கற்பனை 29

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

"அப்புறம் ராஜீவ் இன்னொரு ஹெல்ப் நீ பண்ணனும்!"என்று கேட்க அவனோ அடுத்து எதைக்கேட்க போகிறாலோ என்று யோசித்தவன்


"ஹ்ம்ம் கேளுப்பா, இன்னைக்கு முழுக்க ஹெல்ப் பண்ற ராசி போல எனக்கு. எதுக்கும் கொஞ்சம் சின்னதாவே கேளு" என்றவனை அவள்

"ஹேய் பெரிய ஹெல்ப்லாம் ஒன்னுமில்ல, உன் தங்கச்சி கல்யாணத்துக்கு கதிர், அவரு ப்ரெண்ட் சுமன், அப்புறம் வீணா இவங்களையும் கூப்பிடனும்" என்று கூற ராஜீவ் அவளை நக்கலாக பார்த்தவன்

"கடைசில நான் லவ் பண்ண பொண்ணுக்கே மாமா வேலை பார்க்க வெச்சிட்டல்ல. நந்தினிக்கு கல்யாணம் ஆனப்போ கூட நான் இவ்வளவு கவலைப்படல ஆனா இப்போ நீ சொன்ன வேலை இருக்கே.....ப்ளீஸ் சந்தியா என்னால முடியல. இத நீ தனியாவே பண்ணிக்க" என்று தழு தழுத்த குரலில் கூறியவனை

"என்ன ராஜீவ் இப்படி சொல்றீங்க. நந்தினியை நீங்க காதலிச்சது என்னமோ உண்மைதான் ஆனா அவ உங்கள காதலிக்கலையே.  அப்புறம் காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா வாழ்றது மட்டும் காதல் இல்லை. நாம காதலிச்ச பொண்ணு இன்னொருத்தன கல்யாணம் பண்ணாலும் அவ சந்தோசமா வாழனும்னு நினைக்கிறதுதான் காதல்" என்று தத்துவஞானி போல கூற சிரித்த ராஜீவ்

"என்ன மேடம் நீங்க படிச்ச படிப்ப எங்கிட்ட அப்ளை பண்ணி பார்க்குறீங்களா. நீங்க சொல்ரளவுக்கெல்லாம் அவ்வளவு ஒன்னும் நான் நல்லவன் இல்லை. நந்தினி நல்லா இருக்கட்டும் ஆனா இப்போ இருக்குற நிலைமைல நந்தினிய நான் ரொம்ப நல்லா பார்த்துக்குவேன்"என்றவனை  முறைத்தவள் 

"இப்போதானே எல்லாமே க்ளியரா பேசினோம் கதிரும் நந்தினியும்தான் ஒன்னு சேரனும்னு.10 நிமிசம் கூட கடக்கல அதுக்கிடையில இப்படி பேசுறீங்களே ராஜீவ்" என்றவளை தன் கவலைகளை மறைத்து

"சரி சந்தியா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்"என்று கூற சந்தியா

"அதென்ன ராஜீவ் சில நேரங்கள் வா போன்னு ஒருமைல பேசுறீங்க. திடீரென்று வாங்க, போங்கன்னு மரியாதை கொடுத்து பேசுறீங்க"என்று கேட்க அவன் சிரித்துக்கொண்டு

"கோவமா இருந்தா வாங்க போங்க.நார்மலா இருந்தா வா, போ அவ்வளவுதான்"என்று கூற 

"அப்போ சார் இப்போ கோவமா இருக்கீங்க நடத்துங்க நடத்துங்க" என்று நக்கலாக கூறினால்.

வீட்டிற்கு வந்த சந்தியாவிடம் நந்தினி

"ஏய் எங்கடி சொல்லாம போயிட்ட. உன் மொபைலுக்கு கால் பண்ணா நாட் ரீச்சபிள்னு வருது"என்று கேட்டவளை 

"ஹ்ம்ம் என்மேல அவ்வளவு அக்கறையாடி?" என்று சந்தியா விளையாட்டாக கேட்க கண்கள் கலங்க நந்தினி

"எனக்கு நீ என்றால் எவ்வளவு பிடிக்கும்னு சொல்லவே தெரியலடி. அதுலயும் 2 வருச ஞாபகம் வேற இல்லையா. இருந்திருந்தா எனக்கு இந்த உலகத்துல நீதான் முக்கியம்னு சொல்லிருப்பேன். உனக்கு தெரியுமா சந்தியா கதிர் எழுதின ஸ்டோரில நம்மல போலவே ரெண்டு ப்ரெண்ட்ஸ். ரொம்ப ரொம்ப க்லோசா இருப்பாங்க. ஆனா பாவம் அதுல வர்ர ஒரு பொண்ணு இறந்து போயிடுவா. அதுக்குப்புறம் அவ ப்ரெண்ட் அவ வாழ்க்கைல சில முடிவுகள் எடுத்திருப்பா. நானா இருந்தாலும் அப்படித்தான் செய்வேன்.எனக்கு அந்த ஸ்டோரிய படிச்சதுல இருந்தே உன்ன பார்க்கனும் உன்ன கட்டிப்பிடிச்சிக்கிட்டு அழனும், உன் கூட எதுக்குன்னே தெரியாம சண்டை போடனும் இப்படிலாம் ஆசை  வந்திச்சிடி. கடவுளா பார்த்து உன்ன இங்க ராஜீவ் தங்கச்சி கல்யாணத்துக்கு அனுப்பியுருக்காரு. என்ன பொறுத்த வரைக்கும் என் மனச சரியா புரிஞிச்க்கிட்ட ஒருத்தின்னா அது நீதான்"என்று உணர்ச்சி ததும்ப கூற நிலைமையை சீராக்கும் பொருட்டு

"நல்லவேலை உனக்கு ஆக்சிடன்ட்ல நம்ம இருந்த கடைசி 2 வருசம் மறந்திடிச்சி. இல்லைன்னா கதிர விட்டுட்டு என்னத்தான் கல்யாணம் பண்ணுவ போல" என்று கூற புன்னகைத்த நந்தினி 

"பேசுர பேச்ச பாரு, அப்புறம் இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல எங்க டைவோர்ஸ்கு அப்புறம் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?" என்று நந்தினி கேட்க இன்று நந்தினி ஏதோ ஒரு காரணத்தால் மிகவும் சந்தோசமாக இருக்கின்றால் என்று புரிநத்து.

"சரி நீ எங்க போனேன்னு சொல்லவே இல்லையே?" என்றவளை புன்னகையுடன்

"இல்லைடி கல்யாண வேலையா ராஜீவ் கூட வெளில போனேன்" என்றவளை

"ஓஹ் அப்போ நீ ராஜீவ் கூட ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப க்லோசா சொல்லவே இல்லை. ஹேய் என்ன ஏதும் சம்திங்க் சம்திங்க்"என்று சந்தியாவின்  நிலைமை அறியாது நக்கலடித்த நந்தினியை நோக்கி சந்தியா

"இந்த மூஞ்ச அவரு அப்படியே ஏத்துக்குவாருன்னா எனக்கு ஓக்கேதான்.ஆனா அப்படி ஒருத்தன் வரனுமே"என்று கூற பொதுவாக கூற அதை தவறாக எண்ணிய  நந்தினி

"ஹேய் சந்தியா உனக்கு ராஜீவ் மேல ஒரு ஐடியா இருந்தா  சொல்லுப்பா நான் பேசிப்பார்க்குறேன்" என்றவளை நந்தினி சீரியசாக கேட்பது புரியாமல் சந்தியாவும் விளையாட்டாக

"ஹ்ம்ம் முடிஞ்சா கேட்டுப்பாரு " என்று கூறி கிட்சனில் சமைத்துக்கொண்டிருந்த நந்தினியின் தாயிடம் சரணடைந்தாள்.

சந்தியா விளையாட்டாக கூறியதை நந்தினி அவள் நிஜமாகவே கூறுகிறாள் என்று நினைத்து ராஜீவிற்கு கால் செய்தாள்.

"ஹாய் ராஜீவ் எப்படி இருக்கீங்க"என்று கேட்க ராஜீவிற்கு வானில் பறப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. நம் காதலித்த பெண் என்றாவது ஒரு நாள் நம்மிடம் பேசும் போது அதில் தோன்றும் உணர்வை கூற வார்த்தைகள் இல்லை. காதலிக்கும் போது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு ஏங்குவது ஒரு சுகம் என்றால் தான் காதலித்த பெண் தனக்கில்லை என்று ஆனபின் காலங்கடந்து அவளுடன் உரையாடுவது, அதை விபரிக்க வார்த்தைகளே இல்லை. அதில் காதல்  இல்லை என்றாலும் காமமும் இருக்காது. மாறாக ஒரு தடுமாற்றமும் ஒரு வெட்கமும் கலந்த ஒரு கலவையில் மனது காணப்படும். சரியாக சொல்வதென்றால் பூப்பெய்த பெண்களுக்கு தோன்றும் ஒரு உணர்வு. அதே மனநிலையில் இருந்த ராஜீவ் இந்த நொடியை அனுபவிக்க எண்ணி 

"நான் நல்லாயிருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க"என்று கேட்க சிரித்தவள்

"ரொம்ப பார்மலா பேசுறீங்க. சந்தியா சொன்னா நான் உங்க கிட்ட ரொம்ப க்லோசா பழகினேன்னு. சரி எனக்குதான் மறந்துடிச்சி உங்களுக்கு எதுவும் மறக்கலயே பிறகு ஏன் இவ்வளவு பார்மலா பேசுறீங்க" என்று கேட்க அவனும் இந்த கணத்தை தன் வாழ்க்கையின் பொக்கிசமாய்  மாற்ற எண்ணி 

"என்ன பண்றது மேடம் உங்க கல்யாணத்துக்கு வந்தப்போ ஏதோ தீவிரவாதிய பார்க்குற மாதிரி ரியாக்ட் பண்ணீங்க. இன்னும் அந்த ஞாபகம் மனச விட்டு போகல"என்று கூற சிரித்தவள்

"சரி நீங்க இப்பவும் என்ன ஒரு ப்ரெண்டா நினைக்கிறீங்கன்னா உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா? " என்றவளை தான் காதலித்த பெண் தன்னிடம் எதுவோ கேட்க போகின்றால் என்று எண்ணி 

"கேளுங்கள் அம்மையாரே, அடியேன் காத்திருக்கிறேன்" என்று கூற நந்தினி

"சந்தியாவ பத்தி என்ன நினைக்கிறீங்க"என்று கேட்க

"ரொம்ப நல்ல பொண்ணு ரொம்ப ரொம்ப வாயாடி, அவகிட்ட பேசி யாருமே ஜெயிக்க முடியாது. என்ன ஆக்சிடன்ட்க்கு அப்புறமா கொஞ்சம் சைலன்ட் ஆகிட்டா" என்று கூற சிறிது அமைதிக்கு பின் 

"உங்களுக்கு சந்தியாவ பிடிக்குமா" என்று கேட்க அவனும் சலைக்காமல்

"ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவ என்னோட ஸ்வீட் வாலு" என்றவனை உடனே சந்தியா

"அப்போ அவள நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க கூடாது" என்று கேட்க உடனே ஆத்திரம் கொண்ட ராஜீவ் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்

"நீங்க எப்போ ப்ரோக்கர் வேலை பார்க்க ஆரம்பிச்சீங்க?!" என்றவனை அவள்

"பி சீரியஸ் ராஜீவ்!!"என்றவளை

"இந்த எண்ணம் உங்களுக்கா வந்திச்சா இல்லைன்னா" என்று கேட்க

"இல்லை நான் சந்தியா கிட்ட கேட்டேன்.அதுக்கு அவ இப்போ இருக்குற மாதிரியே நீங்க ஏத்துக்கிட்டா அவளுக்கு ஓக்கேதான்னு சொல்லிட்டா. அவ இருக்குற நிலைமைல உங்கள விட வேற யாரு அவள புரிஞ்சிக்க போறா"என்றவளை அவன்

"சரி நான் சந்தியாகிட்ட பேசிக்கிறேன் "என்று அவளின் பதிலை கேட்கும் முன் காலை கட் செய்தான்.

கால் கட் ஆனதும் நந்தினிக்கு எப்படியாவது ராஜீவ் சந்தியாவை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கடவுளை வேண்டினால். சிறுது நேரத்திற்கு  பின் கோவத்துடன் வந்த சந்தியாவை 

"என்னடி உன் ஆளு கால் பண்ணாரா என்ன சொன்னாரு "என்று கேட்க பளாரென்று அறைந்தாள்.

"என்னடி நினைச்சிக்கிட்டு இருக்க. நான் உங்கிட்ட சொன்னேனா எனக்கு மாப்பிள்ளை பாருன்னு.நீ என்ன ஹேற்கு  போய் ராஜீவ் கிட்ட கேட்ட. அவன் என்னோட க்லோஸ் ப்ரெண்டுடி. உனக்கு அவன பத்தி என்ன தெரியும்.அவன் என்ன புரிஞ்சிக்கிட்ட அளவுக்கு கூட என்ன நீ புரிஞ்சிக்கலைன்னு நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு" என்று கூற நந்தினி

"என்னடி சொல்ற, நான் ராஜீவ் கிட்ட பேசட்டுமான்னு கேட்டதுக்கு நீதானேடி சரின்னு சொன்ன" என்றவளை முறைத்த சந்தியா தன் வலது கன்னத்தை காட்டியவள் 

"நல்லா பாரு என்ன மூஞ்ச.என்னாலேயே இந்த மூஞ்ச கண்ணாடில 10 நிமிசத்துக்கு மேல பார்க்க முடியல இதுல வேற ஒருத்தன் வந்து என்ன கல்யாணம் பண்ணி....நீ கேட்கலாம் ராஜீவ் புரிஞ்சிக்க மாட்டாரான்னு. அவன் என் ப்ரெண்ட் "என்று கூற ஏதோ பேச வந்த நந்தினியை இடை மறித்தவள்

"நீ என்ன கேட்க வரேன்னு தெரியுது ப்ரெண்ட் லவ்வராக கூடாதான்னு, சில ப்ரெண்ட்ஸ் எப்போமே ப்ரெண்ட்ஸ்தான் அதுதான் ப்ரெண்ட்சிப்கு அழகு புரிஞ்சிக்க"என்று கூற நந்தினி நிஜமாகவே கவலையுடன் 

"சாரிடி "என்று கூற சந்தியா

"நீ ரொம்ப மாறிட்ட நந்தினி, நான் விளையாட்டா பேசுரேன்னா இல்லை சீரியசா பேசுரேன்னான்னு கூட உன்னால புரிஞ்சிக்க முடியலைன்னு நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்குடி."என்று கூறி அவ்விடம்  விட்டே  செல்ல நந்தினி, கோவத்துடன் ராஜீவிற்கு கால் செய்து

"உங்ககிட்ட எவ்வளவு தன்மையா கேட்டேன்?.ஆனா நீங்க அவகிட்ட கேட்டு எங்களுக்கு பிரச்சினைய உருவாக்கிட்டீங்கள்ள. இனிமே என் முகத்துலயே முழிக்காதீங்க்.. ஐ ஹேட் யூ"என்று கூறி அவனின் பதிலை கூட எதிர்பாராமல காலை கட் செய்தால்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro