கற்பனை 14

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"சந்தியா யாரையும் லவ் பண்றாங்களா?" என்று கேட்க ராஜீவ் நந்தினியை பற்றி விசாரிப்பான் என்று எண்ணியிருந்தவர்களுக்கு அவன் கேட்ட கேள்வி நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது.இவ்வளவு நேரமும் நந்தினியை கலாய்த்துக்கொண்டிருந்த சந்தியாவுக்கு தானாக பொறியில் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.ராஜீவ் ஏன் அப்படி கேட்டான் என்பது சந்தியாவுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.ஆனால் சந்தியாவின் மன நிலையை அறியாத  நந்தினி

"என்ன சார் சந்தியாவை பத்தி கேட்குறீங்க.நீங்க கேட்குறது சரி இல்லையே" என்று கலாய்க்க அவனும் அவளுக்கு போட்டியாக

"ஒரு பையன் ஒரு பொண்ண பத்திதான் விசாரிக்க முடியும்.நீங்க வேற ,சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லையே?" என்று கேட்க நந்தினி சிறிதும் யோசிக்காமல்

"அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடிச்சிப்பா" என்று கூற இப்போது சந்தியா நந்தினியை ஆச்சரியமாக பார்த்தவள் 'ஏண்டி இப்படி சொன்ன என்பது போல ஜாடையால் கேட்க' அவளை அமைதியாக இருக்கும்படி கூறிய நந்தினி

"ஓஹ் லவ்வா இல்லை அர்ரேஜ்ண்டா?" என்று கேட்டவனை‌ நந்தினி

"அய்யோ நான் சும்மா சொன்னேன்பா.நீங்க வேற " என்று கூற ராஜீவ் கொஞ்ச நேர அமைதியாக‌ இருந்தவன்‌ மெல்லிய குரலில்

"நீங்க யாரையும் லவ் பண்றீங்களா?" என்று கேட்க நந்தினி கூறிய பதிலில் சந்தியா வாயடைத்துப்போனால்

"லவ்னு சொல்ல முடியாது சின்ன வயசுல இருந்து என்னோட முறைப்பையனுக்குத்தான் என்ன கட்டிக்கொடுப்பேன்னு எங்க வீட்டுல சொல்வாங்க.சோ அதுவே என் மனசுல பிக்ஸ் ஆகிடிச்சு" என்று கூற சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தவன்

"நந்தினி எனக்கு ஒரு கால் வருது.நான் அப்புறமா கூப்பிடுறேன்"என்று கூறி காலை கட் செய்தான்.இங்கு சந்தியா நந்தினியை பார்த்து

"ஏண்டி அப்படி சொன்ன "என்று கேட்க அவளோ

"எது உனக்கு ஆளு இருக்குன்னு சொன்னதா?" என்று நக்கலாக கேட்டவளை முறைத்த சந்தியா

"அதான் எனக்கு ஆள் இல்லைன்னு சொல்லியாச்சில்ல.உனக்கு முறைப்பையன பிக்ஸ் பண்ணியிருக்குன்னு ஏன் சொன்ன" என்று கோபமாக கேட்க நந்தினியோ

"அது முழுவதும்‌‌ பொய்யின்னு‌ சொல்ல முடியாதுப்பா.எது எப்படியோ அவரு பேசுரத வெச்சி பார்க்கும் போது ஒன்னு அவரு மனசுல நீ இருக்கனும் இல்ல நான் இருக்கனும்.உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.இந்த லவ்ல எல்லாம் எனக்கு இண்ட்றஸ்ட் கிடையாது.நான் ஒரு அம்மா பொண்ணு.எங்க வீட்ல என்ன சொல்ராங்களோ அத அப்படியே கேட்பேன்" என்றவளை சந்தியா

"என்னடி நீ யாரையும் லவ் பண்ணா உங்க வீட்ல ஏதும் சொல்வாங்களா?" என்று கேட்க புன்னகையுடன் பதில் கூறிய நந்தினி

"அடி லூசு எங்க வீட்டுல நான் யாரையும் லவ் பண்ணா எதுவுமே சொல்ல மாட்டாங்க.ஆனா இவ்வளவு நாளா எனக்கு எது நல்லதுன்னு பார்த்து பார்த்து செஞ்ச எங்கம்மா அப்பாக்கு என் கல்யானத்த எப்படி பண்ணனும்னு தெரியாமலா இருக்கும்.என்னதான் எங்க வீட்டுல நான் லவ் பண்றத அக்சப்ட் பண்ணிக்கிட்டாலும் அவங்க மனசுல சின்னதா ஒரு வருத்தம் இருக்கும் நம்ம பொண்ணுக்கு நம்ம மாப்பிள்ளை பார்க்கலையேன்னு.என்னால அப்படி ஒரு சின்ன மன வேதனைய கூட அவங்களூக்கு கொடுக்க விரும்பலடி.எங்க வீட்டுல வசதி கம்மியா இருந்தாலும் என்ன ஒரு இளவரசி மாதிரிதாண்டி வளர்ர்குறாங்க.அது உனக்கே நல்லா தெரியும்.இப்படி அன்பா பார்த்துக்குறவங்களுக்கு நான் ஏண்டி ஒரு கஷ்டத்த கொடுக்கனும்" என்று கூற பெருமையாக நந்தினியை பார்த்தவள்

"எல்லா பசங்களும் இப்படி அம்மா அப்பாவோட சூழ்நிலை ,மன நிலை தெரிஞ்சி நடந்தா வாழ்க்கை எவ்வளவு அழகா இருக்கும்ல" என்று கூற நந்தினி

"அப்படி சொல முடியாதுடி.கடவுள் யாருக்கு எத நாடியிருக்காரோ அதுதான் நடக்கும்"என்று கூறியவளை சந்தியாவும் ஆம் என்று ஆமோதித்தால்.இவர்கள் இருவரும் இப்படி பேசிக்கொண்டாலும் நந்தினி வாழ்வில் அவள் எண்ணப்படி நடக்குமா அல்லது அதற்கு எதிர்மாறாக நடக்குமா என்பதை இருவரும் அறியவில்லை.

அடுத்த நாள் காலேஜில் நந்தினியுடன் இருந்த சந்தியாவை கண்ட ராஜீவ் அவளுக்கு

"I want to meet you .dnt tell nandhini (உங்கள் கொஞ்சம் தனியா சந்திக்கனும் .நந்தினிக்கு தெரிய வேண்டாம்)" என்று மெசேஜ் செய்ய அவளும் இன்னைக்கு ஏதோ ஒரு குழப்பம் வர போகின்றது என்பதை உணர்ந்தவள்

"10 mins wait(10 நிமிடம் வெய்ட்)" என்று பதில் அளித்தவள் நந்தினியிடம் வாஷ்ரூம் சென்று வருவதா கூறி சென்றாள்.

சந்தியா தனியாக வருவதை கண்ட ராஜீவ் அவளிடம் வந்து

"ஹாய் சந்தியா , நான் நேரடியா விசயத்துக்கு வரேன்.நேத்தைக்கி நந்தினி பேசும் போது அவ அவுட் ஸ்பீக்கர்ல போட்டுதான் பேசின்னானு தெரியும்"என்றவனை அவளோ ஆச்சரியமாக எப்படி என்பது போல பார்க்க

"எப்படின்னு பார்ர்குறீங்களா? அது ரொம்ப ஈசிங்க.நான் பேசினது எனக்கே கேட்டிச்சி.மோஸ்ட்லி அவுட் ஸ்பீக்கர்ல பேசும் போதுதான் இப்படி நம்ம பேசுரது நமக்கே எதிரொலிக்கும்"என்றவனை சந்தியா நக்கலாக

"சரி ராஜீவ் ஒத்துக்கிறேன் நீங்க ஜீனியஸ்னு.இப்போ எதுக்கு என்கிட்ட தனியா பேசனும்னு சொன்னிங்க" என்று கேட்டவளை

"நான் நந்தினியை லவ் பண்றேன்னு உங்களுக்கு தெரியும்னு எனக்கு தெரியும் .நீங்கதான் அவங்கள என்கிட்ட அப்படி கேட்க சொல்லிருப்பீங்கன்னும் தெரியும்" என்று கூறியவனை அவள்

"அப்போ எதுக்கு நீங்க அவகிட்ட என்ன பத்தி கேட்டீங்க" என்று கேட்க புன்னகையுடன் அவன்

"என்னால அவங்ககிட்ட ஈசியா என் காதல சொல்ல முடியல.அந்தளவுக்கு எனக்கு தைரியமில்ல.சும்மாவா வைரமுத்து சொன்னாரு 'கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்.பெண் கண்களை பார்த்து காதலை சொல்லும் தைரியம் உள்ளவன் அவன்'அப்படின்னு.எனக்கு போன்லயே சொல்ல முடியல இதுல எங்க அவங்க கண்கள் பார்த்து சொல்ரது.அப்புறன் அவங்கள பத்தி முழு டீட்டைல்ஸும் எடுத்துட்டேன்.அவங்களுக்கு முறைப்பையன் இருக்காம் ஆனா மேரேஜ்‌ ஏதும் பிக்ஸ்லாம் ஆகல.ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் அவங்க முறைப்பையன்கூட பிக்ஸ் ஆகியிருக்குன்னு சொல்லிருக்காங்க.அத என்னன்னு தெரிஞ்சிக்கனும்.அதுக்கு உங்களோட ஹெல்ஹ் வேணும்" என்றவனை சந்தியா

"ஓஹ் நீங்க இப்படி கேட்ட நான் உடனே உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு நினைப்பா "என்று கூற அவனோ

"எனக்கு தெரியும் சந்தியா.உங்க ப்ரெண்ட்டுக்கு ஒரு நல்லதுன்னா நீங்க கண்டிப்பா செய்வீங்கன்னு.என்ன பத்தி யாருமே தப்பா சொல்லமாட்டாங்க.நல்லா படிச்சிருக்கேன்,நல்ல பேமிலி,எப்படியும் நல்ல ஜாப்பும் கிடைக்கும்.சோ உங்க ப்ரெண்ட்கு நான் ஒரு நல்ல துனையா இருக்கமாட்டேன்னு நினைக்கிறீங்களா?" என்று கேட்க

"ஹ்ம்ம் நல்லா பேசி மடக்குறீங்கப்பா .சரி நீங்க சொல்ரதுலாம் சரிதான் ஆனா?"என்று இழுத்தவளை

"ரொம்பலாம் இழுக்காதீங்க.அவ ஏன் அப்படி சொன்னான்னு முதல்ல தெரியனும்.அதுக்கு அப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கனும்" என்றவனை பார்த்த சந்தியா அவன் கூறுவதில் இருந்த சீரியஸ்னஸ் அவளுக்கு ஒரு ஆர்வத்தை கொடுத்தது.

"சரி இப்போ என்னதான் பண்ண போறீங்க" என்று கேட்க அவனோ

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?"என்று கேட்டவனை அவள்

"என்ன சொல்லுங்க" என்று கூறினால்.

"எனக்கு அவங்கள காதலிச்சி ஊரு சுத்தனும் என்ற ஆசைலாம் இல்ல.அவங்கள கல்யானம் பண்ணிக்கிட்டு காலம் பூரா அவங்ககூட வாழனும் அதுதான் என் ஆசை.அதுக்கு முதல்ல அவங்க மனசுல என்ன பத்தி என்ன நினைச்சிருக்காங்கன்னு தெரியனும்" என்றவனை காதல்,திருமணம் பற்றிய நந்தினியின் நிலைப்பாட்டை சந்தியா கூற சிறிது நேரம் யோசித்த ராஜீவ்

"சோ அவங்க அம்மா அப்பா காட்டுற பையனத்தான அவங்க கல்யாணம் பண்ணிப்பாங்கல்ல்.ஹ்ம்ம் இதுவும் ஒரு வழில நல்லதானே போச்சு.நம்ம க்ராடுவேசன் அன்னைக்கு எங்கம்மா அப்பாவ விட்டு அவங்க வீட்டுல பேச சொல்ரேன்.சோ அவங்க வீட்டுல ஓக்கே சொல்லிட்டாங்கன்னா என் காதலுக்கு ஒரு ப்ராப்ளமும் வராது.அதே போல அவளோடா ப்ரின்ஸிபிள் அண்ட் பாலிசிக்கும் கலங்கம் வராது"என்று நம்பிக்கையாக பேசியவனை சந்தியா

"சூப்பர் ராஜீவ் அப்படியே செய்யுங்க"என்று கூற அவனோ

"ஆனா அதுவரைக்கும் தயவு செஞ்சி அவகிட்ட நம்ம் இப்போ பேசினது பத்தி எதுவுமே சொல்ல வேண்டாம் ப்ளீஸ்"என்றவனை அவளும் சரி என்றால்.இவர்கள் இருவரும் நந்தினியின் வாழ்க்கை பற்றி பேசினாலும் விதி இவர்கள் மூவரையும் பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தது.நம் வாழ்வில் நாம் என்னதான் சரியாக திட்டமிட்டு செயல்பட்டாலும் பல நேரங்களில் நாம் நினைத்ததற்கு எதிர்மாறாகவே நடக்கும் என்பதை இருவரும் மறந்துவிட்டனர்.

ஆனால்‌ ராஜீவுக்கு தன்‌ வீட்டில் இருக்கும்‌ பிரச்சினைகளை‌ காதல்‌ மறைத்துவிட்டது..

---------
ஹாய்‌, இனி ஒரு‌நாள் விட்டு‌ ஒரு‌நாள்‌ அப்டேட் வரும் என‌ நினைக்கிறேன்.வெள்ளி, திங்கள்‌ என்றிருந்த வழமை‌ மாறலாம்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro