8

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அடுத்த நாள் காலையில் ஆதவன் தன் ஒளிக்கதிர்களை பூமியில் பரப்ப ஆதிராவின் அறையில் ஆதிரா ஜன்னலின் வழியே வெளியே இலக்கின்றி வெறித்துக்கொண்டிருந்தாள் .அவள் முகத்தில் ஒரு கடுமையும் குழப்பமும் குடியேறி இருந்தது .

நேற்று இரவு நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவள் கண்முன் விரிய இந்த கணமும் அவளது உடலில் ஓர் நடுக்கத்தை பரவ விட்டது அவள் கடைசியாய் கண்ட காட்சி.கனவு என்று மனதை சமாதானம் செய்ய முயன்றாலோ அவள் கால்களிலும் கைகளிலும் இருந்த காயங்கள் அவை கனவல்ல என்று கூறியது .இது போதாதென்று அவள் இரவில் கண்ட அவ்வுருவம் அந்த நேரத்தில் வேலைக்காரர்களாக இருக்குமோ என்று நினைக்க அவள் நினைத்ததை பொய்ப்பிக்கவே அவள் கையில் இருந்ததொரு ஆண்கள் அணியக்கூடிய bracelet அதில் ஏதோ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

அதை பார்த்துக்கொண்டிருந்தவளின் நினைவுகள் சற்று நேரத்திற்கு முன் நடந்தவற்றை நினைவுகூர்ந்தது.

காலையில் என்றையும் விட விரைவாக எழுந்த ஆதிரா கோயிலிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து தயாராகி விட்டு மணியை பார்க்க அதுவோ அதிகாலை ஐந்தென காட்டியது .இந்த நேரத்தில் யாரும் எழுந்திருக்க மாட்டார்கள் என்று நினைத்தவள் .தன் அறையை விட்டு வெளியே வந்தவள் இந்த ஊரில் கோவில் எங்குள்ளதென்று யாரை கேட்பது என்று எண்ணமிட்டுக்கொண்டே ஹாலிற்கு வர அந்த ஓரத்தில் இருந்த அவ்வளைவுப்பாதையை பார்த்தவளிற்கு நேற்று இரவு ஏதோ ஓர் உருவத்தை கண்டது நினைவு வர ஆங் இங்க இருக்குற வேலைபாக்குறவங்கள பார்த்தா தெரியும் என்று நினைத்தவள் அந்த வீட்டின் கொள்ளை புறத்திற்கு வர அங்கே இருந்த தோட்டத்தில் தண்ணீர் விட்டுக்கொண்டிருந்தனர் இரு பெண்கள் .

ஒருவர் நடுத்தர வயதில் இருக்க இன்னொரு பெண்ணோ அவர் மகள் போலும் 15 ,16 வயதினவளை போல் இருந்தாள்.

அவர்களின் அருகில் ஆதிரா செல்ல அவளை நோக்கி இளநகை வீசிய அந்த பெண்"அக்கா சொல்லுங்கக்கா காபீ, டீ ஏதும் வேணுமாக்கா ?"என்க

ஆதிராவோ அவளை பார்த்து சிரித்தவள் "அதெல்லாம் வேண்டாம்டா இங்க இந்த ஊருல கோவில் எதுவும் பக்கத்துல இருக்கா?"என்க

அந்த பெண்ணோ"ஹான் இங்க இருந்து ஒரு 6 கிலோமீட்டர் தள்ளி கோவில் இருக்குக்கா ஆனா "என்று தயக்கமாய் இழுக்க

ஆதிராவோ "ஆனா ?"என்று வினவ

அந்த பெண்ணின் தாயோ "அந்த கோவிலுக்கு யாருமே போறதில்லம்மா

.இந்த ஊருல இருக்குற யாருமே கோவிலுக்கு போய் சாமி கும்புடுறதில்ல "என்க

ஆதிராவோ குழப்பமடைந்தவள் "ஏன்?"என்க

அவரோ "அது என்னவோ தெரியலம்மா .இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த ஊருல அந்த கோவில்ல வச்சு பெரிய அசம்பாவிதம் நடந்ததாகவும் அதுல இருந்து யாருமே அந்த கோவில் பக்கம் போறது இல்ல அப்படினுனும் பேசிக்குகிறாங்க. "என்க

அவளோ "அசம்பாவிதமா என்ன நடந்துச்சு?"என்க

அவரோ "அதெல்லாம் எனக்கு தெரியாதும்மா. நா இங்க மூணு வருஷமா தான் இருக்கேன் "என்க

அவளிற்கு நேற்று ஏதோ ஓர் உருவம் வந்து போனது ஞாபகம் வர இவர்களிடம் கேட்டு விடலாம் என்று நினைத்தவள் "அம்மா நேத்து நடு ராத்திரி நீங்க ஏதும் வீட்டுக்கு உள்ள வந்தீங்களா ?"என்க

அவரோ அவளை விசித்திரமாய் பார்த்தவர் "இல்லையே மா ராத்திரி ஒன்பது மணிக்கெல்லாம் உள்ள போய் தூங்கிட்டோம் நாங்க வீட்டுக்குள்ள வரல மா "என்க அவளிற்கு உள்ளே விதிர்விதிர்த்தது .

பின் சற்று நேரம் பேசிவிட்டு அக்கோவில் எங்கு இருக்கிறதென்று அறிந்துகொண்டவள் குழம்பிய முகத்தோடு உள்ளே வர அவளது கண்ணில் பட்டது அவ்வளைவு பாதையின் ஓரத்தில் கிடந்த ஓர் bracelet .

அதன் அருகே சென்றவள் அந்த bracelettai கையிலெடுத்து பார்த்தாள் .அது ஓர் ஆணின் bracelet போல் இருந்தது .தங்கத்தால் செய்யப்பட்டிருக்க நடுவில் ஒரு சூரியன் போன்ற அமைப்பில் ஏதோ புரியாத எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்க மிகவும் பழைய காலத்து டிசைனில் இருந்தது .

அந்த bracelettil இருந்த அந்த சூரியன் போன்ற வடிவை எங்கோ கண்டது போல் இருந்தது ஆதிராவிற்கு எனில் எங்கே என்று தான் தெரியவில்லை .பின் அதை தன் கையில் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டவள் தன் அறைக்கு வந்து சிந்தனைகளின் நடுவே சுழன்றுகொண்டிருந்தாள்.

கையிலிருந்த bracelettai பார்த்தவள் மனதில் "அங்க இருக்குறது ரெண்டு பொண்ணுங்க அவுங்களும் நடுராத்திரில வீட்டுக்குள்ள வரலன்னு சொல்றாங்க .இது கண்டிப்பா ஆண்கள் அணியக்கூடிய bracelet தான்.இந்த bracelet யாரோடது?இந்த braceletla இருக்க இந்த ஸிம்பள் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனா எங்கே பார்த்தேன்னு தெரியலயே .அந்த உருவம் வீட்டுக்கு உள்ள இருக்கா வெளிய இருக்கா?கடவுளே "என்றவள் சிந்தனைகளை ஓரம்கட்டிவிட்டு கீழே செல்லத்திரும்பியவள் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த காட்சியில் அப்படியே நின்றாள்.

இவள் இங்கே குழப்பத்தில் உழன்றிருக்க அங்கே புது இடமாதலால் சீக்கிரம் எழுந்த வேதித்யா தயாராகிவிட்டு காபி குடித்தால் நன்றாக இருக்குமே என்று சமையல் அறைக்குள் செல்ல அங்கே அஜய் ஏற்கனவே எழுந்து பாலை காய்ச்சிக்கொண்டிருந்தான் .

விரிந்திருந்த கூந்தலை கொண்டை இட்டுக்கொண்டே உள்ளே செல்ல போனவள் அங்கே அஜய் ஒரு ஷார்ட்ஸிலும் ஸ்லீவ்ல்ஸ் டீஷர்டிலும் விசில் அடித்துக்கொண்டே பாலை காய்ச்சிக்கொண்டிருப்பதை பார்த்தவள் அப்படியே அடுப்படி வாசலில் சுவற்றில் சாய்ந்து கொண்டே அவனை பார்த்துக்கொண்டிருக்க சற்று நேரம் அப்படியே வேலை பார்த்துக்கொண்டிருந்த அஜய் ஒரே நொடியில் அவள் கையை பற்றி சுண்டி இழுக்க தடுமாறியவள் அவன் மேலே வந்து விழுந்தாள் .

தன் மேல் மோதி நின்றவளை சிரிப்புடன் பார்த்தவன் அவள் முகத்தில் விழும் முடிகளை தன் விரல் கொண்டு பின்னே சொருக அவன் செயலில் ஒரு நொடி சிலிர்த்து நின்றவள் பின் அடுத்த நொடியே அவனை முறைத்தாள்.

அவள் முறைப்பதை பார்த்தவன் "என்ன வேதிமா காலைலயே மாமாவை இப்டி சைட் அடிக்கிற என்ன மேட்டர் ?"என்க

அவளோ "நீ எதுக்கு இங்க வந்துருக்க அஜய் ?"என்க

அவனோ அவளை தன்னோடு மேலும் நன்றாய் இறுக்கிக்கொண்டவன் "அதுவா என் பொண்டாட்டிய விட்டு ஒரு மாசம் பிரிஞ்சுலாம் இருக்க முடியாது என்னால அதான் பறந்து வந்துட்டேன் "என்க

அவளோ முகத்தை சீரியஸாய் வைத்தவள்"பொய் நீ இங்க வந்ததுக்கு வேற ஏதோ காரணம் இருக்கு ஆனா அதை என் கிட்ட இருந்து மறைக்குற"என்க

அவன் முகத்தில் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்கு திகைப்பு வெளிப்பட அவன் பிடி தளர நாக்கு லேசாய் குழற ஆராம்பித்தது .

அவளை பார்த்து "அட அப்...... அப்டி அதெல்லாம் ஒன்னும் இல்ல வேதி "என்க

அவளோ அவள் கையில் மறைத்து வைத்திருந்த ஓர் லெட்டரை எடுத்து அவன் முகத்திற்கு நேராய் காட்டியவள் "மிஸ்டர் wildlife போட்டோக்ராபர் இங்க நெறய அறிய வகை உயிரினங்கள் இந்த ஊருல இருக்குன்னு உங்க ஆபீஸ்ல உங்கள இங்க தொரத்தி விட்டதால் தான் இங்க வந்துருக்கீங்க.இதுல என்னவோ பெரிய வாரணம் ஆயிரம் சூர்யா மாறி எனக்காக வந்ததா build up வேற "என்று அவன் தலையில் கொட்ட அப்பொழுதே அஜய்க்கு மூச்சு சீராய் வெளிப்பட்டது .

அசடு வழிந்தவன் அவள் கையில் ஒரு காபீ கப்பை திணித்துவிட்டு தானும் ஒன்றை எடுத்து பருக ஆரம்பித்தான் .அவன் முகத்தில் ஏதோ கணிக்க முடியாத ஓர் பாவம் குடி இருந்தது .

அவனோடு காபி குடித்த வேதித்யா எதேர்ச்சியாய் குனிய அவன் காலை பார்த்தவள் திடுக்கிட்டாள் ."அஜய் என்னடா இது கால் முழுக்க முள்ளா கீறிருக்கு "என்றவள்

கீழே குனிந்து அவன் காலை தொடப்போக அவனோ "அது அது ஒண்ணுமில்லடி காலைல இங்க தோட்டத்துல நடந்துகிட்டு இருக்கேல குத்திருக்கும் "என்க

அவளோ அவன் காலை நன்றாய் பார்த்தவள் "இது ஒரு முள்ளு குத்துன மாதிரி இல்லையேடா! ஏதோ காட்டுப்பாதைல நடந்து போய்ட்டு வந்த மாதிரி இருக்கு "என்க

அவனோ "ப்ச் அதான் தோட்டத்துல நடக்கேல குத்திருக்குக்கும்னு சொல்றேன்ல நொய் நொய்ன்னுகிட்டு இருக்க . காலங்காத்தால மூடஹ் கெடுத்துகிட்டு "என்று அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட வேதித்யாவிற்கோ அவனது இச்செயல் மிகவும் குழப்பமூட்டுவதாய் இருந்தது .

இங்கே இவர்கள் இப்படி இருக்க அங்கோ ஆதிரா ஜன்னல் வழியே அவ்வீட்டு தோட்டத்தோடு அமைந்திருந்த குளத்தில் நீந்திக்கொண்டிருந்த ஆதேஷை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தால்.

கைகள் இரண்டும் முழு வீச்சிற்கு முன்னேயும் பின்னேயும் செல்ல அவன் கையிலிருந்தும் முடியிலிருந்தும் வழிந்த நீர்த்துளிகள் வெள்ளிச்சாரலாய் சிதறிட அவள் மூளையின் பேச்சை சற்றும் மதியாமல் அவளது கால்கள் அவளை அந்த தோட்டத்தின் புறம் அழைத்து சென்றது .

சத்தமிடாமல் அங்கிருந்த ஒரு மரத்தின் பின் நின்றவள் அவன் நீந்துவதை பார்த்துக்கொண்டே நிற்க அவளின் குறும்புத்தனம் தலை தூக்க கீழே கிடந்த ஒரு சிறு கல்லை எடுத்தவள் அவன் மீது எறிந்தாள் .அதில் நீந்துவதை நிறுத்தியவன் ஒரே இடத்தில நீந்திக்கொண்டு சுற்றி முற்றி பார்க்க இவளோ அந்த மரத்தின் பின் ஒளிந்து கொண்டால் .பின் மீண்டும் ஒரு சிறு கல்லை எடுத்தவள் அவன் மீது அடிக்க குறி பார்க்க அக்குளத்தில் அவனை காணவில்லை .சற்றே நெற்றி சுருக்கியவள் எங்கே என்று மரத்தை விட்டு வெளியே வந்து தேட சுற்றி முற்றி எங்கேயும் இல்லாது போனான் ஆதேஷ் .

எங்க போனாரு இவரு என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளது கையை யாரோ பிடித்திழுக்க தடுமாறியவள் சுதாரிக்குமுன்னே அவளை மரத்தோடு சாய்த்து இருபுறமும் அவள் தப்பி செல்ல இயலாதவாறு மரத்தில் கை வைத்திருந்தான் ஆதேஷ் .

அவனது செயலில் முதலில் திகைத்தவள் பின் அவனது அருகாமையில் தவிக்க துடங்கினாள்.வெற்று மார்பில் pant மட்டுமே அணிந்திருக்க அப்பொழுதே குளித்திருந்ததால் ஆங்காங்கே சிறு சிறு நீர்த்துளிகள் அவன் உடலில் நின்றிருக்க சுருட்டையான ரோமங்கள் அவன் உடலோடு ஒட்டி இருக்க அவனது முன்நெற்றியில் புரண்ட முடிகளிலிருந்து வழிந்த நீர்சொட்டுகள் அவள் முகத்தில் விழ அவனை தூரத்தில் காணும்போதே மதியிழப்பவள் அவனது மூச்சுக்காற்று தன் முகத்தில் அடிக்கும் தூரத்தில் மொத்தமாய் செயலிழந்து மதியிழந்து நின்றாள் "ஆ....ஆ .... ஆதேஷ் என்.... என்ன பண்றீங்க ?"என்க

அவனோ புருவத்தை உயர்த்தி கேள்வியாய் நோக்கியவன் "அதை நா தான் ஆரா கேக்கணும் இங்க நா குளிக்கிற இடத்துல நீ என்ன பண்ற ?"என்க

அவளோ "நா.... நா சு... சும்மா வந்தேன் "என்க

அவனோ நக்கலாய் பார்த்தவன் "எப்படி சும்மா வந்து என்மேல கல்லெடுத்து அடுச்சியா ?"என்க அவளோ அவனை பார்க்க முடியாது கண்களை தாழ்த்திக்கொண்டாள்.

அவளை பார்த்திருந்தவன் "நா குளிக்குறத பார்த்த உனக்கு ஏதாச்சும் பனிஷ்மென்ட் குடுக்கணுமே"என்று மேலும் நெருங்கி வர அச்சத்திலும் வெட்கத்திலும் கண்களை மூடிக்கொண்டாள் ஆதிரா.

சற்று நேரம் கழித்தும் ஏதும் நடக்காமல் இருக்க ஒற்றை கண்ணை திறந்தவள் என்ன என்று பார்க்க அவனோ கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்துக்கொண்டிருந்தவன் அவளது மிரண்ட விழிகளை பார்த்து பலமாய் சிரிக்க ஆரம்பித்துவிட்டான் .

ஆதேஷ் "அச்சோ ஆரா சும்மா விளையாட்டுக்கு சீண்டுனேன் நீ என்ன இவ்ளோ பயந்துட்ட? எப்பாஆ உன் முகத்தை பாக்கணுமே "என்று அவன் மேலும் சிரிக்க அவனை பார்த்து முறைத்தவள் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு அவனை துரத்த அவள் கீழே குனிந்ததில் அவள் அணிந்திருந்த செயின் உடையிலிருந்து வெளியே வர அவள் அணிந்திருந்த லாக்கெட் திறக்க அதன் உள்ளே இருந்த டாலரோ அப்படியே அந்த bracelettil இருந்த சூரிய லட்சினையை அப்படியே அச்சில் வார்த்தார் போன்றிருந்தது......................

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro