்க" என்று கூற இருவரும் சரி என்று அவள் கூறிய இடத்தில் கவியை டிராப் செய்தனர்.பிருந்தாவின் கையில் இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டு இறங்கிய கவி

"சீ யூ டுமாரோ, இரண்டு பேரும் ஹோட்ட்ல போய் ஏர்லியா தூங்குங்க. சும்மா பேசிக்கிட்டு இருக்காம. நாளைக்கு நம்ம ப்ராண்ட் launch ஓட கடைசிகட்ட வேலைகள் இருக்கு. சுரேஷ் நாளைக்கே எல்லா வேலையும் முடிக்கனும்னு சொல்லிருக்காரு" என்று கூற அவளை முறைத்த விக்ரம்

"உன்ன எத்தனை வாட்டி சொல்லிருக்கேன். புருசன பேரு சொல்லி கூப்பிடாதன்னு.அப்புறம் உன் பொண்ணு உன்ன மாதிரிதான் வருவா" என்று கூற பிருந்தாவை பார்த்த கவி

"இங்க மட்டும் என்ன வாழுதான். மேடமும் பேருதானே சொல்ராங்க மிஸ்டர் விக்ரம்" என்று கூற விக்ரம் அசடு வழிந்தான்.

காரில் இருவரும் தனித்திருக்க பிருந்தா விக்ரமின் தோளில் சாய்ந்தவள்

"விக்ரம் கவியோட பொண்ணு எவ்வளவு க்யூட்டா இருக்கால்ல" என்று கேட்க அவளை பார்த்து புன்னகைத்தவன் எதுவுமே பேசவில்லை.உடனே அவள் அவனது கன்னத்தை கடித்து

"டேய் நான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்னடான்னா உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி பார்க்குற" என்று கேட்க அவன்

"பத்தொன்பது" என்றான்.அவன் என்ன கூற வருகின்றான் என்பது புரிந்தவள்

"இல்லை விக்ரம் இந்த வாட்டி நான் ரொம்ப சீரியஸா சொல்ரேன்.ஐ நீட் அ பேபி. நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிடாலும் சரி இல்லைன்னாலும் சரி. ஐ நீட் அ பேபி.உன்னால முடியாதுன்னா சொல்லு நான் வேற ஆளு பார்த்துக்கிறேன்" என்று நக்கல் கலந்த தொனியில் கூற அவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் எதுவுமே பேசவில்லை.

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்த டிராப்பிக்கில் அவர்கள் மாட்டிக்கொண்டதால் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வர இரண்டு மணி நேரம் ஆனது.காரில் இருந்து இறங்கும் முன் பிருந்தாவை தன் அருகில் இழுத்தவன் அவள் இதழில் முத்தமிடலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு அவளின் கன்னத்தில் முத்தமிட்டவன்

"சரி இப்போ சொல்லு, நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று கேட்க அவள்

"இல்லை விக்ரம், நான் கவியோட பொண்ண பார்த்த உணர்ச்சி வேகத்துல அப்படி பேசிட்டேன். ப்ளீஸ் என்ன மன்னிச்சிடு.என்னால கல்யாணம் குழந்தை என்றத நினைச்சிக்கூட பார்க்க முடியல" என்று கூற அவளை குறும்பாக நோக்கியவன்

"சரி ,we have an agreement right.யாராச்சும் தப்பு பண்ணி சாரி கேட்டா மத்தவங்க சொல்ரத சாரி கேட்டவங்க செய்யனும்னு. சோ இப்போ நான் சொல்ல போறத நீ கேட்கனும் பிருந்தா" என்று கூற அவன் என்ன கூற வருகின்றான் என்பது புரிந்தது.

இருந்தாலும் விக்ரம் அவளை மேலும் டீஸ் செய்ய நினைத்து

"சரி இன்னைக்கு நான் எதுவுமே கேட்கல, நீயாவே எதுனாலும் எனக்கு கொடு" என்று கூற காரின் கதவை திறந்தவள் அவன் தலையில் நங்கென்று குட்டியவள்

"இதுதான் நான் தற நினைச்சது .எப்படி இருக்கு மிஸ்டர் விக்ரம்" என்று குறும்பாக கேட்க அவன்

"பிராடு" என்றான்.

விக்ரமின் தோளோடு தன் தோள் உரச ஹோட்டலின லாபியை தாண்டி தங்களின் அறை இருக்கும் ப்ளோருக்கு இருவரும வந்தனர். பிருந்தாவின் இடையை சுற்றியிருந்த தன் கரத்தை விடுவித்த விக்ரம் அவள் முகத்தை காதலாக பார்த்து

"குட்நைட் பிருந்தா , ரொம்ப டயர்ட்டா இருப்ப. Go and sleep well. I love you" என்று கூற அவளும்

"I love you too Vikram. Good night" என்று கூறி இருவரும் தத்தமது அறைகளக்குள் புகுந்து கொண்டனர்.

—முற்றும்-

——————————————————

இந்த முடிவு எங்களுக்கு புரிந்தது என்பவர்கள் கீழே உள்ளதை படிக்க வேண்டாம்.

கதை ஒரு முடிவில்லாமல் முடிந்தது போல தோன்றுகின்றதா?

விக்ரம் கூறும் பத்தொன்பது என்பது அவள் இதுபோல 19 தடவை அவனிடம் கல்யாணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டதை குறிக்கும்.

இங்கு பிருந்தாவை காதலிக்கும் விக்ரமே அவளை திருமணம் முடிக்க அவளின் முழு சம்மதத்துக்காக காத்திருக்கும் போது நமக்கு ஏன் அவசரம்.

உங்களுக்கு இப்போது பிருந்தாவின் மனநிலை புரிந்திருக்கும். கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் அவளின் மனது விக்ரமை திருமணம் செய்து கொள்ள தயாராகிவிடும். அதை எழுதினால் கதை போரடித்துவிடும்.

அதனாலேயே பிருந்தா விக்ரமை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொல்வாளா இல்லையா என்பதை வாசகர்களாகிய உங்கள் கைகளிலேயே விட்டுவிடுகின்றேன்.ஆனால் அவன் கண்டிப்பாக விக்ரமை உயிருக்கு உயிராக காதலிக்கின்றாள்.அவள் உடலை செல்லத் தீண்டல் செய்ய அனுமதியும் அளிக்கின்றாள்.இவை எல்லாம அவளின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகின்றது என்பதை எடுத்துக்காட்டவே.

இந்த ஆறு வருடத்தில் அவனை இந்த அளவுக்கு அனுமதித்தவள் கண்டிப்பாக இன்னும் சில வருடங்கள் சில அல்லது நாட்களில் ஏன் சில மணி நேரங்களில் கூட அவனுக்கு தன் உடலை முழுவதும் அர்ப்பனிக்க தயாராகிவிடலாம்.அந்த நாள் எப்போது என்பது எனக்கு கண்டிப்பாக தெரியாது.ஆனால் கண்டிப்பாக அந்த நாள் வரும்.

இந்த கதையில் இருந்து உங்களிடம் இருந்து நான் விடைபெறுகின்றேன்.இந்த கதை எழுத எனக்கு மிகவும் உதவியாக இருந்த கார்த்திகா அவர்களுக்கு மிக்க நன்றி.என்னுடைய எடிட்டர் அவர்தான்.அப்டேட் எழுதுவது மட்டும்தான் என் வேலை அதற்கு எழுத்துப்பிழை மற்றும் இதர வேலைகள் செய்வது அவ்வப்போது சில திருத்தங்களை கூறுவதும் அவர்தான்.

கடந்த சில நாட்களாக என்னுடைய கதையை விட விமர்சனங்கள் சூப்பராக இருக்கின்றது என சிலர் கூறுகின்றார்கள்.எனக்கும் அது நிஜம் என்றே தோன்றுகின்றது. நல்ல கதைகள் இருந்தால் கூறவும். படித்துவிட்டு விமர்சனம் போட்டுவிடலாம். கதை மட்டுமில்லாமல் எழுத்தாளர்கள் பற்றிய விமர்சனமும் போடலாம் என்ற எண்ணமும் உண்டு.ஆனால அதற்கு எழுத்தாளர்கள் முதலில் சம்மதிக்க வேண்டும்.

நன்றி.

Good Bye For all.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro