கற்பனை 30

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

காலை கட் செய்ததும் ராஜீவிற்கு சந்தியாவை கொல்ல வேண்டும் போன்றதொரு கோபம் ஏற்பட்டது. உடனே அவளுக்கு கால் செய்தவன்

"ஏண்டி நாரதி உன்கிட்ட நான் என்ன சொன்னேன்..என் மனசுல இருக்குறது தெரியாம நந்தினி உன்னையே கல்யாணம் பண்ணிக்க சொல்றா. வேற ஏதும் நான் சொன்னேனா இல்லை திட்டவாச்சும் செய்தேனா...   ஜஸ்ட் ஜோக்காத்தானேடி சொன்னேன்.. காலைலதான் அவ என்கிட்ட கால் பண்ணி கொஞ்சம் சகஜமா பேச ஆரம்பிச்சா ஆனா அதுக்கிடைல இப்படி பண்ணிட்டியே"என்று கூற சந்தியா சீரியசாக

" அதென்னடா நாரதி" என்று கேட்க

"நாரதின்னா நாரதனோட‌ லேடீஸ் வெர்சன்.ஆமா‌இந்த‌ விளக்கம்‌இப்போ‌ ரொம்ப‌ முக்கியம் பாரு" என்று கூற சத்தமிட்டு‌ சிரித்தவளை

"இப்போ சிரிக்கிறியா நீ, சரி நான் அவகிட்ட போய் காலேஜ்ல இருந்து அவளை காதலிக்கிறேன்னு சொல்ல போறேன். உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ"என்று எகிற உடனே பயந்தவள்

"ஹேய் ராஜீவ் சாரிடா நான் சும்மாதான் அவளை கலாய்ச்சேன். இப்போ நான் கோவமா இருக்குற மாதிரி காட்டிக்கிட்டா என்ன சமாதானம் செய்ய நான் எது சொன்னாலும் கேட்பான்னுதான் அப்படி சொன்னேன் வேற எதுவுமில்லைடா" என்று கூற அவனோ உடைந்த குரலில்

"நான் சொல்றது தப்பா சரியான்னு கூட தெரியல. அவளும் கதிரும் டைவோர்ஸ் வாங்க போறான்னு தெரிஞ்சதும் ஆரம்பத்துல சந்தோசப்பட்டேன் எனக்கும் ஒரு சான்ஸ் கிடைக்கும்னு. ஆனா நீ சொன்ன காரணங்கள் உன்னோட நியாயங்கள நீ சொன்னப்போ காலேஜ்ல படிக்கிறப்போ விலகிப்போனது போலவே இப்பவும் விலகிடலாம்னு நினைச்சேன். இருந்தாலும் என் தங்கச்சி கல்யாணத்துக்கு அவள இன்வைட் பண்ணி இருக்குற வேலை எல்லாம் உன் மூலமா அவளுக்கு கொடுத்து இந்த இருக்குற கொஞ்ச நாளயாச்சும் எனக்கு ஒரு ஞாபகர்த்தமா இருக்குற மாதிரி பண்ணலாம்னு இருந்தேன்.ஆனா அதுல மண்ணு விழுந்துடிச்சின்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு சந்தியா. காலேஜ் படிக்கிறப்பவே நான் என் காதல சொல்லிருந்தா இப்போ அவளுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.    ஆனா நீ சொல்ற நந்தினிதான் ஆகாஷனான்னு. ஆனாலும் என்ன போல இருக்குற மிடில் கிளாஸ் பசங்களோட காதல் அக்கா, தங்கச்சி, வீட்டு பிரச்சினை இதுலயே மறைஞ்சி போயிடுதுல்ல. ரொம்ப வலிக்குதுடி...  அவ போன மாதிரியே போய் இருக்கலாம். எதுக்கு அவ மறுபடி இப்படி ஒரு நிலைமைல வரனும்"என்று அவன் விசும்ப ஆரம்பிக்க அவனை என்ன கூறி சமாதானம் செய்வது என்று தெரியாமல் சந்தியா தடுமாறினால்.

"சரி ராஜீவ் ரொம்ப குழப்பிக்காத. நான் அவள உன் தங்கச்சி கல்யாணத்துக்கு கூட்டி வரேன். உன் மனசுல அவ மேல இன்னும் காதல் இருக்குன்னு தெரியுது. ஆனா அவ இன்னொருத்தனோட பொண்டாட்டிடா. இருந்தாலும் உனக்காக நான் அவள கூட்டி வரேன். இது தப்பா இருந்தா கூட நான் பண்ணுவேன்டா உனக்காக. பிகாஸ் யூ ஆர் மை பெஸ்ட்டி" என்றாள்.

ஆரம்பத்தில் ராஜீவின் மனதை சந்தியா அறிந்திருந்தாலும் அவனது ஆசைகளை முலையிலேயே கிள்ளி எறிய அவள் எண்ணினால். ஆனால் ஒரு ஆணின் கண்ணீர் மற்றும் அழுகை என்பது எவ்வளவு வலியது என்பது சந்தியாவுக்கு தெரியும். ஆண்கள் பொதுவாக எதற்கும் அழ மாட்டார்கள் ஆனால் அவர்கள் ஒரு விசயத்திற்காக கண்ணீர் விட்டால் அதன் மீது எவ்வளவு அன்பும் ஈடுபாடும் கொண்டுள்ளார்கள் என்பது உலகில் யாரும் அறிவதில்லை. ஒரு ஆண் சக மனிதனுக்காக அழுதான் என்றால் அவர்களுக்காக அவன் தனது உயிரையும் துச்சமென நினைப்பான் என்பதை சந்தியா நன்றாகவே தன் தந்தையின் மூலம் உணர்ந்திருந்தால். இது எல்லாவற்றையும் யோசித்தவள் கடைசியில் மனதுக்குள்


'சாரி ராஜீவ்' என்று கூறிக்கொண்டால்.

திருமண நாள் அன்று அதிகாலையிலேயே சந்தியா ஒரு வழியாக நந்தினியை சமாதானம் செய்து அவளை திருமணத்துக்கு கூட்டிச்செல்ல வெளியில் வர கூரீயர்காரன் அவளை வழிமறித்தான்.தனக்கு வந்திருந்த பார்சலை பார்த்தவள் புனன்னகையுடன் அதை தனது ஹேன்ட் பேக்கிற்குள் வைத்துக்கொண்டால்...  திருமணம் மண்டபத்தில் என்பதால் இருவரும் வந்து சேர அங்கு  ராஜீவின் குடும்பம் அவர்களை அன்புடன் வரவேற்றனர். இவர்களும் அங்கிருந்த வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி தாங்களும் அந்த குடும்பத்தில் ஒருத்தர்தான் என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தனர். இவர்கள் வந்திருப்பதை அறிந்த ராஜீவ் அவர்கலை தேடி வந்தவனிடம் நந்தினி

"சாரி ராஜீவ், நீங்க அவகிட்ட விளையாட்டாதான் பேசிருக்கீங்க ஆனா இவதான் என்கிட்ட சும்மா சீன போட்டிருக்கா. அன்னைக்கு நான் கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்.. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி!!"என்றவளை முகம் மலர

"ஹேய் இட்ஸ் ஓக்கேப்பா, இவள போல நீயும் எனக்கு ப்ரெண்ட்தான் லீவ் இட்" என்று கூறியவன் சந்தியாவை நன்றியுடன் நோக்கினான். அவளும் கண்களாலேயே அவனுக்கு 'வழிஞ்சது போதும்  வேலைய பாரு' என்று ஜாடை செய்தால்.

அன்றைய நாள் முழுவதும் ராஜீவிற்கு வானத்தில் பறப்பதை போல ஒரு உணர்வு தொடர்ந்து கொண்டே இருநத்து. ஆனால் அவ்வப்போது அவனுக்கு இது தற்காலிகமானது என்றும் நிரந்தரமான ஒன்றல்ல என்பதும் அவன் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் நல்லவனையும் கெட்டவனையும் வெளியில் கொண்டு வருவது சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான். தன் மனதுக்கு பிடித்த காதலி தன் முன்னேயே அழகிய ஆடை அணிந்து அவன் கண் முன்னே வலம் வரும் போது ராஜீவிற்குள் இருந்த ஒருத்தன் முழித்துக் கொண்டான். அவன் நல்லவனா கெட்டவனா என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.


அன்றைய நாள் நிகழ்வுகள் எல்லாம் முடிந்து அடுத்த நாள் ரிசப்சனுக்கான வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்க சந்தியாவை தனியாக அழைத்தவன் 

"என்னால முடியல சந்தியா, என் கண்ணு முன்னாடியே நந்தினியை பார்த்துக்கிட்டு மறுபடி இன்னொருத்தனுக்கு அவள தாரை வார்த்துக்கொடுக்க என்னால முடியாது.. ப்ளீஸ் உன்ன கெஞ்சி கேட்டுக்கிறேன். அவதான் ஆகாஷனா என்றத அவகிட்ட சொல்லாத. கதிரும் அவளும் டைவோர்ஸ் வாங்குற மாதிரி வாங்கட்டும். நான் அவள காலம் பூரா சந்தோசத்த மட்டுமே பார்க்குற மாதிரி வெச்சிக்கிறேன்"  என்று கூறி அழத்துவங்கினான். சந்தியாவுக்கு ராஜீவ் இப்படி கூறியதில் கோவம் வர 

"என்ன சொல்ற  ராஜீவ், யாரோ ஒருத்தனா? கதிர் அவளோட புருசன். அப்புறம் நிஜமான ஆகாஷனா அவதானே. சோ அவங்கதான் ஒன்னு சேரனும்" என்று கூற கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு

"என்னால முடியலடி, நானும் மனிசன் தானே.எனக்கும் ஆசை , காதல், உணர்வுகள் இதெல்லாம் இருக்கும்ல.கடவுளுக்கு என்மேல ரொம்ப பாசம் போல அதனாலதான் எனக்கு இவ்வளவு வலிகளை கொடுக்குறாரு" என்றவனை சந்தியா அமைதியாக பார்த்துக்கொண்டே இருந்தாள். உடனே ராஜீவ்

"ப்ளீஸ் நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கே போயிடுங்க. நாளைக்கு ரிசப்சன் வரைக்கும்லாம் இருக்க வேண்டாம்" என்றவனை இப்பொழுது அவள் பரிதாபமாக பார்த்தவள்...

"ஐ அம் சாரி, இதுல என்னால உனக்கு ஹெல்ப் பண்ண முடியல"என்று நிஜமாகவே வருத்தப்பட்டால்.சிறுது நேரம் அமைதியாக இருந்தவள்

"சரி ராஜீவ் இப்பவே இதை முடிச்சிக்கலாம்.ஏன்னா கதிரும் நந்தினியும் ஒன்னா இருந்தப்போ உனக்கு இப்படி எதுவும் தோனலை. ஆனா அவங்க ரெண்டு பேரும் பிரிய போராங்கன்னு தெரிஞ்சதும் உனக்கு இப்படிலாம் தோனுது. சோ அவகிட்ட இப்பவே உண்மைய சொல்லிடலாம்"என்று கூற நந்தினிக்கு கால் செய்து அவர்கள் இருக்குமிடத்திற்கு அழைத்தால். நந்தினியும் இவர்களை காக்க வைக்காமல் உடனே வர

"நந்தினி கொஞ்சம் பொறுமையா நான் சொல்றத கேளு. இது யாரோட மொபைல் தெரியுதா? " என்று அவள் கையில் இருந்த ஐபோன் 6 ரோஸ் கோல்ட் மாடலை காட்டி கேட்க  நந்தினி  இல்லை என்பது போல தலையை ஆட்டினால். ஏனென்றால் அவர்கள் அந்த மொபைலை யூஸ் பண்ணிய காலத்தை முழுவதுமாக அவள் மறந்திருக்க ராஜீவ் அவனது மொபைலில் இவர்கள் இருவரையும் எடுத்த போட்டோவில் அவர்கள் இருவரின் கைகளிலும் அதே மொபைல் இருப்பதை கண்டவள்  என் 

"என் மொபைலா?" என்று கேள்வியாக கேட்டாள். உடனே சந்தியா சந்தோசத்துடன் 

"புரிஞ்சிக்கிட்டியே பட்டுக்குட்டி.. இது உன் மொபைல்தான்.. ஆனா அது இல்ல மேட்டர் இதுல இருக்குற ஒரு மெசேஜ்ஜ நீ படிக்கணும்" என்று அவளுக்கு அதில் இருந்த வாட்பெட்டை திறந்து கொடுக்க அதில் அவள் கரு என்ற ஆதருடன் பேசிய அனைத்து சாட்களையும் பார்த்தவள் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது... உடனே அவள் சந்தியாவை நோக்கி

"ஆனா என் ஈமெயில் ஐடி இல்லாம எப்படி?" என்று நந்தினி இழுக்க சந்தியா

"இங்க பாரு நீ யூஸ் பண்ணிருக்குற ஈமெயில் ஐடி sweetywatty  அப்படின்னு.. ஏன்னா நமக்குள்ள ஒரு போட்டி இருந்திச்சி ஒருத்தங்க ஐடிய மத்தவங்க கண்டுபிடிக்கனும்னு. நீ எப்பவும் என்னோட லாப்டாப் யூஸ் பண்ணுவ. அதுல உன் வழமையான ஈமெயில் இருக்கும். உன் ஈமெயில் தெரிஞ்சா நான் உன் வாட்பெட் ஐடிய கண்டுபிடிச்சிடுவேன்னு நீ திருட்டுத்தனமா புது மெயில் திறந்து வாட்பெட் யூஸ் பண்ணிருக்க போக்கிரி" என்று கூற சமாதானமான நந்தினி

"நமக்குள்ள‌அப்படி‌ வேற ஒரு‌ சாலஞ்ச் இருந்திச்சா. ஹேய் சந்தியா நிஜமாத்தான் சொல்றியாடி, இது என் மொபைல்தானா?" என்று சந்தேகமாக கேட்க சந்தியாவும் அவள் கைகளுக்கு அது எப்படி வந்தது என்று தெளிவாக கூறினால். நந்தினியின் முகத்தில் சந்தோசத்தை கண்ட ராஜீவிற்கு மனது நிறைந்தாலும் அவன் காதலால் அவன் உள்ளம் வேதனை  கொண்டது.. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு புன்னகையுடன்

"நாளைக்கு ரிசப்சனுக்கு கதிரையும் வர சொல்லிருக்கேன், அவரு வந்ததும் அவருகிட்ட இத சொல்லலாம். ரொம்ப சந்தோசப்படுவாரு"என்று சாதராணமாக இருப்பது போல காட்டிக்கொண்டு ராஜீவ் கூற சந்தியா அவனை பெருமையுடனும் நன்றியுடனும் நோக்கினால். ராஜீவ் கூறியதை கேட்டதும் நந்தினி மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றால். ஆனால் அவர்களின் கஷ்டகாலம் இன்று இரவே ஊர் திரும்ப வேண்டிய கதிரால் இன்னும் 3 நாளைக்கு வர முடியாது என்றும் தங்கையின் திருமணத்திற்கு வராமல் போனதுக்கு ராஜீவிடம் அவன் மன்னிப்புக்கேட்டு ஒரு மெசேஜ் பண்ணியிருந்தான். இதை படித்த ராஜீவ் இருவரிடமும்

"ஓக்கே கேர்ல்ஸ், நந்தினியோட செலிப்ரேசன் இன்னைக்கு இல்ல. இன்னும் 3 நாள் கழிச்சி" என்று கூற சந்தியா

"ஐய்யோ!! இன்னும் 3 நாள்ள நான் யூ எஸ் போகனுமே" என்று கூற நந்தினி

"என்னடி சொல்ற  அதான் ஒரு மாசம் உன்ன இருக்க சொன்னேன்ல.இப்ப ஊருக்கு போறேன்னு சொல்ற?" என்றவளை சந்தியா

"இல்லடி ஒரு அர்ஜண்ட் மேட்டர் இருக்கு. அத முடிச்சிட்டு உடனே இந்தியா வரேன். ஒரு 6 மாசம் இங்கேயே ஸ்டே பண்ண வேண்டியிருக்கும்" என்று கூற நந்தினி இப்போது

"சரி விடு பார்த்துக்கலாம்"என்று  கூறினாள்..

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro