அத்தியாயம் (27)

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

அன்று ஞாயிற்றுக் கிழமை 10 மணியாகியும் எழுந்துக் கொள்ளாமல் கட்டிலில் புரண்டுக் கொண்டு இருந்தான் ஆதித்யா. அவனது ரூமை Mop செய்தவாறு அவனது காதில் கேட்கும் படி புலம்பிக் கொண்டு இருந்தாள் ருக்மணி.

"காலெல்லாம் ஒரே வலியா இருக்குடா. முன்ன மாதிரி இப்போலாம் குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்ய முடியலை. கொஞ்ச நேரத்துக்கு ஒரு வாட்டி மூச்சு வாங்குது" என்றாள் ருக்மணி.

"உன்னை யாரு இப்போ இதெல்லாம் பண்ணச் சொன்னா? நான் நாளைக்கே வேலைக்கு ஒரு ஆளை ஏற்பாடு பண்றேன்" என்றான் ஆதி.

"வேலைக்கு ஆள் எங்களுக்கு வெச்சுக்கத் தெரியது பாரு. நீ வெச்சு குடுக்கும் வரைத் தான் பார்த்துட்டு இருக்கோம். காலா காலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோடா...." என்று நேரடியாக Topic ற்குள் வந்தாள் அம்மா.

"ஏன்??? நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு மூட்டு வலி சரியாயிடும்னு ஜாககத்துல இருக்கா????" என்றான்!

"அப்படி இல்லைடா வீட்டுக்கு ஒரு மருமகள் வந்துட்டா வீட்டு பொறுப்பை பூரா அவ கவனிச்சிக்க மாட்டாளா???"

"ஹஹஹா... அப்படி நீ தான் நினைச்சிட்டு இருக்க!! அந்த காலம் எல்லாம் மலை ஏறிப் போச்சு. மருமகள்லாம் வந்துட்டா அவளுக்கும் சேர்த்து நீ தான் பண்ணிப் போடணும். வீட்டு வேலை தெரிஞ்ச, சமையல் வேலை தெரிஞ்ச ஒரே ஒருத்தி ஊர்ல மீதி இருந்தா. இப்போ அவளும் போய்ட்டா! வேலைக்கு ஆள் வெச்சுக்கறது தான் உனக்கு best option சொல்லிட்டேன்!!" என்று சொல்லி விட்டு திரும்பி படுத்துக் கொண்டான் ஆதி.

"ஊர்ல ஆருவை விட்டாள் வேற பொண்ணே கிடையாதா என்ன? நான் பார்த்திருக்க பொண்ணு குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுடா. நீ ஃபோட்டோல பார்த்தல்ல..." என்றாள் அம்மா.

ஆதி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவே கோபமாக,

"வயசாகிட்டே போகுதில்லையா!!அதுனால தானே ஒரு கல்யாணத்தை பண்ணிக்கடான்னு தலையால அடிச்சிக்கிறேன்" என்றாள் மறுபடியும்.

"ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டா வயசாரது நின்னுடுமா???" என்றான் திருப்பிக் கொண்டு.

"நீ இப்படியே காலத்துக்கும் குதிர்க்கமாவே பேசிட்டு இரு. எனக்கென்னமோ நான் உன் கல்யாணத்தைப் பார்க்காமலேயே தான் போய் சேரப் போறேனோன்னு தோணுது" என்றாள் அம்மா.

"என்னம்மா நீ? இப்போ எதுக்கு நீ தேவையில்லாமல் பேசுற? என்றான் ஆதி.

"பின்ன என்னடா? உனக்கு வயசாறதோ இல்லையோ எனக்கு வயசாறது. வயசாக ஆக உனக்கொரு நல்லதை பண்ணிப் பார்க்காமல் போய்டுவேனோங்கற பயமும் ஜாஸ்தி ஆகிறது...." சேலைத் தலைப்பால் வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அம்மா.

"இப்ப நீ என்னை என்ன தான் பண்ணச் சொல்ற?" இரங்கி வந்தான் மகன்.

"உன்கிட்ட நான் என்னத்தை பெருசா கேட்டுறப் போறேன். நீ அந்த பொண்ணை ஜஸ்ட் எங்கயாச்சும் கூப்பிட்டு பேசிப் பாரு. உனக்கு பிடிக்கலைனா வேண்டாம்" பெரிய மனசு பண்ணுவது போல கூறினாள் தாய்.

"அவ்வளவு தானே. போய்ப் பார்க்குறேன்." என்று கூறி விட்டு கட்டிலில் இருந்து எழுந்து Bathroom ற்குள் சென்றான் ஆதி.

அம்மாவுக்கு பேசி புரிய வைக்க நினைப்பற்கு பதிலாக அந்த பெண்ணிடமே நேரடியாக பேசி விட்டால் தேவலாம் என்று தோன்றியது அவனுக்கு.

எங்கு ஆதித்யா மனம் மாறி விடுவானோ என்று மறு நாளே அவர்கள் இருவரும் பார்த்துக் கொள்வதற்கு ஆயத்தம் செய்தாள் ருக்மணி.

அது ஒரு Open space Coffee shop. டாரென்று 5:30 மணிக்கெல்லாம் அவனை இருக்க விடாமல் துரத்தி விட்டு விட்டாள் அம்மா. ஆதி வெகு நேரம் காத்திருக்க எல்லா பெண்களையும் போல் அவனை கொஞ்ச நேரம் காத்திருக்க விட்டு விட்டு லேட்டாக வந்து சேர்ந்தாள் ருத்ரி. அன்றைய அவர்களது சந்திப்பை பெண் பார்க்கும் படலம் என்று கூறி விட முடியாது. ஆனால் அதற்கு முந்தைய ஒரு Casual ஆன சந்திப்பு என்று வைத்துக் கொள்ளலாம். அம்மா காட்டிய ஃபோட்டோவில் குடும்ப குத்துவிளக்கைப் போல போஸ் கொடுத்துக் கொண்டு இருந்தவள் இன்று அதற்கு நேர்மாறாக ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்து கூலர்ஸ் மாட்டிக் கொண்டு ஹை ஹீல்ஸில் இருந்தாள். இது அம்மா ஃபோட்டோவில் காட்டிய பெண் தானா என்று ஆதிக்கே சந்தேகம் வந்து விட்டது. இவள் வந்து தான் வீடு mop செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் அம்மாவை எண்ணி லேசாக சிரிப்பும் வந்தது!

அவளிடம் எதை எதை எப்படி எப்படி கட் அண்ட் ரைட்டாக பேசி விட வேண்டும் என்று யோசனை செய்து கொண்டு வந்து இருந்தவன் ஒரு விசை பேச வந்ததெல்லாம் மறந்து அவளையே 'பே' என்று பார்த்துக் கொண்டு இருந்தான். நேராக ஆதி இருந்த மேசையின் அருகில் வந்தவள் அமர்ந்து கொள்வதற்கு முன்னதாக "ருத்ரி" என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

ஆளைப் போலவே பேரும் அவளுக்கு வெகு பொருத்தமாக இருப்பதாக மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் "ஆதி" என்று சொல்லி எழுந்து கை குழுக்க இருவரும் அமர்ந்து கொண்டனர்.

"So basically நான் ஒரு Classical dancer. எனக்கு எல்லாமே dance தான். இப்போதைக்கு கல்யாணம் பத்திலாம் யோசிக்கறதா கூட இல்லை. என் Parents கூட ரொம்ப understanding தான். ஆனால் உங்க Family கூட சம்மந்தம் வச்சிக்க ஆசை படறாங்க போலருக்கு. அது தான் அவங்ககிட்ட சொன்னதையே சொல்லி சொல்லி டைம் வேஸ்ட் பண்றதோட உங்ககிட்ட பேசிப் பார்க்கலாமேன்னு கிளம்பி வந்தேன்" என்று கூறி ஆதி பேசுவதற்கென்று வைத்திருந்த பாய்ண்ட்ஸை எல்லாம் அவனை பேச விடாமல் அவளே சொல்லி முடித்தாள் ருத்ரி.

ஒரு விநாடி அவளது பேச்சில் அதிர்ச்சி அடைந்தவன் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் "Krish Builders ங்கற பேர்ல நான் ஒரு Construction Company வச்சு நடத்திட்டு வாரேன். ஒரு சில Personal Problems னால எனக்கும் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிற idea இல்லை. ஆனால் அதை புரிஞ்சிக்கிற நிலைமையும் எங்க வீட்ல இல்லை. நானும் உங்களை பார்த்து பேசி புரிய வைக்கலாம்னு தான் actually கிளம்பி வந்தேன்" என்றான் அவள் கூறியதையே திரும்பி கூற வேண்டி இருக்கிறதே என்ற தயக்கத்தோடு.

"ரொம்ப நல்லதா போச்சு. So எங்களுக்கு பழகிப் பார்க்கறதுக்கு கொஞ்சம் டைம் வேணும்னு வீட்ல சொல்லி இன்னொரு 6 மாசத்தை ஓட்டிடலாம். அதுக்கு அப்பறமா வேற ஏதாச்சும் reason யோசிக்கலாம்...." என்று உற்சாகமாய் ஐடியா கொடுத்தவளை வியந்து பார்த்தான் ஆதித்யா.

Bearer வந்ததும் அவளாகவே அவனிடம் என்ன சாப்பிடுகிறான் என்று கேட்டுவிட்டு தனக்கும் சேர்த்து ஆர்டர் செய்து கொண்டாள். ஒரு புது நபரை சந்திக்கிறோம் என்ற எந்த வித சங்கோஜமும் அவளிடத்தில் இல்லை. பெண்களில் தான் எத்தனை ரகம் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான் ஆதி.

"நான் ஒரு Dance group வச்சிருக்கேன். வருஷத்துல பாதி நாள் Programs க்காக ஊரூரா சுத்திட்டு இருப்பேன். இன்னும் Two weeks ல கூட ஒரு Program காக abroad போறேன். அதுனால தான் வீட்ல ஒரே அடம் போக முன்னாடி உங்களை மீட் பண்ணி ரெண்டுல ஒன்னு சொல்லிட்டே தான் போணும்னு. First meeting லயே No னு போய் நின்னா அதுக்கு வேற காரணம் கேட்டு Torcher பண்ணுவாங்க. அதுக்கு பழகிப் பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லிட்டா problem solved" என்றாள் ருத்ரி.

"நீங்க Dance costume ல இருக்க Photo ஒன்னு தான் எனக்கு காட்டினாங்க போலருக்கு. என்னால உங்களை Casual ல அடையாளமே காண முடியலை" என்றான் ஆதி சிரித்துக் கொண்டு.

முன் நெற்றி மீது ஒரு கையை வைத்துக் கொண்டவள் "இப்படி எதுனா ஏடாகுடமா பண்ணி என்னை அசிங்கப் படுத்துறதே இவங்களுக்கு வேலையா போச்சு....." என்று சொல்லி வெட்கப்பட்டாள் ருத்ரி.

"சீ..சீ.. நான் அந்த அர்த்தத்துல சொல்லல. நீங்க Photo லயும் அழகா தான் இருந்திங்க... உங்க next program எங்க நடக்குது சொல்லுங்க. Time இருந்தா பார்க்க வரேன்" என்று சொல்லி அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தான் ஆதி.

"இப்போதைக்கு உள்ளூர்ல Program எதுவும் கிடையாது. பண்ணும் போது I'll let you know" என்று கூறி ஆதியோடு number exchange பண்ணிக் கொண்டாள் ருத்ரி.

Coffee சாப்பிட்டு முடித்த கையோடு ஆதியை தடுத்து விட்டு அவளே பில்லையும் செலுத்தினாள். இருவரும் எழுந்து ஒன்றாக Parking ஐ நோக்கி நடந்தனர்.

"Ok ஆதி Very nice meeting you. நான் Paris ல இருந்து கிளம்பி வந்ததுக்கு அப்பறமா ஒரு நாள் நம்ம meet பண்ணலாம்" என்று சொல்லி ஆதியை நோக்கி கையை நீட்டினாள் ருத்ரி.

Paris என்ற பேர் கேட்டதும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றான் ஆதி. பின்பு சமாளித்துக் கொண்டு அவளை கை குலுக்கி அனுப்பி வைத்து விட்டு காரில் ஏறி வீட்டுக்கு சென்றான். அவனை வாசலில் கண்டது முதல் கால் தரையில் நிற்காமல் பரபரத்துக் கொண்டு நின்றாள் அம்மா. அவன் உள்ளே நுழைந்த கையோடு,

"என்னடா பொண்ணை பார்த்தியா, புடிச்சிருந்ததா? அவ்ளோ பாந்தமா மகா லக்‌ஷ்மியாட்டம் இருக்க பொண்ணை யாருக்குத் தான் பிடிக்காது?" என்று தனக்குத் தானே பேசிய வண்ணம் ஆதியை சுற்றி சுற்றி வந்தாள் அம்மா.

"பாந்தமா? மகா லக்‌ஷ்மியாட்டம்? நீ பார்த்தே?" என்றான் ஆதி.

"ஏன்டா இல்லையா? உனக்கு பொண்ணை பிடிக்கலையா?" என்று கலவரமானாள் அம்மா.

"நான் Paris போறேன்" என்றான் ஆதி.

"என்னடா நான் என்ன கேட்குறேன்... நீ என்ன என் தலை மேல கல்லைத் தூக்கி போடுற???" பதறினாள் அம்மா.

"நான் Paris போறதுல உனக்கென்ன பிரச்சினை வந்தது??"

"நீ தானேடா ஆருவை லவ் பண்ணலனு சொன்ன? இப்போ என்னடா மறுபடி முதல்லேருந்து ஆரம்பிக்கிறே????"

"ஆமா ஆருவை லவ் பண்ணலை தான். ஆருவை லவ் பண்றதா இருந்தா தான் Paris போகணுமா என்ன?"

"நீ என்னை ரொம்ப Tension ஆக்குறடா. நீ எனக்கு தெளிவா சொல்லு. உனக்கந்த பொண்ணு ருத்ரிய பிடிச்சிருக்கா இல்லையா????"

"இப்போதைக்கு குறைனு சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. ஆனால் உங்க காலத்துல மாதிரி பார்த்த உடனே புடிச்சிருக்குன்னு எல்லாம் என்னால சொல்ல முடியாது. எனக்கு பழகி பார்க்க டைம் வேணும்!!"

"அதுக்கென்ன?? தாராளமா உனக்கு வேண்டிய அளவு டைம் எடுத்துக்கோ. பழகிப் பாரு. ஆனால் Paris போறேன் அப்படி இப்படின்னு இரண்டு பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடிடாதேடா....."

"ருத்ரி ஒரு க்ளாசிக்கல் டான்சர்னு நீ என்கிட்ட சொல்லவே இல்லையே...."

"நீ என்னை சொல்ல விட்டாத் தானே!!"

"Two weeks ல ருத்ரியோட Show France தமிழ் சங்கத்துல நடக்குதாம். என்னை பார்க்க வரும் படி சொன்னா..." என்றான் ஆதி.

வேற நாடே இல்லாமலா போயும் போயும் Paris க்கு அந்தப் பொண்ணு உன்னை வர்ச்சொல்லணும் என்ற Mind voice ஐ மறைத்து "ஓஹோ....." என்றாள் அம்மா.

"ஆமா.... நீ எனக்கு பொண்ணு பார்த்திருக்கங்கற விஷயம் கீழே தெரியுமா?" என்றான்.

"இல்லை... எல்லாம் Confirm ஆனதுக்கு பின்னாடி சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்..." என்று இழுத்தாள் அம்மா.

"அது ஒன்னும் இப்போதைக்கு சொல்ல வேண்டாம். ஆதி Paris கிளம்புறான் ஆருக்கு எதுனா கொண்டு குடுக்கணும்னா போய் ரெடி பண்ணச் சொல்லி சொல்லு போ" என்று சொல்லி விட்டு தனது அறைக்கு சென்றான் ஆதித்யா.

அவன் போன பின்பு அம்மாவின் நிலை தான் தர்ம சங்கடமானது. ருத்ரியின் show வைப் பார்க்க போகிறேன் என்று சொல்பவனை போக வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. அவன் அங்கு போனாள் ஆருவை சந்திப்பதையும் ஒருவராலும் தடுக்க முடியாது. எது நடந்தாலும் இரு பிள்ளைகளுக்கும் எந்தவொரு மனவருத்தமும் ஏற்படதவாறு நடத்திக் கொடு பெருமாளே என்று கடவுளின் மீது பாரத்தைத் தூக்கிப் போட்டு விட்டு தன் வேலைகளை கவனிக்களானாள் ருக்மணி.

நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உன்னை காணும் நேரம் வருமா
இரு கண்கள் மோட்சம் பெறுமா
விரலோடு விழியும் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க
எனை வந்து உரசும் காற்றே
அவளோடு கனவில் நேற்றே
கைகோர்த்து நெருங்கினேன்
கண் அடித்து நீ ஏங்க
❤️

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro