கற்பனை 12

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அப்டேட்டை போட்டு முடித்தவன் ஆகாஷனாவின் வருக்கைக்காக காத்திருக்க அவளின் வோட் வராமல் போகவும் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியிருந்தான். மனதை அங்குமிங்கும் அலைபாய விடாமல் தொடர்ந்து அடுத்த அப்டேட்டையும் எழுதலாம் என நினைத்து அந்த வேலையை ஆரம்பித்தான்.

ஷனா- 8

தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்ற நேத்ரா அங்கு கிஷோர் விழுந்து கிடப்பான் என்று செல்ல அவனோ அங்கில்லாததை கண்டு ஆச்சரியப்பட்டவள் அவளை பின்னால் இருந்து ஒரு உருவம் இறுக்கி அனைத்து

"என்னடி கட்டையால அடிச்சா நான் பயந்துடுவேனா?தேவை இல்லாம உன் ப்ரெண்ட காப்பாத்த வந்து நீ மாட்டிக்கிட்டியா.நீதான் கட்டையால என்ன அடிச்சியா. உன்ன என்ன பண்றேன் பாரு " என்று அவளை பலாத்காரம் செய்ய முயன்றவனை எவ்வளவு தடுத்தும் அவளால் முடியவில்லை.இங்கு அஜய் லைட்டை ஆன் செய்ததும் நேத்ராவை சத்தமிட சொல்லியுருந்ததால் அவளால் கத்த கூட முடியவில்லை.ஒரு கட்டத்தின் மேல் கிஷோர் எல்லை மீறுவதை உணர்ந்தவள் சத்தமிட்டு கத்த சுதாகரித்த அஜய் தனது நண்பர்களுடன் அவளின் அறைக்குள் செல்ல கிஷோர் ஜன்னல் வழியாக தப்பித்து சென்றான்.எல்லா இடமும் ஒரே இருட்டு என்பதால் அவர்களால் அவனை பிடிக்க முடியவில்லை.ஜன்னலின் அருகில் டார்ச்லைட்டை அடித்த அஜய் ஏதோ ஒன்று மின்னுவதை போன்றிருக்க அது என்னவென்று பார்த்தவன் கிஷோருடைய போன் அவசரத்தில் தவற விடப்பட்டிருந்ததை உணர்ந்தன்.

சத்தம் கேட்டு வந்து லெக்சரர்ஸ்

"ஏய் என்னாசு நேத்ரா, இந்த நேரத்துல பேய பார்த்த மாதிரி கத்துற" என்று கேட்க முழித்தவள்

"இல்ல மேம் ,ரூமுக்கு யாரோ வெளி ஆளு வந்துட்டாங்க.அதான் பயத்துல கத்திட்டேன்" என்று கூற

"ஆமா உங்கூட ஆகாஷனாவதானே நாங்க பெயார்ரா (ஜோடி) போட்டோம்.இப்போ அவ எங்க" என்று கேட்க அவர்களை பார்த்து முழித்த நேத்ரா

"இல்ல மேம் அவளோட ரிலேசன்ஸ் டெல்லில இருக்காங்கன்னு அவங்கள பார்க்க போயிட்டா" என்று கூற கோபம் கொண்ட லெக்சரர்ஸ்

"இப்படி நடுராத்திரில யாருகிட்டயும் சொல்லாம போயிருக்கா.என்ன நினைச்சிக்கிட்டு இருக்கா அவ மனசுல.காலைல அவ வரட்டும் அவளுக்கு இருக்கு" என்று கூற எல்லோரும் அமைதியாகினர்.மேலும் தொடர்ந்த லெக்சரர்

"ஆமா யாரு வந்தா உன் ரூமுக்கு.அடையாளம் தெரிஞ்சிதா " என்று கேட்க

"இல்ல மேம் யாருன்னு தெரில.ஒரு நிழல் மாதிரி இருந்துது.அதான் சரியா தெரியல.நிஜமா ஒரு ஆளா இல்லை ஏதும் நிழல பார்த்து பயந்துட்டேன்னான்னு தெரியல" என்று கூற எங்கிருந்தோ வந்த கிஷோர் அந்த கூட்டத்துக்குள் நுழைந்து நேத்ராவின் பதில்களை கேட்க அவனுக்கு அவள் தன்னை போட்டு கொடுக்காமல் இருந்ததே பெரிய நிம்மதியாக இருந்தது.ஏனென்றால் அவனது மொபைலில்தான் அவர்கள் எடுத்த வீடியோ இருந்தது.அதை வைத்தே அவர்களை மிரட்ட அவன் திட்டம் போட்டிருந்த்ததால் இப்போது மொபைல் இல்லாமல் எதுவும் செய்ய முடியவில்லை.வேறு காப்பி கூட போட நேரம் போதாததால் அவனிடம் இவர்களை மிரட்ட எந்த பிடிமானமும் இல்லமல் போனது.ஒரு வேலை நேத்ரா அவனை இப்போது மாட்டிவிட்டுருந்தால் தனக்கும் தன் தந்தைக்கும் மிகப்பெரிய அவமானமாக இருந்திருக்கும் என்பதையும் நன்றாக உணர்ந்திருந்தான்.

தான் செய்த தவறை உணர்ந்தானோ இல்லையோ தெரியவில்லை ஆனால் நேத்ராவின் பதிலால் அவன் மனது கொஞ்சம் அமைதியடந்ததை அறிந்து கொண்டான்.கிஷோரின் செயற்பாடுகள் எல்லை மீறி போவதை கண்ட அஜய் இதற்கு உடனே ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

அதிகாலையில் மயக்கத்தில் இருந்த ஆகாஷனாவுக்கு முழிப்பு வர தான் வேறொரு அறையில் இருப்பதை உணர்ந்தவள் எழுந்து உட்கார அவளுக்கு முன் இருந்த ஒரு துண்டுச்சீட்டில்

"கால் மீ-அஜய்" என்று எழுதி அவனது நம்பர் இருந்தது.உடனே அருகில் இருந்த போனை எடுத்து கால் செய்தவள் மறுமுனையில் அஜய் பேச

"அஜய் என்னாச்சி எனக்கு.நைட் என் ரூமுக்கு கிஷோர் வந்தான்.அப்புறம் ஏதோ மயக்க மருந்த கொடுத்ததும் நான் மயங்கிட்டேன்.அதுக்கு அப்புறமா என்னாச்சின்னே தெரியல"என்று கூற

"இப்படித்தான் எல்லாமே லூசு மாதிரி பண்ணுவியா. முதல்ல நீ சத்தமில்லாம உன் ரூமுக்கு போ.அங்க நேத்ரா தூங்கிட்டு இருப்பா.யாரும் உன்கிட்ட நைட் எங்க போயிருந்தேன்னு கேட்டா, டெல்லில இருக்குற உன்னோட ரிலேசன்ஸ மீட் பண்ண போனேன்.லேட் ஆனதால என்னால வர முடியாம அங்கேயே தங்கிட்டேன்னு சொல்லு" என்று கூற இரவு இங்கு எதுவோ பெரிதாக நடந்துள்ளது என்பது தெளிவாக புரிந்தது.ஆரம்பத்தில் இருந்து தான் செய்த முட்டாள்தனமான காரியங்களால் தேவையில்லாமல் நேத்ராவும் இதில் மாட்டியிருப்பது உரைத்தது.அஜய்யிடம் சாரி கேட்க நினைத்த ஆகாஷனா

"சாரி அஜய், தெரியாம இப்படில்லாம் பண்ணிட்டேன்" என்று கூற அவனோ கடு கடுத்த  தொனியில்

"அதெல்லாம் அப்புறமா பேசிக்கலாம்.முதல்ல எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணாம உன் ரூமுக்கு போமா" என்று கூற அவனன் பேச்சு அவளுக்கு சிரிப்பை வரவழைக்க "சரி" என்று கூறி காலை கட் செய்தவள் சத்தமில்லாமல் மெதுவாக தன் அறைக்குள் சென்றாள்.இரவு முழுவதும் தூங்காமல் இருந்த நேத்ரா ஆகாஷனாவை கண்டதும் பளார் என்று அறைந்தவள்

"என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல.நைட் அஜய் மட்டும் வரலன்னா உன் நிலமை என்ன ஆகிருக்கும்னு தெரியுமா" என்றவள் இரவு நடந்த எல்லா கலோபரத்தையும் கூற ஆகாஷனாவுக்கு அழுகையாக வந்தது.வாழ்வில் தான் முதல் முறையாக தவறான ஒரு முடிவு எடுத்து விட்டோமே என்று கவலை கொண்டவள் கேவி கேவி அழ ஆரம்பித்தாள்.ஆகாஷனாவின் அழுகை அதிகமாவதை கண்ட நேத்ரா

"ஹேய் பேபி, சாரிடி உன்ன அடிச்சதுக்கு.உனக்கு ஏதும் ஆகியிருந்தா உங்க அம்மா அப்பாவ பத்தி யோசிச்சியா.ஆரம்பட்துல இருந்தே நீ அஜய் விசயத்துல தப்பாதான் முடிவெடுக்குற.நம்ம அவனுக்கு கெட்டது பண்ண இருந்தும் அவன் நமக்கு உதவி செஞ்சிருக்கான்டி.இனிமேலாச்சும் அவன பழிவாங்கனும் என்ற என்னத்த மாத்திக்கடா" என்று கூறிய நேத்ராவை கட்டிக்கொண்ட ஆகாஷனா விசும்பிக்கொண்டே இருந்தாள்.இரவு மட்டும் அஜய் வராமல் இருந்திருந்தாள் தன் வாழ்க்கை  கிஷோரினால் சின்னாபின்னமாகி இருக்கும் என்பதை நினைக்கும் போதே அவளுக்கு உடலெல்லாம் சிலிர்த்தது.அவளின் உடலில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்த நேத்ரா

"சரிடா நீ இப்போ உன் யோகாவ ஸ்டார்ட் பண்ணு.நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்.நைட்லாம் தூக்கமே இல்லை" என்று கூறி தூங்குவதற்கு தயாராக நேத்ராவின் கன்னத்தில் முத்தமிட்ட ஆகாஷனா

"ஐ லவ் யூடி செல்ல ராட்சசி" என்று கூற அவளை முறைத்த நேத்ரா பின் சிரித்தவள்

"ஐ லவ் யூ டூ டி செல்லப் பிசாசே" என்று தூங்கினால்.

------------------வருவாள்--------------------------

தான் எழுதிய பாகத்தை அப்டேட் செய்தவுடன் ஆகாஷனாவிடம் இருந்து மெசேஜ் வர கதிர் உற்சாகமானவன் ஆகாஷனாவுடன் பேச ஆரம்பித்தான்

"கரு- என்னப்பா ஆளவே கானோம் கொஞ்ச நாளா?"

"ஆகாஷனா-இல்லப்பா கொஞ்சம் சிப்டிங்க் வேல இருந்திச்சி ,அதுதான் வாட்பெட் பக்கம் வரல்ல"

"கரு- என்ன சிப்டிங்க்? ஏதும் வீடு மாறுறீங்களா?"

"ஆகாஷனா- ப்ரெண்ட், ஹாஸ்டல், ப்ரெண்ட் வீடு,சிப்டிங்க்"

"கரு- என்னங்க 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரா' படத்துல வர்ர மாதிரி சொல்ரீங்க.ப்ரெண்டு லவ் மேட்டரு பீல் ஆயிட்டாப்ல, ஒரு ஹாப் சரக்கடிச்சா கூல் ஆயிடுவாப்ல"

"ஆகாஷனா-ஹாஹா, ஆனா நான் சொன்னது புரிஞ்சிதில்ல.அதுவே போதும்.அப்புறம் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்னு இருந்தேன்.உங்களுக்கு ''Chekhov's Gun'' தியரி தெரியுமா. சும்மா யூடியூப்ல சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு வீடியோல பார்த்தேன்.உங்கள மாதிரி இளம் எழுத்தாளர்களுக்கு அது ரொம்ப உதவும்.நேரம் கிடைக்கிறப்போ பாருங்க.சரி ஜி கொஞ்சம் ப்ரீ டைம் இருக்கு.சோ படிக்காம விட்ட அப்டேட்லாம் படிக்க போறேன் பாய்"

கரு-கண்டிப்பா பார்க்குறேன் ஷனா பாய்" என்று கூறியவன் 'Chekhov's Gun' தியரி  பற்றி யூடியூப்பில் பார்த்தவனுக்கு மிக ஆச்சர்யமும் சுவாரசியமும் நிறைந்த வழிகாட்டுதல்கள் கிடைத்தது.(கண்டிப்பா எல்லோரும் கொஞ்சம் தேடி பாருங்க.சாதாரணமா நம்ம எல்லோரும் யூஸ் பண்றதுதான்.ஆனா இந்த தியரிதான் அதுன்னு தெரியாம நிறைய பேரு இருக்கோம்).

ஒரு இருபது நிமிடத்தில் ஆகாஷனாவிடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது.அதைப்பார்த்தவனுக்கு என்னவென்று கூற முடியாத உணர்வு ஆட்கொண்டது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro