கற்பனை 13

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng


"ஆகாஷனா- 😡😡 "

"கரு-என்ன ஷனா வீட்டுல செஞ்ச தக்காளி சட்னிய முகத்துல கொட்டிட்டீங்களா"

"ஆகாஷனா-ஹலோ என்ன நக்கலா.நான் கோவமா இருக்கேன் உங்க மேல"

"கரு-ஏன் என்னாச்சி"

"ஆகாஷனா-இனியும் என்னாகனும் ,நீங்க ஆகாஷனாக்கு டிரஜடியா ஏதோ பண்ண போறீங்கன்னு மட்டும் நல்லா தெரியுது.ஆமா உங்க ஸ்டோரியோட ஹீரோயின் யாரு?"

"கரு-இன்னும் டிசைட் பண்ணலப்பா"

"ஆகாஷனா- சார் இப்படித்தான் வாட்பெட்ல சில லூசுங்க சொல்லிட்டு சீன போட்டுடு சுத்துதுங்க.நீங்களும் அந்த மாதிரி பண்ணாதீங்க.கடுப்பா இருக்கு"

"கரு-ஹேய் யாருப்பா அது.எனக்கு தெரியலயே"

"ஆகாஷனா-இப்போ அது முக்கியமில்ல,ஆமா நீங்க என்ன சேட் (sad) எண்டிங்கா கொடுக்க போறீங்க? "

"கரு-கண்டிப்பா, ஏன்னா வாட்பெட்ல யாருக்கும் சேட் எண்டிங்க் கொடுக்க தைரியம் இல்ல.ஏன்னா அவங்களோட அடுத்த கதைக்கு வாசகர்கள் வரமாட்டாங்க என்ற பயம் .ஆனா என்னோட ஒரே ஒரு ஸ்டோரி இது மட்டும்தான்.சோ எனக்கு அந்த கவலை இல்லை"

"ஆகாஷன-ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி .ஒரு கதை படிச்சோம்னா கடைசில நமக்கு மனசுக்கு சந்தோசத்த தரனும்.அதவிட்டிட்டு மனிசனுக்கு இப்போ இருக்குற டென்சன்ல ஸ்டோரிய படிச்ச கவலை வேற வரனுமா?"

"கரு- நீங்க சொல்ரதும் சரிதான் ஷனா.ஒரு உதாரணத்துக்கு சொல்ரேன் டைட்டானிக்,7G ரெயின்போ காலனி,தேவ்தாஸ் இந்த மூவீஸ்லாம் ஏன் ரொம்ப ரீச் ஆகிச்சி.எல்லாமே அதோட சேட் எண்டிங்க்தான் காரணம்.அதுதான அந்த மூவிஸ்லாம் இன்னைகும் எல்லோரும் ஞாபகம் வெச்சி பேசுராங்க"

"ஆகாஷனா-ஹல்லோ அப்படின்னு சொன்னா Great expectation (1998), Passengers (2016) ,cast away ,fault in our star இந்த மூவீஸ் கூடத்தான் சேட் எண்டிங்க் ஆனாலும் அந்த மூவீஸ்ல எல்லாம் கடைசில பார்க்குறவங்க மனசுக்கு கவலை கொடுக்காது.அப்படி ஏதும் டிரை பண்ண முடியாதா?"

"கரு-என்னங்க அதெல்லாம் ஹாலிவூட் மூவீங்க.அப்புறம் Great Expectation கதையோட ரைட்டர் யாரு தெரியுமா Charles Dickens.இதெல்லாம் உங்களுக்கு கொஞ்சம்
ஓவரா தெரியல"

"ஆகாஷனா-அப்படி சொல்லல.ஆனா யாரும் முதல் கதைலயே பெரிய ரைட்டர் ஆகிறது இல்ல.எழுத எழுதத்தான அவங்க எழுத்துக்கள் அழகா மாறும்.வைரம் தீட்ட தீட்ட எப்படி பெறுமதி கூடுமோ,தங்கம் எப்படி சுட்டா அதோட பெறுமதி அதிகரிக்குமோ அப்படி"

"கரு-வாவ் செம்மயா இருக்குப்பா உங்க சிந்தனை.பேசாம நீங்களே ஸ்டோரி எழுதலாம்பா"

"ஆகாஷனா-என்ன நக்கலா.நான் இவ்வளவு சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன்.நீங்க நக்கல் பண்றீங்களா?"

"கரு- இல்ல ஷனா நான் சீரியசா சொல்ரேன் .நீங்க சொலரது எல்லாமே ரொம்ப அழகாவும் யோசிக்கிற மாதிரியும் இருக்கு"

"ஆகாஷனா-ஹ்ம்ம் போதும் போதும் எனக்கு ஜன்னி வந்திட போகுது.அப்புறம் நீங்க என்ன முடிவு வேனும்னாலும் கொடுங்க,ஆனா ஆகாஷனாக்கு மட்டும் ஏதும் ஆச்சு.அப்புறம் உங்களுக்கும் நான் யருன்னு காட்டவேண்டி வரும்"

"கரு-நிஜமாவா அப்போ நான் சேட் எண்டிங்க் கொடுத்தா நீங்க யாருன்னு காட்டுவீங்களா.வாவ் அப்போ கண்டிப்பா சேட் எண்டிங்க்தான்"

"ஆகாஷனா-ரொம்பத்தான் பண்ணாதீங்க.ஓகே டேக் கெயார் பாய்.ஆனா ஆகாஷனாக்கு மட்டும் ஏதும் ஆச்சி.அப்புறம் ஏண்டா அப்படி எழுதினோம்னு காலம் பூரா நீங்க கவலைபடுற மாதிரி ஆகிடும்.பாய்"

என்று கூறி அவனின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவள் சென்றுவிட்டால்.ஆனால் இங்கு கதிருக்கோ சாதாரன ஒரு கதை ஒருத்தரோட வாழ்க்கைல இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமான்னு யோசித்தவனுக்கு முடியும் ஒன்றே தோன்றியது.வாட்பெட்டில் நடக்கும் ஒரு சில சுவாரசியமான கதைகளும் நன்றி கூறும் பதிவுகளும் ஒரு மனிதனின் வாழ்வில் ஒரு படைப்பு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவனுக்கு உணர்த்தியது.இப்போது கதிருக்கு தன் கதையின் முடிவை எப்படி எழுதுவது என்ற புதிய குழப்பம் உருவாகியது.அதை யோசித்துக்கொண்டிருக்கும் போதே சுமனிடம் இருந்த கால் வர அதை அட்டண்ட் செய்தவன்

"மச்சான் அந்த ஆகாஷனா யாருன்னே தெரியலடா.நானும் எனக்கு தெரிஞ்ச ஒன்னு ரெண்டு பொண்ணுங்க கிட்ட கேட்டு பார்த்துட்டேன்.இந்த பொண்ணு எந்த க்ரூப்லயும் இல்லயாம்டா.சாரிடா மச்சான்" என்று கூற கதிரோ

"இட்ஸ் ஓக்கேடா.நான் இது எதிர்பார்த்ததுதான்.நீ ஒன்னும் வொரி பண்ணிக்காத.இதை நான் பார்த்துக்கிறேன்"என்று கூற சுமனும் சரி என்று கூறி காலை கட் செய்ய முன்

"மச்சி ஒன்னு சொல்ரேன்னு தப்பா எடுத்துக்காதடா. என் லைப்ல பொண்ணுங்க யாருகிட்டயும் நான் ரொம்ப க்லோசா பழகினது இல்ல.ஆனா இந்த கொஞ்ச நாளா நான் ஆகாஷனா கிட்ட ரொம்ப நெருங்கி பழகுற மாதிரி ஒரு பீல்டா.அவளும் இப்போலாம் ரொம்ப க்லோஸா பேசுறா,ஒருமைல கூப்பிடுறா.எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு மச்சி.காலேஜ்ல ஆபீஸ்லலாம் கூட பொண்ணுங்க பேசுவாங்க ஆனா அது ஒரு குறிப்பிட்ட விசயத்த மட்டும்தான் பேசுவாங்க.ஆனா இவ எனக்கு பிடிச்ச கதை ,ரைட்டிங்க் ஸ்கில், மூவிஸ் பத்திலாம் பேசுராடா.எனக்கு இத என்ன சொல்ரதுன்னே தெரியல" என்று கூற சுமனுக்கு இப்போது கதிரை நினைத்து கொஞ்சம் கவலையாக இருந்தது.சிறிய வயதில் இருந்து அவனுக்கு பெண் தோழிகள் என்று யாருமே இருந்ததில்லை.அந்த தோழமை உணர்வை முகம் தெரியாத யாரோ ஒரு பெண்ணிடம் அவனுக்கு கிடைப்பதை என்னி அவன் மனம் இப்படி அலைபாய்வது ஒன்றும் புதிதில்லை என்று தோன்றினாலும் நாளை இது வேறு ஏதும் விபரீதத்துக்குள் அவனை கொண்டு சென்று விடகூடாது என்று கவலை கொண்டான்.

---------------------------------

நாட்கள் நகர நகர ராஜீவ் அடிக்கடி நந்தினியிடம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு அவளிடம் பேசுவதை வாடிக்கையாக்கிக்கொண்டான்.இப்போதெல்லாம் நந்தினியும் ராஜீவுக்கும் இடையில் நல்ல ஒரு நட்பு ஒன்று உருவாகியிருந்தது.இதை எல்லாம் அவதானித்துக்கொண்டிருந்த சந்தியா ஒரு நாள்

"ஏய் நந்தினி உனக்கும் ராஜீவுக்கும் இடைல என்ன நடக்குது.ஜஸ்ட் ப்ரெண்ட்சிப்னு மட்டும் சொல்லாதா.அவன் முகத்த பார்த்தாலே தெரியுது.ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுறது.இங்க பாருடி உனக்கு அவன் மேல ஏதும் அப்படி என்னம் இருந்த அவன் கேட்கும் போது அக்சப்ட் பண்ணிக்க.இல்லைன்னா ஆரம்பத்துலயே இதை ஸ்டாப் பண்ணிடு.சும்மா எதுக்கு அவன் மனசுல ஆசைய வளர விடனும்" என்று கூற சந்தியா கூறுவது சரி என்று தோன்றினாலும் ராஜீவ் தன்னிடம் காதலாக ஒரு வார்த்தை கூட பேசியதில்லையே என்பதை நினைத்து கொஞ்சம் குழம்பி போனால்.

வீட்டிற்கு வந்த நந்தினிக்கு ராஜீவிடம் இருந்து கால் வர அதை எடுத்து பேசியவள்

"ஹாய் ராஜீவ் என்ன விசயம் சொல்லுங்க" என்று கேட்க நந்தினி குரலில் ஏதோ ஒன்று சரியில்லை என்று உணர்ந்தவன்

"இல்ல வீட்ட போய் சேர்ந்திட்டிங்களான்னு கேட்கத்தான் போன் பண்ணேன்"என்று கூற இப்பொது நந்தினிக்கு சந்தியா கூறியது ஒரு வேலை நிஜமாகா இருக்குமோ என்று என்னத்தோன்றியது.இருந்தாலும் உரியவரிடம் கேட்டு தெளிவு பெறாமல் தப்பான அபிப்ராயம் எடுப்பதில் உடன்பாடில்லாதவள்

"ராஜீவ் நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது.ஆனா உண்மையத்தான் சொல்லனும்"என்று கேட்க அதே நேரம் பார்த்து சந்தியாவும் அறைக்குள் நுழைய லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்தவளை ராஜீவ்

"என்ன கேளுங்க நந்தினி ,நான் எதுக்கு உங்க கிட்ட பொய் சொல்ல போறேன்" என்று கூற

"தப்பா எடுத்துக்காதீங்க, ஜஸ்ட் ஒரு க்லாரிபிகேசனுக்குத்தான் .நீங்க யாரையும் லவ் பண்றீங்களா?" என்று கேட்க மறுமுனையில் அவனுக்கோ என்ன பதில் கூறுவது என்றே புரியவில்லை.நந்தினியை அவன் காதலிப்பது என்னமோ 1000 % உண்மைதான்.ஆனால் அவனின் காதலை சொல்லி ஒரு வேலை அவள் அதை நிராகரித்து அவளுடன் இப்போது இருக்கின்ற நட்பும் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் அவனை ஆட்கொண்டது.ஆனால் அவளோ பொய் வேறு கூற கூடாது என்று சொன்னதால் என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருந்த ராஜீவிற்கு ஒரு யோசனை தோன்ற

"சரி நான் சொல்வேன், ஆனா இது பத்தி அடுத்த கேள்வி கேட்க கூடாது" என்று கூற உடனே ஆர்வமாகிய சந்தியா நந்தினியை சைகையால் 'கேட்கமாட்டேன்னு சொல்லு' என்று கூற நந்தினியும்

"சரி கேட்கமாட்டேன் இப்ப சொல்லுங்க " என்று கூற அவனோ

"ஆமா ஒரு பொண்ண ரொம்ப சின்சியரா லவ் பண்றேன்.ட்றூலி ,மேட்லி ,டீப்லி ....ஐ அம் க்ரேசி அபவ்ட் ஹர் (அவள நினைச்சி பைத்தியமா இருக்கேன்) " என்று கூற உடனே நந்தினி

"அவ நம்ம காலேஜா?" என்று கேட்டதற்கு அவனோ

"ஹல்லோ மேடம் ஒரு அடுத்த கேள்வி கேட்க கூடாது என்கிறதுதான் நம்ம டீலிங்க்.சோ நான் பதில் சொல்லிட்டேன்.சரி நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? " என்று கேட்டவனை அவள்

"என்ன கேளுங்க "என்று கூற அவன் கேட்ட கேள்வியில் இருவரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றனர்.

-_---_--------

ஹாய் நான்தாம்பா...
எல்லோருக்கும் ஒரு சில உண்மைகளை சொல்ல போறேன்….
எந்தெந்த சீன்ஸ் எந்தெந்த மூவீஸ் ,ஸ்டோரிஸ்ல இருந்து சுட்டேன்னு…..

முதல்ல நான் சுட்டது என்னோட எல்லா கதைகளுடைய தலைப்புகளும்…

என் உயிரினில் நீ— ஜீரோ படத்தில் வரும் “உயிரே உன் உயிரென் நான் இருப்பேன்” இந்த பாடல்ல இருந்து சுட்டேன். அநத கதையோட முழு கான்சப்டும் ஒரு பாட்டி தன் வாழ்க்கை கதையை பேத்திக்கு கூறுவது போல் இருக்க வேண்டும் என நினைத்தேன்.இது கூட ஷாரூக்கான் நடித்த கல் ஹோ நா ஹோ என்ற ஹிந்தி படத்தில் இருந்து சுட்டதுதான்.அந்த படத்தில் ப்ரீத்தி சிந்தா தன் மகளுக்கு அவருடைய வாழ்க்கையை கூறுவதா இருக்கும்.

சில்லென தீண்டும் மாய விழி- இந்த தலைபு கூட பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ பாடலின்
“சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி” இந்த வரிகளில் இருந்து சுட்டதுதான்.ஆனால் அந்த கதை கரு நானாக யோசித்து எழுதியது.
ஆரம்பத்தில் எழுதிய கதையில் வசுந்த்றா கதாபாத்திரம் எல்லாம் கிடையாது.அருணுக்கும் நித்யாவுக்கும் திருமணம் முடிந்து அருண் தனக்கு இருக்கின்ற நோயால் இறந்து விடுவான்.அதன் பின் வருண் நித்யாவை திருமணம் முடிப்பது போல கொண்டு செல்ல முடிவெடுத்திருந்தேன்.ஆனால் அண்ணி என்பவள் தாய்க்கு ஈடானவள் என்று பலர் என்னிடம் கூறியதால் அவர்களின் மனதை காயப்படுத்த கூடாது என்று எண்ணி 15 எபிசோட் எழுதியபின் முழுக்கதையையும்  மாற்றினேன்.அந்த ஸ்டோயில் வரும் வாசுகி மற்றும் அவள் கணவனுக்கிடையில் நடக்கும் ரொமான்ஸ் சீன் (அதான் அவள் கணவன் தூங்கும் போது இவள் வேண்டுமென்றே அவனை சீண்டுவது) முழுக்க முழுக்க ஒரு ஸ்டோரியில் இருந்து ஆட்டய போட்டதுதான்.

கடைசியா நகம் கொண்ட தென்றல்—தலைப்பே ஆட்டய போட்டதுதான்..கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் சுந்தரி பாடலில் இருந்து சுட்டது.
“இன்பங்களின் எல்லையும் அவளே
தொல்லைகளின் பிள்ளையும் அவளே
"நகமுள்ள தென்றலும் அவள்தானே"
அலையை பிடித்து கரையில் கரையில் கட்டுவது நடக்கமுடிந்த செயலா
இவளும் கூட ஆட பிறந்த அலையல்லவாஆஆஆஆஆஆ”
எனது அடுத்த கதைக்கு கூட ஆடப்பிறந்த அலையிவள் என்று பெயர் வைக்கலாமா என்று கூட கேட்டிருந்தேன்.

கடைசியாக ஆகாஷனா—இது உண்மையில் என்னுடைய ஒரு தலைப்பு..ஒரு பெண்ணின் பெயர்..கதையோட கான்சப்ட் டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா கொடிகட்டி பறக்கும் இந்த காலத்தில் யார் என்று தெரியாத ஒருத்தர் மேல காதல் வருமா….காதல் கோட்டை படத்தின் இன்றைய வெர்சன்.

சரி ப்ரெண்ட்ஸ் நான் எங்கெங்கு இருந்து தலைப்பு,கதை,சீன்ஸ் சுட்டேன்னு சொல்லிட்டேன்.ரொம்ப  நாளா சொல்லனும்னு நினைச்சேன்.நேரம் கிடைக்கல்ல.வேற ஏதும் என் ஸ்டோரில வர்ர சீன்ஸ் வேறு கதைகளில் இருந்து நான்‌ சுட்டிருந்ததாக‌ நினைத்தால் பின்னூட்டத்தில் கூறவும்.கடைசியாக ஆகாஷனாதான் நான் எழுதப்போகும் கடைசி கதையாக இருக்கும் என நினைக்கிறேன்.ஆனால்  “இருளின் காதலி (1 எபிசோட்- எனக்கு‌ பிடிச்ச‌ த்ரில்லர் கான்சப்ட்)”, “வருவாள் காதல் தேவதைட்(7 எபிசோட்-- முழுமையான காதல் கதை)” என்று இரண்டு கதைகள் எழுதி இடையில் இருக்கின்றது.அதை விட இன்னொரு கதைக்கான முழு கான்சப்டும் ரெடியா இருக்கு.ஆனா எழுத முடியாது என்று நினைக்கின்றேன்.அப்படியே எழுத நேரம் கிடைத்தால் கண்டிப்பாக எழுதுவேன்.

ஏதோ சொல்லனும்னு தோனிச்சி சொல்லிட்டேன் பாய்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro