கற்பனை‌ 37

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

எல்லோரும் காத்திருந்த திருமண நாள், நான்கு உள்ளங்களில் நிம்மதியும் சந்தோசமும் பரவ இப்படி ஒரு தெளிவான, சந்தோசமான வாழ்க்கையை கொடுத்ததற்கு எல்லோரும் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். கதிர் மட்டும் "வாட்பெட்டுக்கு" நன்றி சொல்லிக்கொண்டிருந்தான். பிங்க் நிற சேலையில் கொஞ்சம் குண்டான தேவதை என  நந்தினி ஜொலிக்க வைத்த கண் வாங்காமல் ராஜீவ் பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட ராகவி


"டேய் அண்ணா உன் வாட்டர்பால்ஸ மூடு. கல்யாணத்துக்கு வர்றவங்க  வழுக்கி விழுந்துட போறாங்க" என்று கூறிய தன் தங்கையை அசடு வழிய பார்த்தவன்

"ராகவி ரொம்ப தாங்க்ஸ்டா, எங்க கல்யாணம் நடக்க மிக முக்கிய காரணம் நீயும் நம்ம அக்காவும்தான். உங்கள மாதிரி சிஸ்டர்ஸ் கிடைச்சா எந்த பையனுக்கும் வாழ்க்கைல எப்படியான ப்ராப்ளம் வந்தாலும் ஈசியா சமாளிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்" என்றவனை புன்னகையுடன்

"டேய் போதும்டா யப்பா.இப்பவே இங்க இப்படி குளிருது இதுல  நீ வேற ஐஸ் வைக்காத"என்று கூறியவள் 

"அண்ணி செம்ம அழகா இருக்காங்கண்ணா.எனக்கே பொறாமையா இருக்கு. பெண்மையே பார்த்து பொறாமைப்படும் அழகுன்னு சொல்வாங்களே அது அண்ணிதான் போல" என்றவளை ராஜீவ்

"சரி சரி, போதும் என் செல்லத்த பார்த்து பொறாமை பட்டது" என்றவன் ஒயிலாக நடந்து வந்து அவன்  அருகில் அமர்ந்த நந்தினிக்கு ராஜீவ் மூன்று முடிச்சுக்களுடன் தன் காதலையும் சேர்த்து கட்டினான்.

முதலிரவுக்கு  நந்தினி தயாராகி அறைக்குள் செல்ல முற்பட அவளின் அருகில் வந்த ராஜீவின் தாய்

"அம்மா நந்தினி, உனக்கு இது முதல் இரவு இல்லைன்னாலும் என் பையனுக்கு இது முதல் இரவுமா.உனக்கு தெரியாதது ஒன்னுமில்ல.கொஞ்சம் அனுசரிச்சு  நடந்துக்க"என்று கூற நந்தினியின் முகம் கவலையில் சுருங்குவதை கண்ட ராஜீவின் அக்கா

"அம்மா உன்ன மாமா கூப்பிடுறாங்க என்னன்னு பாரு" என்று கூறியவள்  தன் தாய் சென்றதும்

"சாரிடா, எங்கம்மா இப்படித்தான் மனசுல கோவம் ஏதும் வந்தா உடனே வெளிக் காட்டிடுவாங்க. கல்யாணத்துக்கு வந்த யாரோ அம்மாகிட்ட பையனுக்கு கல்யாணமாகாத ஏதும் பொண்ணு கிடைக்கலையா இல்லைன்னா பையனுக்கு ஏதும் குறை இருக்குறதால இப்படி கல்யாணம் பண்றீங்களான்னு கேட்டிருக்காங்க. அதுல அப்செட் ஆனவங்க யாருகிட்ட அந்த கோவத்த காட்டுறதுன்னு தெரியாம உன்கிட்ட இப்படி பேசிட்டாங்க. மத்தபடி எங்கம்மா பெரிய வில்லிலாம் இல்லப்பா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கடா" என்று கெஞ்சிய ராஜீவின் அக்காவை

"சேச்சே அதலாம் ஒன்னுமே இல்ல. அவங்க கேட்ட கேள்விக்கு உங்கம்மா என்கிட்ட இவ்வளவு பேசினதே பெரிய விசயம். வேற யாரும்னா ரொம்ப மோசமா நடந்திருப்பாங்க.எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தானே, அத்தை என்ன புரிஞ்சிக்குவாங்க" என்று கூரீய  அவளை மகிழ்ச்சியுடன் முதலிரவு அறைக்குள் அனுப்பிவைத்தனர்.

அறைக்குள் இருந்த ராஜீவிற்கு தங்களது திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து நந்தினி அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது உறுத்தலாகவே இருந்தது. இருந்தாலும் இன்றும் அவள் எதுவும் பேசாமல் இருந்தால் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருக்க, உள் வந்த நந்தினி கதவை தாழிட்டு வர அவளை அவன் அருகில் அமர  செய்ய நந்தினியோ அவன் எதிர்பாராத  வண்ணம் அவனை அனைத்து அழத்  துவங்கினால்.  இது வரை‌ தன்‌வாழ்வில் என்றும் கிடைக்காது எண்றென்னிய வசந்தம்,இன்று‌ தன் அருகில்‌ இருந்தாலும்,அதை‌ முழுமையாக உணர முடியாமல் ஏக்கமாய்‌ அவன்‌ இருக்க, தென்றலாய்‌ அவள்‌ அவனை‌ அனைத்து‌ அழுதது ஏமாற்றமா அல்லது மகிழ்ச்சியா என்று‌ புரியாமல்‌ ராஜீவ் இருந்தான்.  அழத்துவங்கியவள் ஒரு பத்து நிமிடம் விடாமல் அழுது கொண்டே இருக்க என்ன செய்வது என்று புரியாமல் இருந்த ராஜீவ் அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தவன் மெதுவாக அவள் முதுகை வருடி

"நந்தினி அழாதடி "என்று கூற அவனின் அன்பான வார்த்தைகளில் சுய நினைவுக்கு வந்தவள் அவனை ஓங்கி பளாரென அறைந்தாள்.எதற்காக அடித்தால் என்பது புரியாமல் ராஜீவ் இருக்க

"ஏன்டா என்ன காதலிக்கிறேன்னு காலேஜ்ல வெச்சே சொல்லல. அப்ப சொல்லிருந்தா எங்க வீட்டுல சொல்லி உங்க வீட்டு ப்ராப்ளம் முடியும் வரைக்கும் வெயிட் பண்ணிருப்பேன்ல.பாரு இப்போ என்னால உனக்கு உன் குடும்பத்துகும் எவ்வளவு கெட்ட பேரு"என்று கூறியவள் திருமணத்தில் ராஜீவின் தாயிடம் கேட்கப்பட்ட கேள்வியை அவனிடம் கூற புன்னகைத்தவன் 

"ஹேய் நந்தும்மா, ஊருல நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கடா. அதெல்லாம் மனசுல போட்டுக்க கூடாது.இங்க பாரு இனிமே உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது. உன்னோட பழைய வாழ்க்கைய பத்தி ஒரு வார்த்தை கூட இனிமே பேச மாட்டேன்.ஆனா அது போல நீயும் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?" என்று கேள்வியாக கேட்டவனை என்ன என்று அவள் கேட்க

"எதுக்காகவும் என்ன கதிர் கூட கம்பேர்  மட்டும் பண்ணிடாதடா. என்னால அத தாங்க முடியாது. கதிர் மேல எனக்கு பொறாமைன்னு இல்ல.என் பொண்டாட்டிக்கு நாந்தான் பெஸ்ட்டா இருக்கனும் என்ற ஆசை. இதை மட்டும் எனக்காக பண்ணுவியா" என்று கேட்க அவளும் 

"என் உயிர் இருக்குற வரைக்கும் அப்படி நான் செய்ய மாட்டேன்" என்றாள்.

"வேற ஏதும் உனக்கு சொல்லனும்னாலும் சொல்லுடா" என்றவனை அவன் முகம் பார்த்து

"ராஜீவ் என்னடா இவ இப்படி சொல்றாலேன்னு தப்பா நினைக்காதீங்க..  நம்ம கல்யாணம் பிக்ஸ் ஆனதுல இருந்து உங்ககிட்ட பேசுறத நான் தவிர்த்துக்கிட்டே வந்தேன்,அது ஏன்னு தெரியுமா? போன்ல பேசி உங்க மேல எனக்கு அன்பை நான் வரவழைச்சிக்க விரும்பல. உங்க அன்ப நான் நேர்ல அனுபவிக்கனும்னு நினைச்சேன். அதான் உங்கள நான் அவாய்ட் பண்ணேன். திருமணமான  அன்னைக்கு எல்லா ஆணுக்கும் பொண்ணுக்கும் எந்த வகையான மனநிலை, எப்படியான எதிர்பார்ப்பு இருக்கும்னு எல்லோருக்கும் தெரியும்.ஆனா எனக்கு உங்க காதல்ல ஒரு வாரமாச்சும் மூழ்கனும்னு ஆசையா இருக்கு. அதுக்கு அப்புறமா....." என்று இழுத்தவளை தன்னுடன் சேர்த்து அனைத்தவன்

"இதையேதான்டா நானும் சொல்லனும்னு இருந்தேன். கொஞ்ச நாளைக்கு நம்ம மனசால ஒன்னாகிட்டு அப்புறமா மத்தத பத்தி யோசிக்கலாம்னு. ஆனா நீயே சொல்லிட்ட" என்றவனை அவள் சந்தேகமாக

"நிஜமா சொல்றீங்களா இல்ல என் மனசு நோக கூடாதுன்னு சொல்றீங்களா.என்ன இருந்தாலும் நான் முன்னாடியே..... என்று அவள் கூற வருவதை முழுமைப்படுத்த விடாமல் அவள் ஆரஞ்சு இதழ்களை கவ்வினான். அவனின் அந்த முத்தத்தில் அவனது காதலை உணர்ந்தவள் முகம் சிவக்க அவனை விட்டு விலக,  தென்றலாய் அவள் இதழ் மட்டும் வருடியது அவனுள் ஏமாற்றமா,  இல்லை மகிழ்ச்சியா, என புரியாமல் இருந்தான் ராஜிவ்..


"நந்தினி புல் மீல்ஸ் வேணா கொஞ்ச நாளைக்கு அப்புறமா வெச்சுக்கலாம் இப்போ எனக்கு அட்லீஸ்ட்  டெஸ்சேட் (சாப்பிட்ட பின் பரிமாறும் இனிப்புப் பண்டம்) ஆச்சும் கிடைக்குமா" என்றவனை முகத்தில் வெட்கம் படர

"உங்களுக்கு வேணும்னா நீங்க புல் மீல்ஸே எடுத்துக்கோங்க" என்று கூற புன்னகைத்த ராஜீவ் 

"இவ்வளவு நாள் வெயிட் பண்ண எனக்கு இந்த கொஞ்ச நாள் வெயிட் பண்ண முடியாதா.என் காதல உனக்கு உணர்த்தி உன் காதலை நான் அடையனும். அது வரைக்கும் என்னால பொறுமையா இருக்க முடியும்டா "என்றான்....

------------------------------------------------

தங்கள் வீட்டுக்கு வந்த சந்தியா

"கதிர் நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா?" என்று கேட்க அவனும் அவளை நோக்கி என்ன என்பது போல பார்க்க

"நீங்க கண்டிப்பா மறுபடியும் கதை எழுதனும் கதிர். சோகமான முடிவை கொடுக்க யாருமே பயப்படுற வாட்பெட்ல கெத்தா ஒரு எண்டிங்க் கொடுத்தீங்க பாருங்க. யு ஆர் ரியலி கிரேட். வழக்கமா வாட்பெட்ல எல்லோரும் ரொமான்டிக், லவ், காலேஜ் ஸ்டோரி, கணவன் மனைவிக்கு இடையிலான ஊடல் இப்படித்தான் கதை நகரும். ஒரு சில ஸ்டோரிஸ்லாம் லாஜிக்கே இல்லாம இருக்கும். அதை படிக்கிறப்போ செம்ம கடுப்பாடும் எனக்கு. ஆனா பல பேருக்கு அப்படியான ஸ்டோரி ரொம்ப பிடிக்குது. அப்ப்டியான ஸ்டோரிக்கு வியூவ்ஸ், வோட்ஸ்லாம் சும்மா அள்ளும். ஆனா உங்க ஸ்டோரிக்கு பார்த்தீங்கன்னா வியூவ்ஸ், வோட்ஸ் ரொம்ப கம்மிதான். ஆனா கதைல ஒரு நேர்த்தி இருக்கும்.எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது.எனக்காக ஏதும் புது கதை ஒன்னு எழுதுவீங்களா" என்று கேட்க தன்னவள் தன் எழுத்து மீது கொண்ட அன்பை கண்டவன் கண்கள் கலங்க 

"என்ன இப்படி எங்கரேஜ் பண்ண யாருமே இருந்ததில்லடா.இப்போ நீ இருக்க கண்டிப்பா நான் எழுதுறேன்.ஒரு கதை ஆல்ரெடி ரெடி பண்ணிட்டேன்.ப்ளாட் சொல்ரேன் கேட்குறியா" என்றவனை

"ஹேய் சொல்லுப்பா ப்ளீஸ்" என்றாள் சந்தியா.

"ஒரு பொண்னு இருப்பா.அவள காதலிச்ச பையன் அவனோட பேர்த்டேக்கு அவள இன்வைட் பண்ணி தன்னோட காதல அவளுக்கு சொல்லலாம்னு இருக்கும் போது அவனோட ப்ரெண்டு அந்த பொண்ணோட அம்மாக்கு எய்ட்ஸ் இருந்தத சொல்லிடுவான்........"என்று தனது புதுக்கதையின் முழு கான்சப்டையும் கூற ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றவள்

"சத்தியமா  சொல்றேன் கதிர்.இந்த  கதைக்கு அதிகமா வியூவ்ஸ் ,வோட்ஸ் கிடைக்குமான்னு தெரியல. ஆனா கண்டிப்பா லைப்ல கஷ்டப்படுற  எல்லா பொண்ணுங்களும் படிக்க வேண்டிய ஒரு கதையா இருக்கும்.உங்களுக்கு நான் இருக்கேன்.யாரு படிக்கிறாங்களோ இல்லையோ வரிக்கு வரி நான் கமெண்ட் பண்றேன்.நீங்க எழுதுங்க. ஆமா தலைப்பு செலக்ட் பண்ணியாச்சா" என்று கேட்க அவனும் புன்னகையுடன்

"யெஸ்டா பண்ணிட்டேன். ஆடப் பிறந்த அலையிவள்" என்று கூற அவளும் 

"என்ன கன்னத்தில் முத்தமிட்டால்ல இருந்து சுட்டுட்டீங்களா.இருந்தாலும் சூப்பரா இருக்கு. ஐம் வெயிட்டிங்க்!!"என்றாள்.

-----------------------------

Hai indha scene nan ippadithampa eludinen.adha avaga change panni koduthanga

(அறைக்குள் இருந்த ராஜீவிற்கு தங்களது திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து நந்தினி அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது உறுத்தலாகவே இருந்தது. இருந்தாலும் இன்றும் அவள் எதுவும் பேசாமல் இருந்தால் என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டிருக்க உள் வந்த நந்தினியை குழந்தைகள் தனக்கு பிடித்த மிட்டாயை பார்ப்பது போல கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அழத்துவங்கியவள் ஒரு பத்து நிமிடம் விடாமல் அழுது கொண்டே இருக்க என்ன செய்வது என்று புரியாமல் இருந்த ராஜீவ் அவள் அழுது முடிக்கும் வரை காத்திருந்தவன் மெதுவாக அவள் முதுகை வருடி)
இந்த‌‌ சீன நான் இப்படித்தான் எழுதினேன்.ஆனா எடிட்டிங்க் டீம் ஆன myazhini KarthikaRajkumar  ஆகியோர்‌ சேர்ந்து‌ சூப்பரா‌ கொடுத்திருக்காங்க.இப்படி‌ ஒரு எடிட்டர்ஸ் இருந்தா ரைட்டர்ஸ்கு எந்த ப்ராப்ளமும் இல்லப்பா..ரொம்ப நன்றி அப்படிலாம் சொல்லமாட்டேன்.ஏனெனில் இந்த கதை எனக்கு‌ மட்டும் சொந்தமானது இல்லை.எனக்கு இருக்கும் அதே உரிமை‌ உங்கள் இருவருக்கும் உண்டு. காலேஜில் எக்சாம்‌இருந்தாலும் அவ்வப்போது உதவிய Nivethamagathi கும் உண்டு.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro