9

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஆதேஷைத் துரத்திக்கொண்டே ஓடியவளின் கழுத்தில் இருந்த சங்கிலி அவள் ஓடிய வேகத்தில் திறக்க அதன் உள்ளே அந்த bracelettil இருந்த அதே லட்சினை அச்சு வார்த்தார் போல் அமைந்திருந்தது .அதை கவனியாதவள் ஆதேஷை துரத்துவதிலேயே மும்முரமாய் இருக்க ஒரு முட்டு சந்து போன்ற அமைப்பில் அவனை மடக்கி பிடித்தாள் ஆதிரா .

எதிரே மதில் சுவர் இருக்க அதையே பேந்த பேந்த பார்த்தவன் ஸ்லோ மோஷனில் பின்னே திரும்ப ஆதிராவோ கையிலிருந்த குச்சியை சுழற்றிக்கொண்டே அவன் அருகில் வர முதலில் பயந்ததை போல் பாவனை செய்தவன் பின் அவள் அருகே வந்ததும் அந்த குச்சியின் நுனியை பிடித்திழுத்து அதை தூக்கி போட மீண்டும் தடுமாறி அவன் மீதே விழுந்தாள் ஆதிரா.

அவள் விழுந்த வேகத்தில் அந்த சுவற்றின் மீது சாய்த்தவன் அவள் கீழே விழாதிருக்க அவள் இடையை பிடிக்க எதிர்பாரா இத்தீண்டலில் இருவருக்குமே உடலில் மின்சாரம் பாயவே செய்தது .

அதீத வெட்கத்தில் அவன் மார்போடு ஒன்றி இருந்தவள் முகத்தை பார்த்து சிரித்தவன் அதை தன் ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தி அவள் கண்ணோடு தன் கண்ணை உறவாட விட அவன் தொடர்பார்வையில் தன் இமைகளை தாழ்த்தினால் ஆதிரா .

அவள் முகத்தில் நிலைத்திருந்த அவன் பார்வை திறந்திருந்த அவள் லாக்கெட்டிற்கு செல்ல மெதுவாய் அவள் சங்கிலியை உயர்த்தியவன் அந்த லாக்கெட்டை மூடி விட்டான் .பின் அவள் காதிர்கருகில் குனிந்தவன் "ஆரா இப்டியே எவ்ளோ நேரம் நிக்குறதா ஐடியா ?"என்க

அவளோ தன்னை மறந்த நிலையில் "வாழ்க்கை முழுக்க" என்க அந்த வார்த்தை ஏனோ அவன் இதழில் ஒரு கர்வச்சிரிப்பை தோற்றுவித்தது.அவன் கரங்கள் அனிச்சையாய் அவளை சுற்றிவளைக்க சுகமாய் அதில் அடங்கி போனால் ஆதிரா .

இருவரும் உலகம் மறந்து நின்றிருக்க அவர்களின் மோனநிலையை கலைப்பதற்கென்றே தூரத்தில் ஒலித்தது ஏதோ ஓர் காக்கையின் நாராசக் குரல் .அதில் திடுக்கிட்டு இருவரும் பிரிய அவனை எதிர்கொள்ள முடியாது திரும்பி நின்ற ஆதிரா அப்படியே விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.அவள் விலகிய பின்னே தான் செய்துகொண்டிருந்த காரியத்தின் வீரியம் புரிய தன்னை தானே திட்டிக்கொண்டு அவள் விறுவிறுவென விலகி செல்வதையே குற்றஉணர்வுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ஆதேஷ் அவசரப்பட்டுவிட்டோமோ என்று பின் என்ன நினைத்தாளோ அடுத்து பத்து அடியில் நின்றவள் அவன் புறம் திரும்பாது "கோ...கோவிலுக்கு போகனும் கூ..... கூட வரீங்களா?"என்க

அவனும் வாடிய முகம் உடனே பொலிவடைய "five மினிட்ஸ் ஆரா வந்துருறேன் "என்றவன் அவன் அறைக்கு விரைய அவன் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது .அந்த எண்ணை பார்த்து கலவரமடைந்தவன் சுற்றி முற்றி யாரும் இருக்கிறார்களா என்று பார்க்க யாரும் இல்லாது போக அதை காதில் வைத்தவன் "ம்ம் எஸ் ஆதேஷ் here "என்க

அப்புறம் என்ன சொல்லப்பட்டதோ கோபமடைந்தவன் "look i have explained you the procedures clearly.i can't be there now at any cost"(பார் நான் முன்பே என்ன செய்ய வேண்டுமென்ற விளக்கங்களைக் கொடுத்துவிட்டேன்.இப்பொழுது எக்காரணத்திற்காகவும் என்னால் அங்கு வர இயலாது)என்க

அப்புறம் என்ன சொல்லப்பட்டதோ நெற்றியை அழுந்த தேய்த்துக்கொண்டவன் "ஓகே லெட் மீ மேக் அல்டெர்னட் arrangements "என்றவன் அடுத்து யாரிற்கோ கால் செய்து ஏதோ பேசிவிட்டு வைத்தான் .பின் அவன் அறைக்கு சென்றவன் சட்டையை மாற்ற கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தில் தெரிந்தது அவன் நெஞ்சில் இருந்த சூடுபட்ட காயம் .

அதை தன் விரலால் வருடியவன் மனதில் ஏதேதோ நினைவுகள் வர அதன் தாக்கத்தில் கண்கள் கரித்தது .பின் தன்னை சமன் படுத்திக்கொண்டவன் சட்டையை போட்டுவிட்டு ஆதிராவை தேடி செல்ல அவளோ வேதித்யாவையும் அஜயையும் அழைக்க அவர்கள் இருவரும் வரவில்லை என்று கூறிக்கொண்டிருந்தனர் .

ஆதிரா "வீட்ல அப்டி என்னத்த பாதுகாக்க போறீங்க ரெண்டு பேரும்? முட்டையா போட போறீங்க சோம்பேறிங்களா ஒழுங்கா கெளம்பி வாங்க அங்க போனா தான் அப்டியே வர வழில ஊர்காரங்களா பாத்து ஏதாச்சும் விசாரிக்க முடியும் "என்க

அஜயோ "அடேய்ய் ஆதிமா உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவில்லையாடா வந்த உடனே விசாரணை ,குற்றம் நடந்தது என்னனு? ஆரம்பிக்குற இன்னிக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு பாக்கலாம்டா "என்க

ஆதிராவோ அஜயை முறைத்தவள் "அண்ணா உன் கிட்ட நா பேசவே இல்ல உன்னோட சேர்ந்து சேர்ந்து தான் இவளும் சோம்பேறி ஆவுறா என்றவள் வேதித்யாவிடம் திரும்பி "இப்போ நீ வர போறியா இல்லையாடி"என்க

வேதித்யாவோ "அட போடி நேத்து travel பண்ணது உடம்புலாம் வலிக்குது நாளைக்கு போலாம் "என்க

ஆதிராவோ அவளை மூச்சுமுட்ட முறைத்தவள் உன்ன ..... என்று அந்த sofaavil இருந்த தலையணையை அவள் மேல் அடிக்க இவளும் இன்னொரு தலையணையை எடுத்து ஆதிராவை தாக்க ஆரம்பித்தாள் .

அஜயோ அவர்கள் சேட்டையை சிரிப்புடன் நோக்கி கொண்டிருந்தவன் எதேர்ச்சியாய் ஆதேஷை பார்க்க ஆதேஷின் பார்வையும் அஜயின் பார்வையை எதிர்கொண்டது .இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காது முறைத்துக்கொண்டு இருக்க ஆதிராவின் "எரும மாடு வேதித்யா போய் தொலை சரி வாங்க ஆதேஷ் நாம போலாம் "என்ற குரலிலேயே இருவரும் பார்ப்பதை (முறைப்பதை )நிறுத்தினர் .

ஆதேஷ் அவளிடம் ஆமோதிப்பாய் தலை அசைத்துவிட்டு வாசல் புறம் செல்ல அப்பொழுதே அவள் கூறுவதை கேட்ட அஜய் எழுந்து வந்து அவர்கள் முன் நின்றவன் "எங்க ஆதிரா போற "என்க

அவளோ அவனை கேவலமாய் முறைத்தவள் "லூசாடா அண்ணா நீ? அதான் சொன்னேனே கோவிலுக்கு போறேன்னு "

என்றுவிட்டு முன்னே நடக்க.சட்டென்று அவள் கையை பிடித்து நிறுத்தியவன் "நீ இரு நானும் வரேன்"என்க

ஆதேஷோ அவனை இடை வெட்டியவன் "ஒன்னும் தேவை இல்ல நாங்க போய்க்குறோம் "என்று முன்னே நடக்க

அஜயோ அவனை முறைத்தவன் "அதான் வரேன்னு சொல்றேன்ல "என்றவன் ஆதேஷிற்கு மட்டும் கேட்கும் குரலில் "ஏன் எதுவும் நடக்ககூடாதது நடந்துருமோனு பயமா ஆதேஷ் "என்க

ஆதேஷோ ஏளனமாய் சிரித்தவன் "ஆரா சீக்கரம் எல்லாரையும் கூட்டிட்டு வெளிய வா " என்றுவிட்டு ஜீப் சாவி க்கு வேண்டி கையை நீட்ட விஷமப்புன்னகை செய்த அஜய் pant பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து அவன் கையில் கொடுத்தான் .

பின் நான்கு பேரும் கிளம்பி கோவிலிற்கு சென்றனர் .அவ்வூரில் இருந்த ஒரே கோவில் அது தானென்று செல்லும் வழியில் தெரிந்துகொண்டவர்கள் ஊர்மக்களின் பரிதாபப்பார்வையையும் செல்லாதீர்கள் என்ற எச்சரிக்கைகளையும் கடந்து அக்கோவிலை அடைந்தனர் .

அக்கோவில் பல காலத்திற்கு முன் கைவிடப்பட்டதன் சாட்சியாய் பாழடைந்ததாய் காட்சி அளித்தது எனில் அதன் கம்பீரம் குறையாது ஓங்கி நின்றது .மதில் சுவர்கள் கேட்பாரற்று விரிசல் விட்டிருக்க கதவோ கரையான் படிந்து கிடந்தது .எனில் குளக்கரையின் அருகில் அருகில் வில்வமரங்கள் சூழ ஓங்கி உயர்ந்திருந்த அக்கோயிலை காண்கையிலேயே மனதில் பெரும் நிம்மதி பரவியது .

அக்கோயிலை பார்த்துக்கொண்டே நின்ற நால்வரும் beautiful என்று முனங்க முன்னே வேதித்யா செல்ல அவள் அந்த கோவிலின் வாசலில் கால் வைக்கவும் ஏதோ கரண்ட் ஷாக் பாய்ந்ததை போல் இருக்க திடுக்கிட்டு பின்னே வந்தவள் குழப்பத்துடன் தரையை பார்க்க அஜயோ "என்னாச்சு வேது ஏன் முன்னாடி போயிட்டு reverse கியர் போடுற "என்க

அவளோ அவனை குழப்பமாய் பார்த்தவள் "தெரியலடா உள்ள போக முடில "என்க

அவள் கூறுவதை கேட்ட அஜய் "லூசாடி நீ "என்றுவிட்டு தன் காலை வைக்க அவன் காலிலும் மின்சாரம் பாய்வதை போன்றதொரு உணர்விருந்தது .அவன் அதிர்வாய் வாசலை பார்த்துவிட்டு ஆதிராவை அழைக்க போக ஆதிராவோ அதற்கு முன்னே தன் காலை கோவிலின் வாசலில் வைத்திருந்தாள் .

அவள் வாசலில் காலை வைத்த நொடி தூரத்தில் ஓர் வில்வமரம் தீப்பிடித்தெரிய அங்கே அடித்த புயல் காற்றில் அந்த மரத்திலிருந்து ஏறிந்துகொண்டே பறந்து வந்த ஓர் கிளை ஆதிராவை தாக்க முற்பட அவளிற்கு பத்து அடிக்கு முன்பே அணைந்து கீழே விழுந்தது .அந்த தீஜ்வாலை ஏதோ ஓர் கோர உருவம் வாயை பிளந்து ரெத்த சிவப்பு நிறக் கண்களை உருட்டி பார்ப்பதை போல் இருந்தது,அக்கோவிலின் மேல் இருந்த சூரியனை மேகக்கூட்டம் மூடிக்கொள்ள தெளிந்து ஆகாய நீலத்தில் கண்ணாடித்தாளை போல் சமமாய் இருந்த அந்த குளத்தின் மத்தியில் திடீரென பெரும் சூழல் ஒன்று உருவாக அதன் உள்ளிருந்து எழுந்த பெரும் இரைச்சலில் அங்கிருந்த அனைத்து பறவைகளும் சிதறி பறந்தன.

இவை அனைத்தையும் ஆதேஷ் கண்டும் காணாமல் உள்ளே செல்ல நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த அஜயும் வேதித்யாவும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்துடனும் இங்கே என்ன நடக்கின்றது என்று புரியாமலும் சற்று பீதியுடனும் பார்த்துக்கொண்டனர் .இந்த சூழலிலும் ஆதேஷின் கலவரமில்லாத முகத்தை கவனிக்க அஜய் தவறவில்லை .

இவை எதையும் தன் கருத்தில் பதிக்காத ஆதிராவோ விறுவிறுவென்று கோயிலிற்கு உள்ளே சென்றவள் ஏனோ கோவிலின் உள்ளே வந்ததும் ஏதேதோ தெளிவில்லாக்காட்சிகள் அவள் கண்ணின் முன் தோன்றி மறைந்தது .

சுற்றி சுற்றி அவ்விடத்தை ஏதோ ஓர் பரிதவிப்புடன் பார்த்தவள் என்ன தேடுகிறாள் என்று அவளிற்கே புரியவில்லை .கண்கள் இருட்டிக்கொண்டு வருவதுபோல் மூச்சு திணறுவது போலும் இருக்க கீழே வீழ்ந்துவிடாமல் இருப்பதற்காக அங்கிருந்த பாசிபடிந்து மண்ணால் மூடப்பட்டிருந்த சுவற்றில் கை வைத்தவள் தன் கண்களை மூட அவள் தோளில் படிந்த ஆதேஷின் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டவள் சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அவனை நோக்கி திரும்பினாள்.அவனோ என்றும் போல் அவளை நோக்கி ஓர் இளநகை புரிந்தவாறு நின்றிருந்தான் எனில் அவன் கண்ணில் ஏதோ பொருள் புரியாத பார்வையும் பொதிந்திருந்தது.

பின் அவன் அவள் கையை தன் கரத்தோடு கோர்த்துக்கொள்ள இணைந்திருந்த தங்கள் கரத்தை ஒருமுறை நிறைவாய் பார்த்துக்கொண்டவள் அவனை நோக்கி ஓர் புன்னகையை சிந்தியவள் அவ்விடத்தில் இருந்து கையை எடுத்துவிட்டு உள்ளே பிரகாரத்தை நோக்கி இருவரும் செல்ல அவள் கை வைத்த இடத்தில சிறிது சிறிதாய் அங்கிருந்த மண் உதிர்ந்து கீழே வீழ்ந்தது.

அவ்விடத்தில் அவள் அரண்மனையில் கண்ட அதே குழந்தையின் முகம் சித்திரமாய் வரையப்பட்டிருந்தது ..........

இங்கே இப்படி இருக்க எங்கோ ஒரே இடம் சுற்றி எங்கிலும் யாககுண்டங்களில் தலை முதல் கால் வரை மிகவும் கரிய நிறத்தில் கண்கள் ரெத்த சிவப்பை கொண்டிருக்க சடைபிடித்த முடிக்கற்றைகள் தொடையை தொட்டு தவழ ஒரு சிறு கோவணத்தை மட்டுமே அணிந்திருந்த நடுநடுங்கும் தோற்றத்தை உடைய அகோரிகள் அமர்ந்து ஏதேதோ கூறியபடி யாகத்தில் அமர்ந்திருக்க அங்கே இருந்த யாககுண்டங்களிலேயே நடுநாயகமாக மாபெரும் அளவில் மேடை அமைக்கப்பட்டு அமைந்திருந்த யாககுண்டத்தில் தலைமுதல் கால் வரை போர்த்தியவாறு கண்கள் மட்டும் தெரியும் படியான உடையில் கையில் நகங்கள் கூறிய கத்தியை போல் நீண்டிருக்க வாய் ஓயாது ஏதோ ஓர் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே யாகத்தில் நெய்விடுவதற்கு பதில் ரத்தத்தை உள்ளே தெளித்துக்கொண்டிருந்தது .

அதன் இருப்பிடத்திற்கு மூச்சிரைக்க ஓடி வந்த மார்த்தாண்டன் அதன் முன் நிற்க அப்பொழுதே யாககுண்டத்திலிருந்து தன் கண்களை உயரத்திய அவ்வுருவம் அவனை கேள்வியாய் நோக்க அவனோ "ஆதிரா......"

என்று ஏதோ கூறத்துவங்குமுன் அவனை கை உயர்த்தி நிறுத்தும்படி கூறியது "கோவிலிற்குள் பிரவேசித்துவிட்டாள் அது தானே ?"என்க

அவனோ "ஆம் எது நடைபெறக்கூடாதென்று யாம் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோமோ அது கொஞ்சம் கொஞ்சமாய் நிகழ்ந்துவிடும் போலிருக்கின்றது.இப்படியே சென்றால்........ தாம் உத்தரவு பிறப்பியுங்கள் அடுத்த நொடி அவள் சிரசை தம் காலடியில் வைக்கிறேன் ?"என்க

அதுவோ அவனை நோக்கி கோபப்பார்வையை செலுத்தி"முட்டாளே நதி என்று நினைத்தாயோ அவளை? அவள் ஆழியடா சற்று பிசகினாலும் மூழ்கிவிடுவாய் ."என்க

அவனோ "எனில் அவளை முன்னேற விட்டு நம் அழிவிற்கு வித்திடச்சொல்கிறீரா?பயந்து ஒளிய சொல்கிறீரா "என்க

அதுவோ மறுப்பாய் தலை அசைத்தது "புலி பதுங்குவது பாய்வதற்காக என்பதை மறவாதே மார்த்தாண்டா. நடப்பவற்றை பொறுமையாய் கண்டு களி"என்றுவிட்டு யாகத்தை முடித்து வெறுப்புறம் திரும்புயது தன் முகத்தில் இருந்த துணியை அவிழ்த்து அங்கே தூரத்தில் கட்டி இருந்த ஓர் எருமை மாட்டின் அருகே சென்று வாளை கொண்டு அதன் தலையை துண்டாகி அதன் ரத்தத்தால் தன் முகத்தை நனைத்தது அவ்வுருவம்.  

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro