கற்பனை 25

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

தனிமையில் வாடும் ஒருவனின் வாழ்வில் ஒரு பெண் நுழைந்தால் அவனின் வாழ்வு எப்படியான ஏற்ற இறக்கங்கள் வரும் என்பது பற்றி விபரித்து எழுதி இருந்தவன் அடுத்து ஒரு குறிப்பு போல

"என் மனதில் முதலில் நுழைந்தவளே, இன்று வரை நீ யார் என்று தெரியாமல் உன்னை தேடித்தேடி கலைத்துப்போனேன்.நாளை நான் இன்னொருத்தியின் கணவன்.இனியும் உன்னை என் வாழ்க்கையில் சந்திக்க கூடாது என்பது என் எண்ணம்.ஒரு வேலை சந்தித்தால் என் மனைவிக்கு நான் துரோகம் இழைத்துவிடுவேனோ என்ற பயம்.என் தாயின் அன்பை நான் முழுமையாக பெற முன் கடவுள் என்னிடம் இருந்து அவரை பிரித்துக்கொண்டார்.முதன் முதலில் ஒரு பெண்ணின் அன்பை,அக்கறையை காட்டியவள் நீ.இன்றுடன் உன்னை மறக்க நினைக்கும்

கரு"

இதைப்படிக்க நந்தினிக்கு மிகவும் குழப்பமாகவும் கவலையாகவும் இருந்தது.கதிரும் அந்த பெண்ணும் செய்த எந்த ஒரு சாட்டிலும் அவர்கள் எல்லை மீறியோ அல்லது அன்பை பொழிவதை போலவோ பேசிக்கொள்ளவில்லை.அந்த உரையாடல்கள் எல்லாமே கதை பற்றியும் நிஜமான ஆகாஷனா யார் என்பது பற்றியுமே இருந்தது.நந்தினிக்கு சிறு வயதில் இருந்தே கதிரை பற்றி தெரியும்.அவன் படிக்கும் காலங்களிலும் சரி வேலை செய்த போதும் சரி எந்த ஒரு பெண்ணையும் ஏறிட்டு பார்த்ததே இல்லை.ஏன் அவனுக்கு பெண் தோழி என்று யாருமே கிடையாது .சரியாக சொல்வதென்றால் அவனுக்கு இருக்கின்ற ஒரே ஒரு நட்பு சுமன் மட்டுமே.

ஒரு சில நாட்கள் நகர கதிரும் நந்தினியும் பேசிக்கொள்வது வெகுவாக குறைந்தது.ஆனால் இருவருமே இது பற்றி ஒருவர் மற்றவரிடம் பேசிக்கொள்ளவில்லை.இரவில் கூட கதிர் வேலை அதிகாக உள்ளது என்று தாமதித்தே வீட்டிற்கு வந்தான்.கதிர் தன்னை அவாய்ட் பண்ண நினைக்கின்றானா என்று நந்தினி யோசிக்க அவளும் அவனிடம் முகம் கொடுத்து சரியாக பேசவில்லை என்பது புரிந்தது.

இது எல்லாவற்றையும் யோசித்த நந்தினி யாரிடமாவது இது பற்றி பேச வேண்டும் என்று நினைத்தவள் சந்தியாவுக்கு கால் செய்ய அவளின் போன் ஸ்விட்ச் ஆப் என வந்தது .உடனே தன் அக்காவிற்கு கால் செய்து அவரிடம் விடயத்தை கூற

"என்ன சொல்ர நந்தினி ,கதிர்க்கு ஒரு பொண்ணு மேல அப்fயர் இருக்கா.நம்பவே முடியலடி " என்று கூறும் தன் அக்காவை

"ஆமாக்கா கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் எனக்கு தெரிய வந்திச்சு.கொஞ்ச நாளாவே அவரு என்கிட்ட இண்டெரெஸ்ட் இல்லாத மாதிரி இருக்கருக்கா.ஆனா அதுக்காக என்ன திட்டவோ இல்லை வேற எதுவுமோ பண்ணல.அவரோட நடவடிக்கைகள்ள புரிஞ்சது" என்றவளை அவளின் அக்கா சரியாக என்ன நடந்தது என்று கேட்க நடந்த எல்லாவற்றையும் அவரிடம் கூற நந்தினியின் அக்கா விழுந்து விழுந்து சிரித்தார்.

"அடி லூசு இதப்போயா நீ அப்யார்னு சொல்ர.இதெல்லாம் ஜஸ்ட் ஒரு அபக்சண்டி. நீ சைக்காலாஜி படிச்சவதானே.உனக்கு இதெல்லாம் தெரியாதா.உன்ன வேற நம்ம அப்பா ரொம்ப செலவு செஞ்சி படிக்க வெச்சாங்க"என்று கூற நந்தினி

"இங்க பாரு எனக்குத்தான் கடைசி ரெண்டு வருசம் காலேஜ் போனதே ஞாபகம் இல்லையே.இதுல நான் படிச்சது மட்டும் எப்படி ஞாபகம் வரும்" என்று கேட்டால்.

தன் தங்கையின் நிலையை உணந்தவர்

"சாரிடி ஏதோ விளையாட்டா பேசிட்டேன்,ஒன்னும் மனசுல வெச்சிக்காத"என்று கூற நந்தினிக்கு இதுக்கு மேல் தன் அக்காவிடம் பேசி பிரயோசனம் இல்லை என்று தோன்றியது.

——————

ஆபீசில் சுமனிடம் கதிர் தனக்கு ஏற்பட்டுள்ள மனமற்றத்தை கூற கோவப்பட்ட சுமன்

"டேய் கதிர் என்னடா சொல்ர ,உங்க லைப் நல்லாதானேடா போயிட்டு இருந்திச்சி.இடைல இவ யாருடா?டேய் நந்தினி பாவம்டா" என்று கூற கதிரோ

"மச்சான் உனக்கு தெரியாதுடா.நான் முதல்ல லவ் பண்ணது அவளத்தான்.ஆனா அதுக்குள்ள எல்லாமே மாறிடிச்சி" என்றவனை

"இங்க பாரு கதிர் நீ பொண்ணுங்க கூட அதிகமா பழகாததனால ஒரு பொண்ணு சாதாரணமா பேசினத நீ காதல்னு புரிஞ்சிக்கிட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி நந்தினியையும் கஷ்டபடுத்த பார்க்குற"என்றவனை கதிர்

"மச்சி எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலடா.நான் நந்தினிகிட்ட இது பத்தி பேச போறேன்" என்றதும் சுமன்

"டேய் அந்த பொண்ணு உன்கிட்ட பேசும் போது என்ன சொன்னா அவளோட பெயர் 4 எழுத்து என்றும் 2,3 வது எழுத்துக்கள் ந்,தி என்று சொன்னாதானே.சோ நந்தினி பெயரும் அதே போலதானே வருது.ஒரு வேலை நந்தினியே உங்கிட்ட பேசி இருந்தாலும் அவளுக்கு இப்போ ஞாபகம் இருக்காது.அப்புறம் அந்த பொண்ண சொன்ன திகதில நந்தினி காலேஜ்ல மட்டும்தான் க்ராடுவேசன்.சோ அந்த பொண்ணு ஏன் நந்தினியா இருக்க கூடாது "என்று கேட்க கடுப்பான கதிர்

"ஆமா அப்படியே சொல்லேன் அது ஏன் நந்தினி ப்ரெண்ட் சந்தியாவா இருக்க கூடாதுன்னு.அவ பெயரும் நீ சொல்ர எல்லாமே மேட்ச் ஆகுதே" என்றவனை சுமன்

"உனக்கு இப்போ நான் எது சொன்னாலும் புரியாது கதிர்.புரியாது என்பதை விட புரிஞ்சிக்க நீ விரும்பல.ஏன்னா நீ மனசுல ஏதோ பிக்ஸ் பண்ணிட்ட.சரி உன் இஷ்டப்படி பண்ணு.ஆனா எந்த முடிவுன்னாலும் அதுக்கு முன்னாடி உன் அத்தை மாமாவ பத்தி ஒரு நிமிசம் யோசிச்சிக்க"என்று கூற அவனும் சரி என்றான்.

வீட்டிற்கு வந்தவன் நந்தினியை தேட அவள் கிட்சனில் சமைத்துக்கொண்டிருந்தாள்.அவள் அருகில் வந்த கதிர்

"நந்தினி உன்கிட்ட ஒரு விசயம் பேசனும் "என்றவனை அவள் என்ன என்று கேட்க

"எனக்கு முன்னாடியே ஆகாஷனா என்ற பொண்ணு கூட பழக்கம் இருந்திச்சி.ஆனா நான் அந்த பொண்ண மனசால விரும்பினேன்.இதுல பெரிய காமடி என்னன்னா அது ஆணா பொண்ணான்னு கூட தெரியாது.இட்ஸ் ஜஸ்ட் அ பேஸ்லஸ் லவ் (இது ஒரு முகம் தெரியாத காதல்)" என்று கூற நந்தினி அவனை பார்த்து புன்னகைத்தவள்

"எனக்கு தெரியும் கதிர் .உங்க ஐபேட்ல எல்லாமே பார்த்துட்டேன்"என்று கூற அவனுக்கு மேலதிகமாக எதுவும் விளக்கம் சொல்ல தேவையேற்படவில்லை.மேலும் தொடர்ந்தவள்

"இங்க பாருங்க கதிர் ,என் அக்காகிட்ட இது பத்தி பேசினேன் அவ ஏதோ இது காமெடி காதல் அப்படின்னு சொல்ரா"என்றவளை அவன் முறைக்க

"பீ கூல் பா.எனக்கு அப்படி தோனல.உங்க வாழ்க்கைல நீங்க சந்திச்ச அனுபவங்கள வெச்சி இது காதல்னு நினைக்கிறீங்க.காதலுக்கான வரைவிலக்கனம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா வேறுபடும்.சிலருக்கு அழகு,சிலருக்கு அன்பு.சிலருக்கு பழக்க வழக்கங்கள் ,சிலருக்கு பணம்,சிலருக்கு ஏன்னு தெரியாம கூட வரும்.உங்களுக்கு அந்த பொண்ணு உங்க கிட்ட விளையாட்டா பேசினதும் ஒரு ஈர்ப்பு வந்து அவ உங்க கிட்ட மொத்தமா பேசாம விட்டதும் காதலா மாறிடிச்சி.ஆனா அதையும் நீங்க நம்ம கல்யாணத்துக்காக உங்க மனசுல போட்டு மூடி வெச்சிட்டீங்க.சரி நான் ஒன்னே ஒன்னு கேட்குறேன் உங்க கவிதைல"இனியும் உன்னை என் வாழ்க்கையில் சந்திக்க கூடாது என்பது என் எண்ணம்.ஒரு வேலை சந்தித்தால் என் மனைவிக்கு நான் துரோகம் இழைத்துவிடுவேனோ என்ற பயம்" இப்படி சொல்லியிருந்தீங்க.நிஜமாவே உங்களுக்கு அப்படி தோனுதா.ஏதும் பொண்ணு வந்து தாந்தான் ஆகாஷனா என்று சொன்னா என்ன விட்டுட்டு அந்த பொண்ணு கூட போயிடனும்னு மனசு தோனுதா?"என்று கேட்க அவன் மெளனமாக தலை குணிந்து நின்றான்.பொய் கூறாமல் அமைதியாக இருந்த அவனின் நேர்மை அவளை ஒரு கணம் அதிர்ச்சியாக்கினாலும்

"யூ நோ வட் கதிர்,எனக்கும் என் கணவர் என்ன மட்டுமே காதலிக்கிறவரா இருக்கனுங்கிரது என்னோட சின்ன வயசு கனவு.ஆனா அது இப்போ இல்லைன்னு ஆகிடிச்சி.இதுல என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓக்கேதான்.ஏன்னா உங்க எதிர்ப்பார்ப்பும் என் எதிர்பார்ப்பும் வேற வேற மாதிரி இருக்கு"என்று கூற கதிர்

"ஆனா நம்ம தப்பா ஏதும் முடிவெடுத்தா அது உன்னைத்தானே பாதிக்கும்.ஏன்னா நம்ம கணவன் மனைவிய ஒன்றரை வருசம் வாழ்ந்திருக்கோமே"என்று கூற சிரித்துக்கொண்ட நந்தினி

"என்ன நமக்குள்ள பிசிக்கல் ரிலேசன்சிப் இருந்திச்சி.அதனால என் வாழ்க்கை நாசமாகிடும்னு சொல்ல வரீங்களா.எந்த காலத்துல இருக்கீங்க கதிர்.மனசலவுல காதலிச்சிக்கிட்டு உடல் ரீதியான உறவு இல்லாமே எத்தனையோ பேரு இருக்காங்க.அதே போல உடல்ரீதியான் பினைப்பு இருந்தாலும் மனசலவுல கொஞ்சம் கூட காதல் இல்லாம ஏனோ தானோன்னு வாழ்க்கைய கொண்டு போறவங்க நிறைய பேரு இருக்காங்க.நமக்குள்ள பிசிக்கல் ரிலேசன்சிப் இருந்திச்சி இல்லைன்னு சொல்லல.ஆனா இப்போதானே தெரியுது உங்க மனசுல காதல்னு சொன்னா அது வேற பொண்ணுன்னு.அப்புறம் எனக்கும் என்னோட கணவன் பற்றிய கனவுகள் எல்லாமே சிதைஞ்சி போச்சின்னுதான் சொல்லனும்.சோ நம்ம வாழ்க்கை, நாமளே முடிவு செய்வோம்" என்று கூறினால்.நந்தினி கூறுவதின் அர்த்தம் புரிந்தவன் என்ன முடிவெடுத்தாலும் அது நந்தினியின் வாழ்க்கையை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro