சிந்தனை ( தனிப்பட்ட நிலைப்பாடு)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஹாய் வாட்டீஸ்,


ஒரு சில விடயங்கள் பேசலாம் என்பதற்காகவே இந்த பதிவு.

நான் ஏதும் கதைகளை படிக்கும் போது எப்போதும் நெகடிவ் காமன்ட்ஸ்களே கொடுப்பேன். அதுவும் அந்த ஆதரின் அனுமதியோடு. காரணம் நன்றாக உள்ளது என்று கூற ஆயிரம் பேர் 

இருக்க... தவறுகளை சுட்டிக்காட்ட ஒரு சிலரே இருக்கின்றனர். அதனாலேயே அதை நான் கையில் எடுத்துக் கொண்டேன். அதற்கு மிக முக்கியமான ஒரு காரணமும்இருக்கின்றது. நம் தவறுகளை மற்றவர் சுட்டிக்காட்டும் போதுதான் நமது எழுத்துக்களை மேலும் மெருகேற்றிக் கொள்ளமுடியும்.

நான் இன்றும் பெருமைப்படுவது sunshine9261 Nivethamagathi priyadharshini12 narmathasenthilkumar ramyaanamika im_dhanuu    அது போன்ற எழுத்தாளர்களை. காரணம் சில சிறிய தவறுகளை கூட நான் சுட்டிக்காட்டும் போது அது சரியாக இருந்தால் ஏற்று அடுத்தபதிவுகளில் அதை சரி செய்து சிறந்த எழுத்தாளர்களாக மாறியுள்ளனர். இதில் எனது பங்கு 1% கூட கிடையாது. 

எல்லாம் அவர்களின் முயற்சியும் தவறுகளை

திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமுமே இது இவ்வாறு இருக்க...


கதை என்ற ஒன்று வரும் 

போது அதில் காதல், கோபம், சிரிப்பு, பழிவாங்குதல், ரொமான்ஸ் என்ற 

பலவகையான கலவைகளில் இடம்பெறும். இங்கு நாம் சிலகதைகளில்  தங்களின் வாழ்க்கையை அப்படியே எழுதும் போது சில பிரச்சினைகள் மனதளவில் எழும். ஏனென்றால் வாசகர்கள் எப்படி ஒரு கதாபாத்திரத்தை பாராட்டுவார்களோ அதே

போல தவறுகள் செய்யும் போது திட்டுக்கள் வரும் . இங்கு முக்கியமாக கூற வரும்  விடயம் சில எழுத்தாளர்கள் தங்களின்  நண்பர்களின் பெயரை தங்களின் கதைகளில் அந்த நபர்களின் அனுமதியுடன் எழுத முற்படும் போது அனுமதி 

வழங்கும் நபர் ஆரம்பத்தில் அதனால் வரக்கூடிய பின்விளைவுகளை  யோசிக்காமல் தங்களின் நண்பர்கள் தங்களது பெயரை வைத்து கதை எழுத போகின்றார்கள் என்ற ஆர்வத்தில் சந்தோசமாக இருப்பார்கள். அதுவே கதை நகர நகர பின்னூட்டங்களில் கிடைக்கும் எதிர்மறையான விமர்சனங்களால் அவர்களின் மனது வேதனைப்படும் என்பதே நிதர்சனம். ஒரு நபரின் அனுமதி எதுவுமில்லாமல் சாதாரணமாக அந்த பெயர் பயன்படுத்துமிடத்தில் குறிப்பிட்ட அந்த வாசகருக்கு பெரிதாக எந்தபாதிப்பும் ஏற்படாது. ஆனால் அதுவே  அனுமதிபெறப்படும் போது அது தாங்கள் தான் என அவர்கள் மனதில் உருவகபடுத்திக் கொள்வதால் எதிர்மறை பின்னூட்டங்களின் போது மன கஷ்டம் வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.


எல்லோரும் எழுத்தாளர்களுக்கு தங்களின் பெயர்களை பயன்படுத்த அவர்கள் அனுமதி கேட்டால் ஒன்றுக்கு ஐந்து தடவை யோசித்து முடிவெடுங்கள். சில மன வலிமை பெற்றவர்களுக்கு 

எதிர்மறை பின்னூட்டங்கள் இடும் போது அவர்களை பாதிக்காது. ஆனால் அதுவே பலருக்கு அது மன வலியை கொடுக்கும் என்பதே நிதர்சனம். இதேபோலபெயர் பயன்படுத்துவதில் மட்டுமல்ல உங்களின் அனுமதி எதற்கும் எழுத்தாளர்கள் கேட்டால் பல முறை யோசித்து அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுக்கவும். அனுமதி அளித்த பின் யோசிப்பது என்பது ஒரு சாராருக்கு கஷ்டங்களை ஏற்படுத்தும்.


இறுதியாக சிலர் கேட்கலாம் மற்ற சினிமா, சீரியல்களில் வருவதை என்ன செய்ய போகின்றீர்கள் என்று. இங்கு பிரச்சினை பொதுவாக வருவது அல்ல. மாறாக குறிப்பிட்டநபரிடம் கேட்கும் போது குறித்த நபரின் குடும்பத்தினர் மற்றும் அதை படிக்கின்ற மற்றவர்களும் அந்த கதாபாத்திரத்தை அந்த நபராகவே பார்ப்பார்கள் என்பது உண்மை.


இறுதியாக இது என்னுடைய கருத்து. இதில் பிழைகளும் இருக்கும்.  தவறிருந்தால் அதை சுட்டிக்காட்டவும் .

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro