கற்பனை 24

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

வாட்பெட்டில் இருக்கின்ற அண்ணா,தங்கை,அக்கா,தம்பி என்ற உறவுகள் எல்லாம் பொய் என்று கூறவில்லை.ஒரு சிலர் அப்படி நினைப்பது தவறு என்றே கூற வந்தேன்.கதிரின் என்னத்திற்கு சுமன் கூறிய பதில்தான் எனது பதிலும்.

இதை நான் கூற காரணம் என்னுடைய முந்தைய அப்டேட்டில் கதிர் "அண்ணா "என்று போடப்பட்ட சில பதிவுகளை பற்றி நக்கலாக கூறுவது போல காட்டியிருந்தேன்.நிஜமாக அது யாரையும் புன்படுத்தும் நோக்கில் கூறப்பட்டது கிடையாது.கதைக்கு
தேவை என்பதாலேயே அந்த இடத்தில் அப்படி எழுத வேண்டியதாக போனது.அதுவும்‌‌ என்னை நோக்கியே அந்த விமர்சனத்தை‌ வைத்தேன்.கதிர் அப்படி கூறினாலும் சுமனின் பதில் அவனது வாயை மூட வைத்தது.எனது கருத்தும் சுமனின் கருத்தை ஒத்ததுதான்.யார் மனமாவது புன்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

கடைசியாக ஒரு உண்மையை கூறலாம் என என்னுகின்றேன்.ரக்க்ஷா பந்திட்காக தாராவும்,வாசுகியும் எனக்கே எனக்காக இட்ட பதிவுகளும் எனக்காக இட்ட மற்றைய பதிவுகளையும் அடிக்கடி படித்து சந்தோசப்பட்டுக்கொள்வேன்.விளையாட்டாக ஆரம்பித்த எனது எழுத்துக்கள் மூலம் எனக்கு எப்படியான் உறவுகளை கொடுத்துள்ளது என்று எண்ணி.

----------------+

ஹாஸ்பிடல் வந்து சேர்ந்த கதிர் அங்கு தனது மாமாவும் அத்தையும் இருக்கும் நிலமை பார்க்க மிகவும் கவலையாக இருந்தது.இருவரும் தங்கள் வாழ்க்கையாக கருதிய ஒரே மகளின் நிலமையை எண்ணி அழுது அழுது ஓய்ந்திருந்தனர்.அவர்களிடன் வந்த டாக்டர்

"தேவிக்கு தலைல பலமா அடிபட்டிருக்கு.மத்தபடி பெருசா ஏதுமில்ல ஆனா மத்த பொண்ணுக்குதான்...."என்று கூறிய டாக்டர் சொன்னதைக்கேட்டு அங்கிருந்த எல்லோருக்கும் மிகவும் கவலையாகி போனது.என்ன செய்வது என்றே தெரியாமல் இருக்க கதிர் தேவியின் தாய் தந்தையருக்கு ஆறுதல் கூறியவன் திடீரென்று அவனின் மொபைல் சினுங்க அதை எடுத்து பார்க்க சுமனின் கால் என்று அறிந்தவன்

"சொல்லுடா என்னாச்சி.இங்க பெரிய ப்ராப்ளம்டா, தேவிக்கு தலைல அடி வேற எதுவுமில்ல.ஆனா மத்த பொண்ணு பாவம்டா அவளுக்குத்தான் "என்று மற்றவளுக்கு நடந்ததை கூற சுமன் மிகவும் கவலைப்பட்டவன்

"மச்சி அங்க கான்வகேசன்ல நீ சொன்ன மாதிரி எந்த பொண்ணுமே வரலடா.சாரி மச்சி அவ நல்லா உன்ன ஏமாத்திட்டா"என்று கூற கதிருக்கு என்ன செய்வது என்று புரியாமல் அழுகை வந்தது.தேவிக்கு ஆக்சிடன்ட் ஆனதால்தான் அவன் அழுகின்றான் என்று தவறாக புரிந்து கொண்ட தேவியின் பெற்றோர் அவனை ஆறுதல் படுத்தியவர்களுக்கு ஒருவேலை கதிர் தேவியை காதலிக்கின்றானோ என்ற எண்ணம் தோன்றியது.

----------------------------------------------------------

3 வருடங்களின் பின்.................

மின்விளக்குகள் எல்லாம் வண்ணமயமாக ஜொலிக்க நிலவு தன் பூரண ஒளியை பூமியில் சிந்தி தன் கவலையை கண்ணீரால் வடித்தான்.காரணாம் இன்று கதிருக்கு திருமணம் அதுவும் அழகு தேவதையாக ஜொலிக்கும் தன் மாமா மகளான் "நந்தினி தேவி"யுடன், திருமண வரவேற்பிட்கு வந்தவர்கள் எல்லாம் ஜோடிப்பொருத்தத்தை பார்த்து மிகவும் வியந்து போய் தங்களுக்குள் முனு முனுத்துக்கொண்டனர்.காரணம் இருவரும் ஒருவருக்கொருவர் பிறந்தது போல  எல்லா பொருத்தங்களும் பொருந்தி இருந்தது.ஆனால் மணமக்கள் இருவர் முகத்திலும் திருமணம் பற்றிய அதீத மகிழ்ச்சி இல்லை என்றாலும் அவர்கள் முகத்தில் கவலை இருக்கவில்லை.வந்தவர்கள் எல்லாம் வாழ்த்திச்செல்ல திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது.

திருமனதிற்கு வந்திருந்த ராஜீவ் அவளிடம் பேச முயற்சிக்க நந்தினி அவனிடம் பெரிதாக முகம் கொடுத்து பேசவில்லை.இதை கவனித்த கதிர் ராஜீவை கூப்பிட்டு

"உங்களுக்கு எவ்வளவு நாளா நந்தினி பழக்கம் "என்று கேட்க ராஜீவ்

"காலேஜ்ல இருந்தே பழக்கம் தான் ஆனா ஒரு 6 மாசம்தாம் ரொம்ப க்லோசா பழகினோம்.அவங்க ப்ரெண்ட் சந்தியாக்கும் என்ன தெரியும்.ஆனா இப்போ ஏன் என்ன அவாய்ட் பண்றாங்கன்னு தெரியல "என்று கூற கதிர்

"சொல்ரத கேட்டு டென்சன் ஆகாதீங்க.அவங்க க்ராடுவேசன் அன்னைக்கு ஏற்பட்ட ஆக்சிடண்ட்ல நந்தினிக்கு தலைல அடிபட்டுடிச்சி.அதுக்கு அப்புறம் அவளுக்கு அந்த ஆக்சிடண்ட்கு 2 வருசம் முன்னாடி நடந்த எல்லாம் மறந்துடிச்சி.அதான் அவங்க உங்கள தெரியாத மாதிரி நடந்துகிறாங்க.ஒன்னும் தப்பா நினைச்சிக்காதீங்க "என்று கூற

"அன்னைக்கு சந்தியாவும் நந்தினி கூடத்தானே இருந்தா.அவங்களுக்கும் ஏதுமில்லயே?" என்று கேட்க சந்தியாவின் நிலையை கதிர் கூற ராஜீவிற்கு மிகவும் கவலையாகியது.உடனே அவன் சந்தியாவின் நம்பரை நந்தினியிடம் இருந்து வாங்கித்தருமாறு கேட்க கதிர்

"நாங்க எல்லோரும் சந்தியாக்கு பெருசா ஏதுமுல்ல,லேசான அடிதான்னு சொல்லிருக்கோம்.நந்தினிக்கு பழசு எல்லாம் மறந்தது தெரியும்.அவளோட நிலமைய அவ புரிஞ்சிக்கிட்டா.ஆனா சந்தியாவோட நிலமை பத்தி எதுவுமே தெரியாது.சொன்னா ரொம்ப வருத்தப்படுவா சோ நீங்களும் ஏதும் சொல்லாதீங்க"என்று கூற அவனும் சரி என்றான்.

முதலிரவுக்கு மணமக்களை அனுப்பி வைக்க அறைக்குள் நுழைந்த நந்தினியை தன் அருகில் அமருமாறு கூறிய கதிர்

"சாரி நந்தினி மாமாவும் அத்தையும் என்கிட்ட உன்ன கட்டிக்கிறியான்னு கேட்டப்போ என்னால முடியாதுன்னு சொல்ல முடியல.உன் விருப்பத்தக்கூட கேட்காம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு ஒரு கில்டி பீலிங்கா இருக்கு"என்றவனை பார்த்து புன்னகைத்தவள்

"எதுக்கு கதிர் என்கிட்ட கேட்கனும்.எனக்கு சின்ன வயசுல இருந்தே எது நல்லதுன்னு பார்த்து செஞ்சவங்களுக்கு என் வாழ்க்கைத் துணையா யாரு வரனும்னு தெரியாதா.அப்புறம் எனக்கு எந்த பாஸ்ட் லவ்வும் இல்லப்பா.இருந்தாலும் எனக்கு ஏதுமே ஞாபகமும் இல்லையே"என்று சிரித்து கூற கதிர்

"இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு.எங்க உன்ன கட்டாயப்படுத்தி எனக்கு கட்டி வெச்சிட்டங்களோன்னு"என்று கூற

"ஹாஹா அந்த பயம் வேண்டாம் எனக்கு இந்த கல்யாணத்துல பூரண சம்மதம்தான்.ஆமா உங்கள ஏதும் கட்டாயப்படுத்தல்லயே?" என்று கேட்க அவன்

"எப்படி இருந்தாலும் என் லைப்ல கல்யாணம் என்ற செக் பாக்ஸ்கு டிக் பண்ணியே ஆகனும்.எங்கம்மா அப்பா இறந்ததுக்கு அப்புறம் எல்லாமே எனக்கு உங்கம்மா அப்பாதான்.சோ அவங்க சொன்னா எனக்கு வேத வாக்குப்பா"என்று கூறி அவளின் கைகளை தன் கைகளுக்குகுள் இணைத்துக்கொண்டான்.

தங்களுக்குள் காதல்,புரிதல் எதுவுமில்லாமல் இருந்தாலும் 60% கல்யாணமான தம்பதிகளுக்கு எப்படி முதலிரவு மட்டும் சரியாக நடந்துவிடுமோ அது போலவே நந்தினி கதிரின் முதலிரவும் எந்த தடையும் இன்றி நடநத்து.

திருமணத்திற்கு பின் பல தடவை சந்தியாவுடன் நந்தினி பேசினாலும் அந்த ஆக்சிடன்டுக்கு பின் இவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ளவில்லை.விபத்து நடந்த 2 வது நாளே சந்தியாவின் பெற்றோரின் விசா முடிவடைய போகின்றது என்று கூறி மேலதிக டிரீட்மென்டை அமெரிக்காவிலேயே பார்த்துக்கொள்ள டாக்டர்களிடம் அனுமதி பெற்று சந்தியாவை அழைத்து சென்றனர். என்னதான் சந்தியா அடிக்கடி கால் செய்து பேசினாலும் தனது திருமணத்துக்கு அவள் வரவில்லை என்பது நந்தினியின் மனதில் ஒரு ஆறாத வடுவாக பதிந்திருந்தது.

காலம் யாருக்கும் காத்திருக்கவில்லை அது அதன் போக்கிலேயே மிக வேகமாக சென்றுகொண்டிருந்தது.

18 மாதங்கள் யாருக்கும் நிற்காமல் நகர நந்தினியும் கதிரும் ஒரு சராசரி கணவன் மனைவியாக சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்க அவர்கள் வாழ்வில் தெலுங்கு படம் மூலம் ஒரு திருப்பு முனை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.ஒரு நாள் இருவரும் ஒரு நாள் தெலுங்கு படமான "தேவதாஸ்" பார்த்துக்கொண்டிருக்க அதில் நடித்த ஹீரோயினினின் பெயர் கதிருக்கு பழைய ஞாபகங்களை நினைவூட்டியது.அந்த படத்தில் நடித்த ஒரு ஹீரோயினின் பெயர் ஆகாஷனா சிங்க்.இந்த பெயரை கண்டதும் கதிருக்கு தான் எழுதிய கதையும் அதன் மூலம் கிடைத்த ஆகாஷனாவின் தோழமையும் ஞாபகம் வர படம் பார்த்துக்கொண்டிருந்தவன் தங்கள் அறைக்கு சென்றான்.அறைக்கு உறங்கத்தான் செல்கின்றான் என்று நினைத்த நந்தினி படம் முடிந்ததும் அவளும் உறங்க செல்ல அங்கு கதிர் ஐபேட்டில் ஏதோ படித்துக்கொண்டிருப்பது தெரிய அவனிடம் அவள் உறங்குவதாக கூறி நித்திரா தேவியின் ஆளுகைக்குள் உள்ளானாள்.அன்று இரவு முழுவதும் கதிர் ஆகாஷனாவுடன் அவன் செய்த சாட்களை பார்க்க அவனுக்கு ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு உண்டாகியது.தான் கதை எழுதிய எதுவும் நந்தினிக்கு தெரியாது என்பதால் இது பற்றி எதுவுமே அவன் அவளிடன் கலந்தாலோசிக்கவில்லை.

காலையில் கதிர் ஆபீஸ் சென்றதும் அவனின் ஐபேட்டை எடுத்து யூடியூப்பில் பாடல்கள் பார்க்கலாம் என எடுக்க ஏதோ புதிய ஒரு அப்ளிகேசன்னில் இருந்து பல நோட்டிபிகேசன் வந்திருந்ததை கண்டவள் என்ன என்று பார்க்க அது வாட்பெட் என்று புரிந்தது.இதற்கு முன் இந்த அப்ளிகேசன் அவனின் ஐபேட்டில் இல்லாமல் இன்று புதிதாக இன்ஸ்டால் செய்திருந்ததால் அதில் பல கதைகளின் அப்டேட் மற்றும் காமண்ட்ஸ் பற்றிய நோட்டிபிகேசன்ஸ் வந்து கொண்டே இருக்க அதை எல்லாம் சுவாரசியாமாக படித்தவள் மெசேஜ் பகுதிக்குள் சென்று ஆகாஷனா என்ற பெண்ணுடன் கதிர் செய்திருந்த சாட்டிங்க்கை பார்த்தால்.அதை படிக்க படிக்க அவளுக்கு கதிர் எழுதிய கதைக்கு இப்படி ஒரு டை ஹார்ட் ரசிகை இருந்திருப்பதை என்னும் போது மிகவும் வேடிக்கையாக இருக்க அவன் எழுதிய கதையை படிக்கலானால்.

அதை படிக்க படிக்க அவளுக்கு மிகவும் ஆச்சரியாமாக இருந்தது.தன் கணவன் கதிரா இதெல்லாம் எழுதினான் என்று நினைக்க அவளுக்கு பெருமையாகவும் இருந்தது.அன்றையா நாள் முழுவதும் அந்த கதையை படித்தவள் வேறு ஏதும் கதைகள் இருக்கின்றதா என்று பார்க்க கதிருடைய  டிராப்ட்டில் "காதல் வலி" என்ற பெயரில் ஒரு சில படைப்புக்கள் இருக்க அதை படித்தவளுக்கு இதயமே நின்றுவிடும் போலானது.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro